வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்
என்னைப் பற்றி அதிகமான பொய்கள் தெற்கில் சொல்லப்பட்டுள்ளன.
ஊடகங்கள் ‘வட மாகாண முதலமைச்சர் பௌத்த ஆலயங்களை நிர்மாணிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் நிர்மாணிக்க இடமளிக்கக்கூடாது என்றும்’ கூறியதாகவும் திரிபுபடுத்தியதாக அறிக்கையிட்டுள்ளன.
நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கான ஒரே வழிமுறையாக அமைவது சமஷ்டி வழியிலான தீர்வே என்று வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் பெரும்பான்மை தமிழ் மக்களும் நம்புகின்றனர்.
வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிலரது கவனத்திற்குரியவராகவும் இன்னும் சிலருக்கு கொண்டாடக் கூடியவராகவும் இருந்து வருகின்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்து தமிழ் மக்களது பிரச்சினைகளையும் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள மக்கள் அறிந்து அதற்காக குரல் எழுப்பும் நிலையை ஏற்படுத்தி வருகின்றார். அதற்கான அழுத்தத்தை கொடுக்கின்றார். அவரின் ஒரே முழக்கமாக இருந்து வருவது எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதாகும். வடக்கிலும் தெற்கிலுமாக அதிகாரங்களை பகிர்ந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே இன்றைய சமாதானத்திற்கான ஒரே தேவை என்பதை அவர் த கட்டுமரனுடனான நேர்காணலில் தெரிவித்தார்.
த கட்டுமரன் : வடக்கிலாயினும் சரி தெற்கிலாயினும் சரி உங்களைப் பற்றி மக்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகின்றன. அதைப்பற்றி விளக்க முடியுமா?
சீ.வி. விக்னேஸ்வரன் : நான் மாறவில்லை. நான் எப்போதும் ஒரே மாதிரிதான். அதிகமான தெற்கு மக்கள் என்னைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக அல்லது வெறும் தகவல்கள் மூலமாக அறிந்துவைத்துள்ளனர்.
நான் தெற்கு தொடர்பாக ஏதாவது கூறினால் அது வித்தியாசமான முறையில் தொடர்புபடுத்தப்படுவதாக நான் நம்புகின்றறேன். உதாரணமாக சில பிரதேசங்களில் பௌத்த ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது நாட்டின் சட்டத்தை சரியான முறையில் ஆராயாது நிர்மாணிக்கப்பட்டதாக நான் கூறினேன். பாதுகாப்புப்படையினர் இவ்வாறு விகாரைகளை நிர்மாணிப்பதற்கு உதவி செய்வதை நான் அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த செய்தியை ஊடகங்கள் ‘வட மாகாண முதலமைச்சர் பௌத்த ஆலயங்களை நிர்மாணிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் நிர்மாணிக்க இடமளிக்கக்கூடாது என்றும்’ கூறியதாகவும் திரிபுபடுத்தியதாக அறிக்கையிட்டுள்ளன.
என்னைப் பற்றி அதிகமான பொய்கள் தெற்கில் சொல்லப்பட்டுள்ளன. நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று சொல்வதற்கு எனக்கு எந்த தேவையும் இல்லை.
த கட்டுமரன்: நீங்கள் நினைக்கின்றீர்களா வடக்கிற்கு மேலும் அதிகாரங்களும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்று. தற்போது நடைமுறையில் இருப்பதை தடுப்பதற்கு என முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?
சீ.வி. விக்னேஸ்வரன் : 1987ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கைக்கமைய மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. (இனப்பிரச்சி னைக்கு தீர்வாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வடக்கிற்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவதாக இணக்கம் காணப்பட்டது) ஆனால் 1991 ஆம் ஆண்டு அந்த அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்பட்டன. இப்போது எமது நிர்வாகம் மத்திய அரசாங்கத்திற்குரிய நிர்வாகத்திற்கு
நேர்மையாக சிந்தித்தால் வடக்கில் இராணுவம் வைத்திருக்கின்ற காணிகளின் அளவு எவ்வளவு என்பதை அரசாங்கம் கூட அறிந்திருக்காது என்று நான் கருதுகின்றேன்.
அமைவாகவே செயற்படுகின்றது. ஆனால் அது செயற்படவில்லை. நாம் எதையாவது செய்ய முற்பட்டால் அவர்களும் அங்கு வந்து எதையாவது செய்வதற்கு முயற்சி செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. அதனால் மக்கள் பிரச்சினைக்குள்ளாகின்றனர். ஆனால் அவற்றை நாங்களாகவே செய்துகொள்வதற்கு அனுமதித்தால் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் வழங்கப்பட்டுள்ள விடயங்களில் வேறுபாடு இருக்க முடியாது. அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் நாம் இலங்கை மக்களுக்காகவே வேலை செய்கின்றோம்.
