Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பெண்கள்
தீர்மானம் எடுப்பவர்களாகவும் கொள்கைகளை வகுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்

/இலங்கை நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்குள்ளும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயல்முனைப்போடும் ,இன முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் படிமுறைக்குள்ளும் தன்னை ஈடுபடுத்தியிருக்கின்ற இன்றைய சூழலில் பெண்களின் குரல்கள் போதியளவில் இந்தச் செயல்முறையில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களின் கருத்துக்கள் அவர்கள் நலன்சார்ந்த விடயங்கள் இந்தச் செயல்முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகின்றன. இலங்கை சனத்தொகையில் அரைவாசிப்பகுதிக்கு மேல் காணப்படுகின்ற குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் ஆண்களைவிட அதிகளவாக பெண்கள் காணப்படுவதான சூழலில் பெண்தலைவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணுமளவிற்கே […]

01.01.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

/இலங்கை நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்குள்ளும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயல்முனைப்போடும் ,இன முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் படிமுறைக்குள்ளும் தன்னை ஈடுபடுத்தியிருக்கின்ற இன்றைய சூழலில் பெண்களின் குரல்கள் போதியளவில் இந்தச் செயல்முறையில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களின் கருத்துக்கள் அவர்கள் நலன்சார்ந்த விடயங்கள் இந்தச் செயல்முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகின்றன.
இலங்கை சனத்தொகையில் அரைவாசிப்பகுதிக்கு மேல் காணப்படுகின்ற குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் ஆண்களைவிட அதிகளவாக பெண்கள் காணப்படுவதான சூழலில் பெண்தலைவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணுமளவிற்கே காணப்படுகின்றது. இருப்பினும் கல்வித்துறையிலும் அரசசேவைகளிலும் அதிகளவில் பெண்கள் காணப்படுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அரசியலில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைந்தளவே காணப்படுகின்றது.
இதுவிடயமாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர்,திருமதி கோசலை மதன் அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.
“பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களிலே அல்லது பெண்களை பாதிக்கின்ற விடயங்கள் தொடர்பிலே தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் அல்லது கொள்கைகளை வகிப்பவர்களாகவும் நிச்சயமாக பெண்கள் இருக்க வேண்டும். இலங்கையிலே 50மூ வீதத்திற்று மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கிறார்கின்ற போதிலும் அவர்களுடைய பிரதிநிதித்துவம் என்பதுவும் அவர்கள் சாhந்த் பிரச்சனைகளை அவர்களே தீர்மானம் எடுப்பதுவும் பாரியதடங்கல்ளுக்கு உட்;பட்ட விடயமாக காணப்படுகிறது. இதன் காரணமாக தான் பெண்களினுடைய அரசியல் பிரதிநிதித்துவதை அதிகரிக்கிற வகையில் சில ஏற்றபாடுகளை சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அண்மையிலே உருவாக்கப்பட்ட ஒரு சட்ட மூலமாக உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் திருத்திச்சட்டத்தின் மூலமாக உள்ளுர் அதிகார சபைகளிலே பெண்களினுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கிற வகையிலே சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஏற்பாடு பயனுடையதாக வினைத்திறன் மிக்கதாக உருவாக வேண்டும் என்றால் இந்த விடயம் தொடர்பிலே சமூகத்திற்கு இருக்கின்ற சிந்தனைகள் மாற்றமடைய வேண்டும். இந்த அரசியல் கட்சிகள் பெண்களினுடைய பிரதிநிதித்துவம் தொடர்பான பல விழிப்புணர்வான சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமூகமும் சட்டமும் அரசியல் கட்சிகள் வேவ்வேறு அமைப்புகளும் சேர்ந்து முறையான விதத்திலே செயற்படுகின்ற போது பெண்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்து அதன்படி பெண்கள் சார்ந்த பெண்களை பாதிக்கிற விடயங்கள் தொடர்பாக இறுக்கமான காத்திரமான தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு அது வழிவகுக்கும். இச் செயற்பாடானது நடந்து முடிந்த பிரச்சனைகளில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாது எதிர்வரும் காலங்களில் அவர்கள் தொடர்பில் ஏற்படக் கூடிய பாதகமான சமூக மாற்றங்களையும் பாதகமான விளைவுகளையும் குறைக்கின்ற வகையிலும் தடுக்கின்ற வகையிலும் அமையும்.”

