Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

புதிய அரசியல் அமைப்பு ஆலோசகர் லால் விஜேநாயக்கா.
பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம்! ஆனால், அது அரச மதமாக கருதப்பட மாட்டாது.

சுதந்திரத்தின் பின்னர் எமக்கு இலங்கையர் என்ற அடையாளத்துடன் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டதோடு அதற்கு ஏற்ற வகையில் எல்லா இனத்தவர்களதும் இணக்கத்துடனான அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

20.05.2017  |  
கொழும்பு மாவட்டம்

இலங்கைக்கான புதிய அரசியல் அமைப்பு இம்மாத இறுதியளவில் முன்வைக்கப்படும். இந்த அரசியல் அமைப்பு கடந்த பல தசாப்தங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல பிரிவுகளாக வேறுபட்டிருந்த மக்களை ஒன்றிணைப்பதற்கான பிரதான அடிப்படையாக அமையலாம் என்று அரசியல் அமைப்பு உருவாக்க குழுவின் தலைவரான லால் விஜேநாயக்கா கருதுவதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டிருந்தது.

அரசியல் அமைப்பு குழுவின் தலைவராக லால் விஜேநாயக்காக கடமையாற்றுகின்றார். அவரது குழுவினரின் பிரதான பணியாக அமைந்திருப்பது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களது அபிப்பிராயத்தை திரட்டுவதாகும். அவருடனான நேர்காணல் வருமாறு :

கட்டுமரான் : - இலங்கைக்கு இன்னுமொரு புதிய அரசியல் அமைப்பு 
தேவைப்படுகின்றதா?
ஆலோசகர் லால் விஜேநாயக்கா

லால் விஜேநாயக்கா : – சுதந்திரத்தின் பின்னர் எமக்கு இலங்கையர் என்ற அடையாளத்துடன் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டதோடு அதற்கு ஏற்ற வகையில் எல்லா இனத்தவர்களதும் இணக்கத்துடனான அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுதான் அடையாளம் எப்படிப்பட்டது என்ற விடயம். பல்லின, பல் கலாச்சார, பல மதங்களைக் கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவதற்கே இந்த தேவை ஏற்பட்டது. பூகோள ரீதியாக பல வேறுபாடுகளைக் கொண்ட பல இனங்கள், பல மதங்கள், பலவிதமான கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்ட இந்தியா 1950 ஆம் அண்டளவில் அந்நாட்டிற்கான அரசியல் அமைப்பை வரைந்து கொண்டது.

ஆனாலும் தற்போதைய எமது அரசியல் யாப்பானது இங்கு வாழும் மக்களை உள்ளடக்கியதாக அவர்கள் மத்தியில் இலங்கையர் என்ற உணர்வை வெளிப்படுத்தவில்லை. அதனால்தான் எமக்கு இன்னுமொரு அரசியல் அமைப்பிற்கான தேவையை அது    ஏற்படுத்தியிருக்கின்றது.

 

கட்டுமரான்; : - அரசியல் அமைப்பு நிறைவேறும் போது அதிகாரப் பரவலாக்கத்தை 
எவ்வாறு மேற்கொள்வதென்பதை கூற முடியுமா?

லால் விஜேநாயக்கா : – மத்திய அரசாங்கத்திடம் குழுமி இருக்கும் அதிகாரங்களை வடக்கிலும் தெற்கிலும் வாழும் மங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனாலும் வடக்கையும் தெற்கையும் வேறாக பிரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதனால்த்தான் மகாண சபைகள் அதிகமான அதிகாரங்களை வைத்திருக்கின்ற நிலையில் மேலும் அதிகாரங்களை வழங்கக்கூடியதாக செனட்சபை முறையை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கட்டுமரான்; : - அது ஏன் தேவைப்படுகின்றது?

லால் விஜேநாயக்கா : – வடக்கில் வாழும் மக்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வொன்று தேவை என்று கூறினாலும் தெற்கில் வாழும் மக்கள் அதனை அனுமதிப்பதில்லை. இவ்வாறான கடுமையான மாற்றங்களை அறிமுகப்படுத்த முடியாது. முதலில் இரண்டு தரப்பினரும் உடன்படும் வகையிலான நிலைமையை நாம் உருவாக்க வேண்டும்.

