Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இஸ்லாமியர் சிங்கள மொழிமூலம்..:
‘பிரிவினைவாதம் வேண்டாம், ஒருமைப்பாடு வேண்டும்!’

“எனது ஆசிரியரும் மாணவ நண்பர்களும் எனக்கு நிறைய உதவிகளை செய்கின்றனர். யாரும் எனது முயற்சிகளை தடுக்கவில்லை. எனது தாய் மொழியும், மதமும் எனக்கு தடையாக அமையவில்லை. ஒவ்வவொருவரையும் அவர்களது கனவுகளை அடையும் வகையில் இலட்சியமாக கொண்டு முன்னோக்கி செல்வதற்காக உற்சாகப்படுத்த வேண்டும்

28.02.2020  |  
அனுராதபுரம் மாவட்டம்

ரசீத் நவ்சாத் மற்றும் பரீனா தம்பதிகளின் இளைய மகன் ரியாஸ். ரசீத் நவ்சாத் அநுராதபுரத்தில் கடதிஹ என்ற இடத்தில் ஒரு சிறிய வியாபாரி. அவர்களது குடும்பம் ஏற்கனவே சிங்கள மொழியை சாரளமாக பேசுவதால் மகளை தமிழ் பாடசாலைக்கும் மகனை சிங்கள பாடசாலைக்கும் அனுப்புவதற்கு தீர்மானித்தனர். மகன் ரியாஸ் பாலர் பாடசாலைப் பருவம் முதலே ஒரு திறமையான சித்திரக் கலைஞராவார். அவர் டி.எஸ்.சேனாநாயக்கா ஆரம்ப பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அப்போதிருந்தே சித்திரம் வரைதல், இசை, நடனம் மற்றும் விளையாட்டு ஆகிய எல்லாத் துறைகளிலும் மிகுந்த திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். அத்துடன் அவர் இயற்கையை ஆதிகமாக நேசிக்கக் கூடிய ஒருவராகவும் இருந்து வந்தார்.

டி.எஸ். சேனாநாயக்கா ஆரம்ப பாடசாலையில் 5 ஆம் வகுப்பு வரையில் பயின்ற பின்னர் 2012 ஆம் ஆண்டு அநுராதபுரம் வலிசிங்க ஹரிஷ்சந்திர கல்லூhயில் 06 ஆம் வகுப்பிற்கு ரியாஸ் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் இலக்கியம், பௌத்தம், தொடர்பாடலும் ஊடகமும், மற்றும் தகவல் தொழில்நுட்பம் உட்பட க.பொ.த. (சா.தர) பரிட்சைக்கான பாடங்களாக பல பாடங்களை கற்றார். எதிர்காலத்தில் ஒரு கிரபிக் டிசைனராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்து வந்தது. பாடசாலையில் இனோகா என்ற ஆசிரியை அவருக்கு ஊடகமும் தொடர்பாடலும் பாடத்தை கற்பித்ததோடு அவர் அதனோடு இணைந்ததாக பிரதியாக்கம், ஒலிப்பதிவு, குறுந்திரைப்பட தயாரிப்பு, வீடியோ செம்மைபார்த்தல், ஒலி முகாமைத்துவம் மற்றும் புகைப்படக் கலை ஆகிய விடயங்களை கற்றுக்கொண்டார்.

பாடசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வுகள் மூலம் மிகவும் விரும்பிய ஒரு துறையாக புகைப்படக் கலையை ரியாஸ் விரும்பி கற்றுக் கொண்டார். இனோகாவுடைய மாணவர்களுள் ஒருவராக அடிக்கடி போட்டிகளுக்கு சித்திரம் மற்றும் புகைப்படங்களை அனுப்புபவராக ரியாஸ் இருந்தார். கொழும்பு இசிபதான கல்லூரியால் அதன் ஊடக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கலை போட்டியில் பங்குபற்றிய ரியாஸ் சிறந்த புகைப்படத்திற்கான விருதையும் 2017 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார். 2018 ஆம் ஆண்டு குருணாகலை சென்ட் ஆன்ஸ் கல்லூரியால் ஏற்பாடு செய்திருந்த போட்டியிலும் பங்கு பற்றி விருது பெற்றுக்கொண்டார். அத்துடன் பாடசாலையில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபற்றிய ரியாஸ் அவரது சிறந்த புகைப்படங்களுக்கான பரிசில்களை வென்றார். அத்துடன் தேசிய ரீதியான போட்டிகளிலும் ரியாஸின் புகைப்படங்களுக்கு பரிசில்களும் விருதுகளும் கிடைத்தன. அநுராதபுரத்தில் அதிகமான மாணவர்கள் இவரது புகைப்படத்துறையிலான திறமைகளை நன்கு அறிந்து வைத்திருந்தனர். தற்போது அவர் க.பொ.த. (உ. தர) பரீட்சைக்கு கலைப்பரிவில் தயாராகி வருவதோடு அவரது பாடங்களாக தகவல் தொழில்நுட்பம், ஊடகமும் தொடர்பாடலும் ஆகிய பாடங்களை கற்று வருகின்றார்.