/

உலகிற்கு முதலாவது பெண்பிரதமரைத் தந்த நாடு என்று இலங்கை பெருமைப்பட்டுக்கொண்டாலும் அரசியல் தலைவர்களாக பெண்கள் உருவாகியது என்ற அடிப்படையில் நோக்கினால் மெச்சக்கூடியளவில் இலங்கை இல்லை என்றே கூறலாம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குக்கிழக்கை பொறுத்தமட்டில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் குறிப்பாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்பபுக்கள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றன. ‘அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற நிலைப்பாடே சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமமாகக் காணப்படுகின்றது .அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களை எதிர்மறையாக நோக்குகின்ற நிலைமைகளால் அரசிலுக்கு பெண்கள் வருவது என்பது முயல்கொம்பாகவே இருக்கின்றது.
புல பிரச்னைகளுக்கு மத்தியில் அரசியலில் ஈடுபடுகின்ற முன்னாள் பருத்தித்துறை நகர சபை அங்கத்தவரான திருமதி நெல்சன் மதினி அவர்களின் கருத்து கவனிக்கத்தக்கது.

“அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களை பண்பாடு என்று சொல்லி தடுக்கிறார்கள். பெண்கள் வீட்டைவிட்டு வெளியில்வருவதையும் ஆண்களுக்கு நிகராக நிற்பதையும் பண்பாட்டுக்கு மாறானதாகக் சொல்கிறார்கள். இதனை ஆண்களே தூண்டுகிறார்கள். இவை உண்மையான காரணமில்லை. ஏனைய துறைகளுக்குப் பெண்கள் போகும் போது இவ்வாறு பாண்பாடு பற்றிப் பேசப்படுவதில்லை. அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு மட்டும் பண்பாட்டைக் கூறி ஒடுக்குகிறார்கள். பெண்ணை அடிமைப்படுத்துவதற்காகவே இவற்றைக் கூறுகின்றாரர்கள். அரசியலுக்குள் வருகிற பெண்கள் வெற்றி பெறுவதில் ஆண்களுக்கு அக்கறையில்லை. அதற்கு வழிசெய்து கொடுக்காது விடுகிறார்கள். அரசியலில் சாதி சமயம் பணம் போன்ற விடயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதே போன்றுபால்நிலையும் செல்வாக்கு செலுத்துகிறது. சில அரசியல் கட்சிகளில் மகளிர் பிரிவு அமைக்கப்படவில்லை. மகளிர் பிரிவை ஆண்கள் வழிப்படுத்துகிறார்கள். கட்சிகளுக்குள் இதனைச் சுட்டிக்காட்டி எதி;ப்புத் தெரிவிக்கமுடியாத நிலை தான் காணப்படுகின்றது.”
இதே கருத்தையே வலி மேற்கு பிரதேசசபை முன்னாள் தவைர், திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் வலியுறுத்துகின்றார்
“பெண்கள் தற்பொழுது அரசியலுக்கு வர தயாராக இருந்தாலும் அவர்கள் மனதில் பயம் இருக்கிறது. பெண் அரசியல் வாதிகளை கீழ் மட்டமாக பார்க்கிறார்கள். அரசியலுக்கு வரும் பெண்ணிடம் பல கேள்விகள் கேட்கிறார்கள்.குறிப்பாக அரசியலுக்குள் வர கணவர் அனுமதித்தாரா? குடும்பம் அனுமதித்ததா? போன்ற கேள்விகளை கேட்கிறார்கள் ஆனால் ஆண்களிடம் அவ்வாறு கேட்ப்பதில்லை. ஆணினுடைய இலாபத்திற்காக பெண்ணை அரசியலுக்கு கொண்டு வருகிறார்கள். பின்னர் பெண்கள் வளர்ந்து தம்மை வீழ்த்தி விடுவார்கள் என்று வளர்ந்து வர முடியாத சூழலை ஏற்படுத்தப்படுத்துகிறார்கள். “

