Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வாதுவை:
அமைதியான கடல் அழுகிறது! மீனவர்களும்தான்!

“மீன்கள் எங்களை கைவிட்டுவிட்டன. தற்போது நாங்கள் கடலில் இருந்த வலைகளை கரைக்கு இழுத்து எடுத்தால் அதற்குள் இருப்பது ஒருசில மீன்களும் பிளாஸ்றிக் குப்பைகளும்….

27.04.2020  |  
களுத்துறை மாவட்டம்

வருடத்தின் ஆரம்பத்தில் வாதுவை கடற்பரப்பு மிகவும் அமைதியாகவே காணப்படுகின்றது. வெவ்வேறு அளவிலான மீனவப் படகுகள் மிகவும் இலகுவாக வாதுவை கடற்பரப்பை அடைய முடியுமாக இருக்கின்றது. அவ்வாறே மீனவர்களும் கடலை விட மிகவும் அமைதியானவர்களாக உள்ளனர்.

இலங்கையின் வட மேற்கு கரையில் அமைந்திருப்பதே தல்பிடிய கிராமமாகும். இந்த கிராமம் பாணந்துறைக்கும் வாதுவைக்கும் இடையில் இருக்கின்றது. பாரியளவிலான மீன் பிடிவலைகளைக் காய விடுவதற்காக விரித்து பரப்பக் கூடிய இடமாக இந்த பகுதி இருந்து வருகின்றது. இந்த மீன்பிடித்துறையானது கரைவலை மீன்பிடி என்றழைக்கப்படுகின்றது. இந்த பகுதியில் அதிகமான மீனாவர்கள் பௌத்தர்களாகவும் சிலர் கத்தோலிக்கர்களுமாவர். மத, கலாச்சார வேறுபாடுகளை மறந்தவர்களாக அவர்கள் அனைவரும் ஒன்றாகவே தொழிலில் ஈடுபடுகின்றனர்.

/

பாணந்துறைக்கு தெற்காக கடலுடன் சேரும் ஆற்றின் வழியாக நகரத்தின் கழிவு மற்றும் சாக்கடை நீர் கடலுக்கே வந்து சங்கமிக்கின்றது. அதன் பிரதிபலனாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுகின்றது. தெற்கு தல்பிடிய கிராமிய மீனவ சங்கத்தின் தலைவரான ஆரியதாச பெர்னாண்டோவுடன் நாங்கள் இது தொடர்பாக கலந்துரையாடியபோது அவர் கூறியதாவது :

“நான் ஒரு மீனவன். நாங்கள் மரபு ரீதியாக மீனவத் தொழிலை செய்து வருவதோடு கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். நான் பௌத்தராக இருந்தாலும் கத்தோலிக்கர்களும் இணைந்து ஒன்றாகவே கடலுக்கு போகின்றோம். இந்தக் காலத்தில் மீன் பிடிபடுவது மிகவும் குறைவாக இருக்கின்றது. பெரிய வலைகளை இழுக்க 50 – 60 பேர் வரையில் ஒன்று சேர்கின்றனர். இவ்வாறு ஒன்றாக பங்குபற்றும் அனைவரும் அவர்களது பங்குகளுடன் அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான போதுமான ஒரு வருமானத்தை உழைக்கின்றனர். கடல் சீற்றமுடையதாக மாறி மீன் பிடிக்க கடலுக்கு போக முடியாத சந்தர்ப்பங்களில் இவ்வாறு மேலதிகமாக உழைக்கின்ற பணத்தை கொண்டே எங்களது மீனவர்கள் சீவியம் நடத்துகின்றனர். இப்போது நிலைமை ஓரளவிற்கு மாற்றமடைந்திருக்கின்றது. இப்போது அலைகள் ஓய்ந்து கடல் அமைதியான காலமாக மாறி இருக்கின்றது. கரைவலைகளைப் பின்னுகின்ற அதிகமான தொழிலாளர்கள் அவர்களது மரபு ரீதியான தொழில்களை கைவிட்டுள்ளனர். வலைபின்னலில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் பெறும் சம்பளம் போதியதாக இல்லை. அதனால் அவர்கள் தொழில்களை கைவிட்டுள்ளனர். அவர்களுக்கு ஒருநாளைக்கு 200 ருபா கொடுக்க வேண்டி இருக்கின்றது. ஆனாலும் இந்த 200 ருபாவுக்காக இந்த தொழிலில் ஈடுபடுவதால் எந்தவிதமான பொருளாதார பலனும் இல்லை என்பது அவர்களது அபிப்பிராயமாகும். அதனல் வாழக்கையை கொண்டு நடத்த முடியாது என்று கூறுகின்றனர்.

