Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இந்துவாக இருந்து பௌத்தத்திற்கு..
இனம், மதம், மொழி என்பவற்றை விட தூய்மையான மனித நேயப் பண்பு போதுமானது!

சிறுவனாக இருந்த சிவா பிக்குவாக மாறும் வைபவத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேகரித்துள்ளார். அவர் பிக்குவாக மாறுவதை ஏனைய பிக்குகள் எதிர்த்தனர். காரணம் அவர் ஒரு பௌத்தராக இல்லாததால் ஆகும். ஒரு பிராமணக் குடும்பம் என்ற முறையில் சிவா இந்து மதத்தை கைவிடுவதற்கு அவரின் தாயாரும் எதிர்ப்பை தெரிவித்து வந்தார். சிவாவை சிவாவின் தயார் ஒரு இந்துக் கோவிலுக்கு அழைத்துச் சென்று….

20.12.2019  |  
குருநாகல் மாவட்டம

இந்தியாவின் பிராமண தாய்க்கும் இலங்கையைச் சேர்ந்த தந்தைக்கும் 1981 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவரே சிவகுமார் என்று அழைக்கப்படுகின்ற சத்தியவேல் ஆவார். அவரது தாயும் தந்தையும் பிறவியிலே தமிழர்களாவர். தேரவாத பௌத்த பிக்குவாக தன்னை மாற்றிக் கொண்டு லஸ்ஸேகம விமலரத்ன தேரார் என்ற பெயரில் பௌத்தராக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அஸ்கிரிய பீடத்தின் சியம் நிகாயவின் (பிரிவின்) முதலாவது தமிழ் பிக்கு சிவகுமார். கலல்பிடிய அலவ்வையில் அமைந்துள்ள புராதன விகாரையான வலகம்பா விகாரையிலேயே 1994 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடைபெற்றது. அவர் அவரது கதையை சாரளமான சிங்களத்தில் கட்டுமரனுடன் பகிர்ந்து கொண்டார். அவர் பாடசாலைக்குச் செல்லாத நிலையிலும் ஆறு மொழிகளில் நல்ல பாரிச்சயம் பெற்றவராவுள்ளார். பௌத்த மதம் தொடர்பாக சிங்கள மொழியில் போதனை செய்வதோடு புத்தகங்களையும் எழுதி வருகின்றார்.

/
அவரது பார்வையில் இனம், மதம், மொழி என்பவற்றை விட தூய்மையான மனித நேயப் பண்பு மக்களிடம் காணப்படுமானால் அதுவே போதுமானதாகும். அதற்காக பாடுபட வேண்டும். அது ஒரு சிங்கள கிரமம். அவரது சிறுபராயத்திலேயே தந்தையை இழந்த இவருக்கு தாய்தான் எல்லாமுமாக இருந்த இவரை வளர்த்தார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தாய் தோட்டத்தில் தேயிலை கொழுந்து எடுக்கும் தொழிலாளியாக வேலை செய்தார். அவர் வாழ்ந்த அந்த கிராமத்தில் அவரது தயார் இறந்த போது அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து அவரது தாயின் இறுதிக் கிரியைகளைச் செய்வதற்காக உதவி செய்தனர்.
பாடசாலைக்கு செல்லாத இவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருக்கிறார். இவரது வயதில் இருந்து மற்ற குழந்தைகள் பாடசாலைக்கு சென்று வரும்போது, இவர் தாய் வரும்வரை ஒவ்வொரு வீடு வீடாக பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டார். அப்போது பக்கத்தில் உள்ள இடங்களில் பிரத்தியேக ஆங்கில வகுப்புகள் நடக்கும் போது அதற்கு வெளியில் இருந்து காது கொடுத்ததால் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள இவருக்கு முடிந்திருக்கிறது.
இவ்வாறு சிங்கள வீடொன்றில் அவர் இருந்த போது அவர்கள் அவரை பௌத்த விகாரைக்கு அழைத்து சென்றனர். அவர்கள் விகாரையில் உள்ள பிக்குகளுக்கு தானம் வழங்கிய பின்னர் அங்கிருந்த பிக்கு ஒருவர் இவருக்கு சோபக என்ற கதையை கூறினார். இந்த கதையில் சோபக என்பவர் 07 வயதுடைய குறைந்த சாதியைச் சேர்ந்த சிறுவனாக இருந்ததோடு அவரது வளர்ப்பு தந்தை அவரை இரவு முழுவதும் மயானம் ஒன்றில் ஒரு இறந்த பிணத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த புத்தர் அவரை மீட்டு விடுவித்து தூய வழியை போதித்ததால் சோபக மிகவும் உன்னத நிலையை அடைந்து இளம் வயதிலே அரஹத் நிலையை எய்தியுள்ளார். இந்த கதையே சிவாவை ஒரு பௌத்த துறவியாக மாறுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.


சிவாவுக்கு ஒரு புத்த பிக்குவாக வர வேண்டும் என்பதே ஆசையாக இருந்திருக்கிறது.

சிறுவனாக இருந்த சிவா பிக்குவாக மாறும் வைபவத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேகரித்துள்ளார். அவர் பிக்குவாக மாறுவதை ஏனைய பிக்குகள் எதிர்த்தனர். காரணம் அவர் ஒரு பௌத்தராக இல்லாததால் ஆகும். ஒரு பிராமணக் குடும்பம் என்ற முறையில் சிவா இந்து மதத்தை கைவிடுவதற்கு அவரின் தாயாரும் எதிர்ப்பை தெரிவித்து வந்தார். சிவாவை சிவாவின் தயார் ஒரு இந்துக் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிவாவைப் பூசகராக மாற்றுமாறு கேட்டிருந்தார். அப்போது சிவா இந்து மத வழிபாடுகள் மற்றும் கிரியைகள் பற்றி குறுகிய காலத்தில் படித்து அறிந்து கோவிலில் ஐயராக வேலை செய்ய கற்றுக் கொண்டார். ஆனாலும் அவர் கொஞ்சக் காலத்திலேயே கோவிலில் இருந்து வெளியேறிவிட்டார். சிவாவுக்கு ஒரு புத்த பிக்குவாக வர வேண்டும் என்பதே ஆசையாக இருந்திருக்கிறது. அதன்படி கடுமையான முயற்சியின் பின்னர் அந்த இலட்சியத்தை அடைந்தார் சிவா.
மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவுவதற்காக சிங்கள தமிழ் நட்புறவு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்வதற்கு எதிர்பார்க்கின்றார். இளம் பிக்குகளுக்கு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்பிப்பதற்காக ஒரு பிரிவை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் பௌத்த விவகார அலுவல்கள் திணைக்களத்தில் இருந்து பெற்றுள்ளார். தமிழ் மொழி மூல பிரிவு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாகக் கூறுகிறார்.
லஸ்ஸேகம விமலரத்ன தேரரின் ஒரு இலட்சியமாக இருந்து வருவது அவரால் மிகவும் சிரமப்பட்டு பெற்றுக்கொண்ட பௌத்த பிக்கு அந்தஸ்திற்கு ஒரு சிறந்த மதிப்பையும் மரியாதையையும் புத்தரின் போதனைகளில் இருந்து பெற்றுக் கொடுப்பதன் மூலம் உலகம் பூராவும் பரவி இருக்கும் பௌத்த மதத்திற்கு சிறப்பை தேடிக் கொடுப்பதாகும்.