Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பேராசிரியர் உபுல் அபேரத்ன:
இலங்கை அரசியலில், நல்லவிடயங்களை எதிர்ப்பது எதிர்கட்சிகளின் பொதுப்பண்பாகிவிட்டது!

புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக நாங்கள் நாடு முழுவதற்கும் சென்று கூட்டங்களையுமும் சந்திப்புக்களையும் நடத்தி பொதுமக்களது அபிப்பிபராயங்களை திரட்டினோம். எதிர்க்கட்சியின் சில பிரிவினர் இந்த முயற்சியானது நாட்டை பிரிப்பதற்கான முயற்சியாகும் என்று பிரச்சாரம் செய்தனர்…

24.12.2019  |  
கண்டி மாவட்டம்

பேராசிரியர் உபுல் அபேரத்ன பேராதனைப் பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளராவார். சில அரசியல் கட்சிகளும் சுயாதீன அபேட்சகர்களுமாக 35 வேட்பாளர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். எங்களது அரசியல் வரலாற்றில் மிகவும் கூடிய எண்ணிக்கையான அபேட்சகர்கள் போட்டியிடும் தேர்தல் இதுவாகும் என்று அவர் கூறினார். த கட்டுமரானுக்கு பேராசிரியர் அபேரத்ன வழங்கிய நேர்காணல் வருமாறு :

த கட்டுமரன் : அதிகளவிலான அபேட்சகர்கள் போட்டியிடுவது தொடர்பாக உங்களது அபிப்பிராயம் என்ன?

ஜனநாயகம் என்பதற்கான வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு அபேட்சகரும் போட்டியிட முடியும். ஆனாலும் சில அபேட்சகர்கள் வெற்றி பெறுவதை விட வேறுவிதமான காரணங்களின் அடிப்படையில் போட்டியிடுகின்றனர். எவ்வாறாயினும் இந்த அபேட்சகர்களுக்கான செலவினம் பொதுமக்களின் நிதியில் இருந்தே செல்கின்றது. ஒரு சமூகம் என்ற நிலையில் நாங்கள் இது தொடர்பாக பேச வேண்டி இருக்கின்றது.

த கட்டுமரன் : ஒவ்வொரு தேர்தலிலும் மிதக்கும் வாக்குகள் பிரதானமானவையாகும். இம்முறை 15 இலட்சம் மிதக்கும் வாக்குகள் உள்ளன. அவர்களது வாக்குகள் வெற்றி பெற வேண்டுமாயின் ஒவ்வொரு அபேட்சகருக்கும் சவால்கள் உள்ளன இதை எப்படிப்பார்க்கிறீர்கள்?

மக்கள் வாக்களிக்கும் போது மூன்று நடைமுறைகளை பின்பற்றுகின்றனர். அபேட்சகர், கட்சி மற்றும் கொள்கை என்பனவே அவை மூன்றுமாகும். பிரதான கட்சிகளது மரபுரீதியான வாக்காளர்கள் கட்சியின் அபேட்சகருக்கு வாக்களிக்கின்றனர். ஏனைய வாக்காளர்கள் அபேட்சகரின் குடும்ப நிலை மற்றும் அபேட்சகரால் செய்துள்ள சேவைகள் போன்றவற்றை பார்க்கின்றனர். அத்துடன் மிகவும்

/

முக்கியமாக கட்சிகளின் கொள்கை தொடர்பாகவும் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் நாட்டை முன்னோக்கி நகர்த்துகின்றனர். நாடு எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு அபேட்சகரால் வழங்கக் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக நாங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

த கட்டுமரன் : இந்த தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் எவ்வாறு அமையும்?

