Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மனிதநேயம்:
இன, மத சாதி பேதமற்று புனர்வாழ்வு முகாமில்…!

சரத், ரமேஷ், முஹம்மத் மற்றும் கிரிஷ்டி ஆகியோரே பெயர்களால் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமையால் இணைந்துள்ளவர்களாவர். அவர்கள் இப்போது மனித நேயத்தால் இறுக்கமடை ந்துள்ளார்கள். போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் சிகிச்சை பெற்று புணர்வாழ்வு பெறுவதற்காக கந்தகெடுவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு வந்த இளைஞர்களிடையே இவ்வாறான உறவு ஏற்பட்டிருக்கின்றது.

25.02.2020  |  
அனுராதபுரம் மாவட்டம்

அவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் ஏற்கனவே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களாக இருந்து தற்போது இங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையில் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது போன்று இன, மத, சாதி வேறுபாடுகள் இல்லை.

சரத், ரமேஷ், முஹம்மத் மற்றும் கிரிஷ்டி ஆகியோரே பெயர்களால் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமையால் இணைந்துள்ளவர்களாவர். அவர்கள் இப்போது மனித நேயத்தால் இறுக்கமடை ந்துள்ளார்கள். போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் சிகிச்சை பெற்று புணர்வாழ்வு பெறுவதற்காக கந்தகெடுவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு வந்த இளைஞர்களிடையே இவ்வாறான உறவு ஏற்பட்டிருக்கின்றது.

/

அந்த புனர்வாழ்வு நிலையத்தில் எல்லா மதங்களுக்குமான மத வழிபாட்டு வசதிகள் உள்ளன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை பின்பற்றி அவர்களது மன அமைதியை பெறுவதற்குமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மத வழிபாடானது அவர்களது சிந்தனைகளை சரியான திசையில் நெறிப்படுத்த உதவி செய்வதால் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் புனர்வாழ்வு பெறுகின்ற அதே நேரம் மத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். வெசக் உற்சவ காலத்தில் பௌத்த இளைஞர்கள் வெசாக் அலங்கார பந்தல்களை செய்கின்ற போது ஏனைய மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருக்கின்றனர். போயா தினங்களில் அனைவரும் பௌத்த மத போதனைகளை செவிமடுக்கின்றனர். அதே போன்று ரமழான் மாதத்தில் நோன்பு காலத்தில் அனைவரும் ஒன்றாக நோன்பு இருக்கின்றனர். கிறிஸ்தவ வைபவங்கள் நடைபெறும் காலங்களில் அதற்கும் உதவி செய்கின்றனர். இந்து மத அனுட்டான நிகழ்வுகள் நடைபெறும் போது அதிலும் அனைவரும் பங்குபற்றுகின்றனர். இவ்வாறு பார்க்கின்ற போது அவர்களிடையில் மத அடிப் படையிலான வேறுபாட்டை காணவில்லை.

கிரிஸ்டி ஒரு குழுவின் தலைவராவார். அவர் 06 மாதங்களாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று இப்போது இளைஞர் முகாமில் ஏயையவர்களை வழிநடத்தும் திறமையான தலைமைத்துவ ஆளுமையை பெற்றுள்ளார். மதங்களுக்கிடையில் எந்தவிதமான வேறுபாட்டையும் காண முடியவில்லi என்று அவர் கூறுகின்றார்.


ஒரு தாயின் குழந்தைகளாக எவ்வாறு ஒன்றாக ஒற்றுமையாக வாழ்வதென்பதை கற்றுக்கொள்கின்றனர்.

“புனர்வாழ்வு நிலையத்தில் இருக்கின்ற இளைஞர்களிடையில் எந்தவிதமான இன, மத, சாதி அடிப்படையிலான வேறுபாடுகளும் இல்லை. அனைவரும் ஒரே சமமானவர்களாகவே கருதப்படுகின்றனர். எல்லா மதங்களும் எமக்கு எவ்வாறு வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு நடத்துவதென்பதை போதிக்கின்றன. எந்த மதங்களதும் போதகர்கள் ஏனைய மதங்களை இகழ்வதை அல்லது நிந்தனை செய்வதை போதிக்கவில்லை. இந்த புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படுகின்ற இளைஞர்கள் இங்கு இரண்டு வருடங்களாக ஒன்றாகவே வாழ்கின்றனர். ஆரம்பம் முதலே ஒரு தாயின் குழந்தைகளாக எவ்வாறு ஒன்றாக ஒற்றுமையாக வாழ்வதென்பதை கற்றுக்கொள்கின்றனர். அதனால் இங்கு இருக்கின்ற இளைஞர்கள் எல்லா மதங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் மதிப்பளிக்கின்றனர். எமக்கிடையில் ஏற்படுகின்ற பலவிதமான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைவது எங்களுக்கிடையில் நாம் பன்முகத்தன்மைக்கு தயாராக இல்லாத நிலையாகும். நாங்கள் அனைவரும் பல்லினங்களைச் சேர்ந்த பல்லின கலாச்சாரத்தை உடைய நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டும். இங்கு வருகின்ற அதிகமான இளைஞர்கள் மதத்தில் இருந்து வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்களாகவே இங்கு வருகின்றனர். குற்றச் செயல்களுக்கு சட்டரீதியாக தண்டனை வழங்குவது குறித்து மட்டுமே சமூகம் எப்போதும் சிந்திக்கின்றனது. குற்றச் செயல்களின் பின்னால் உள்ள காரணிகள் தொடர்பாக ஒரு சிலர் மாத்திரமே சிந்திக்கின்றனர்” என்று கிரிஸ்டி தெரிவிக்கின்றார்.

