Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இம்தியாஸ் பாகீர் மாகார்:
எங்களுக்கிடையில் இருந்த அந்த பலமான ஐக்கியத்தை நாம் எவ்வாறு இழந்தோம்?

எங்களால் ஏனைய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலை இருக்க வேண்டும். அதுவே ஜனாநாயகத்தின் பண்பாகும். ஐக்கியத்தின் ஊடாக ஏற்படும் மத ரீதியான பன்முகத்தன்மை நல்லிணக்கத்திற்கான பாதையாகும்.

23.12.2019  |  
கொழும்பு மாவட்டம்

தேசிய ஒருமைப்பாட்டிற்கான நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாகீர் மாகார் சிங்கள முஸ்லிம் நட்புறவுக்கான அடையாளமாக இருந்து வருகின்றார். அவர் இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் முகாம்களின் பிரதிநிதியுமாவார். கட்டுமரன் அவருடன் நடத்திய நேர்காணல் வருமாறு : –

த கட்டுமரன் : – கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் சில முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் 16 தூதுவர்கள் இலங்கையில் இருக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நான் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களை சந்தித்தேன். இலங்கை வாழ் முஸ்லிம்களது ஆழ்ந்த கவலையையும் துயரத்தையும் நான் அவரிடம் தெரிவித்தேன்.

த கட்டுமரன் : – பயங்கரவாத தாக்குதலாக நடைபெற்ற நிகழ்வை நீங்கள் அனுமதிக்கின்றீர்களா?

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் மில்லியன் கணக்கிலான மக்கள் யூதர்களால் கொலை செய்யப்பட்டனர். இத்தகைய கொலைகளில் சில கிறிஸ்தவ நாடுகளால் மேற்கொள்ளப் பட்டதாகும். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மில்லியன் கணக்கிலான அப்பாவிகள் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுள் அடங்குவர். ஆனாலும் யாரும் அதனை கிறிஸ்தவ தீவிவரவாதம் என்று வர்ணிக்கவில்லை. ஆனால் இதனை இஸ்லாமிய தீவிவரவாதம் என்றும் பயங்கரவாதம் என்றும் கூறுகின்றனர். அது ஏன்?

த கட்டுமரன் : – இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பாக இருக்கலாம் என்று நீங்கள் கருதகின்றீர்கள்?

நான் எங்களது பேராயரின் கருத்தில் உடன்பட்ட போதும் என்னால் தீர்ப்புக் கூற முடியாது. ஊடகங்களால் முன்வைக்கப்படுகின்ற குறுகிய முடிவுகளைக் கொண்ட கருத்துக்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சர்வதேச நிலைமைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். உலகில் முரண்பாடுகளை உருவாக்கி விட்டு அவற்றின் பின்னால் இருக்கின்ற மக்கள் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் பயங்கரவாதம் உருவாகிய நாடுகளைப் பற்றியும். பார்க்க வேண்டும்.

த கட்டுமரன் : – நீண்ட காலமாக முஸ்லிம்கள் பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர். ஆனால் இப்போது அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் பிரிந்து வெவ்வேறான அரசியல் கட்சிகளாக செயற்படுகின்றனர். முஸ்லிம்கள் ஏன் அவ்வாறான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.?

