Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

யான் ஒயா:
அணைக்கட்டில் இருந்து பிறக்கிறது நல்லிணக்கம்!

இந்த நீர்பாசன திட்டம் காரணமாக கூடுதலான இழப்புக்கள் சிங்கள பௌத்தர்களுக்கே ஏற்பட்டுள்ளன. அலியாகட மற்றும் மாவத்தவெவ கிராமங்கள் முற்றாக நீரில் முழ்கி இல்லாமல் போயுள்ளன. அந்த கிராம மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களும் நீர் நிரம்பி அழிந்துவிட்டன. அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருப்பது முன்னர் திருகோணமலையில் மர முந்திரிகை காணிகளாக இருந்த இடத்திலாகும். அவர்கள் அங்கு தமிழர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும்…..

28.02.2020  |  
திருகோணமலை மாவட்டம்

இலங்கையில் அண்மைக்காலங்களில் பல பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு அவற்றில் பல முடிவுறும் நிலையில் உள்ளன. அவற்றில் ஒரு நீர்ப்பாசனத் திட்டமே கீழ் யான் ஒயா பாசன திட்டமாகும். மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள சீகிரியா பகுதியில் இருந்து ஆரம்பமாகி திருகோணமலையில் கடலுடன் சங்கமிக்கும் யான் ஒயாவை தொடர்புபடுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படுவதே இந்த யான் ஒயா நீர்ப்பாசனத் திட்டமாகும். பாய்ந்தோடும் யான் ஒயாவால் ஹ_ருளுவெவ நீர்த்தேக்கம் பாசன வசதியை பெறுகின்றது. ஆனாலும் பில்லியன் கணக்கிலான லீட்டர் நீரை எவ்விதமான பிரயோசனமான வழிகளுக்கும் பயன்படுத்தி அதனை அண்டிய பிரதேசங்களை செழிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் கடலுடன் சங்கமித்து வருவது கவலைக்குரியதாகும்.

யான் ஒயா நீர்த்தேக்க நிர்மாண திட்டத்தின் பிரதான குறிக்கேளாக அமைவது கிழக்கு மாகாண மக்களுக்கு குடி நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். இப்பிரதேசங்களில் அதிகமான மக்கள் தங்களது நிலங்களை இழந்து கிராமங்களை ஏனைய மக்களின் நலன்களுக்காக தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த செயற்பாடு காரணமாக உண்மையான நல்லிணக்கம் மரலவும் வழி ஏற்பட்டிருக்கின்றது.

එම්.කිරිහාමි  எம். கிரிஹாமி

எம். கிரிஹாமி என்ற 69 வயதான விவசாயி ஹொரவ பொத்தானையில் வாஹல்கட கிரமத்தில் வாழ்ந்தவராவார். “அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வரட்சியானது வாழ்க்கையோடு இணைந்த ஒரு பகுதியாகும். நாங்களும் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம். திருகோணமலை கோமரங்கடவல பிரதேசத்தில் எங்களது உறவினர்கள் வாசிக்கின்றனர். யுத்த காலங்களில் அவர்கள் ஊரை விட்டு வெளியேறி முகாம்களில் அல்லது எங்களது வீடுகளிலே வாழ்ந்தனர். அவர்களது துயரத்தை நாங்கள் அறிவோம். நீர் வசதி இல்லாததால் ஒரு போகத்திலும் கூட விவசாயம் செய்வது அவர்களுக்கு வெறும் கனவாகவே இருந்து வருகின்றது” என்று அவர் கூறினார்.

“யுத்தம் காரணமாக சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் மூன்று தசாப்தங்களாக துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது இனம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக நாங்கள் கருதுகின்றோம். அவர்கள் அனைவரும் நல்ல முறையில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்களாவர். தமிழர்களில் அதிகமானவர்கள் விவசாயிகளாவர். இந்த நீர்ப்பாசனத்திட்டம் காரணமாக அவர்கள் பெருமளவில் நன்மையடைவார்கள். அணை நிர்மாணிக்கப்படுவதை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியயுடன் வரவேற்கின்றோம். முன்னர் குடி நீருக்காக அவர்கள் நான்கு மைல்கள் தூரம் வரையில் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. யுத்தம் காரணமாக அவர்கள் இரண்டு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாவதாக அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்த துன்பமாகும். இரண்டாவதாக குடிநீருக்காக அனுபவிக்கும் துன்பமாகும்.”

“நாங்கள் இந்த திட்டம் காரணமாக எங்களது நிலத்தையும் மேய்ப்பு நிலங்களையும் கூட இழந்திருப்பது உண்மையாகும். இப்போது நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தோடுவதால் எமது வயல் நிலங்களும் நீரால் நிரம்பி இருக்கின்றது. சில பாதைகள் கூட நிரந்தரமாக நீரில் மூழ்கி இருப்பதால் எங்களது உறவினர்களை சந்திக்கும் நிலை இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு இப்போது சிறுபோகம் மற்றும் பெரும் போகம் ஆகிய இரு போகங்களிலும் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியும். அவர்களது நன்மைக்காக நாங்கள் இந்தத் தியாகத்தை செய்தோம். நாங்கள் உண்மையான பௌத்தர்கள் என்ற முறையில் இந்த சேவையைச் செய்துள்ளோம். யார் நீரை படைத்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு நீர் தேவைப்படுவதோடு எங்களால் அதை சொந்தமாக்கிக் கொள்ள முடிந்திருக்கின்றது” என்று கிரிஹாமி கூறுகின்றார்.

