Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சாதிப்பாகுபாடும் மனித மனங்களும்:
வெற்றிகளுக்குப் பின்னால் தனிமனித சோகங்கள்!

இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்படவேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஒவ்வொரு இனங்களுக்கிடையேயும் காணப்படும் சாதி மத பேதங்களை எவ்வாறு களையப்போகிறோம்? எப்போது களையப்போகிறோம்?நமக்குள் நல்லிணக்கத்தை எப்போது காண்போம்?

24.02.2020  |  
கண்டி மாவட்டம்

‘’நான் வேற்று சாதி பெண்ணை திருமணம் முடித்த காரணத்தால் எங்கள் குடும்பத்தையே அந்தக் கிராமத்தில் இருக்கவிடவில்லை. நாம் நகருக்கு இடம்பெயரவேண்டியிருந்தது. 12 வருசம் எமக்கும் அந்த கிராமத்திற்கும் தொடர்பே இல்லை. இன்று நாம் சந்தோசமாக வாழ்கிறோம். ஆனால் எமது கிராமத்தில் எமக்கு வாழும் உரிமையையை அவர்கள் தரவில்லை. அந்த வேதனை எப்போதும் இருக்கிறது. என மிகுந்த மனவேதனையுடன் குறிப்பிட்டார் கண்டி மெனிக்திவலயைச் சேர்ந்த நிஸ்ஸங்க (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
இந்த நவீன யுகத்திலும்இ உலகமே கிராமமாகிக்கொண்டிருக்கும் நிலையில் பிறப்பினால் சாதிகள் தீர்மானிக்கப்படுவதும்இ அதனூடாக ஏற்றத்தாழ்வை உருவாக்குவதும் தொடரத்தான் செய்கிறது. சாதிப்பிரச்சினை இந்தியாவைப் போல இலங்கையில் உக்கிரமாக வெளித்தெரியவில்லை என்றாலும் திருமணம் என்று வரும்போது இங்கு சாதிப்பிரச்சினை தலைதூக்குகின்றது. இன்றும் இலங்கை பத்திரிகைகளில் வெளியிடப்படும் திருமணத்திற்கான மணமகன்இமணமகள் தேவை விளம்பரங்களில் சாதிகளைக் குறிப்பிட்டே விளம்பரப்ப டுத்துகின்றனர். தமிழர்களிடையே ‘நீங்கள் எந்த இடம்’? என்று கேட்பதும் பதில் சொல்பவர் வடபகுதியிலுள்ள ஒரு இடத்தைச் சொன்னதும் சாதி தெரிந்துவிடும் என்பார்கள். தற்போது இங்கு மக்கள் கலந்து வாழ்வது அதிகரித்துள்ளது. ஆனாலும் பேச்சுத் திருமணங்களில் சாதிப் பாகுபாடு இருந்துகொண்டுதானிருக்கிறது. இதுவே சிங்கள பௌத்த மக்களிடையே எவ்வாறுள்ளது? எனபார்த்தபோது கண்டியைச் சேர்ந்த நிசங்க சொன்ன பதில் தான் நாம் மேலே குறிப்பிட்டது.


பரம்பரை பரம்பரையாக மெனிக்திவலயில் நெல் வயல்கள் உள்ளடங்கலாக நூறு ஏக்கருக்கு அதிகமான நிலம்இ இரண்டு மாடி வீடு, இரண்டு வாகனங்கள், பெறுமதிமிக்க சிலைகள், பரம்பரை பரம்பரையாக வந்த 30 பவுண்களுக்கு அதிகமான நகை என சகலவற்றையும் நாம் இழக்கநேரிட்டது.

