Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வாழ்வாதார நேர்காணல்
மூன்று வேளை உணவே பெரும் போராட்டம்தான்

1953ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் பிறந்தவர் அருமைத்துரை மகேஸ்வரி. 1975ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு யாழ்ப்பாணத்திற்கு வசிக்க வந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு அருகே கச்சான் விற்கும் தொழிலைத் தொடங்கினார். ஜந்து பிள்ளைகள் அவருக்கு. மொத்தக் குடாநாடும் 1995ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தபோது கிளிநொச்சிக்குச் சென்றார். அங்கும் கச்சான் விற்பதே தொழிலானது. யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தும் அதே தொழிலைத்தான் செய்கிறார். இப்போது நான்கு பிள்ளைகள் திருமணம் செய்துவிட்டனர். தற்போது கணவன் மற்றும் தனது ஜந்தாவது […]

26.07.2016  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
1953ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் பிறந்தவர் அருமைத்துரை மகேஸ்வரி. 1975ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு யாழ்ப்பாணத்திற்கு வசிக்க வந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு அருகே கச்சான் விற்கும் தொழிலைத் தொடங்கினார். ஜந்து பிள்ளைகள் அவருக்கு. மொத்தக் குடாநாடும் 1995ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தபோது கிளிநொச்சிக்குச் சென்றார். அங்கும் கச்சான் விற்பதே தொழிலானது. யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தும் அதே தொழிலைத்தான் செய்கிறார். இப்போது நான்கு பிள்ளைகள் திருமணம் செய்துவிட்டனர். தற்போது கணவன் மற்றும் தனது ஜந்தாவது மகனுடன் தனது வாழ்க்கை ஓடுகின்றது.
மாதம் ஒன்றிக்கு 16,000 ரூபாய்தான் வருமானமாகக் கிடைக்கின்றது. கணவனின் மருத்துவ செலவிற்கே மாதந்தம் 5,000 போய்விடும். எஞ்சும் 11,000 ரூபாயில் மூன்று பேரும் மூன்று வேளை உணவு உட்கொள்வதே பெரும் போராட்டம்தான்.
சொந்த காணி, வீடு கிடையாது. வீதியோரமாகக் காணப்படும் கச்சான் விற்பனை செய்யும் இடத்திலேயே ஆனேகமான நாள்களைக் கடத்துகிறார். பிள்ளைகளும்ம் வீதியோரத்தில் உறங்கக்கூடாது என்பதற்காக உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
கச்சான் வியாபாரத்திலிருந்து கிடைக்கும் வருமானம் அவருக்குப் போதாது. இதுவரை அரசாங்கத்தினால் எவ்வித உதவியும் கிடைக்கவில்லையெனத் தெரிவித்தார்.
நாளாந்தச் சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது சேமிப்பதற்கு எதுவும் மிஞ்சுவதாக இல்லை. திருவிழாக் காலங்களில் வியாபாரத்திற்கே கடன் பெற்றுத்தான் வியாபாரம் செய்யவேண்டியுள்ளது.
தொண்டு நிறுவனங்கள் அல்லது அரசாங்கம் உதவிகள் புரிந்தால் இந்தக் கச்சான் வியாபாரத்தினை மேலும் மெருகூட்ட முடியும் என்கிறார்.
“எனது வாழ்க்கை முடிந்து விட்டது. என ஜந்தாவது மகனின் வாழ்க்கை;காகத் தான் நான் உழைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.