கட்டுமரான்; : - புதிய அரசியல் அமைப்பானது இலங்கை வாழ் சமூகங்கள் தொடர்பாக
 விஷேட அவதானம் செலுத்துமா? அவர்களது தேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் 
வரையறுப்பதாக கூறியது யார்?

லால் விஜேநாயக்கா : – ஆம் அது மிக முக்கியமான விடயம். ஏனெனில் தற்போதைய அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளிலான விடயங்கள் கூட காலம் கடந்தவையாகும். கல்வி, சுகாதாரம், மாசற்ற சுற்றாடல், விஷேட தேவை உடையவர்கள் மற்றும் வயோதிபர்கள் உட்பட அடிப்படை உரிமைகள் தொடர்பான விடயத்தில் உள்வாங்கப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன.


அதிகமான மக்களால் சுட்டிக்காட்டப்பட்ட இரண்டாவது பிரதான விடயமாக அமைவது யுத்தத்தின் பின்னர் எல்லா இனங்களும் இணக்கப்பாட்டுடன் வாழக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் அதிகாரப் பங்கீடு அமைய வேண்டும் என்பதாகும்.

 

அனைவரையும் சமமாக நடத்துதல் என்பதும் அதில் ஒரு பகுதியாகும். ஒருவரது அல்லது ஒரு சமூகத்திற்குரிய மொழியை சுதந்திரமாக பயன்படுத்தவதென்பதும் அதன் இன்னுமொரு பகுதியாகும். தமிழ் மக்கள் எதிர்நோக்கக்கூடிய இவ்வாறான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியவைகயாக உள்ளன.

கட்டுமரான்; : - புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு பிரதான இடம் 
வழங்கப்படவில்லை என்பது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் மிகவும் 
முக்கியமான குற்றச்சாட்டாகும். இது எந்தளவிற்கு உண்மையானதாகும்?

லால் விஜேநாயக்கா : – இதில் உண்மை இல்லை. இவ்வாறு யார் கூறுகின்றார்கள்? பௌத்த மதத்திற்கு வழங்க வேண்டிய பிரதான இடத்தை யாராலும் மறுக்க முடியாது. கத்தோலிக்க ஆயர்கள் கூட இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பௌத்த மதத்திற்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தாலும் அது அரச மதமாக கருதப்பட மாட்டாது. அரசியல் அமைப்பில் இன்னுமொரு பிரிவில் ஏனைய மதங்களுக்கான சுதந்திரமும் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றது. மேலதிகமாக இலங்கையின் உள்நாட்டு நீதிமன்றம் இலங்கை ஒரு மதசார்பான நாடு அல்ல என்று கூறும் அதே நேரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை யாரும் மறுக்கவும் முடியாது.

 

கட்டுமரான்; : - அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் எவ்வாறான 
பொறுப்புணர்வை வெளிப்படுத்தினார்கள்?

லால் விஜேநாயக்கா : – பொதுமக்கள் மிகவும் சாதகமான பதிலையே வெளிப்படுத்தினார்கள். மக்கள் இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பாக அவதானத்தை வெளியிட்டார்கள் என்று கூறலாம். முதலாவது விடயம் இலங்கை அரசாங்கம் பூரண சனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு மேலாதிக்க சுபாவம் இருக்கக்கூடாது என்பதாகும். வடக்கிலும் தெற்கிலும் வாழும் எல்லா சமூகங்களும் இந்த விடயத்தை வலியுறுத்தினார்கள்.
அதிகமான மக்களால் சுட்டிக்காட்டப்பட்ட இரண்டாவது பிரதான விடயமாக அமைவது யுத்தத்தின் பின்னர் எல்லா இனங்களும் இணக்கப்பாட்டுடன் வாழக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் அதிகாரப் பங்கீடு அமைய வேண்டும் என்பதாகும். இந்த விடயத்தில் விவாதிப்பதற்கு எதுவும் இல்லை என்பதோடு இலங்கை போன்றதொரு நாட்டிற்கு இது ஒரு பொன்னாண சந்தர்ப்பமாகும் என்றே கூற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக வடக்கிலும் தெற்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் ஒரு இணக்கப்பட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் தீவிர இனவாதப் போக்குடைவர்கள் இதனை எதிர்க்கின்றனர்.