Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தமிழ் பெண்கள் குழு:
துயரங்களை மறந்துவிட வேண்டும்…!

நாங்கள் உண்மையை பேச வேண்டும். இங்கு இனம் அல்லது மதம் தான் பிரச்சினைக்கான காரணம் என்பதை விட்டுவிட்டு பொதுவான அடிப்படையில் பிரச்சினை பற்றி சாதகமான கண்ணோட்டத்தில் நோக்க முற்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொருவரையும் சந்தேகத்துடனும் எதிர் உணர்வுடனும் நோக்குவது தவறான அணுகுமுறையாகும்..

25.11.2019  |  
கம்பகா மாவட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற கடுவாபிடிய தேவாலய பிரதேசத்திற்கு வடக்கில் இருந்து தமிழ் பெண்கள் குழுவொன்று அண்மையில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டதோடு அவர்களை சந்தித்து அவர்களது தேகாரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும், பாதிப்புக்கு மத்தியிலும் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய சக்தியையும் மன தைரியத்தையும் வேண்டி பிரார்த்தனையிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்த குழுவானது ஏற்கனவே மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய நீங்காத நினைவுகளுடனேயே இத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட கடுவாபிடிய புனித செபஸ்தியன் தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் இருக்கின்ற இடங்களுக்கு சென்று அவர்களை சந்தித்து உரையாடல்களை நடத்தினர். அவர்களது துயரங்களை கேட்டறிந்து கொண்டனர். அவர்களது துன்பத்தில் பங்குபற்றினர்.


எல்லா இனங்கள், மதங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு சகவாழ்வு ஏற்பட வேண்டும்

குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு சரியாக ஐந்து மாதங்களின் பின்னர் செப்டம்பர் 20 ஆம் திகதி வடக்கில் இருந்து கிறிஸ்தவ மற்றும் தமிழ் பெண்கள் அடங்கிய குழுவினர் கடுவாபிடிய தேவாலயத்திற்கு விஜயம் செய்தனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, நாச்சிக்குடா, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இந்த குழுவில் உள்ளடங்கி இருந்தனர். இவர்களுடன் சிலர் முதல் முறையாக தென் பகுதிக்கு வந்து கலந்து கொண்டவர்களாகவும் இருந்தனர்.
தேவாலயத்தின் முன் நுழைவாயிலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் உயிரிழ்ந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு விளக்கத்தை அங்கு போகின்றவர்களின் வசதிக்காக வழங்குவதாக குறிப்பாக பதிவிடப்பட்டிருக்கின்றது. அவர்களது துன்பங்களின் சோகத்தை எங்களால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

“குண்டுத் தாக்குதலால் அதிகமான மக்கள் பலியானதையிட்டு மிகவும் கவலையாக இருக்கின்றது” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுகந்தி மேரி அவரது உள்ளத்து உணர்வலைகளை வெளிப்படுத்துகையில் கூறியதாவது : – பாதிக்கப்பட்டு துன்பத்தால் கவலைப்படும் மக்கள் அவர்களது துயரங்களை மறந்துவிட வேண்டும். அதுதான் இலகுவான வழி. ஆனாலும் அவர்கள் அதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றனர். அவ்வாறு செய்துகொண்டே இருக்கும் போது பழைய வாழ்க்கைக்கு திரும்புவது ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் கடினமானதாக இருக்கின்றது என்று அவர் தெரிவிக்கின்றார்.
வி.வள்ளியம்மாவும், சுகந்தி மேரியும் மேலும் தெரிவிக்கையில் தற்கொலை குண்டு தாக்குதலால் பாதிகக்ப்பட்;டவர்கள் மட்டுமல்லாது ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை அடிப்படையாக வைத்து மொத்த முஸ்லிம் சமூகம் மீதும் குற்றஞ்சாட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்திப்பதாகவும் கூறுகின்றனர். இந்நாட்டில் வாழும் எல்லா இனங்கள், மதங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு சகவாழ்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அவர்களும் இறைவனை வேண்டுகின்றனர்.

“கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நடந்ததைப் போன்ற சம்பவங்கள் முஸ்லிம்களுக்கும் ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. அத்துடன் அன்றைய காலகட்டத்தில் சிவில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களாக இருந்த போதும் எல்லா தமிழர்களும் புலிகளாக இருக்கவில்லை. அதனால் ஏப்ரல் 21 ஆம் திகதி சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத குழு குண்டுகளை வெடிக்க வைத்ததற்காக எல்லா முஸ்லிம்களையும் குற்றம்சாட்டி குற்றவாளிகளாக பார்ப்பது அல்லது கொலைகாரர்களாக நோக்குவது அநீதியானதும் அங்கீகரிக்க முடியாததுமான செயலாகும்.” வள்ளிஅம்மா ஏற்கனவே அவரது மகளை வடக்கில் யுத்த காலத்தில் இழந்துள்ளார். இந்தக் கருத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சுகந்தி மேரியும், தர்மநாயகியும் இப்படிக் கூறினார்கள்.

“நாங்கள் உண்மையை பேச வேண்டும். இங்கு இனம் அல்லது மதம் தான் பிரச்சினைக்கான காரணம் என்பதை விட்டுவிட்டு பொதுவான அடிப்படையில் பிரச்சினை பற்றி சாதகமான கண்ணோட்டத்தில் நோக்க முற்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொருவரையும் சந்தேகத்துடனும் எதிர் உணர்வுடனும் நோக்குவது தவறான அணுகுமுறையாகும்.” என்று அவர்கள் தெரிவித்தனர்.
யாராக இருந்தாலும் மக்களது உயிர்களுடனும் வாழ்க்கையுடனும் விளையாடுபவர்களை கண்டுபிடித்து அவர்களை மக்கள் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று இந்த பெண்கள் கருதுகின்றனர். மீள திருத்தி அமைக்கப்பட்ட கடுவாபிடிய தேவாலயத்திற்கு விஜயம் செய்து அங்கு ஆயரை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உயிரிழந்தவர்கள் தொடர்பாகவும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொண்டதோடு இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஒரு போதும் நடைபெறாது என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.