Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இளைஞர்களுக்கு வேண்டும்!
சமாதானம் மலர வழி விடல் அவசியம்!

வடக்கில் மக்கள் யுத்தத்தை வேண்டாம் என்றனர். யாரும் ஜனநாயகம், மனிதாபினம் என்பவற்றிற்கு மதிப்பளிக்காமல் யத்தம் தொடுக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதிகாமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாம் கண்டோம். யார் அவர்களை கொலை செய்தார்கள் என்பதைவிட யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது…

28.02.2020  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
P.J.T. Thanesh

சமாதானம், நல்லிணக்கம், இன ஐக்கியம் என்று வருகின்ற போது சிரேஷ்ட அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரது கருத்துக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க நாம் ஆர்வத்தோடு இருக்கின்றோம். அதே நேரம் பழைய சந்ததியினரால் இழந்ததாக கருதப்படும் இந்த விடயம் தொடர்பாக எமது இளைஞர்கள் களைப்படையாமல் செயல்பட்டனர். பி.ஜே.டி. தனேஷ் என்பவர் அத்தகைய இளைஞர்களுள் ஒருவராவார். யாழ்ப்பாணம் சென்ட்பற்றிக் கல்லூரியின் பழைய மாணவருமாவார். அவர் தற்போது நுண் உயிரியல் தொடர்பான கலாநிதித் பட்டப் படிப்பிற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றார். அண்மையில் அவருடன் கட்டுமரம் கலந்துரையாடியது.

கட்டுமரம் : – இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தம் முடிவடைந்தவுடன் நிரந்தர சமாதானம் மலரும் என்று அதிகமான மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனாலும் உடைந்து சிதைந்து போன நம்பிக்கையைத்தான் வடக்கு மற்றும் தெற்கு மக்களிடம் நாம் காண முடிகிறது?

வடக்கில் மக்கள் யுத்தத்தை வேண்டாம் என்றனர். யாரும் ஜனநாயகம், மனிதாபினம் என்பவற்றிற்கு மதிப்பளிக்காமல் யத்தம் தொடுக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதிகாமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாம் கண்டோம். யார் அவர்களை கொலை செய்தார்கள் என்பதைவிட யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. வடக்கிலும் தெற்கிலும் அதிகமான மக்கள் யுத்தத்தால்

பி.ஜே.டி. தனேஷ்

பாதிக்கப்பட்டவர்களாவர். யாரும் யுத்தத்தை அங்கீகரிப்பதில்லை. இனி எங்களுக்கு மேலும் யுத்தம் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை அனைவரும் எடுக்க வேண்டும். நாட்டின் மொத்த சனத்தொகையில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கே யுத்தம் தேவைப்படுகின்றது. பெரும்பான்மையினர் குரல் எழுப்புவார்களானால் எங்களால் அவர்களை அமைதிப்படுத்த முடியும். அரசியல் வாதிகைள சுற்றி உள்ள மக்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்க வேண்டும் என்பது அவர்களது தேவையாக இருக்கின்றது. பிரச்சினைகள் இல்லாதிருந்தால் அவர்களாகவே பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை எங்களால் காண முடியாமல் போனதற்கு அதுவே காரணமாகின்றது.

கட்டுமரம் : – முன்னைய மற்றும் தற்போதைய இரண்டு அரசாங்கங்களும் சமாதானத்தை கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஏன் அவை திருப்திகரமானதாக அமையவில்லை?

நாட்டில் எந்த பிரதேசமாக இருந்தாலும் அது எங்களது வீடு என்ற உணர்வின் அடிப்படையில் வடக்கு மற்றும் தெற்கை சேர்ந்த இரண்டு தரப்பு மக்களும் சிந்திக்கும் போதே நல்லிணக்கம் சாத்தியமானதாகின்றது. அதனை அரசாங்கத்தால் மாத்திரம் ஏற்படுத்த முடியாது. சரியான கருத்தின் அடிப்படையிலான இதற்காக பாடுபடக்கூடிய அரசியல் தலைமைத்துவம் அவசியமாகின்றது. அரசாங்கம் இதனை செய்ய முன்வந்தாலும் அதற்காக ஒத்துழைக்கக் கூடிய பிரசைகள் என்ற அடிப்படையில் மக்களின் பொறுப்புணர்வும் அவசியமாகின்றது. அப்போது அத்தகைய முயற்சிகள் வெற்றியளிப்பதாக அமையும்.

கட்டுமரம் : – மத மற்றும் தேசிய நல்லிணக்கம், சமத்துவம் பற்றி நாங்கள் பேசுகின்றோம். வடக்கில் மக்கள் மத்தியில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சாதி முறை வேறுபாடு இதற்கு தடையாக இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

முன்னைய சந்ததியினர் இன்னும் சாதி முறையை கடைபிடித்து வருகின்றனர். தெற்கிலும் அதில் வேறுபாடு இல்லை. பத்திரிகைகளில் மணமகன் மணமகள் வேண்டும் என்று திருமண விளம்பரங்கள் பிரசுரிக்கப்படும் போது ஒரு சாதியைச் சேர்ந்தவருக்கு அதே சாதி வேண்டும் என்ற அடிப்படையில் விளம்பரங்கள் பிரசுரமாவதை காணலாம். ஆனாலும் புதிய சந்ததியினர் இந்த சாதி வேறுபாட்டில் இருந்து ஒருவாறு நகர்ந்து கொண்டிருக் கின்றனர் என்று நான் கருதுகின்றேன்.

கட்டுமரம் : – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நல்லிணக்க செயற்பாடுகளில் முரணான விளைவை ஏற்படுத்தி இருக்கின்றது. இது பற்றி..?

ஆம். முன்னெடுக்கப்பட்டு வந்த நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இந்த தாக்குதல் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பல வருடங்களாக கட்டியெழுப்பப்பட்டு வந்த மக்கள் மத்தியிலான நம்பிக்கைகள் இதன் காரணமாக முற்றாக சிதைவடைந்து விட்டது. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை எமது நாடு – நாங்கள் அனைவரும் ஒரே தேசத்தவர்கள். நாங்கள் அனைவரும் மனிதர்களாக பிறந்து பின்னர் இனம் என்றும் மதம் என்றும் வேறுபட்டவர்களாக பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.