கண்டி மாவட்டத்திலிருந்து 25 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மெனிக்திவல பிரதேசத்தில் சுமார் 1200 பேர் வாழ்கின்றனர். சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பிரதேசத்தில் ஓரிரு முஸ்லிம் மக்கள் வியாபார நோக்கத்திற்காக வாழ்கின்றனர். அதேபோல் தமிழ் மக்களும் ஓரிருவர் மாத்திரமே வாழ்கின்றனர்.
முதலாவது கித்சிறிமெவன் மன்னர் காலத்தில் தலதா மாளிகை கட்டப்பட்டது. அப்போது மன்னரின் மந்திரிமார் பிலிமத்தலாவஇ பெனிதெனியஇ மெனிக்திவல போன்ற பகுதிகளில் வாழ்ந்தனர். நிலபிரபுத்துவ காலமான அந்த காலப்பகுதியில் இவர்களே வணிகம் மற்றும் ஆட்சியை நிர்வகித்தனர். அப்போது பௌத்த மதம் பற்றி நன்கு கற்றறிந்த மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே தலதா மாளிகையில் ‘நிலமே’ பதவி வழங்கப்பட்டது. ‘தியவதன நிலமே’ என்பவர் பிரதானமானவர். ‘பஸ்நாயக்க நிலமே’ அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ளவர். இவ்வாறு பல ‘நிலமே’ பதவிகள் காணப்பட்டன. இன்றும் தலதா மாளிகை எசல பெரஹராவில் ‘நிலமேக்கள்’ செல்வர். இந்த நிலமேக்கள் வாழ்ந்த இடமே மெனிக்திவல ஆகும்.
இவ்வாறான பின்னணியை கொண்ட மெனிக்திவலயில் பல உரித்துக்களுக்குச் சொந்தமான குடும்பப் பின்னணியை கொண்ட நிஸ்ஸங்க என்பவர்தான் தனது திருமணத்தால் தனது உரிமைகளையும் உரித்துகளையும் இழந்தவர். தற்போது கொழும்பில் வசித்துவருகிறார்.
கண்டியில் நடைபெறும் எசல பெரஹராவில் இடம்பெறும் நடனம் முதல் சகல விடயங்களையும் ஒவ்வொரு பிரிவினர்; செய்வதாகவும் சுமார் 4இ 5 தலைமுறைகள் இதனை தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தலதா மாளிகையை சுற்றியுள்ள பல நகரங்கள் தலதா மாளிகைக்குச் சொந்தமானது. தலதா மாளிகை நிர்வாகம் மன்னர் காலத்தில் அதனை நிலமேக்களுக்கு பிரித்துக்கொடுத்ததாகவும் அவர் கூறுகிறார். அந்த நிலப்பகுதி பரம்பரை பரம்பரையாக அந்த வர்க்கத்தினருக்கே சொந்தமானதென குறிப்பிடும் நிஸ்ஸங்க தேவாவ பார நிலமேக்கள் வசிக்கும் பகுதியே மெனிக்திவல என்கிறார்.

விளம்பரங்கள்

‘’மெனிக்திவலயில் வேற்று சாதியினருக்கு இடமில்லை. இங்கு இருப்பவர்கள்தான் கண்டி எசல பெரஹராவில் ஒவ்வொரு வேலையையும் செய்வார்கள். நடனமாடுவதுஇ வாத்தியங்கள் (பெர) இசைப்பதுஇ அந்த வாத்தியங்களை தயாரிப்பது, யானைகளைச் சொந்தமாக வைத்திருப்பது, யானைப் பாகன்கள், உடை தைப்பது, விவசாயம், முடி திருத்துவது, செருப்பு தைப்பது, இரும்புவேலைசெய்வது என ஒவ்வொரு குழுவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட இந்த வேலைகள் பரம்பரை பரம்பரையாக செய்யப்பட்டுவருகிறது. இதுவே சாதிப்பிரிவினையாக உருவாகியுள்ளது.” என்கிறார் நிஸ்ஸங்க.


“பண்டைய வரலாற்று பெருமைகொண்ட குடும்பங்களின் உரிமையையும் அடையாளத்தையும் குறிப்பிடும் ‘சன்னசா’ என்ற சான்றிதழ் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதையும் நாம் இழந்துவிட்டோம்.

