Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வலவேஹேன்குனவெவெ தம்மரத்ன தேரர்:
நல்லிணக்கத்திற்காக பாடுபடுவது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் பாதுகாப்பதில் உலகம் பூராவும் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாக அமைகின்றது. நல்லிணக்கத்திற்காக அவர்களும் பாடுபட வேண்டும்…

26.11.2019  |  
அனுராதபுரம் மாவட்டம்

மிஹிந்தலை புராதன ரஜ மகாவிகாரையில் சங்க நாயக்க தேரரான வலவே ஹேன்குணவெவ தம்மரத்தன தேரர் நல்லிணக்க செயற்பாட்டிற்காக மக்களை ஒன்று திரட்டும் சிவில் சமூக அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் அவரது செற்பாடுகள் பற்றிய அனுபவத்தை த கட்டுமரனுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.

த கட்டுமரன் : நல்லிணக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு மிகிந்தலை மக்கள் செயலணி என்ற அமைப்பை ஏற்படுத்த காரணம் என்ன?

நான் சாதாரண பிக்கு மாணவராக பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் போராட்டத்தைக் கண்டேன். வட மத்திய மகாணத்தில் கிராம மக்கள் மத்தியில் வறுமையானது புதிய விடயமல்ல. மக்கள் காலநிலையுடனும் பொருளாதாரத்துடனும் போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகளுக்கு உரிய காலத்தில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்காவிட்டால் அவர்கள் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த போராட்டமானது எல்லா மக்களுக்கும் பொதுவானதாகும். யுத்த காலத்தில் மிகிந்தலையில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்றனர். எங்களது விகாரையின் முன்னால் ஏ9 யாழ்ப்பாணம் கண்டி பிரதான பாதை ஓடுகின்றது. ஆனாலும் அந்த பாதையால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்கள் எங்களது விகாரையின் பக்கமாவது திரும்பி பார்ப்பதில்லை. இனங்களுக்கிடையில் சந்தேகங்கள் நிலவுகின்றன.
போராட்டத்தை நான் கண்ணுற்றபோது அவர்களுக்கிடையில் மாற்றத்தை உணரக்கூடியதாக இருந்தது. மாற்ற சூழ்நிலையில் இருக்கின்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாகவே கல்வி கற்கின்றனர். எங்களுக்கிடையில் எந்தவிதமான சவால்கள் வந்த போதும் நல்லிணக்கம் பலமானதாக இருக்கின்றது. இந்த அனுபவத்தை நான் ‘மிகிந்தலை மக்களின் சுவர்’ (மிகிந்தலை பீபல்ஸ் வோல்) என்ற திட்டத்தில் பயன்படுத்தினேன்.


எங்களுக்கிடையில் இன ரீதியான வேறுபாடுகள் அவசியமற்றதாகும். அங்கத்தவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது பிரதான குறிக்கோளாகும்.

இந்த திட்டம் மூலம் தற்போது 150 குடும்பங்களைச் சேர்ந்த 700 குழந்தைகள் அளவில் உதவிகளைப் பெறுகின்றனர். எங்களுக்கிடையில் இன, மத, சாதி வேறுபாடுகள் எதுவும் இல்லை. அங்கத்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பிரச்சினைகளை கலந்துரை யாடுகின்றோம். இந்த கலந்துரையாடல் மூலம் உடனடியாக தீர்வுகளையும் கண்டு கொள்கின்றோம். அங்கத்தவர்கள் பொதுவாக சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களுக்கிடையில் இன ரீதியான வேறுபாடுகள் அவசியமற்றதாகும். அங்கத்தவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது பிரதான குறிக்கோளாகும். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இது நல்லிணக்கத்தின் ஆரம்பமாகும். மக்களுக்கிடையில் இருந்து வரும் பிரச்சினைகளை நாம் அடையாளம் கண்டு அவற்றிற்கு எங்களது சமூக ரீதியான தொடர்பு மூலம் தீர்வுகளுக்கு வழிகாட்டுவது பிரதான திட்டமாகும். அதற்கடுத்ததாக நாங்கள் அங்கத்தவர்களுக்கு இடையிலான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் அவதானித்து வருகின்றோம்.

த கட்டுமரன் : ‘மக்களின் சுவர்’ திட்டத்திற்கு அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?

எங்களது செயற்பாடுகளுக்கு இந்த தாக்குதலால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படவில்லை. எங்களது அமைப்பில் உள்ள எல்லா அங்கத்தவர்களும் அவர்களது இனம் மற்றும் மதம் தொடர்பாக அவர்களுக்கிடையில் நம்பிக்கையுடன் இருப்பதோடு அவர்கள் அனைவரும் விகாரையின் நடவடிக்கைகளுக்கு உதவிகளையும் செய்து வருகின்றனர். இதில் எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும். நாங்கள் மக்களுக்கிடையில் கோட்பாடுகளை திணிக்க முற்படும் போது அங்கே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அது மிகவும் பயங்கரமானதாகும். அதுவும் பௌத்தத்திற்கு எதிரானதாகும்.

த கட்டுமரன் : இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு என்ன செய்ய முடியும் என்று தாங்கள் கருதுகின்றீர்கள்?

எங்களது மிக நெருக்கமான அயல் நாடு இந்தியாவாகும். அதன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு சிறந்த கல்விமானும், தொழில் நுட்பவியலாளரும் தத்துவ ஞானியுமாவார். பௌதீகவியல் மற்றும் அணுவாயுத தொழில்நுட்பம் தொடர்பான ஒரு சிறந்த நிபுணராவார். முழு உலகமுமே அவரை பாராட்டி புகழ்ந்து கொண்டிருக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் பாதுகாப்பதில் உலகம் பூராவும் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாக அமைகின்றது. நல்லிணக்கத்திற்காக அவர்களும் பாடுபட வேண்டும். குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடிவது அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் போதே. நல்லிணக்கம் தொடர்பாக எங்களுக்கிடையில் கொள்கை ரீதியான மாற்றம் வர வேண்டும். அது ஒரு சிக்கலான ஆரம்பமாக இருந்த போதும் நாம் திட்டத்தை ஆரம்பித்தால் மிக விரைவாக நல்ல முன்னேற்றத்தை அடையலாம் என்று நம்பிக்கை இருக்கின்றது.