Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சிங்கள மக்களில்......
“இப்படியான நல்ல மனிதர்கள் இருப்பார்கள் என்று கனவுகூட கண்டதில்லை”

நான் யாரை எதிரிகளாக கருதினேனோ அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட புதிய வாழ்க்கை. மற்றவர்களைப் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதற்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

25.01.2017  |  
கிளிநொசசி மாவட்டம்
Orphan, fighter now author: Rathika Pathmanathan.

அனாதைச் சிறுமியாக இருந்த ராதிகா பத்மநாதன் என்ற தமிழ்ச் சிறுமி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக 2009ஆம் ஆண்டு அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவள் வைதியசாலையில் இருந்தபோது அவளைச் சுற்றிலும் இருந்தவர்களால் பேசப்பட்ட ஓரு வார்த் தையைக்கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளது உடைந்து நடக்க முடியாதிருந்த காலுக்கு கொழும்பு வைத்தியசாலையில் டாக்டர்கள் சிகிச்சை வழங்கியபோதும் அனைவரும் சிங்கள மொழியில் கதைக்கும்போது அதைப் புரிந்துகொள்ள முடியாத அந்த சிறுமி அவர்களை அவளுடைய எதிரிகளாகவே கருதினாள்.

17 வயதுடைய அந்த சிறுமி வைத்தியசாலையில் இருந்து குணமடைந்து திரும்பியவுடன் அவளது தனிமை அனுபவத்தை ஒரு சிறிய கவிதைத் தொகுப்பாக உருவாக்கினாள். அந்த கவிதைத் தொகுப்பில் அவளது உணர்வுகளை எழுத்துருவில் வெளிப்படுத்தினால். “அங்கே வெளிச்சம் என்று அழைக்கப்பட்டாலும் அதற்குள் இருள். அதன் கணத்தில் நானாகவே துளாவிப்பார்த்தேன்” என்பது அவளது உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை நுல் ஆகும். இந்த நூல் தமிழ் மொழியில் இருந்து சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

“எழுதுவதென்பது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது”. 24 வயதுடைய ராதிகா பத்மநாதன் “நான் அழுதேன். வெட்கப்பட்டேன். இதுபோல் யார் முன்னிலையிலும் என்னால் பேச முடியவில்லை. ஆனாலும் நான் இந்த கவிதைகளை எழுதியபோது என்னுள் ஒருவிதமான தைரியத்தையும் மன உறுதியையும் உணர்கின்றேன். இப்போது சிங்கள மொழியில் கூட பார்வையாளர்கள் முன்னிலையில் என்னால் பேச முடிகின்றது” என்று அவள் கூறுகின்றாள்.

ராதிகா பத்மநாதன் ஆறு வயதில் அனாதையாகிவிட்டாள். அவளது குடும்பத்தாருடன் வடபகுதி நகரான கிளிநொச்சியில் வாழ்ந்துகொண்டிருந்த நிலையில் அனாதையாக்கப்பட்டாள். கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நிலவிய காலப்பகுதியில் நிர்வாக மத்திய பிரதேசமாக இருந்த நிலப்பரப்பாகும். அப்பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரடிய இளைஞர்கள் அடங்கிய குழுவே தமிழ்ப் புலிகள் என்று அழைக்கப்பட்டனர். அங்கு நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் அவளது தாய், தந்தை ஆகிய இருவரும் கொல்லப்பட்டவுடன் அவள் இரண்டு மூத்த சகோதரிகளுடனும் இரண்டு இளைய சகோதரிகளுடனும் கவனிப்பாரற்ற நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டாள்.

“நாம் அச்சத்திலும் பீதியிலும் வாழும் நிலைக்குள்ளாகி ஆதரவற்றவர்களாகிவிட்டோம் என்று ராதிகா கூறுகின்றாள். எமது கிராமத்தில் குண்டுகள் விழுவதையும் மக்கள் கொல்லப்படு வதையும் நாங்கள் பார்த்தோம். குழந்தைகளும் பெண்களும் குற்றுயிராகி காயப்பட்ட நிலையில் வலி தாங்க முடியாமல் மரண ஓலமிடுவதையும் அவர்கள் அனுபவித்த துன்பத்தையும் பார்த்தேன். குண்டுகளுக்குப் பயந்து உண்பதற்கு உணவு கூட இல்லாத நிலையில் நாம் பட்டினியில் உயிருக்காக ஒழிந்து வாழ வேண்டியிருந்தது. அதனால் எம்மால் பாடசாலைக்கு போக முடியவில்லை. தமிழ்ப் புலிகளால் எமக்கு வழங்கப்பட்ட விரிவுரைகளால் நாம் கவரப்பட்டுவிட்டோம். அவர்கள் எம்மீது காட்டிய அன்பு, பாசம் காரணமாக எம்மை புலிகள் மீது பாசம் காட்டச் செய்துவிட்டது. அவர்கள் நேர்மையானவர்கள் என்று நாம் கருதினோம்”

/Rathika-book

 

அதன் பிரதிபலனாக இளம் தமிழ்ச் சிறுமி அவர்களுக்காக போராடும் ஒருவராக வாழ்க்கையை மாற்றிக்கொண்டாள். இதனோடு மட்டும் ராதிகா நின்றுவிடவில்லை. சிறந்த போரளியாகி யுத்தம் நடைபெறும் போது களத்தில் திறமையாக போராடவும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டிருந்தாள். ஆனாலும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக தாக்குதல் ஒன்றில் அவள் காலை இழந்தாள். காயப்பட்ட நிலையில் வடக்கில் இருந்து அவள் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரிக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டாள்.