சிறைக் கைதிகளாக இருக்கும், புனர்வாழ்வு பெறும், போதைப் பொருளுக்கு அடிமையாகி அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு கட்டங்களாக புனர்வாழ்வளித்தல் நடை பெறுகின்றது. ஆரம்ப கட்ட புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கையானது அந்த நிலையத்தின் பணிப்பாளர் கேர்ணல் சமிந்த பாஸ்குவின் மேற்பார்வையின் கீழ் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறுகின்றது. முன்னள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் நடத்தப்பட்டு வந்த கைவிடப்பட்ட ஒரு விவசாய பண்ணையே புனர்வாழ்வு நிலையமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.

/கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையமானது 2013 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டதாகும். நாடெங்கிலும் உள்ள 09 மாகாணங்களில் இருந்தும் இளைஞர்கள் இங்கு அனுப்பப்படுகின்றனர். தற்போதைய புனர்வாழ்வு பெறும் இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 2.360 இளைஞர்கள் மேல் மாகாணத்தில் இருந்து இங்கு அனுப்பப்பட்டு புனர்வாழ்வு பெறுகின்றனர். மேலும் 587 பேர் தென் மாகாணத்தில் இருந்தும் 377 பேர் வட மேல் மாகாணத்தில் இருந்தும் இந்த நிலையத்தில் புனர்வாழ்வு பெறுகின்றனர். ஏனைய மகாகாணங்களில் இருந்து 100 இளைஞர்கள் அளவில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் எல்லா இனங்களையும் சேர்ந்தவர்களாவர்.

சிங்களவர்கள் 791, முஸ்லிம் 53, 18 பேர் தமிழர்களாகவும் உள்ளனர். மத அடிப்படையில் பார்க்கின்ற போது 679 பேர் பௌத்தர்களாகவும், 76 பேர் கிறிஸ்தவர்களாகவும், 53 பேர் ரோமன் கத்தோலிக்கர்களாகவும் 18 முஸ்லிம் மற்றும் 12 இந்து என்ற அடிப்படையில் புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும் என்பதே புனர்வாழ்வின் இலட்சியமாகும்.

“நாங்கள் வாழ்க்கையின் சரியான பாதையை இழந்து விட்டதோடு உதவியற்றவர்களாக உள்ளோம். பௌதீக ரீதியாக பலம் உள்ளவர்களிடம் இன, மத, சாதி வேறுபாடுகள் காணப்பட்டு வருகின்றன. நாங்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி பாதிக்கப் பட்டுவிட்டோம்”. என்று இந்த முகாமில் கைதியாக புனர்வாழ்வு பெறும் நிசாமன் கவலையோடு கூறுகின்றார். “ அப்போது நான் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். கனவு என்னை விட்டு தூரமாக தூரமாக மக்களும் என்னில் இருந்து ஒதுங்கி தூரமாகினர். என்னை இங்கு அனுப்பாமல் இருந்திருந்தால் எனக்கு என்ன நடந்திருக்கும் என்றே என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனாலும் இங்கு வந்தபோது நாங்கள் தண்டிக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவோம் என்று ஆரம்பத்தில் நினைத்தோம். இங்கு வந்துதான் நாங்கள் வாழ்க்கையைப் பற்றி மீண்டும் சிறந்த அனுபவமும் திறமையும் உள்ள அதிகாரிகள் மூலம் கற்றுக்கொண்டுள்ளோம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எங்களை இங்கு அனுப்புவதற்கு முன்னர் நாங்கள் குடும்பத்தார்களாலும் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டிருந்தோம். ஆனாலும் அவர்களுக்கு அந்தப் பொறுப்பு இருக்கின்றது என்பதை இங்கு வந்த பின்னர் நாங்கள் உணர்கின்றோம். நாங்கள் எங்களது சூழலில் வாழும் போது எங்களது பலத்தையும் வலிமையையும் வெளிபப்டுத்த நாங்கள் முயற்சி செய்கின்றோம். மத, இன மற்றும் சாதி அடிப்படையிலான வேறுபாடுகளானது வெறும் கற்பனைகளே என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ஆனாலும் சமூகத்தால் நாங்கள் போதைக்கு அடிமையானர்வகளாக அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் இந்த இனம், மதம், சாதி என்ற வேறுபாடுகள் எதனையும் காண முடியவில்லை. நாங்கள் இந்த முகாமுக்குள் அழுக்கடைந்தவர்களாகவும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் வந்தபோது அதிகாரிகள் எங்களை குளிக்கும் இடத்தில் விட்டபோது நாங்கள் ஒருநாளைக்கு பல முறை குளித்து சுத்தமானோம். அவர்கள் எங்களை மரக்கறி நாட்டும் தோட்டத்தில் விட்டனர். நாங்கள் விதைகளை விதைத்து அவை முளைக்கும் வரையில் காத்திருப்போம். எங்களுக்கு இருந்த போதை வியாதி தெளிவடைந்தது என்பதை அந்த விடயம் எங்களுக்கு தெளிவுபடுத்தியது”.