இலங்கையானது பல்லினங்களைக் கொண்ட தேசமாகும். பெரும்பான்மை வாக்காளர்களாக சிங்கள பௌத்தர்களாக இருக்கின்ற அதே நேரம் சிறுபான்மையினர்களாக தமிழ் மற்றும் முஸ்லிம்களது வாக்குகள் உள்ளன. அவர்களது வாக்குகளின் எண்ணிக்கை 30 இலட்சமாகும். அவர்களது வாக்குகளானது இரண்டு காரணங்களின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. முதலாவதாக அவர்களது வாக்குகள் தேர்தல் ஒன்றை வெற்றி பெறுவதற்காக தீர்மானிக்கும் சக்தியாக அமைகின்றது. இரண்டாவதாக தெரிவாகும் ஜனாதிபதி அவர்களது ஆதரவு இல்லாமல் நாட்டை ஆட்சிய செய்ய முடியாது. ஜனாதிபதியானவர் எல்லா இனங்களைச் சேர்ந்த மக்களாலும் தெரிவு செய்யப்படுபவராவார். அதனால் ஜனாதிபதி எல்லா இனங்களாலும் நேசிக்கப்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும்.

த கட்டுமரன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய பாதுகாப்பு பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மக்களது கடுமையான முயற்சியால் நாட்டில் அமைதியும் சமாதானமும் எற்படுத்தப் பட்டிருக்கின்றது. பாதுகாப்புத் துறையினரின் விழிப்புணர்வு, பொலீசார் மற்றும் புலனாய்வு துறையினர் ஆகியோரால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாது. இன ரீதியான சமாதானம் நாட்டில் நிலவ வேண்டும். இன மற்றும் மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வும் நல்லிணக்கமும் தேசிய பாதுகாப்பின் முதலாவது படிமுறையாகும்.

த கட்டுமரன் : அரசியல் ஆய்வுகளின் படி எமது நாட்டின் வரலாற்றை அவதானிக்கையில் மக்கள் இறைமையை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பது கருத்தாகும். இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

அரசியல் அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இறைமையை மக்கள் கையாளும் சரியான சந்தர்ப்பம் தேர்தலாகும். மக்களது சரியான அவதானம் செலுத்தப்படாவிட்டால் யாருக்கும் தேர்தல் மூலம் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது. அதனால் யாருக்கு வாக்களித்து யாரை நாட்டை நிர்வகிக்க கூடிய தகைமை உள்ள அரசியல் தலைவராகவும் நாட்டின் நிர்வாகியாகவும் தெரிவு செய்வதில் மக்களே பலம் வாய்ந்தவர்களாவர். கட்சிகள் அவர்களது தேர்தலை இலக்கு வைத்து அவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அல்லது கொள்கைகளை வெளியிடும் போது களத்தில் இறக்குகின்ற ஜனாதிபதி அபேட்சகர்கள் நாட்டின் பிரச்சினைகளi சரியான முறையில் அறிந்து புரிந்து தீர்வுகளை முன்வைக்கக் கூடிய பலத்தையும் ஆற்றல்களையும் பெற்றவர்களாக இருப்பது அவசியமாகின்றது.

த கட்டுமரன் : புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள பொது கலந்துரையாடல் குழுவின் ஒரு அங்கத்தவராக நீங்கள் இருக்கின்றீர்கள். அதற்கு நடந்ததென்ன?

இலங்கை அரசியலின் பொதுப் பண்பாக அமைவது அரசாங்கம் நல்லதொரு செயலை செய்ய முயற்சி எடுக்கின்ற போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்படுகின்ற கட்சி அதனை எதிர்ப்பதாகும். புதிய அரசியல் அமைப்பு தேவை என்பதை எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் அப்போது கொள்கைஅளவில் ஏற்றுக் கொண்டனர். எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களதும் அங்கீகாரத்துடன் ஒட்டு மொத்த பாராளுமன்றமுமே அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றம் பெற்றது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக நாங்கள் நாடு முழுவதற்கும் சென்று கூட்டங்களையுமும் சந்திப்புக்களையும் நடத்தி பொதுமக்களது அபிப்பிபராயங்களை திரட்டினோம். எதிர்க்கட்சியின் சில பிரிவினர் இந்த முயற்சியானது நாட்டை பிரிப்பதற்கான முயற்சியாகும் என்று பிரச்சாரம் செய்தனர். நாட்டு மக்களது செலவில் அவர்கள் அரசியல் சுயநலத்தை தேடுகின்றனர். நாங்கள் இலங்கையர்களாக சிந்திப்பதில்லை. நாங்கள் இன்னும் சிந்திப்பது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வித்தியாசமான இனங்களின் அடிப்படையில் தான்.