Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வைத்தியர் முஹம்மத் ஷரீப் முஹம்மத் ஜாபிர்:
“இந்நாட்டு வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.”

அரேபியர்கள் எங்களது நாட்டிற்கு வர்த்தகர்களாக வந்து குடியேறி சிங்கள மற்றும் தமிழ் பெண்களை மணமுடித்தார்கள். அதனால் தூய்மையான சிங்கள அல்லது தமிழர் என்ற அடிப்படையில் நாம் எம்மை வேறுபடுத்தி நோக்க முடியாது.

26.11.2019  |  
மட்டக்களப்பு மாவட்டம்

வைத்தியர் முஹம்மத் ஷரீப் முஹம்மத் ஜாபிர் காத்தான்குடி பேதனா வைத்தியசாலையின் ஒரு டாக்கடராக கடமையாற்றுவதோடு அங்கு வைத்திய சுப்ரி ண்டனானகவும் கடமையாற்றுகின்றார். எல்லா இனங்களும் கூட்டாக செயல்படும் போது ஒவ்வொரு இனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை கட்டி யெழுப்பி புரிந்துணர்வை ஏற்படுத்துவதை இலக்காககக் கொண்டு பாடுபட வேண்டும் என்று அவர் கூறுகின்றார். தகட்டுமரானுக்காக அவருடன் நடத்திய நேர்காணலின் போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது. உண்மைக்கும் பொய்களுக்கும் அல்லது வேண்டுமென்றே பரப்பபட்ட உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கிடையிலான வேறுபாட்டை பிரித்தறிய மக்களுக்கு முடியாமல் இருக்கின்றது. அதனால் மக்களுக்கு இடையில் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நிர்ப்பந்தத்தால் முரண்பாடுகள் ஏற்பட்டன. அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இயங்கி வரும் ஊடக நிறுவனங்கள் பெரியளவில் அதற்கான அடிப்படையை அமைத்து கொடுத்துவிட்டன. ஒன்றுபட்டு சுமுகமாக வாழ நினைத்த மக்களும் இந்த சூழ்நிலையில் அமைதி காக்கின்றனர். உண்மைகளால் மாத்திரமே பொய்களை பகிரங்கப்படுத்தி பிரித்து காட்ட முடியும்.

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இனங்களை வேறுபடுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாயினும் நாங்கள் ஒன்றி ணைந்தவர்களாக கைகோர்த்து சமாதானமாகவும் சக வாழ்வுடனும் செயற்பட முன்வருகின்ற போது இத்தகைய முயற்சிகளை உடைத்துக்கொண்டு முன்னே போக முடியும். அரேபியர்கள் எங்களது நாட்டிற்கு வர்த்தகர்களாக வந்து குடியேறி சிங்கள மற்றும் தமிழ் பெண்களை மணமுடித்தார்கள். அதனால் தூய்மையான சிங்கள அல்லது தமிழர் என்ற அடிப்படையில் நாம் எம்மை வேறுபடுத்தி நோக்க முடியாது.

நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது அரேபியாவில் அல்ல. இலங்கையிலே. நாங்கள் இலங்கையர்களாக பல்லினங்களோடு ஒன்றுபட்டவர்களாக இங்கு வாழும் போது இந்நாட்டு வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி வாழ்வது இன்றியமையாததாகும். நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் தாடி வைத்தவனாக நடமாவும் இல்லை. எனது மனைவி அபாயா என்ற கலாச்சார ஆடையை அணிவதும் இல்லை. அது தொடர்பாக யாரும் எங்களை நிர்ப்பந்தித்து தொந்தரவு செய்வதும் இல்லை. இஸ்லாம் எங்களை நிர்ப்பந்திப்பதும் இல்லை. ஆனாலும் எங்களுக்கு மத்தியில் கலாச்சாரத்தை பின்பற்றுவதில் விருப்பு வெறுப்புக்களுக்கு இடமிருக்கின்றது. அதே நேரம் இஸ்லாம் மத பண்பாடு கலாச்சார தனித்துவங்களை சரியாக பேணி வாழ்கின்ற நிலையில் சக வாழ்வை வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும்.