Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நீர்கொழும்பில்...
“பிரிந்து வாழ்வதால் பலன் இல்லை!”

“…எல்லா மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை குண்டுகளால் அழித்து நாசமாக்கி விட முடியாது. மக்களு க்கிடையில் இருந்து வருகின்ற சுதந்திரமான உறவு ஒரு போதும் முற்றுப் பெறாது”.

23.11.2019  |  
கம்பகா மாவட்டம்

நான்கு இனங்கள் ஒன்றிணைந்து நிர்மாணித்துள்ள நகரமாக கருதப்படும் ‘சிறிய ரோம்’ என்றழைக்கப்படுகின்ற நீர்கொழும்பில் மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அமைதியையும் சமாதானத்தையும் கடைபிடித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு மக்கள் சமாதானத்திலும் சகவாழ்விலும் வைத்துள்ள நம்பிக்கையை முறிக்க முடியவில்லை.
அண்மையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இன ஐக்கியம் சீர்குலைந்துள்ள மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான சூழ்நிலையை உணர்கின்றனர். அது தொடர்பாக முன்னக்கரை ஸ்ரீ விமுக்தி மீனவ சங்கத்தை கட்டுமரன் சந்தித்து கலந்து ரையாடிய போது தெரிவித்த கருத்துக்கள் வருமாறு : –
“எனக்கு வயது 34 ஆகின்றது. ஒவ்வொரு வருடமும் தவறாது மது தேவாலயத்தை தரிசிப்பதற்கான சுற்றுலாவை நான் தவறாமல் செய்து வருகின்றேன். இந்த காரியத்தை யுத்த காலத்திலும் கூட நான் செய்கின்றேன். ஆனால் அந்த சுற்றுப் பயணத்தை இந்த வருடம் மாத்திரமே செய்ய முடியாமல் போனது. நான் வழமை போன்று அந்த பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்ட போது எனது தாய் மற்றும் முன்னக்கரை மீனவ சங்கத்தின் தலைவர் நிலந்தி பெர்னாண்டோ ஆகியோர் இந்த பிரயாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்”. மூன்று குழந்தைகளின் தயான இந்த மீனவ பெண் அந்த மதத்தின் மொழி, இனம், மத வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பால் இருந்து நீர்கொழும்பில் மக்கள் நிம்மதியாக வாழ்வதில் நம்பிக்கை கொண்ட ஒருவராவார்.

“எல்லா வகையான மக்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்களது பிரச்சினை ஆளுக்கு ஆள் வேறுபட்டதக இருக்கின்றது. சிலருக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக பணம் தேவைப்படுகின்றது. சிலர் ஒருவிதமான சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த குடும்பங்களும் சிதறியுள்ளன. நாங்கள் அனைவரும் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்றுபட வேண்டும்” என்று திரிமலியா பெர்னாண்டோ தெரிவிக்கின்றார். அவர் இரண்டு பிள்ளைகளின் தயாக ஒரு குடும்பச் அசுமையுடன் வாழ்கின்ற பெண் ஆவார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் சின்னா பின்னப்பட்டுள்ள ஒற்றுமை சகோதரத்துவத்தை மீள் கட்டியெழுப்ப சமூக செயற்பாட்டாளர்கள் தலைமைத்துவத்தை பொறுப்பெடுக்க வேண்டும்.

யுத்த காலங்களில் கூட தமது குழந்தைகள் பாடசாலைக்கு போவதை நிறுத்தவில்லை என்று சிரானி பெர்னாண்டோ தெரிவிக்கின்றார். ஆனாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பயங்கரவாதிகளாலும் வேறு வழிகளாலும் வழங்கப்பட்ட தவறான அறிவுறுத்தல்கள், தவல்கள் மற்றும் அச்சமூட்டும் கதைகளால் பிள்ளைகளை வீட்டுக்குள் முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் ஒருவரை ஒருவர் நம்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் தேவையான சட்டங்களை வகுத்து அமுல்படுத்த வேண்டும் என்று அவர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றார்.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியான நடாசா பெர்னாண்டோ தெரிவிக்கையில் கூறுpயதாவது : – “நான் படிக்கும் பாடசாலையில் பல மதங்கள், இனங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கின்றனர். ஆனால் நாம் அவர்களை தொந்தரவு செய்யவில்லை. ஆனாலும் அச்ச நிலை தெடர்ந்து கொண்டிருந்ததால் நாங்கள் பாடசாலை செல்வதை குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்த வேண்டி ஏற்பட்டது”.

