Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இயற்கை அனர்த்தங்கள்:
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மனிதாபிமானம்!

பஸ் வண்டிக்குள் வெள்ளம் புகுந்த பின்னர் உயிர்கைள காப்பாற்ற வேறு வழி இருக்காததால் என்ன நடந்தாலும் சரி என்ற அடிப்படையில் வெள்ளத்தில் குதிக்க வேண்டிய நிலை எற்பட்டது…

02.03.2020  |  
பொலநறுவை மாவட்டம்

வெள்ளத்தில் நீந்துவதென்பது நினைக்கின்ற அளவிற்கு இலகுவான காரியம் அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனாலும் பஸ் வண்டிக்குள் வெள்ளம் புகுந்த பின்னர் உயிர்கைள காப்பாற்ற வேறு வழி இருக்காததால் என்ன நடந்தாலும் சரி என்ற அடிப்படையில் வெள்ளத்தில் குதிக்க வேண்டிய நிலை எற்பட்டது.

தொடர்ச்சியான மழை காரணமாக ரஜரட்டை பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய தகவலாக இது அமைகின்றது. பொலநறுவை மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள மன்னம்பிட்டிய மற்றும் கலெல்ல என்ற பிரதேசங்கள் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏழு அடி வரை நீர் உட் புகுந்து வெள்ளம் ஏற்பட்டதால் அந்த கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பிரயாணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும் இந்த வெள்ளத்தில் அடிபட்டுச் சென்று இடையில் சிக்கிக் கொண்டது. அந்த பஸ்சில் இருந்த பிரயாணிகளை காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியானது வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத அனுபவமாகும். உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அந்த பிரயாணிகளை காப்பாற்றும் பணியில் இரண்டு வீரர்கள் ஈடுபட்டனர். அவர்களே முஹம்மத் மற்றும் பவாஸ் ஆகிய வாலிபர்களாவர்.

பொலன்நறுவை, கதுருவலை கலெல்லயைச் சேர்ந்த 32 வயதுடைய ஜவ்பர் டீன் மஜீத் என்பவர் அதிகாலை 2.30 மணியளவில் அந்த கொடூரமான செய்தியைக் கேள்விப்பட்டவுடன் விழித்துக் கொண்டார். 54 பிரயாணிகளுடன் அந்த பாதையில் சென்று கொண்டிருந்த பஸ் வண்டி நீரில் மூழ்கியதாக தகவல் கிடைத்தது.

முஹம்மத் – பவாஸ்

கலெல்லையில் பாதை ஓரத்தில் அமைந்துள்ள இரவு நேர சாப்பாட்டுக் கடைக்கு பக்கத்தில் முஹம்மத் என்பவரும் பவாஸ_ம் உரையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் மணல் எடுக்கும் வேலை செய்பவர்களாக இருந்தபோதும் அப்போது மழை காரணமாக வேலை இல்லாமல் இருந்தனர். “பல குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட பலரும் பஸ்சினுள் இருந்தனர்”. பெய்ன்ட வேலை செய்யும் ஒருவரால் அந்த செய்தி குறித்த வாலிபர்களுக்கு அந்த நேரத்தில் தெரியப் படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் ஒரு தந்தையான முஹம்மத் இந்த செய்தியின் பாதகத்தை அறிந்து கொண்டவுடன் நண்பரான பவாசையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு தலத்திற்கு விரைந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் பொலீசாரும் உயிர்காக்கும் படை வீரர்களும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். ஆனாலும் அங்கே பஸ்சைக் காணவில்லை.


மற்றவர்களது உயிர்களைக் காக்க எங்களால் முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்

“பஸ் அந்த இடத்தில் இருந்து மிகவும் தூரத்தில் காணப்பட்டது. ஒரு பிரயாணி பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு ஒரு தெலைபேசி அழைப்பை செய்திருந்தார்”;. அந்தத் தகவலை பொலீஸ் அதிகாரி முஹம்மதிடம் தெரிவித்தார். அப்போது பஸ் எந்த இடத்தில் அடிபட்டுப் போய் இறுகி இருக்கும் என்பதை முஹம்மதால் அறிந்து கொள்ள முடிந்தது. அப்போதைக்கே வெள்ள நீர் ஏழு அடிவரை உயர்வடைந்திருந்ததால் நேரம் கடந்து கொண்டிருப்பதாக முஹம்மத் கூறினார்.