சிங்களம் மட்டும் தான் அரச கரும மொழியாக வேண்டும் என்ற சட்டமும் மோட்டார் வாகனங்களில் ஸ்ரீ எழுத்துடன் இலக்கம் நடைமுறைக்கு வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் ஐந்து (05) தசாப்தங்களின் பின்னர் சிங்களத்தையும் தமிழையும் அரச கரும மொழிகளாக அமுல் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் எவ்வளவு உயிர்களும் சொத்துக்களும் அழிந்து நாசமாகின?
1966 ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கான சிறப்பு ஏற்பாட்டு சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட்ட போதும் மாவட்ட சபைகளை உருவாக்கி அதிகாரத்தை மக்களுக்கு பரவலாக்க அப்போதைய பிரதமராக இருந்த டட்லி சேனாநாயக்கா நடவடிக்கை எடுத்த போதும் அதனை எதிர்க்கட்சி கடுமையாக எதிர்த்ததோடு அந்த எதிர்ப்பு காரணமாக ஏற்பட்ட வன்முறைகளால் பலர் உயிர்களையும் இழக்க வேண்டி ஏற்பட்டது
பின்னர் மாகாண சபைகள் முறை ஏற்படுத்தப்பட்டது. 1956 ஆம் ஆண்டு சோசலிசக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர் டி. சில்வா ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவிக்கையில் ஒரு மொழி என்றால் இரண்டு நாடுகள் என்றும் இரண்டு மொழிகளாக இருந்தால் ஒரே நாடு என்றும் தெரிவித்தார். அதே கொல்வின் ஆர். டி.சில்வாவின் தலைமையிலான சமசமாசக் கட்சியின் பிரதிநிதிகள் மொழிகள் தொடர்பான சிறப்பு ஏற்பாட்டு சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக செயற்பட்டனர். அந்த போராட்டத்தில் பலர் பலியாகினர். மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்படுத்தியபோதும் அதே எதிர்ப்பை முன்னெடுத்தனர்.

த கட்டுமரன் : – முஸ்லிம் தலைவர்கள் ஏன் மத மற்றும் இன அடிப்படையிலான அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் என்று கூற முடியுமா?

நாங்கள் ஒற்றுமையுடன் சுதந்திரத்திற்காக போராடி காலனித்துவ தலைவர்கள் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க முன்வந்த போது சில சிறுபான்மை தமிழ் தலைவர்கள் அப்போது 50:50 என்ற கோரிக்கையை நிபந்தனையாக முன்வைத்து அதற்கு ஆதரவு வழங்க முன்வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்த தலைவர்களுள் ஒருவரான டி.பி. ஜயா கூறினார் முஸ்லிம்கள் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக. அதே நேரம் எங்களுக்கிடையில் பிரச்சினைகள் இருந்தாலும் நாம் சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள தலைவர்களுடன் கலந்துரையாடி அவற்றை தீர்த்துக் கொள்வோம் என்றும் அவர் கூறினார். எங்களுக்கிடையில் இருந்த அந்த பலமான ஐக்கியத்தை நாம் எவ்வாறு இழந்தோம்? தேசிய அரசியல் கட்சிகள் அவற்றின் கடமைகளை உரிய முறையில் சரியாக நிறைவேற்ற வேண்டும். சமூக உடமைவாத சோசலிச கட்சிகள் கூட மொழிகள் சிறப்பு எற்பாட்டு சட்டம் கொண்டு வரப்பட்ட போது அவற்றின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற தவறிவிட்டன. அவ்வாறான அரசியல் முறைகேடுகளால் நாடு பிற்காலத்தில் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருக்கின்றது.

த கட்டுமரன் : – இலங்கையின் அரசியலை முஸ்லிம்கள் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பார்கள் என்று சிங்கள பௌத்த சமூகம் அஞ்சுகின்றது. வாஹாபிசம் மக்கள் மத்தியில் பரவுவதையிட்டு அவர்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

இவ்வாறான அரசியல் விவாதங்களின்படி முஸ்லிம்களில் 10 வீதமானவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளலாம். 25வீதம் அல்லது 30வீதமானவர்கள் அதற்கு மாற்றாகச் சிந்திக்கின்றனர். அவர்களின் கருத்தாக அமைவது இலங்கையானது முஸ்லிம்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல என்பதாகும். இதில் முஸ்லிம்கள் தொடர்பான அச்சத்திற்கு காரணம் சர்வதேச சதி திட்டமாக அமைந்துள்ள இஸ்லாமோபோபியா என்ற அச்சமூட்டலாகும். இவ்வாறான நிலை பிலிபைன்ஸ், தாய்லாந்து, மியன்மார் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது. இத்தகைய பிரச்சாரங்கள் மற்றும் அச்சமூட்டல்களின் குறிக்கோள் இத்தகைய நாடுகளில் இனங்களுக்கிடையில் வன்முறைகளை தூண்டி முரண்பாடுகளை வளர்ப்பதாகும்.