கிழக்கு கரையோரமாக உதவிகள் மிகவும் குறைவாக இருக்கின்ற நிலையில் பழுதடையும் மீன்பிடி வலைகளை மீள பின்னி எடுப்பதே மரபாகும். ஆனாலும் இந்த முறையை மேற்கு கரையோர பிரதேசங்களில் பின்பற்ற முடியாதிருப்பதற்கு காரணம் கடற்கரை மிகவும் ஒடுக்கமாக இருப்பதாகும். அதனால் 50 முதல் 60 வரையான மீனவர்ககள் ஒன்றாக சேர்ந்த பாரிய கரை வலையை இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் வலை பழுதுபார்ப்பவர்களால் அதற்கான செலவுகளை ஈடு செய்ய முடியாது. அவர்களது வலைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வேறு மாற்று வழிகளும் இல்லை. இது பற்றி ஆரியதாச கூறுகையில்,

“தல்பிடியவின் வடக்கு மற்றும் தெற்காக இரண்டு ஆறுகளின் சந்திப்புக்கள் உள்ளன. வடக்காக பொல்கொட ஆறும் தெற்காக களு ஆறும் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு ஆறுகள் வாயிலாக பாரியளவிலான குப்பைகள் கடலுக்குள் வந்து சேர்கின்றன. காலநிலையின் போக்கும் மாற்ற மடைந்திருக்கின்றது. மழை காலங்களில் பாரியளவிலான குப்பைகளும் கழிவுகளும் கடலுக்குள் அள்ளுண்டு வருகின்றன. அவை கடற்கரைகளில் தேக்கம் அடைவதால் கடல் சூழல் மாசடைகிறது. நான் ஒரு படித்த மனிதனாக இல்லாவிட்டாலும் எனது அனுபவத்தின்படி இந்த நீரில் மீன் உயிர் வாழ முடியாது. அவற்றின் முட்டைகள் அழிந்துவிடுகின்றன. இதனால் இப்போது எங்களது மீனவத் தொழிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.”

/

ரோமன் கத்தோலிக்கரான சுசில் பிரேமலால் மீன் பிடி வலை பின்னும் தொழிலை செய்து வருபவராவார். ஆரியதாச பெர்னாண்டோவின் குழுவினருள் பிரேமலால் பெரோ மிகவும் அனுபவம்வாய்ந்த முன்னணி வலை பின்னுபுபவராவார். எவ்வாறாயினும் தலைவரும் அவரது உதவியாளரும் இப்போது மீன்பிடித் தொழிலில் ஈடபடாதவர்களாக கடலை உற்று நோக்கியவர்களாக உள்ளனர்.

“மீன்கள் எங்களை கைவிட்டுவிட்டன. தற்போது நாங்கள் கடலில் இருந்த வலைகளை கரைக்கு இழுத்து எடுத்தால் அதற்குள் இருப்பது ஒருசில மீன்களும் பிளாஸ்றிக் குப்பைகளுமாகும். ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒரு சிறிய படகு கொண்டு வரப்பட்டு கழிவுகள் இழுக்கப்பட்டு வேறுபடுத்தப்பட்டதோடு அந்தப் படகு பின்னர் விற்பனை செய்யப்பட்டது. அது மீனவர்களுக்கு இடையூறான வேலையாகவும் இருந்தது என்று சுசில் ஆரியதாசவின் உதவியலாளர் கூறினார்.

கடந்த வருடத்தின் ஆரம்ப காலப் பகுதியில் கடல் ஆய்வாளர்கள் தெரிவிக்கையில் இலங்கை தீவுக்கு அருகாமையில் வங்காள விரிகுடாவை அண்மித்ததாக சாக்கடைக்கடல் உருவாகுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். சர்வதேச அறிக்கைகளின்படி இந்து சமுத்திர பிரதேசத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலைமைகள் உருவாகின்றது என்பதை இது காட்டியது. கடலில் அதிக உஷ்ண நிலை அதிகரிக்கும் போது அதனால் பக்ரீரியாக்கள் உருவாகி கடல் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிந்து போகும் நிலை ஏற்படுகின்றது. மீனின் வாழ்விடங்களாக உள்ள ‘கோரல்;ஸ்’ அழிந்துவிடுகின்றன. இறந்து மிதக்கும் மீன்களின் அழுகிய வாசைன கடல் மேற்பரப்பை மேலும் மாசடையச் செய்கின்றது. இவ்வாறாக இந்து சமுத்திர பிரதேசம் அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்து சமுத்திர கடல் பிரதேசத்தின் 21 இலட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் 60000 சதுர பரப்பளவிற்கு இந்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்கும் பிரதேசங்கள் உட்பட மீனவ சமூகத்தினரும் சேர்ந்தே இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனை தடுப்பதற்காகவும் கடல் நீர் மற்றும் கரையோரங்கள் மாசடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடலாம் என்ற அச்சுறுத்தலை கடல் வள ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். நீர் நிலைகள், ஏரிகள் மற்றும் ஆறுகள் வாயிலாக கடலுக்குள் அள்ளுண்டு வரும் குப்பைகளை தடுக்க வேண்டும். இந்து சமுத்திர பிரதேசத்தில் அதிகமான மக்கள் தெரிந்தோ தெரியாமலோ கடலை மாசடையச் செய்வதில் பங்களிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள பிரதான நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளிலில் இருந்தே பிரதானமாக ஆறுகள் கடலோடு கலக்கின்றன. தாய்லாந்து, மலேசியா, அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து பாய்ந்து வரும் ஆறுகளும் வங்காள விரிகுடாவுக்கு அண்மித்த கடலோடு சேர்கின்றன. இந்த ஆறுகள் அனைத்தும் மில்லியன் கணக்கிலான தொன்கள் எடையுடைய கழிவுகளையும் குப்பைகளையும் கடலுக்குள் அள்ளிக்கொண்டு வருகின்றன.