நாங்கள் மூன்று மொழிகளிலும் செயற்படக்கூடிய ஊடகப் பிரிவாகும். சில நேரங்களில் சிங்கள மொழியையும் தமிழ் மொழியையும் இணைத்ததாகவும் பரிசில்கள் அறிவிக்கப்பட்டது.

“எனது ஆசிரியரும் மாணவ நண்பர்களும் எனக்கு நிறைய உதவிகளை செய்கின்றனர். யாரும் எனது முயற்சிகளை தடுக்கவில்லை. எனது தாய் மொழியும், மதமும் எனக்கு தடையாக அமையவில்லை. ஒவ்வவொருவரையும் அவர்களது கனவுகளை அடையும் வகையில் இலட்சியமாக கொண்டு முன்னோக்கி செல்வதற்காக உற்சாகப்படுத்த வேண்டும் என்பது எனது இலட்சியமாகும். ஊடகப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியராக இருந்து வரும் திருமதி இனோகா எனக்கு இரண்டாவது தாயைப் போன்றவராவார்” என்று ரியாஸ் கூறினார். அப்பகுதியில் இருக்கும் சிங்கள பாடசாலைகளை இணைத்ததாக ஊடக போட்டிகளை இனோகா ஏற்பாடு செய்வார். அப்போது ஊடக கருத்தரங்குகளிலும் போட்டிகளிலும் பங்குபற்றுமாறு மாணவர்களை அவர் ஊக்குவித்து வந்தார். இந்த ஊக்குவிப்பு காரணமாக பரிசளிப்பு நிகழ்வில் ஊடகப் பிரிவு அதிகமான விருதுகளை வெல்லக்கூடியதாக இருந்து வந்தது.

“அபினிஹாரண என்ற கருப்பொருளில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் எமது பாடசாலையின் ஊடகப் பிரிவு 30 விருதுகளை பெற்றுக்கொண்டு சாதனை படைத்தது. நாங்கள் மூன்று மொழிகளிலும் செயற்படக்கூடிய ஊடகப் பிரிவாகும். சில நேரங்களில் சிங்கள மொழியையும் தமிழ் மொழியையும் இணைத்ததாகவும் பரிசில்கள் அறிவிக்கப்பட்டது. சில முஸ்லிம் மாணவர்களால் சிங்களத்தில் மிகவும் சிறப்பான முறையில் போட்டிகளில் பங்குபற்றக்கூடியதாக இருந்தது. அதிலும் மூன்று மொழிகளையும் பேசும் ஆற்றலைப் பெற்றிருந்த ரியாஸ் மிகவும் விஷேடமான ஒருவராக இருந்தார். அவர் எல்லா வகையான போட்களிலும் பங்குபற்றி அவரது புகைப்படத்துறை திறமை காரணமாக பாடசாலைக்கு பெருமை தேடித்தரக் கூடியவராக இருக்கின்றார்” என்று ஆசிரியையான இனோகா கூறினார்.

வலிசிங் ஹரிஸ்சந்திர கல்லூரியின் அதிபர் டி. ரணசிங்க பின்வருமாறு கூறினார். “எமது பாடசாலையில் 5000 மாணவர்கள் அளவில் கல்வி கற்கின்றனர். அவர்களுள் 36 மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களாவர். அவர்கள் அவர்களது திறமைகளை விருத்தி செய்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் தேவையான எல்லாவிதமான வசதிகளையும் ஒரே சமமாக நாம் அவர்களுக்கும் வழங்கி வருகின்றோம். மொழி அல்லது மத அடிப்படையிலான எந்தவிதமான பாகுபாடும் காட்டப்படக் கூடாது என்ற கொள்கையை நாம் உறுதியாக கடைபிடிக்கின்றோம். தமிழ் மொழி பேசும் மாணவர்கள் மும்மொழிகளிலும் திறமைகளை வளர்த்து வெளிப்படுத்தி வருவதை உங்களால் காணக்கூடியதாக இருக்கும்” என்றார்.

ரியாஸ் அவரது கலை செயற்பாடுகளுக்கு வசதியாக அநுராதபுரம் புதிய நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள நீர்த்தேக்கமான கூம்பிச்சம் குளம் பகுதியில் இருக்கின்ற அவரது பாட்டனின் வீட்டில் தங்கி வருகின்றார். பூங்காவை அண்மிக்கும் போது அவரது திறமைகளை காண முடிகின்றது. ரியாசின் பாட்டன் இஸ்மாயீல் ஒரு சிறந்த கட்டிட நிர்மாண வேலைகளை செய்யக்கூடியவராக இருப்பதோடு பௌத்த விஹாரைகளைக் கூட நிர்மாணித்துள்ளார். இஸ்மாயீல் குறிப்பிடுகையில் அவரது பேரனுக்கு புதிய உலகத்தை சந்திக்கும் ஆசை இருந்து வருகின்றது என்றார். “எங்களது காலம் முடிவடைந்துவிட்டது. குழந்தைகள் புதிய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருப்பதோடு அதற்கான வசதிகளும் வழங்கப்பட வேண்டும். சமூகம் மொழியால் அல்லது மதத்தால் வேறுபட்டு பிளவுபடக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வதை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும என்றார்;.”