த கட்டுமரன் : – பெண்களுக்கு மத்தியில் புர்கா மற்றும் நிகாப் என்ற ஆடைகளை ஊக்குவிப்பதாக இஸ்லாமிய மதத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் வஹாபிசத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

சிங்கள கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கு எங்கள் குழந்தைகள் அனுமதிக்கப்பட்ட போது சிங்கள பிள்ளைகளைப் போன்று கண்டிய உடை அல்லது ஒசாரி போன்று அணிந்தார்கள். அவர்கள் முழங்கால் வரை அணிந்ததோடு பின்னர் நவீன ஆடைகள் அறிமுகமாகிய போது கட்டைச் சட்டைகள் அணிந்தார்கள். நாங்கள் இன்னும் கலாச்சார பெறுமானங்களுக்கு கௌரவம் வழங்குகின்றோம். எங்களால் ஏனைய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலை இருக்க வேண்டும். அதுவே ஜனாநாயகத்தின் பண்பாகும். ஐக்கியத்தின் ஊடாக ஏற்படும் மத ரீதியான பன்முகத்தன்மை நல்லிணக்கத்திற்கான பாதையாகும். முன்னைய காலங்களில் கிறிஸ்தவ பெண்கள் கண்கள் வரையிலும் தலைக்கு மேலால் ஆடைகொண்டு மறைத்தார்கள். அப்போது யாரும் கேள்வி எழுப்பவில்லை. நாங்கள் கலாச்சார பெறுமானங்களுக்கு மதிப்பளிக்கின்றோம். எங்களுக்குள் தராதரம் இருக்கின்றது. கடந்த காலங்களில் மேற்கத்தியர்கள் கூறினார்கள் பல்லின கலாச்சாரமானது ஜனநாயகம் என்பதாக. இப்போது அவர்கள் எங்களை அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றுமாறு வேண்டுகின்றனர். அவர்கள் இலத்தின் அமெரிக்கர்களை, இந்துக்களை, சீக்கியர்களை, முஸ்லிம்களைத் தாக்குகின்றனர். இது ஒருவிதமான பிரத்தியேக வேறுபாடான அரசியல் பலப்பிரயோகமாகும்.

த கட்டுமரன் : – நல்லிணக்கம் தொடர்பாக சிங்கள சமூகத்திற்கு நீங்கள் தரும் செய்தி என்ன?

என்னால் தரக்கூடிய விஷேடமான செய்தி எதுவும் இல்லை. நாங்கள் கிராமங்களில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றோம். நான் பேருவளையில் வசிக்கின்றேன். எனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கிராமம் மண்டவத்தை ஆகும். அது ஒரு கத்தோலிக்க கிராமமாகும். பண்டாரகொட ஒரு சிங்கள கிராமமாகும். நாங்கள் உண்மையான சகோதரர்களாக வாழ்கின்றோம்.

த கட்டுமரன் : – ஒரு சமூகம் என்ற நிலையில் தற்கால சவால்களுக்கு நாங்கள் எவ்வாறு முகம் கொடுக்கலாம்.?

எங்களது மத விழுமியங்களின் அடிப்படையில் அதனை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் மனிதர்கள் என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். முன்னேற்றகராமான சமூக அமைப்பை கட்டியெழுப்ப நாங்கள் அனைவரும் ஐக்கியமாக செயற்பட வேண்டும். சுய நல தேவைகளுக்காக இன,மத, சாதி அடிப்படையில் வேறுபடுத்தி முரண்பாடான சூழ்நிகை;குள் தள்ளுவதை அனுமதிக்க முடியாது.