மேரி நிசாந்தி, மாலினி பெர்னாண்டோ, மரியா பீரினா மற்றும் திரிமாலியா ஆகிய பெண்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளால் ஒன்றிணைந்து செயற்படும் பெண்களாவர். அவர்களது ஒருமித்த குரலாக அமைவது நீர்கொழும்பில் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதை சீர்குலைக்க வேண்டாம் என்பதாகும்.
மீனவ சங்கத்தின் முகாமையாளர் வின்சன்ட் பெர்னாண்டோ தெரிவிக்கையில் கூறியதாவது : – நீர் கொழும்பில் நீண்ட காலமாக பலமான முறையில் இருந்து வருகின்ற எல்லா மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை குண்டுகளால் அழித்து நாசமாக்கி விட முடியாது. மக்களு க்கிடையில் இருந்து வருகின்ற சுதந்திரமான உறவு ஒரு போதும் முற்றுப் பெறாது”.
தேசிய மீனவர் ஒற்றுமைக்கான அமைப்பின் பொறுப்பாளரான ஹேமன் குமார கருத்து தெரிவிக்கையில் ஒற்றுமையானது இனங்களுக்கிடையிலும் சமூக ஒருமைப்பாட்டுக்கும் இடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்த பிரதிநிதித்துவம் செய்வதாக அமைகின்றது. பேராயர் மல்கம் ரஞ்சித் தகுந்த சந்தர்ப்பத்தில் தலையிட்டு நிலைமை மிக மோசமானதாக மாறும் நிலையில் இருந்து பாதுகாத்தார் என்றார். ஹேமன் குமார மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது : – எமது மதத் தலைவர்கள் மீது பாரிய பொறுப்புக்கள் இருந்தாலும் அவர்கள் அதனை சரியான முறையில் நிறைவேற்ற தவறிவிட்டனர் என்றே நான் நம்புகின்றேன் என்றார்.
மௌலவி அப்துல் ரஹ்மான் என்பவர் சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற ஒருவராவார். நீர் கொழும்பில் சிங்களவர்கள், தமிழர் மற்றுமு; முஸ்லிம்கள் ஆகிய மூன்று இனங்களும் திருமணம் மற்றுமு; வேறும் உறவு முறைகளால் மிகவும் நெருக்கமாக ஒன்றிணைந்தவர்களாக உள்ளனர் என்றும் இந்த இனங்களுக்கிடையில் மிகவும் பலமான ஒரு பிணைப்பு இருந்து வருகின்றது என்றுமு; அவர் தெரிவிக்கின்றார்.

மௌலவி ஏ.எம் சல்மான் தெரிவிக்கையில் கூறியதாவது : – அரசியலானது எங்களை வேறுபடுத்தி விட்டன. இந்த விடயமும் சமூகங்களுக்கிடையில் மிக வேகமாக பரவிய அரசியல் விவகாரமாகும். நாங்கள் இதனை மேலும் விரிவடைய இடமளிக்க முடியாது. நாட்டை நல்ல திசைக்கு இட்டுச் செல்வதற்காக சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைய வேண்டும். 1980 ஆம் ஆண்டு காலம் முதல் எங்களது குழந்தைகள் ஒன்றாக நிம்மதியாக விளையாடுகின்றனர். நல்லிணக்கமானது எங்களது உறவு முறையாகும் என்றார்