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மேப்பாட்டுக்கான சாத்தியப்பாடுகளை அதிகரிப்பதற்கு பெண் அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையமும் பொது அமைப்புக்களும்; வலியுறுத்துகின்றன. பெண்தலைமைகளின் பற்றாக்குறை காரணமாக பெண்களின் பல பிரச்னைகள் இனங்காணப்படாமலும் அவற்றிற்கான தீர்வுகளை நோக்கி முன்னகரமுடியாமலும் உள்ளது என்பது வெளிப்படையாக உணரப்பட்டிருக்கின்றது.
வடக்கு மாகாண மகளிர்விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிசதரன் அவர்களின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.
“வட பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான தீர்வையோ நிவாரணத்தையோ பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்ற அதே நேரம் புதிதாகவும் பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தெரியாமல் உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றார்.

யுத்தத்தனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கு பெண் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். தைரியமான பெண்கள் உருவாக வேண்டும்.
இங்கு தென்னாபிரிக்காவில் நீண்டகாலம் பொறியியலாளராகப்பணியாற்றிய திரு.மு.யோகேஸ்வரன்அவர்களின் கருத்து கவனிக்கத்தக்கது.
“பெண்கள் தாங்கள் பிறந்ததன் நோக்கம் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும். இதுவரை என்ன செய்தார்கள் என யோசனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்துவமான விடயம் இருக்க வேண்டும். நோக்கம் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். பெண்கள் உலகளாவிய ரீதியில் மிக வேகமாக செல்கிறார்கள.; நாடு சார்ந்த ஒர் பாதுகாப்பு இருக்க வேண்டும். பிழையாக போகும் விடயங்களை பற்றி கதைக்க கூடியதாக இருக்கவேண்டும். அனைத்து பெண்களும் சேர்ந்து கதைக்க கூடியதாக இருக்கவேண்டும். பெண்கள் அனைத்து விடயங்களிலும் கதைக்க வேண்டும். தேசிய மட்டத்திலும் கதைக்கக் கூடியதாக இருக்க வேண்டு;ம். ஒவ்வொன்றிலும் சிறப்புப் பயிற்சிகள் நடைபெற வேண்டும். பெண்கள் குழுக்களாக இருக்க வேண்டும்.தேர்தலின் போட்டி போடும் ஒவ்வொரு பெண்களையும் அனுப்புவது பெண்களின் பிரச்சனைகள் வெளி உலகுக்குத்தெரிய வேண்டும் அவற்றைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக என்ற எண்ணம் இருக்க வேண்டும்.”