த கட்டுமரன்: மாகாண சபைகளது அதிகாரங்கள் குறித்து பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கருதப்படுகின்ற அரசியல் அமைப்பில் முன்வைக்கப்படுகின்ற மாற்றங்கள் தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

சீ.வி. விக்னேஸ்வரன் : மாற்றங்கள் என்ன என்பது தொடர்பாக எனக்கு சரியாக தெரியாது. ( 13 ஆவது திருத்தத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் பற்றி நான் கேள்விப்பட்டேன் (1987 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் 13 ஆவது பிரிவுக்கு செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன) ஆனால் மாற்றங்கள் இல்லாவிட்டால் 13 இன் அடிப்படையில் அதன் முழுமையான செயற்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். ஏனெனில் பெறப்பட்டவைகளை மீண்டும் மறுபுறமாக வழங்க வேண்டும்.
மத்திய அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும் வழங்க விரும்புவதாயின் உரிய முறையில் அவற்றை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் வாதிடுகின்றேன். தென் மாகாண சபைக்கும் அதிகாரங்கள் பகிரப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எங்களது அதிகாரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களது கைகளில் அதிகாரங்களை வைத்திருப்பதற்கே அவர்கள் முயற்சித்து வருகின்றனர் (கொழும்பில்).
த கட்டுமரன்: புதிய அரசியல் அமைப்பு திருத்தமானது வடக்கிற்கு முழுமையான பொலீஸ் அதிகாரத்தை வழங்கப்போகின்றது?
சீ.வி. விக்னேஸ்வரன் : நான் எதிர்பாக்கவில்லை. பொலீஸ் அதிகாரம் என்று கூறும் போது பிரதிப் பொலீஸ் மா அதிபருக்கு கீழ்ப்பட்ட தரத்திலான அதிகாரம் வழங்கப்படும். அப்போது அது சிரேஷ்ட பொலீஸ் அதிதியட்சகர் பதவிக்கு கீழ் பட்ட பதவி என்று அவர்கள் கூறினார்கள். தற்போதைய நிலையில் ஒரே ஒரு தமிழ் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் மாத்திரமே இருக்கின்றார். ஏனையவைகள் வெறும் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் பதவி மட்டுமே.
இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையில் என்ன செய்ய முடியும் என்று எங்களுக்கு நிச்சயமற்ற ஒரு நிலை காணப்படுகின்றது. வடக்கில் 150.000 பாதுகாப்பு படையினர் உள்ளனர். அவர்கள் பற்றி எங்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை இருந்து வருகின்றது. மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த பாதுகாப்பு படையினர் மக்களது காணிகளையும் வீடுகளையும் சவீகரித்து வைத்துக் கொண்டுள்ளனர். வடக்கில் உண்மையாக என்ன நடக்கின்றது என்பதை சிங்கள மக்கள் சரியாக புரிந்துகொண்டால் அவர்கள் ஒருபோதும் எங்களைப் பற்றி தவறாக கருத மாட்டார்கள்.
த கட்டுமரன்: நீண்ட காலத்திற்கு முன்னரே யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்புப் படையினர் அதிகமான அளவு நிலத்தை தன்னகத்தே வைத்திருப்பதாக நீங்கள் கூறினீர்கள்.
சீ.வி. விக்னேஸ்வரன் : அவர்கள் கைப்பற்றியுள்ள காணிகளில் (போர் முடிவடைந்த பின்னரும்) அவற்றில் ஒரு சிறிய பகுதியை விடுவித்துள்ளனர். இராணுவம் காணிகளை மீண்டும் வழங்காவிட்டால் நாடு மிண்டும் பிளவுபடும் என்று அரசாங்கம் கூறுகின்றது. உண்மையில் அவர்கள் கைப்பற்றியுள்ள காணிகளை மீண்டும் மீள ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மேலும் 15 வருடங்களுக்கு காத்திருக்கவேண்டிய நிலையில் மீண்டும் ஒரு குழு உருவாகி அதற்காக போராடுகின்ற போது நாடு உண்மையாகவே பிரியும் நிலை ஏற்படலாம். நாங்கள் இந்;த நாட்டுக்குப் பொறுப்பாக இருந்தால் நாடு பிளவுபடாது என்று எனக்குத் தெரியும். நேர்மையாக சிந்தித்தால் வடக்கில் இராணுவம் வைத்திருக்கின்ற காணிகளின் அளவு எவ்வளவு என்பதை அரசாங்கம் கூட அறிந்திருக்காது என்று நான் கருதுகின்றேன்.
த கட்டுமரன்: புதிய அரசியல் அமைப்பு திருத்தம் நாட்டில் இன ரீதியான பதற்ற
நிலையை தணிப்பதற்கு எவ்வாறு உதவும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
சீ.வி. விக்னேஸ்வரன் : வட மாகாண சபை அரசாங்கத்திடம் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தி ருக்கின்றது. நாடு பிளவுபடாத முறையிலும் நாட்டை ஐக்கியப்படுத்தும் வகையிலும் நாங்கள் சமஷ்டி முறையொன்றை முன்வைத்துள்ளோம்.
கனடா பிளவுபடவில்லை. ஐக்கிய இரச்சியத்திலும் சமஷ்டி முறை இருந்து வருகின்றது. அதிகமான சிறிய தேசங்கள் சுவிட்சர்லாந்தை உருவாக்கின.
இந்த உண்மை தொடர்பாக அதிகமான சிங்கள அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர் ஆனால் மக்கள் அது தெர்டர்பாக அறிவும் தெளிவும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.