Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கண்ணிவெடி அகற்றல்
மக்களைப் பாதுகாக்க புறப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு???

இறந்துபோன இரண்டு இளைஞர்களும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்தவர்கள். போரில் வளர்ந்தவர்கள். பொருளாதாரம், கல்வியறிவு என்பவற்றில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பொருளாதாரத்திற்காக இந்த அபாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள்.

20.09.2018  |  
கிளிநொசசி மாவட்டம்
வடக்கில் அடையாளமிடப்பட்ட கண்ணிவெடி அகற்றும் இடங்களில் ஒன்று

28 வயதேயான அந்த இளைஞன் வேலைக்கு போக ஆயத்தமானான். நிறைமாத கர்பிணியான மனைவி வீதிவரை வந்து வழியனுப்பிவைத்தாள். மதிய வேளையில் நடந்த அனர்த்தம்பற்றி அறிந்த மனைவி அதை ஜீரணிக்க முடியாது துவண்டுவிழுந்தாள். வேலைக்கு போன கணவன் உயிருடன் இல்லை. இதே நிலைதான் அன்றையதினம் இன்னொரு 25 வயதான இளைஞனுக்கும் நிகழ்ந்தது. இதேபோல் அவனது மனைவியும் வயிற்றில் குழந்தையை சுமந்தவளாக நிற்கிறாள். முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. ஆம், கண்ணிவெடி வெடித்ததில் இரு இளைஞர்கள் பலியாகிய சம்பவம் அண்மையில் நடந்தது.(05.09.2018)

www.tamilguardian.com/content/tamil-de-mining-worker-dies-landmine-explosionயுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாகிறது. கண்ணிவெடி அச்சத்தில் இருந்து இன்னும் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை.

கண்ணிவெடி அகற்றலின்போது முதலில் உயிரிழந்த இராஜேந்திரன் நிதர்சன்
கண்ணிவெடி அகற்றலின்போது காயப்பட்டு பின்னர் உயிரிழந்த பத்மநாதன் திலீபன்

யுத்தத்தில் இரண்டு ஆயதரப்புக்களாலும்(புலிகள், அரசு) பயன்படத்தப்பட்ட வெடிபொருட்கள் அல்லது நிலத்தில் கடலில் விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்றும் பெரும் சவாலாககவே உள்ளன. வடக்கு கிழக்கில் ஆங்காங்கே கண்ணிவெடி அபாயம் என பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான எச்சரிக்கைதான். ஆனால், கண்ணிவெடி அகற்றுபவர்கள் தொடர்பில் போதிய கவனம் இல்லையோ என்ற ஐயாப்பாட்டை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. இறந்த இந்த இரண்டு இளைஞர்களும் ஒரு குறித்த அரசார்பற்ற நிறுவனத்தில் கண்ணிவெடி அகற்றும் குழுவில் வேலை செய்பவர்கள்.
இன்றைய சூழலில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் எத்தகைய நிலையில் இருக்கின்றன என்பது ஆராயப்படவேண்டும் சர்வதேச நியாயாதிக்கத்துடன் செயலாற்றுகின்றனவா என்பன முதல்கொண்டு கவனம் செலுத்தப்பட வேண்டும் வடக்கை பொறுத்தவரை சர்வதேச தரத்துடனான நிறுவனம் ஒன்றும் ஊள்ளுர் நிறுவனங்கள் இரண்டும் மற்றும் இராணுவ தரப்பும் தற்போது கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றார்கள் இவற்றில் குறித்த ஒரு நிறுவனத்தைத் தவிர ஏனைய அமைப்புக்கள் மனித வலுவைக் கொண்டுதான் கண்ணிவெடிகளை அகற்றிவருகின்றன.

கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் பெண் – நன்றி பிபிசி இணையம்

கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் சர்வதேச நியமப்படி ஒரு குழுவில் 8பேர் இருத்தல் வேண்டும் மேலும் பகுதி தலைவர் குழுவின் தலைவர் என பிரிவுகள் உள்ளன இதில் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு கடமைகள் பொறுப்புக்கள் உள்ளன இதுமட்டுமன்றி மருத்துவ துறை தொடர்பாகவும் தொழில் நுட்ப பிரிவு என பல கட்டமைப்புக்கள் இருக்கின்றன. இதில் கண்ணிவெடி அகற்றுபவர்கள் ஒருசில பயிற்சிகளின்பின்னர் களத்தில் இறக்கப்படுகின்றனர். பெரும்பாலும் ஆண்பெண் இருவரும் இந்த பிரிவில் வேலைசெய்கின்றனர்.
கண்ணிவெடி அகற்றலில் தொழில் நுட்ப முன்னேற்றங்கள வந்திருந்தும் இலங்கையில் மனிதவலுவைப் பயன்படுத்தி மரபுசார் முறையில் கண்ணிவெடி அகற்றலே பெரும்பாலும் நடைபெறுகிறது. இந்த இறந்துபோன இரண்டு இளைஞர்களும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்தவர்கள். போரில் வளர்ந்தவர்கள். பொருளாதாரம், கல்வியறிவு என்பவற்றில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பொருளாதாரத்திற்காக இந்த அபாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள். பத்மநாதன் திலீபன் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் ராஜேந்திரம் நிதர்சன்(25வயது) வவுனியாவைச் சேர்ந்தவர். (http://www.sundaytimes.lk/180909/news/two-volunteers-clearing-landmines-lose-their-lives-310780.html)
இன்றைய சூழலிலும் மனித உழைப்பை பயன்படுத்தி இந்த மனிதாபிமான உதவியைச் செய்துவரும் தொண்டுநிறுவனங்கள் களத்தில் கண்ணிவெடி அகற்றுபவர்களுக்கு சரியான பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயப்படுத்தவில்லையோ என்ற ஐயத்தை இந்த இழப்புகள் ஏற்படுத்துகின்றன. உள்ளுர் நிறுவனங்களுக்கு நீதி  துக்கிடு போதியதாக இல்லாமையால் இயந்திரங்களை கொள்வனவு செய்யமுடியாது அதிகளவான மனித வலு பயன்படுத்தி கண்ணிவெடி அகற்ரும் மனிதாபிமான கடமையில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்ற செய்தியும் உண்டு. பணியாளர்களும் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. இந்த மனிதாபிமானத் தொண்டின் பாரதூரம் பற்றி அடிக்கடி இந்தப் பணியாளர்களக்கு நினைவுபடுத்தவேண்டிய தேவை உண்டு. ஏனெனில் அவர்களின் கல்விஅறிவு, வயது என்பன எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் பருவத்தில் இருக்கிறது. பயிற்சிகள் உடல் உளரீதியான நிலைப்பாடுகள் தொடர்சியாக மேற்கொள்ளப்படவேண்டும்
பல்வேறு விதமானசூழலுக்குள் இருந்து தமது கடமைக்காக வரும் இத்தகையவர்களின, அன்றைய நாளுக்கான நிலவரங்களை அறிய வேண்டியநிலை கட்டாயம் உள்ளது. இவர்களுக்கான மனரீதியான தைரியத்தையும் உற்சாகத்தையும் வழங்க வேண்டும் மேலும் பாதுகாப்ப சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதில் அதிக கவனம் செலுத்தியிருக்கவேண்டும். இவை தொண்டு நிறுவனங்களின் பொருளாதார வலுவை மையமாகக்கொண்டு தீர்மானிக்ப்படுவதாக இருக்கக் கூடாது.
உண்மையில் இலங்கையை 2020 இல் கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் கொள்கைத்திட்டம் அரசிடம் உள்ளது. அதற்காக இந்த வருடத்திலும் யப்பான் பிரிட்டன் போன்ற நாடுகள் பெருமளவு நிதியுதவியைத்செய்துள்ளன.

(http://www.colombopage.com/archive_18B/Sep12_1536719718CH.php) 2009இல் இருந்து இதுவரை இலங்கையில் 36 ஆயிரம் சதுரகிலோமீற்றர் பரப்பளவில் 44ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் பாராளுமன்றத்தில் புனர்வாழ்வு புனரமைப்பு   வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் இலங்கையில் இன்னும் 30 ஆயிரம் சதுர கிலோமீற்றருக்கு  கண்ணி வெடிகள் அகற்றப்படாமலுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனூடாக மீண்டும் பல நாடுகள் கண்ணிவெடி அகற்றலுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன. இதனடிப்படையில் கண்ணி வெடி அகற்றும் செயற்பாட்டிற்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம். அதேநேரம் கண்ணிவெடி அகற்றும் படையினருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதுவரை படையினரின் கண்ணி வெடி அகற்றலில் எந்த வித அசம்பாவிதமும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றலில் அதில் ஈடுபட்ட பலர் காயமடைந்தும் உயிர் நீத்தும் உள்ளனர். இது அவர்களின் பயிற்சியையும் பாதுகாப்பு பொறிமுறைகளையும் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களின் நிலைமைகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.


மனிதவலுவைப் பயன்படுத்தி மரபுசார் முறையில் கண்ணிவெடி அகற்றல்

கண்ணிவெடி அகற்றும் பணியில் இருக்கும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். காப்புறுதி திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் அவர்கள் குடும்பங்களுக்கான காப்புறுதிகள் நலன் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு அசம்பாவிதம் நடந்தால் துரித கதியில் இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறைகளும் இருக்கவேண்டும்.
இந்த இரு இளைஞர்களின் துயரமான சம்பவத்தை அடுத்து கர்ப்பிணிகளான மனைவிமார்களின் வாழ்வு மிகத் துயரமானதாகிவிட்டது. இறந்தவர்களில் ஒருவரின் (இராஜேந்திரன் நிதர்சன்) மனைவி நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கான எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் அவர் அந்த முடிவை எடுத்திருந்தார். பின்னர் உறவினர்களால் காப்பாற்றப்பட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் இந்தப்பணியாளர்களுக்கு, இதன் பாரதூரம் பற்றி அடிக்கடி நினைவுபடுத்தி அவர்களக்கான பாதுகாப்பு பொறிமுறைகளில் அதிக கவனத்தைக் குவிக்கவேண்டும்.
இன்று இலங்கையில் நிலவக்கூடிய மிகவெப்பமான காலநிலையும் இந்த கண்ணிவெடி அகற்றலுக்கு உவப்பானதல்ல எனவும் கூறுகின்றனர். வடக்கு கிழக்கில் கண்ணிவெடி புதைக்கப்பட்ட நிலங்களை அடையாளப்படுத்தி துரித கதியில் அதை அகற்றும் நடவடிக்கைகளை புதிய தொழில் நூட்ப உதவிகளுடன் செய்வதற்கு அரசு முன்வரவேண்டும் என்பதே பலரதும் எதிரிப்பார்ப்பு.