இந்த நிலைமையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதிய தேர்தல் முறை அறிமுகத்தையும் அதன் வழி நடைபெறவுள்ள தேர்தலையும் பெண்தலைவர்கள்உருவாவதற்கான அரிய வாய்ப்பாக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் கருதுகின்றது. உள்ளுராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்கள் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என்ற சட்டத் திருத்தம் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தியாக வேண்டுமென்று பொது அமைப்புக்கள் கருதுகின்றன. அரசியல் அதிகார அடுக்கில் தொடக்கநிலையில் உள்ள உள்ளுர் அதிகார சபைக்கு பெண்களை உள்ளீரக்கக் கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பத்தை சரியாகப்பயன்படுத்த வேண்டும். இதற்காக பெண்களை அதிகளவில் அரசியல் களத்தில் குதிக்க வைக்க வேண்டியிருக்கிறது என்று அரசசார்பற்ற நிறுவனங்கள் கருதுகின்றன. ஆதற்கான பல பல வழிகளையும் முன்மொழிகிறார்கள்.
பெண்கள் ஏனைய தொழிலுக்கு செல்வது போன்று அரசியலிலும் ஈடுபட வேண்டும்.இதற்காக தற்துணிவை குடும்பம் வழங்க வேண்டும். குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும். அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு மதிபளிப்பளிப்பதற்கும் போற்றுவதற்குமான ஏதுநிலையை உருவாக்குதல் வேண்டும். தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு வாக்களிக்கும் மனநிலையை வளர்த்தெடுத்தல் வேண்டும். இவற்றின் மூலம் பெண்கள் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஏதுநிலையை உருவாகக முடியும் என்று குறிப்பிடுகிறார்கள்.
சுpல பொது அமைப்புக்கள் அரசியல்கட்சிகளிடம் சில முன்மொழிவுகளை முன்வைக்கிறார்கள். அதாவது அரசியல் கட்சிகள் பெண்கள் அரசியலில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புக்களை அதிகரித்தல் வேண்டும். குட்சிகளில் பெண்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை கடைநிலையில் திறந்து விடுதல் வேண்டும். கட்சிகள் ஒவ்வொன்றும் மகளிர்பிரிவுகளை உருவாக்கி அதற்கு மகளீரையே தலைமைதாங்க விடவேண்டும்.அவர்கள் தீர்மானம் எடுக்கும் சுதந்திரமான சூழலை உருவாக்குதல் வேண்டும். மகளிர் பிரிவுகள் கட்சியில் போட்டியிடுவதற்கான பெண்களைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் அழகிற்காகவோ அலங்காரத்துக்காவோ அல்லது ஒப்புக்காகவோ நியமிக்கப்படாமல் பெண் தலைமைகளை வலுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட வேண்டும். மேலும் ஆண்னொருவரை வெற்றிபெறச்செய்வதற்கான வாக்கு வங்கியாக பெண்கள் நோக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். பெண்வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான அனைத்து தந்திரோபாயங்களையும் இதய சுத்தியுடன் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். கட்சியில் பெண்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும். இதனோடு கட்சியின் தலைமைப்பதவியை பெண்னொருவரும் வகிப்பதற்கேற்றதான கட்டமைப்பை கட்சிகள் கொண்டிருத்தல் வேண்டும். கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக பெண்களையும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பை அதிகரித்தல் வேண்டும். ஏன்று கேட்டுக் கொள்கிறார்கள். அதே வேளை
அரசசார்பற்ற நிறுவனங்கள் பெண்களின் அரசியல் அறிவை வளர்த்தெடுப்பதற்கு வசதியாக குறுங்காலப்பயிற்சிகளை கற்கைநெறிகளை ஒழுங்கு செய்து தொடர்ச்சியாக நடத்துவதற்கேற்றதான பயிற்சி நிலையமொன்றை மாவட்டரீதியாக அமைத்து இயக்குதல் வேண்டும். இதில் சாதாரண பெண்களும் அரசியல் கற்கக்கூடியதாக அரசறிவியலை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதனோடு, பெண்கள் தொடர்பான மகாநாடுகளை வருடாந்தம் நடத்தி பெண்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டும். பெண்களின் இயலாற்றலை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அதிகளவில் நடைமுறைப்படுத்தி பெண்களின் தலைமைதாங்கும் பண்பை மேலும் வளர்த்தெடுக்கப் பாடுபட வேண்டும்.இதனோடு, பெண்களுக்கும் அரச திணைக்களங்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் உரையாடல்களை கிரமமான முறையில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்குதல் வேண்டும். பெண்கள் அமைப்புக்களுக்கிடையான வலையமைப்பையும் தொடர்பையும் ஏற்படுத்தவதற்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாகப்பாடுபட வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