/நிமேஷ் என்பவர் பிறப்பால் சிங்கள பௌத்தவராவார். அதற்காக கந்தகாடு முகாமில் அவர் எந்தவிதமான இன அல்லது மத ரீதியான அடிப்படையில் கவனிக்கப்படவில்லை. அவர் மேலும் தெரிவிக்கையில் எங்களை மனிதர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கிக் கவனித்தனர் எனக் கூறுகின்றார்.
“முதல் மூன்று மாதங்களுக்கு நாங்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றாகவே உணவரு ந்துகின்றோம். ஒன்றாகவே வேலை செய்வதோடு ஒன்றாகவே குளிக்கின்றோம். ஒருவரையும் வேறுப டுத்துவதில்லை. நாங்கள் அனைவரும் நட்பால் இணைகின்றோம். தனிப்பட்ட முறையில் எங்களது மதங்களது ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்கின்றோம். ஆனாலும் குழுவாக எங்களை வேறுபடுத்தி இயங்கச் செய்கின்ற போது நாங்கள் சுயமாக இயங்க வேண்டி இருக்கின்றது. கந்தகாடு மற்றும் சேனபுர முகாமில் உள்ள அதிகாரிகள் மிகவும் நல்லவர்களாவர். அவர்கள் எங்களுக்கு வாழக் கற்றுத் தருகின்றனர். இந்த முகாமில் நாங்கள் நல்ல பிரசைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என்று நிமேஷ் தெரிவிக்கின்றார்.
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் 06 மாதங்கள் புனர்வாழ்வு பெற்ற பின்னர் பயிலுனர்கள் வெலிகந்தை சேனபுரவில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி முகாமில் தொழில்நுட்ப பயிற்சியையும் அறிவையும் பெற்றுக் கொள்வதற்காக அனுப்பப்படுகின்றனர். அந்த தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் எல்லா இளைஞர்களுக்கும் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதாக பயிற்சி நிலையித்தின் பணிப்பாளர் கேர்னல் ஒபேசேகர தெரிவிக்கின்றார். அத்துடன் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பற்றிய அறிவையும் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.

/
2013 ஆம் ஆண்டு முதல் சேனபுர தொழில்நுட்ப கற்பித்தல் மற்றும் பயிற்சி நிலையத்தில் இருந்து 3034 பேர் பயிற்சி பெற்று வெளியேறி உள்ளனர். தற்போது 713 பேர் பயிற்சி நெறிகளை பயின்று கொண்டிருக்கின்றனர். பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளைப் பார்க்க வருகின்ற போது எவ்வாறு பயிற்சி வழங்கப்படுகின்றது, மத அடிப்படையிலான மற்றும் இன ரீதியான நல்லிணக்கம் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது என்பதையும் அறிந்து கொள்கின்றனர். பெற்றோர் அனைவருக்கும் போதைப் பொருளில் இருந்து அவர்களது பிள்ளைகள் விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அவர்களது பிள்ளைகளைச் சிறந்த பிரசைகளாகவும் திறமையான இளைஞர்களாகவும் மாற்றியமைக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும். எல்லா இனங்களையும் சேர்ந்த மக்களது கண்ணீரும் எதிர்பார்ப்பும் அதுவாகும். இலங்கையர்களாகிய அனைவராலும் கந்தகாடு முகாமில் இருந்து அந்த பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.