ஹொரவ பொத்தானை நகரத்தைச் சேர்ந்த அநுர விக்கிரமசிங்காவுக்கும் யான் ஒயா திட்டத்திற்கும் இடையிலான உறவானது மரத்திற்கும் வேருக்கும் இடையிலான உறவைப் போன்றதாகும். யான் ஓயா நீர்பாசன திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பாக அவரே மத்தியஸ்தம் வகித்து தீர்த்து வைக்க முயற்சி செய்து வருவதோடு இப்போது அந்த திட்டத்தின் நிரந்தர பிரதிநிதியாகவும் இருக்கின்றார்.

/

2012 ஆம் ஆண்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது இந்த திட்டம் யாருக்காக ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது என்ற விடயம் எங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. பதவியாவுக்கான ஒரு சுரங்க வழியும் மற்றது திருகோணமலைக்கும் தோண்டப்படும் விடயம் அறிவிக்கப்பட்ட போது மக்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். மக்கள் நீர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனரே தவிர எந்தவிதமான பிரயோசனமும் எடுக்கப்படாமல் கடலுடன் சங்கமிக்கும் ஆற்று நீரைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை. மக்களது மனங்களிலான சிந்தனைகளை மாற்றுவதற்காக நாங்கள் மிகவும் பாடுபட வேண்டி இருந்தது.”

“ஹொரவப் பொத்தானை மக்கள் இத்திட்டத்தை எதிர்த்தனர். திருகோணமலை, கோமரங்கடவலை பகுதி கிராம மக்களுடன் திருமண ரீதியாகவும் வேறுவகையிலும் உறவை பேணி வருவதால் அவர்கள் இதனை எதிர்க்கவில்லை.”

“திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மெதுவாக முன்னெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போது மக்கள் ஒன்றிணைந்த குறைபாடுகளை நிவர்த்திக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரம்பித்தனர். கோமரங்கடவலையில் வசிக்கும் தமிழர்களும் சிங்களவர்களும் அவர்களுக்கு உதவிகளை செய்தனர். அப்பகுதி மக்கள் இன அடையாளங்களை மறந்து சரியான திசையில் ஒன்று படலாயினர். இந்த மக்களுக்காக என்னால் செய்ய முடிந்ததை செய்தேன்”;.

இப்போது நீர்த்தேக்க வேலைகள் முடிந்து நீரால் நிரப்பப்பட்டிருக்கின்றது. எவ்வாறாயினும் மக்களது பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. இடம்பெயர்ந்த மக்களுக்கு முறையாக நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை. ஹொரவ பொத்தனைக்கும் வாஹல்கடவிற்கும் இடையிலான பாதை முற்றாக துண்டிக்கப் பட்டிருக்கின்றது. அவர்கள் கிராமத்தை செயன்றடைய கெபிதிகொல்லாவை ஊடாக போக வேண்டி இருக்கின்றது. திட்டத்திற்கமைய அதற்கான புதிய பாதையொன்று நிர்மாணிக்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் இன்னும் அந்த பாதையை அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த நீர்பாசன திட்டம் காரணமாக கூடுதலான இழப்புக்கள் சிங்கள பௌத்தர்களுக்கே ஏற்பட்டுள்ளன. அலியாகட மற்றும் மாவத்தவெவ கிராமங்கள் முற்றாக நீரில் முழ்கி இல்லாமல் போயுள்ளன. அந்த கிராம மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களும் நீர் நிரம்பி அழிந்துவிட்டன. அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருப்பது முன்னர் திருகோணமலையில் மர முந்திரிகை காணிகளாக இருந்த இடத்திலாகும். அவர்கள் அங்கு தமிழர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த திட்டத்தை முன்னெடுத்ததில் இருந்து பூர்த்தி செய்தது வரையில் பல குறைபாடுகள் உள்ளன”.

அணை நிர்மாணிக்கப்பட்டதால் சமாதானத்தை கட்டி எழுப்பும் நடவடிக்கைகள் பாதிப்பின்றி முன்னெடுக்கப்பட்டாலும் அணை காரணமாக நீரால் மூழ்கடிக்கப்பட்ட வாழ்விடங்கள், மதம் மற்றும் கலாச்சாரம் என்பவற்றை மீண்டும் தேடி கண்டுபிடிக்க முடியாததாகிவிட்டன. ஆனாலும் யான் ஓயா திட்டம் காரணமாக புதிதாக கட்டியெழுப்பப்பட்ட இனங்களுக்கிடையிலான ஒற்றுமை நல்லிணக்கம் என்பன மேலதிக நன்மையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. இதனால் மக்கள் விட்டுக்கொடுப்புகளைச் செய்திருப்பதோடு ஏனையவர்களுக்காக உதவிகளை செய்து ஒத்தசை புரிவதற்கும் கற்றுக்கொண்டனர்.