கிராமங்கள் தோறும் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் அமைப்புக்களை மீள்உருவாக்குதல் மற்றும் செயல் திறன் உள்ளதாக்குவதற்கு அரசாங்த்துடனும் அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் தொடர்புகளைப் பேணுதல் வேண்டும். மேலும் பெண்கள் அமைப்புக்கள் தங்கள் அங்கத்தவர்களை அதிகரிப்பத்து கிராம மட்டத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளுதல் வேண்டும். ஓவ்வொரு செயற்பாட்டிலும் தம்மைப் பங்காளியாக்கிக் கொள்ளுதல் வேண்டும். மாதர் அமைப்புக்கள் தமக்கிடையே வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அரச இயந்திரம் தொடர்பான அறிவையும் நாட்டு நடப்பு மற்றும் அரசியல் அறிவையும் அங்கத்தவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.கட்சி அரசியலில் பங்கு பற்றும் பெண்களை ஊக்குவிப்பதோடு பெண் அரசியல் தலைமைகள் உருவாக வழிவிடுதல் வேண்டும் என்றும் பல்வேறு அமப்புக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
வடக்கு மகாகாண மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகள் மேலும் அகலமும் ஆழமும் பெறுதல் வேண்டும். அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் சீரொழுங்கில் கலந்துரையாடல்களையும் சந்திப்புக்களையும் ஏற்படுத்தி பெண்கள் நலன்சார்நத திட்டங்களை வகுத்தல் வேண்டும். பெண்களின் பாதிப்புக்கள் தொடர்பான கண்கணிப்புச்சசெயலகம் ஒன்றை உருவாக்கி தீர்வுகளைக்கான சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாகச் செய்றபாடுகளை வேகப்படுத்த ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.பெண்களின் குறைகளைக்கேட்பதற்கான மையமொன்றை உருவாக்கி அதனை செயல்திறனுள்ளதாக இயக்குதல் . இது எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான கொள்கைகளை உருவாக்க உதவியாக இருக்கும் என்ற கருத்துநிலைகளும் பெண்கள் அமைப்புக்களால் பகிரப்படுகின்றன.
இதே வேளை ஊடகங்களும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் காலங்களில் ஆண்களுக்கு நிகராக பெண் வேட்பாளர்கள் தொடர்பான செய்திகளுக்கும் விளம்பரங்களுக்கும் முக்கியப்படுத்தல், அரசியலில் ஈடுபடும் பெண்களின் நேர்காணல்கள் விசேட கட்டுரைகள் பிரசுரிக்கப்படுவது பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தும். மேலும் பெண் போட்டியாளர்களை வாக்காளர்மத்தியில் அறிமுகம் செய்வதில் ஊடகங்கள் இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தொடர்பான விடயங்களை அறிக்கை இடுவதற்கு வசதியாக பெண் ஊடகவியலாளர்கள் அதிகளவில் ஊடக நிறுவனங்களில் நியமிப்பது பெண்தலைவர்களைப் பற்றிய கதைகளை சிறப்பாக பதிவு செய்ய வசதியாக இருக்கும். தேர்தல்காலங்களில் அதிகளவு பெண்களை ஊடகப்பணிக்காக பணிக்கமர்த்துவது பெண்வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் உற்சாகப்படுத்தும். கட்சிகள் பெண் வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைப்பதை மேற்பார்வை செய்பவர்களாக ஊடகங்கள் செயற்பட வேண்டும். கட்சிகளின் ஆணாதிக்க நிலைமைகளில் மாற்றம் ஏற்படுவதற்காக ஊடகங்கள் பணியாற்ற வேண்டும். அனுதாப அடிப்படையில் அரசியலுக்கு நுழையும் பெண்கள் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை மாறி திறமையான ஆற்றலுள்ள பெண்கள் வெற்றி பெறமுடியும் என்பதை ஊடகங்கள் உறுதி செய்ய வேண்டும். போன்ற கோரிக்கைகளும் பெண்கள் அமைப்புக்களால் யாழ்மாவட்டத்தில் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படுகின்றன. மேலே சொன்ன விடயங்களில் கவனம் செலுத்துகின்ற போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சியில் பெண்கள் பங்களித்து சுபீட்சமான எதிர்காலத்திற்கான வழியை உருவாக்க முடியுமென்று நம்பலாம்.