“நாங்கள் பஸ் இருக்கும் இடத்திற்கு நீந்தி போவோமா” என்று முஹம்மத் ஒரு யோசனையை பவாசிடம் முன்வைத்தார்.

ஆனாலும் அந்த ஆபத்தான ஆலோசனையை பவாஸ் நிராகரிக்கவில்லை. பொலீஸ் பொறுப்பதிகாரி இருந்த இருள் சூழ்ந்த இடத்திற்கு இருவரும் சென்றனர். என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக பொலீஸ் பொறுப்பதிகாரி அவரது படை வீரர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற இந்த இளைஞர்களிடம் பொலீஸ் பொறுப்பதிகாரி உதவி கோரினார். அதற்கு காரணம் இவர்களுக்கு நன்றாக நீந்த முடியும்; என்பதனால் ஆகும்.

கடுமையான வெள்ளம் அவர்களது முயற்சியை பின்னடையச் செய்வதக்கான போராட்டத்தை மேற்கொண்டதாயினும் இவர்களது ஒரே இலட்சியம் வெள்ளத்தையும் மீறி மக்களை காப்பாற்றும் முயற்சியில் கடுமையாக ஈடுபடுவதாகும். எவ்வாறாயினும் அவர்கள் பஸ் இருந்த இடத்தை கண்டுபிடிக்க சற்று நேரம் தேவைப்பட்டது. அவர்கள் பஸ் இருந்த இடத்தை அடைந்தவுடன் நிலைமை இருந்தததை விட மோசமடைந்திருந்ததை இரண்டு பெரும் உணர்ந்து கொண்டனர். பிரயாணிகள் செய்வதறியாது புலம்பிக் கொண்டிருந்தனர். வெள்ள நீர் அப்போது பஸ்சின் உட்புறத்தில் நிரம்பிக் கொண்டிருந்தது. அத்துடன் எங்கும் இருள் சூழ்ந்த நேரம் அது.

பஸ்சில் இருந்த ஒரு பிரயாணியின் தொலைபேசி மூலம் பொலீஸ் பொறுப் பாதிகாரியை தொடர்பு கொண்ட பவாஸ் நிலைமையை எடுத்துரைத்ததோடு பயணிகளுக்கும் பதற்றப்படாமல் நிதானமாக இருக்குமாறு கூறி சமாளித்து உயிர்காகக்கும் படை வீரர்களை அழைத்தார். அந்த நேரத்தில் மீட்பு படை வீரர்கள் உயிர் காக்கும் போட்டுடன் வந்து சேர்ந்தனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை முஹம்மத் பவாஸ் விளக்கினார். “விரைவாக வெள்ளம் வந்துவிட்டது. நாம் முதலில் குழந்தைகளையும் பெண்களையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் காப்பாற்றினோம். வெள்ளத்தில் சிக்கி இருந்தவர்களை காப்பாற்ற வள்ளம் மூன்றாவது முறையாகவும் வந்த போது அங்கே இருந்த ஒரு மருத மரத்தில் மோதியதால் ஒருபகுதி உடைந்துவிட்டது. அதன் பின்னர் பொலீசார் ஒரு பெகோ இயந்திரத்தை கொண்டு வந்து பஸ்சை தண்ணீரில் இருந்த வெளியே இழுத்து எடுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் முடியவில்லை. பின்னர் பாரம் தூக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பஸ் தண்ணீரில் இருந்து வெளியில் இழுத்து எடுக்கப்பட்டது. மற்றவர்களது உயிர்களைக் காக்க எங்களால் முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்”.

“இந்த மணல் அகழும் இரண்டு வாலிபர்களும் இருந்திருக்காவிட்டால் கடுமையானதும் சிரமமானதுமான காரியமாக இது இருந்திருக்கும். நாம் அவர்களது அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும்” என்று பொலன்நறுவை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியான எம்.எஸ்.எம். ஜரூன் கூறினார்.