Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தலகொடபிடியவில் நல்லிணக்க செயற்பாடுகள்:
மனித நேயம் பலமடைந்துள்ளதால் தேசியம் , மதம் முக்கியம் பெறுவதில்லை.

“கடந்த கலத்தில் மக்களுக்கிடையில் உணவு இலவசமாக பரிமாறப்பட்டது போன்ற ஒரு யுகம் மீண்டும் மலரும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது ஒரு டொபியையாவது யாருக்கும் கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது”. பள்ளிவாயலின் முன்னாள் ஆளுனர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக தொவிக்கையில் கவலை வெளியிடுகின்றார்…

15.11.2019  |  
குருநாகல் மாவட்டம
මීරා ලෙබ්බේ අබ්දුල් කලාම් மீரா லெவ்வை அப்துல் கலாம்

பனை மரங்கள் நிலத்தில் இருந்து மேல் எழுந்து மிகவும் பலமாகவும் கம்பீரமாகவும் நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் அதில் காணப்படுகின்ற ஏராளமான வேர்களாகும். அதே போன்று மக்கள் மத்தியிலும் ஒற்றுமை பலமடைய நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதன் மூலமே நல்லிணக்கம் பலம் பெறுகின்றது.
“கடந்த கலத்தில் மக்களுக்கிடையில் உணவு இலவசமாக பரிமாறப்பட்டது போன்ற ஒரு யுகம் மீண்டும் மலரும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது ஒரு டொபியையாவது யாருக்கும் கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது”. பள்ளிவாயலின் முன்னாள் ஆளுனர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக தொவிக்கையில் கவலை வெளியிடுகின்றார். கிராமத்தில் வாழும் ஏனைய சமூகங்களைச் சோந்த நண்பர்களுடனான உறவில் ஏற்பட்டுள்ள இடைவெளியும் விரிசலும் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பாக அவர் கவலை தெரிவிக்கின்றார். மீரா லெவ்வை அப்துல் கலாம் என்பவர் 1971 ஆம் ஆண்டு இப்பாகமுவை பிரதேசத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு வந்து குடியேறியவராவார். அவர் இந்த கிராமத்தின் மஸ்ஜிதுல் ஹ_தா பள்ளிவாயல் பரிபாலன சபையின் ஆளுனராக 40 வருடங்களாக பணி புரிந்துள்ளார். இப்போது அவருக்கு 76 வயது நிரம்பிய நிலையிலும் ஐந்து நேரத் தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு மெதுவாக போய் வருகின்றார்.
“மனித உயிர்கள் என்ற வகையில் கருத்து வெளிப்படுத்தல், உணர்வுகளைப் பரிமாறல் போன்ற செயற்பாடுகள் எங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பலமடையச் செய்வதாக இருக்கின்றது. மனித நேயம் பலமடைந்துள்ளதால் தேசியம் அல்லது மதம் என்ற உணர்வு முக்கியத்துவம் பெற்றதாக அமைவதில்லை.”


விஹாரையுடன் பல விடயங்களில் ஒன்றுபட்டு செயலாற்றுவதில் முஸ்லிம்களும் இருந்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் சமூகம் முகம் கொடுத்து வருகின்ற நிலைமைகள் தொடர்பாக அவருக்கு அவ்வளவாக திருப்தி இல்லை என்பதற்கு அவரே ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கின்றார். இந்நிலைமையை மாற்றியமைத்து கிராமத்தில் மக்கள் மத்தியிலான இன ஐக்கியத்தையும் சக வாழ்வையும் பழைய நிலைக்கு கொண்டு வருவதில் தலகொடபிட்டிய விஹாரை பிரதம சங்கநாயக்கருடன் இணைந்து செயலாற்ற கிடைத்தமை குறித்து அவர் மகிழ்ச்சியடைகின்றார். நான் எனது பாடசாலைக் கல்வியை முடித்தவுடன் பொலீஸ் சேவையில் இணைந்து நாட்டிற்காக சேவையாற்ற நினைத்து இருந்தேன். இருந்தாலும் பரீட்சையில் சித்தியடையாததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான் பள்ளிவாயலில் இணைந்து மக்களுக்காக சேவையாற்ற நினைத்தேன். இன்றைய சூழ்நிலையில் சமூகங்கள் முகம் கொடுத்து வருகின்ற நெருக்கடி நிலையில் எனக்கு பொலீஸ் சேவையில் இணைய முடியாமல் போனமை குறித்து கவலையடைகின்றேன். அவ்வாறு இணைந்திருந்தால் நாட்டிற்காக மேலும் சேவை செய்திருக்க முடியும்” என்று அவர் தெரிவிக்கின்றார்.
தளகொடபிடிய பௌத்த விஹாரையால் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதற்காக காத்திருக்கின்ற கற்பிணித் தாய்மார்களுக்கான நிகழ்வில் 350 தாய்மார்கள் கலந்து கொண்டனர். பிரசவத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கின்ற தாய்மார்கள் பாராட்டி கௌரவிப்பது சமூகத்தின் கடமையாகும் என்று விஹாரையின் பிரதம சங்கநாயக்கரான நிலவ சோரத தேரார் குறிப்பிடுகையில் கூறினார். இந்த விஹாரையுடன் பல விடயங்களில் ஒன்றுபட்டு செயலாற்றுவதில் முஸ்லிம்களும் இருந்து வருகின்றனர். கற்பிணித் தாய்மார்களை கௌரவிப்பதற்கான இந்த நிகழ்ச்சி பற்றி தொவித்த போது அவர்களும் அதனை வரவேற்று உதவிகளை செய்ய முன்வந்தனர்.
இந்த தாய்மார்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன. இக்கிராமத்தில் உள்ள பள்ளிவாயல் மூலமும் தாய்மார்களுக்காக சத்துணவு பொதிகள் வழங்கும் நிகழ்வுக்கு உதவிகளை செய்தமை பாராட்டத்தக்கதாகும்
“பிரதம சங்கநாயக்க தேரரின் முயற்சியால் எமது கிராமத்தில் பழைய நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நான் முதன் முதலாக இந்த கிராமத்திற்கு வந்த போது இங்கு பனை மரங்கள் மாத்திரமே இருந்தன. பின்னர் குடியேற்றம் ஏற்பட்டு மக்கள் வருகை அதிகரித்தவுடன் ஊரின் மத்தியில் நல்லிணக்கத்திறகான மத்திய நிலையம் அமைந்தமை மேலும் பலமாக அமைந்தது என்று மீரா லெவ்வை அப்துல் கலாம் மேலும் தெரிவிக்கையில் கூறுகின்றார். நாம் ஊரில் ஏற்கனவே இழந்துள்ள சக வாழ்வு நல்லெண்ணம், நல்லிணக்கம் ஏன்பவற்றை மீண்டும் பலப்படுத்துவதற்கு தேரரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.