Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

ஒரு கிராமத்தின் அழிவுக் கதை
கடலுக்குள் கரைந்துபோகும் ஒலுவில்

கிழக்கு மாகாணத்தின் அம் பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒலுவில் கிராமம் தனி முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமமாகும். பிரதானமாகக் கடல்வளத்தின் மூலம் மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்ந் தவர்கள் இந்தக் கிராம மக்கள். பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதர வைப் பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அந்தக் கட்சிக்கு முழு ஆதரவு வழங்கும் கிராமம் இது. இதனாலும் தனிப்பட்ட பிடிப்பினாலும் மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் நிறுவுநர் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்தக் கிராமத்தையும் இங்குள்ள மக்களை […]

24.08.2016  |  
அம்பாறை மாவட்டம்

கிழக்கு மாகாணத்தின் அம் பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒலுவில் கிராமம் தனி முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமமாகும்.

பிரதானமாகக் கடல்வளத்தின் மூலம் மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்ந் தவர்கள் இந்தக் கிராம மக்கள்.

பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதர வைப் பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அந்தக் கட்சிக்கு முழு ஆதரவு வழங்கும் கிராமம் இது.
இதனாலும் தனிப்பட்ட பிடிப்பினாலும் மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் நிறுவுநர் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்தக் கிராமத்தையும் இங்குள்ள மக்களை யும் மிகவும் நேசித்தார்.

இந்த நேசத்தின் பிரதி பயனாகவே அவரது எண்ணக்கருவில் ஒலுவில் துறைமுகமும் ஒலுவில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் உருவாகக் காரணமாக அமைந்தன.
ஆனால் அஷ்ரப்பின் மறைவுக்குப்பின் அவரது நல்நோக்கு முன் கொண்டு செல்லப்படாததும் பின்வந்த தலைமை யின் அசண்டையீனமும் இன்று ஒலுவில் மக்களைப் பெரும் துயருக்கும் அல்லலுக்கும் உள்ளாக்கியுள்ளது.

துறைமுகம்
குறிப்பாக ஒலுவில் துறைமுகத்துக்கு கென சுமார் 300 ஏக்கர் காணியை 2017 இல் ஒலுவில் கடற்கரைப்பிரதேசத் தில் அரசு சுவீகரித்துக் கொண்டது.

இதனால் தமது வளம் பொருந்திய தென்னம் தோட்டங்களையும் காணி களையும் இழந்தவர்களுக்கு முழு நட்டஈட்டுத் தொகையும் இதுவரை வழங்கப்படாத நிலமை நீடித்து வரு கின்றது.

அன்று துறைமுக வேலைக்காக ஒலு வில் கடல் நீரேந்துப்பகுதி பெரிய கற்கள் கொண்டு மூடப்பட்டது.

இதன் விளைவால் ஏற்பட்ட கடலலை நகர்வுகள் துறைமுகத்துக்கு அடுத் துள்ள பிரதேசங்களை ஆட்கொண்டது. இதன் தொடர் கடலரிப்பு விளைவுகளால் சுமார் 600 மீற்றர் தூர நிலப்பரப்பைக் கடல் தன்வயப்படுத்திய தகவலுமுண்டு.

துறைமுகநிர்மாணம் தொடர்பிலான ஆரம்ப ஆய்வு அறிக்கைகள் புறந்தள் ளப்பட்டதாகவும் இப்பொழுது பேசிக் கொள்ளப்படுகின்றது.

மீனவர் பாதிப்பு

இதேவேளை இத்துறைமுக நிர்மாணத் தால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் மீன்பிடி வெகுவாகக் குறைந்து மீனவர்கள் வாழ் வாதாரத்தில் பேரிடியும் விழுந் துள்ளது.
இந்த நிலையில்தான் கடலரிப்பு படு மோசமாக அதிகரித்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக ஒலுவில் கிராமத்தை இன்று கடல் விழுங்கிக் கொண்டிருக் கின்றது.

சுமார் 2 சதுர கிலோமீற்றர் நிலமும் அதிலிருந்த தென்னை மரங்களும் கட்டடங் களும் நீர்த்தாங்கியும்கூட ஏற்கனவே கடலால் அடித்துச் செல்லப்பட்டு விட்ட தாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

/Oluvil 1

கடலோரத்தில் எஞ்சியிருக்கும் சுற்றுலா விடுதியும், வெளிச்ச வீடும்கூட கடலால் விழுங்கப்பட்டு விடக்கூடிய அபாயமுள்ளது.

இப்பொழுது உக்கிரமடைந்துள்ள கடலரிப்பைத்தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு எதிராக ஒலுவில் மக் கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
அண்மையில்கூட ஒலுவில் மக்கள் திரண்டு இந்த அரசியல்வாதிகளின் கவனத்தைத் திருப்பவென ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றையும் நடத்தினர்.

கண் திறந்ததா?

இதன் பின்னர் முஸ்லிம்களின் தனிப் பெரும் அரசியல் தலைவர்களென மார்தட் டிக் கொள்ளும் சிலரது கண்கள் ஒலு வில் கடலரிப்பு விடயத்தில் திறந் துள்ளதாகத் தெரிகின்ற போதிலும் அதிலும் நீயா? நானா? என்ற போட்டி விளையாடத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.

அமைச்சராகவிருக்கும் முஸ்லிம்கட்சி ஒன்றின் தலைவர் ஒலுவில் கடலரிப்பு விவகாரத்துக்குத் தீர்வுகாணும் நோக்கு டன் துறைமுக அதிகார சபை உயரதிகாரி களுடன் பேசி அந்த அதிகாரிகளை நேரில் அழைத்து வருவதாகக்கூறி உரிய திகதியை ஊடகங்கள் மூலம் அறிவித்தார்.

அவ்வளவுதான் முஸ்லிம்களின் தலைவன் நான்தானே என முழங்கும் மற்றொரு முஸ்லிம்கட்சியின் தலைவ ரும் அமைச்சருமான மற்றொருவர் அடித்து விழுந்து ஓடோடி ஒலுவிலுக்கு வந்தார்.

கூடவே துறைமுக அதிகார சபை அதிகாரிகளையும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளையும் அழைத்து வந்து முன்கூட்டியே மக் களை மறக்காத தன் சேவையின் சிறப்பை வெளிப்படுத்தினார்.

முஸ்லிம் அரசியல் நிலமை, தலைவர் களின் சமூகப்பற்று, சேவை எந்த உச்சாடத்திலிருக்கிறது பார்த்தீர்களா? என ஒலுவில் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

அத்துடன் எமது தலைவர்கள் எனப்படு வோரின் சேவைவேகம், ஒலுவிலை கடல் கொஞ்சம், கொஞ்சமாக விழுங் கும் வரை எங்கு முடங்கிக் கிடந்ததோ? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

கோரிக்கை

ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்ட கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வினை அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும், துறை முக அபிவிருத்தி என்ற பெயரில், நிம்மதியிழந்து அபாயத்தை எதிர் நோக்கியிருக்கும் தமக்குத் தற்காலிக தீர்வு தேவையில்லை என்றும், பெரிய கற்களை கடல் அலைத்தடுப்புக்குப் போடுவதற்குப் பதிலாக அணை அமைத்துத்தர வேண்டுமெனவும் ஒலுவில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நடக்குமா காரியம்? கிடைக்குமா நிம்மதி?