அதே நேரம் பாரிய சரக்கு கப்பல்களும் இப்பிரதேச கடலில் தினமும் மிதக்கின்றன. அவற்றில் அதிகமான கப்பல்கள் இந்து சமுத்திரத்தை கடந்து செல்வதோடு இப்பகுதியில் உள்ள துறைமுகங்களுடனும் இணைந்து கொள்கின்றன. 70 வீதமான எரிபொருள் கப்பல்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாகவே பிரயாணம் செய்கின்றன. இந்து சமுத்திரத்தை அவற்றில் கொண்டு வருகின்ற கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டும் இடமாக இந்த கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.

இந்துசமுத்திர பிரதேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 28.5 பில்லியன் மக்களது பிரதான உணவாக மீன் இருந்து வருகின்றது. எவ்வாறாயினும் அவர்கள் அனைவரும் அறிந்து அல்லது அறியாத நிலையில் கடலை மாசடையச் செய்வதில் பங்களிப்பு செய்தவர்களாக உள்ளனர். அவர்களாலும் மக்களது அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகின்றது.

ஒரு சர்வதேச கணிப்பீட்டின் படி வருடாந்தம் 10 மெட்ரிக் தொன் எடைகொண்ட பிளாஸ்ரிக் மற்றும் பொலிதீன் கழிவுகள் கடலில் சேர்கின்றன. இவ்வாறு சேர்கின்ற பிளாஸ்ரிக் பொருட்கள் அழிவடைய 450 வருடங்கள் செல்கின்றன. இன்று தொடரும் இதே நிலையில் தொடர்ந்து பிளாஸ்ரிக் மற்றும் பொலிதீன் கழிவுப் பொருட்கள் கடலில் சேரும் நிலை தொடருமானால் 2050 ஆம் ஆண்டளவில் கடலில் உள்ள கடல் சார் உயிரினங்களின் அளவைவிட பல மடங்கு இந்த கழிவுகள் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

பிளாஸ்ரிக் போத்தல்கள், பொலிதீன் உறைகள், பால் பவுடர் பக்கட்டுக்கள், சுத்கரிப்பு துவாய்கள் மற்றும் பல்வேறு விதமான ஏனைய கழிவுப் பொருட்களின் வகைகளையும் நாம் கடலில் வலையை விரித்து இழுத்தால் வலைக்குள் சிக்குவதை பார்க்கின்றோம். இந்த கதையின் சரியான பக்கமாக அமைவது இவ்வாறு கடலில் குவியும் கழிவுப் பொருட்களையும் அசேதன குப்பைகளையும் கடலில் வந்து சேருவதை தடுப்பதற்காக மீனவ சமூகம் இன்று செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. சுற்றாடல் செயற்பாட்டாளர்கள் மகிழ்சியடைய முடிவதோடு கரையோரமாக அமைந்துள்ள ஹோட்டல் உரிமையாளர்களும் இவ்வாறு கடற்கரையை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்காக ஒத்துழைக்க முடியும். மீனவர்களால் கரைக்கு இழுத்து வருகின்ற குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக ஹோட்டல்களின் வேலையாட்களை பயன்படுத்த முடியும்.

எவ்வாறாக இருந்தாலும் இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல. இந்தப் பிரச்சினைக்கு ஒரு சிந்தனைரீதியான அடிப்படையில் விடை காண வேண்டி இருக்கின்றது. இந்த இரண்டு ஆறுகளில் இருந்தும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் எல்லா இனத்தவர்களாலும் கொட்டப்படுகின்ற குப்பை கழிவுகள் கடலுடன் சங்கமித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் எங்கள் அனைவருக்கும் பாதிப்பு பொதுவானதாக அமைவதோடு எங்களது வாழ்க்கைக்கு தேவையான போசாக்கு சக்தியை வழங்கும் அடிப்படை முலாதாரமாக இருந்து வரும் கடலில் மீன் வளத்தை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம். அத்துடன் பூகோள உஷ்ண நிலை மற்றும் கால நிலை மாற்றமும் இதில் செல்வாக்கு செலுத்துவதாக இருக்கின்றது. பிரதிபலன் அனைவரையும் பொதுவானதாக பாதிப்பதாய் அமைகின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண வேண்டியது எங்கள் அனைவரதும் பொறுப்பாக இருந்து வருகின்றது