“சில சந்தர்ப்பங்களில் நான் இறந்திருந்தால் கூட நல்லது என்று நினைத்து வேதனைப் பட்டதுண்டு” என்று ராதிகா கூறுகின்றாள். ஏனைய எல்லா நோயாளிகளையும் பார்ப்பதற்காக உறவினர்கள் வருவார்கள். ஆனால் எனக்கு யாரும் இல்லையே. அதனால்   என்னைப் பார்ப்பதற்காக யாரும் வரவில்லை. அதுமட்டுமல்லாமல் எனது தாய் மொழியில் பேசக்கூட அந்த வார்ட்டில் யாரும் இருக்கவில்லை. நான் முற்றிலும் வறுமையில் வாடிய ஒருவளாகவும் வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் ஒருவராகவும் இருந்தேன்”

எவ்வாறாயினும் நாட்கள் செல்லச் செல்ல இந்த தமிழ்ச் சிறுமியுடன் சிலருக்கு உறவு ஏற்பட்டுவிட்டது. அவர்களில் ஒரு சில டாக்கடர்களும் அவர்களது உதவியாளர்களுமாவர்.

“அவர்கள் எனக்கு படிப்பதற்கு உதவி செய்தார்கள். அதன் பின்னர் இந்த உலகில் என்கு யாரோ இருக்கின்றார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது என்று அவள் கூறுகின்றாள். இப்போது அவளால் சிங்களத்தில் உரையாடவும் முடியும். “நான் இந்த மக்கள் காரணமாகவே இங்கு இருக்கின்றேன். சிங்கள மக்கள் மத்தியில் இப்படியான நல்ல மனிதர்கள் இருப்பார்கள் என்று ஒருபோதும் கனவுகூட கண்டதில்லை” என்று அவள் பெருமைப்படுகின்றாள்.

உபாலி சந்திரசிரி என்பவர் மிகவும் நல்லவர். அதே காலப்பகுதியில் அவரது எனது வயதிலான மகளும் இதே வார்ட்டில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படடிருந்தாள். அவளைப் பார்க் வந்த அந்த மனிதர் தமிழ்ச் சிறுமியாகிய என்னையும் நலன் விசாரித்ததோடு கவனிக்கவும் செய்தார்.

இன்று ராதிகா அவரை தந்தை என்று அழைக்கின்றாள். அவளுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்துடன் இரண்டு இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபடும் சமூக செயற்பாட்டாளராக அவள் வேலை செய்கின்றாள்.


“என்னைப் பார்ப்பதற்காக யாரும் வரவில்லை. அதுமட்டுமல்லாமல் எனது தாய் மொழியில் பேசக்கூட அந்த வார்ட்டில் யாரும் இருக்கவில்லை.”

 

“நாம் ஏன் மற்றவர்களை கொல்கின்றோம்? ஏன் வேறுட்டவர்களாக வாழ்கின்றோம்? நாம் சமாதானமாகவும் மற்றவர்களுக்கு உதவியாகவும் வாழ வேண்டும்” என்று ராதிகா சொல்கின்றாள். அன்பு பிரமிக்கத்தக்க ஆச்சரியமான பொருள். அவளது கவிதை நூல் அதனை வாசிப்பவர்களுக்கு அவள் அனுபவித்த அதிஷ்டம் மற்றும் துரதிஷ்டம் பற்றிய இரண்டு விதமான செய்திகளையும் கற்றுக்கொள்ள உதவும் என்று அவள் எதிர்பார்க்கின்றாள்.

“இரண்டு பக்கங்கள் பற்றியும் இந்த புத்தகத்தில் வெளிப்படுத்த விரும்புகின்றேன்” என்று இந்த இளம் நூலாசிரியர் கூறுகின்றாhர். யுத்தம் நிலவிய காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த துன்பம் ஒரு பக்கம். மறுபக்கம் நான் யாரை எதிரிகளாக கருதினேனோ அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட புதிய வாழ்க்கை. மற்றவர்களைப் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதற்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்நாட்டில் இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படக் கூடாது என்பது எனது ஒரே எதிர்பார்ப்பாகும். குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதோடு மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதே எனது ஒரே ஆசையாகும்.