தனது திருமணத்தால் கிராமத்தை விட்டு கொழும்பு நகருக்கு வந்த நிஸ்ஸங்க தாம் இழந்தவை பற்றி கூறுகிறார்.
“பரம்பரை பரம்பரையாக மெனிக்திவலயில் நெல் வயல்கள் உள்ளடங்கலாக நூறு ஏக்கருக்கு அதிகமான நிலம்இ இரண்டு மாடி வீடு, இரண்டு வாகனங்கள், பெறுமதிமிக்க சிலைகள், பரம்பரை பரம்பரையாக வந்த 30 பவுண்களுக்கு அதிகமான நகை என சகலவற்றையும் நாம் இழக்கநேரிட்டது. அந்த கிராமத்திலிருந்து எம்மை வெளியேறுமாறு நிலமே எமக்கு அறிவித்தார். நான் மட்டுமல்லஇ என் பெற்றோரும் அங்கிருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது. அந்த காலப்பகுதியில் மனதால் மிகவும் நொந்துஇ சகல உறவுகளையும் இழந்துஇ சகல உரிமைகளையும் இழந்து சாதாரண மக்களாக கொழும்பிற்கு வந்து வந்தோம்” என்று வருத்தம் தொனிக்க கூறுகிறார். தனது வாழ்க்கைத்துணையை தனக்கு பிடித்தமாதிரி தேர்ந்தெடுப்பதில் இருக்கும் தனிமனித சுதந்திரம் கூட்டு வாழ்வால் கட்டுப்படுத்தப்படுகின்றது. அனேகமாக குடும்பங்கள் தான் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்ககூடியன. ஆனால் குல குழுக்களே கட்டுப்படுத்தும் அளவிற்கு இன்றும் பண்டைய பாரம்பரியம் கட்டிவளர்க்கப்படுகிறது கண்டியில். அதுவும் உலகமே அறிந்த தலதா மாளிகையின் பின்னால் உள்ள பாரம்பரியங்களும் அதைக் காப்பாற்றுவதில் தனிமனிதனுக்கு ஒறுக்கப்பட்டுள்ள கடமையும் அவனது உணர்வுகளையும் விஞ்சி நிற்கின்றன. இலங்கைச் சட்டத்தில் கண்டியச் சட்டம்இ தேசவழமைச் சட்டம் (யாழ்ப்பாணம்) என்பதும் முக்கியப்படுகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நிஸ்ஸங்க இழந்தது இவை மட்டுமா? “பண்டைய வரலாற்று பெருமைகொண்ட குடும்பங்களின் உரிமையையும் அடையாளத்தையும் குறிப்பிடும் ‘சன்னசா’ என்ற சான்றிதழ் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதையும் நாம் இழந்துவிட்டோம். மொத்தத்தில் எமது குலப்பெயரையே நாம் கைவிடவேண்டியேற்பட்டது”. என்கிறார். இவ்வளவு கட்டிறுக்கமாக தலதாமாளிகையின் வெற்றிக்குப்பின்னால் இருக்கிறது தனிமனித சோகங்கள்!

