Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கூட்டாக முன்வரும் போது …
இழந்தவர்களின் நினைவாக சமூகம்!

“எமது கிராமம் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்த ஒரு பிரதேசமாகும். அதனால் அவர் பாடசாலையை விட்டு விலகியவுடனேயே ஊர்காவல் படையில் இணைந்து கொண்டார். 1997 ஆம் ஆண்டு சுங்காவில் பாதுகாப்பு சாவடியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில்…

28.01.2020  |  
அம்பாறை மாவட்டம்

மிஹிந்தலையில் இருந்து கேட்கும் துயரத்தின் ஓசை. இன வேறுபாட்டின் பொறுப்பற்ற தன்மை காரணமாக தொடரும் துயரங்கள். தொடர்ந்து கொண்டிருரூந்த சிவில் யுத்தம் காரணமாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் உயிரிழந்த படை வீரரின் மனைவி, சகோதரிகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் குழந்தைகள் அனுபவிக்கும் துயரம்.
“எனது மகன் இறக்கும் போது அவர் 22 வயதான இளைஞனாக இருந்தார். அவர் எங்களது கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரணில் இருந்தவாறு பாதுகாப்பு கடமையில் ஈடபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சுற்றி வளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்ததில் அவர் கொல்லப்பட்டார். அந்த தாக்குதலில் சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு மதங்களையும் சேர்ந்த இளைஞர்;கள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படை வீரர்களாவர் அவர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு இருந்ததனால் நாங்கள் அனைவரும் வீடுகளில் அச்சமின்றி நித்திரை செய்தோம். ஆனாலும் எனது மகன் இன்று எங்களோடு இல்லை. எங்களது குழந்தைகளின் தியாகங்கள் காரணமாகவே நாங்கள் இன்று நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றோம் என்பதை நினைக்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது” அம்பாறை மாவட்டத்தைச் சோந்த கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட நபீசா உம்மா தெரிவிக்கின்றார். அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது மகனான ஐ.எம் ஹனீபா சிவில் பாதுகாப்பு சேவைக்கு மறக்க முடியாத ஒரு தியாகத்தை செய்ததாக அவர் பெருமைப்படுகின்றார்.
அவரது இரண்டு குழந்தைகளில் ஒருவரான மகன் யுத்த காலத்தில் புலிகளின் தாக்குதலால் பலியாகியதோடு இரண்டாவது குழந்தையான மகள் திருமணம் முடித்துள்ளார். தாய் கவனிப்பதற்கு யாரும் அற்றவராக தனிமையாக வாழ்ந்து வருகின்றார். ஆனாலும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரது நண்பர்களாகவும் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் அவரது அயலவர்களாக உதவிகளை செய்து வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் 145 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாட்டிற்காக உயிர்களை தியாகம் செய்திருப்பதோடு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் நினைவுத் தூபிகள் நிர்மாணிக்கப்பட்டு உயிர் நீத்த ஆண்களதும் பெண்களதும் பெயர்களை அந்த தூபியில் பதித்து இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் உயிர் நீத்த இந்த ஊர்காவல் வீரர்களது குடும்பத்தினரான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் மிகிந்தலையில் அமைந்துள்ள இந்த நினைவுத் தூபிக்கு அருகாமையில் சென்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதோடு கூட்டாக அவர்களது நட்புறவையும் பகிர்ந்து கொள்கின்றனர். மறைந்த அவர்களது மகன்மார் மற்றும் மகள்மார் தொடர்பாக கூட்டாக இணைந்து மத கிரியைகளையும் நடத்துகின்றனர். அவர்களில் யாரும் மீண்டும் யுத்தம் வேண்டும் என்று நினைப்பதில்லை. பதிலாக அவர்கள் சமாதானத்தையே வேண்டுகின்றனர்.

/
ஏ.எல். ரிஸ்வானா என்பவர் கல்முனையைச் சேர்ந்த ஒரு கணவனை இழந்த ஒருவர். எஸ்.எம். சாகிர் முஹம்மத் என்ற அவரது கணவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் இப்போது இரண்டு பிள்ளைகளின் தாயாக இருப்பதோடு அவர்களுக்கு வயது 09 மற்றும் 05 ஆகின்றது. அவரது தாயாரின் உதவியுடன் அவர் வாழ்க்கை நடத்தி வருகின்றார்.
“நாங்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதோடு நான் எனது கணவனையும் இழந்துள்ளேன். நாங்கள் சாதாரணதர குடும்பம். நாங்கள் எல்லா இனங்களோடும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். இதன் பிறகு எங்களுக்கு யுத்த அனுபவம் தேவையில்லை. யுத்தம் மீண்டும் நிகழ்ந்தால் ஏனைய பெண்களும் அவர்களது கணவர்மாரை இழக்க நேரிடும். தாய்மார் அவர்களது மகன்கள் மற்றும்

அபேசிங்க

மகள்மார்களை இழக்க நேரிடலாம். எனது கணவர் சமாதானத்திற்காக உயிரை தியாகம் செய்தார். அவர்களது உயிர்த் தியாகம் காரணமாக சமாதானம் மலர்ந்து மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதுபோன்ற நெருக்கடி நிலைமைகள் இனி நாட்டில் ஏற்படக் கூடாது” என்று ரிஸ்வானா வலியுறுத்துகின்றார்.
பொலன்நறுவை மாவட்டத்தின் கிழக்கு எல்லையான சுங்காவிலைச் சேர்ந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆர்.எம். அபேசிங்கா. தற்போது அவர் 12 பேரப் பிள்ளைகளின் பாட்டன். அவரது இளைய மகனான ஆர்.எம். டிகிரி பண்டா ஊர்காவல் படையில் கடமையாற்றிய போது அவரது 21 வயதில் 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
“எமது கிராமம் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்த ஒரு பிரதேசமாகும். அதனால் அவர் பாடசாலையை விட்டு விலகியவுடனேயே ஊர்காவல் படையில் இணைந்து கொண்டார். 1997 ஆம் ஆண்டு சுங்காவில் பாதுகாப்பு சாவடியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் எனது மகன் கொல்லப்பட்டார். எமது நாட்டில் இனப் பிரச்சினை என்ற ஒன்று இல்லாதிருந்தால் நாம் எங்களது மகனை இழந்திருக்க மாட்டோம்” என்று அபேசிங்க கூறுகின்றார்.

ஆயுதப் படையில் உள்ள எல்லாத் தரங்களையும் சேர்ந்த படைவீரர்கள் இவ்வாறு யுத்தம் மற்றும் தாக்குதல்களில் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் பங்குபற்றி மத அனுஷ்டானங்களையும் செய்கின்றனர். சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் சந்திரரத்ன பல்லேகம தெரிவிக்கையில் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதிலும் படையினர் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கின்றார்.
“நாங்கள் தனிப்பட்ட முறையில் எமது சேவையை எல்லா இனங்களுக்காகவும் அர்ப்பணித்துள்ளோம். விவசாயம், தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது, சுற்றாடல் பாதுகாப்பு உட்பட பல முக்கியமான பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எச்சங்களை பாதுகாப்பதற்காக சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களும் சிவில் பாதுகாப்பு சேவையில் இணைந்து கருமமாற்றி வருகின்றனர். மூன்று இனங்களையும் சேர்ந்த அனைவரும் சிவில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு விதிவிலக்காக எதுவும் இல்லை. யுத்த காலங்களில் அவர்கள் கிராமங்களை பாதுகாத்தனர். இப்போது அவர்கள் நாட்டை பாதுகாக்கின்றனர்” என்பதாக சந்திரரத்ன பல்லேகம கூறினார்.