/

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இந்த சாதிப்பாகுபாடுகளுக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதும் வர்க்க சமத்துவம் நிலவுகின்றபோது சாதிப்பாகுபாடு இருக்காது என்பதும் சிலரது கருத்து. ஆனாலும் அது சாத்தியமில்லை என்பதை மலையகத்தில் சில இடங்களில் காணலாம். பதுளை அப்புவளை பிரதேசத்தில் காணப்படும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் லயன் அறைகள்கூட சாதியின் அடிப்படையிலேயே அக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. ‘’அந்நியர்கள் எமது நாட்டை ஆண்டபோதே மக்களை அவர்களது தொழிலுக்கு ஏற்ப பிரித்துவைத்துவிட்டனர். இப்போதும் இந்த லயன் அறைகளை பாருங்கள். ஒரே சாதியை சேர்ந்தவர்கள்தான் வாழ்வார்கள். ஆரம்பத்தில் தாழ்ந்த சாதியினர் வாழும் லயன்களுக்கு உயர்ந்த சாதியினர் செல்ல மாட்டார்கள். அதேபோல் உயர்சாதியினர் வசிக்கும் பகுதிகளுக்கு அவர்கள் வரமுடியாது. விசேட நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை. அப்படி வந்தாலும் வீட்டிற்கு வெளியே அவர்களை அமரவைக்கும் நிலைதான் காணப்பட்டது.” என்கிறார் அங்கு வாழும் 80 வயதான கந்தையா சுப்புலட்சுமி. ஆவரிடம் அவர்களது கோவில் நடைமுறைகள் பற்றிக்கேட்டோம்.
“கோயில் திருவிழாக்களில் அன்னதானத்திற்காக சமைக்கும் இடத்திற்கு ஒரு குறித்த சாதியினரை அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் சமபந்தியில் அமர்ந்து சாப்பிடவும் முடியாது. சாப்பாடு பரிமாறக்கூட அவர்களுக்கு அனுமதியில்லை. ராமர் பஜனையில் அந்த கம்பத்தை தூக்கிச் செல்பவர் ஒரு குறித்த சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தோட்டத் தலைவரும் சாதியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார்.” என்கிறார் அவர்.
இன்றைய நிலைபற்றி அவர் குறிப்பிடும்போதுஇ இங்கு சில நெகிழ்வுப்போக்குகள் உள்ளன. பெரியகங்காணி பரம்பரையிடமிருந்த கோயிலை இப்போது தப்படிப்பவர்கள் தம்வசமாக்கிக்கொண்டனர். இத்தனை வருட காலமாக பெரிய கங்காணி பரம்பரை செய்துவந்த வேலையை இப்போது தப்படிப்பவர்கள் செய்கின்றனர். இவ்வருடம் முதல்தடவையாக இராமர் பஜனைக்கு அவர்கள் கம்பம் தூக்கியுள்ளனர். ஆனால் திருமணம் என்று வரும்போது சாதிப்பாகுபாட்டில் நெகிழ்வுத்தன்மை இல்லை. என்று கூறுகிறார்.
‘நான் வேற்று சாதி பையனை திருமணம் செய்ததால்இ என் வீட்டில் என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள்.நான் எனது வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சந்தோசமாக வாழ்கிறேன். ஆனால்இ என் தாய் இறந்தபோதுகூட என்னை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனது தாயின் உடலைப் பார்ப்பதற்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. இப்போது 10வருடங்கள் கழிந்துவிட்டன. அந்தக் காயம் என்னுள் இப்போதும் உண்டு.” என்கிறார் நுவரெலியாவைச் சேர்ந்த சாரதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது திருமண வெற்றிக்குப் பின்னால் உள்ள காயம் ஆறாத வடுவாக உள்ளது. இப்போது உறவினர்கள் தம்முடன் கூடிக்குலாவினாலும் அந்த வடு இருப்பதை மறக்கமுடியாது என்கிறார்.
இப்போது இந்துக் கோயில்களில் நெகிழ்வுப்போக்கு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
‘பெரிய கங்காணி பரம்பரை தோட்டங்களில் படித்தஇ பணக்காரராக பெரும்பாலும் இருப்பர். கோயில்களிலும் இவர்கள்தான் வேலைகள் செய்வர். கரகம் தூக்கும் வேலையையும் பெரிய கங்காணி மக்கள்தான் செய்தனர். ஏனையோர் கோயிலுக்குள் போகமுடியாது. இன்று அனைவரும் போகலாம். பௌத்தர் ஒருவரும் அண்மையில் கரகம் தூக்கினார்.’ என்று சாரதா கூறியதுடன் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் கூறினார். இனிவரும் சமூகம் சாதிப்பாகுபாடுகளைக் களைந்து முன்னேறவேண்டும் என்பதே அவரது ஆவல் எனவும் கூறினார்.
இவ்வாறு ஒரே பொருளாதார வர்க்கத்திற்குள் இருக்கும் மக்கள் தமக்குள் சாதிபாகுபாடு இன்றி வாழமுற்பட்டாலும் வர்க்கபேதம் மீண்டும் அவர்களை அழுத்துகிறது.
அண்மையில் அரசியல் கட்சியொன்றில் சாதிப்பிரச்சினை காரணமாக கட்சியிலிருந்து ஒருவரை வெளியேற்றிய சம்பவமும் நடந்தது என்பதையும்இ வலப்பனை சில்வர்கண்டி என்;ற தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளை சாதிப்பாகுபாட்டினால் பாடசாலைக்கு சேர்க்க முடியவில்லை. பின்னர் மனித உரிமைகள் ஆணையகம் வரை கொண்டுசென்று பிரச்சினை தீர்க்கப்பட்டது என்பதையும் அவர் கூறுகிறார்.
இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்படவேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஒவ்வொரு இனங்களுக்கிடையேயும் காணப்படும் சாதி மத பேதங்களை எவ்வாறு களையப்போகிறோம்? எப்போது களையப்போகிறோம்?நமக்குள் நல்லிணக்கத்தை எப்போது காண்போம்?