Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

விமுக்தி துஸாந்தா ராவணசிங்க:
“இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாயிருக்க வேண்டுமென்பதே எனது முன்மொழிவு.”

அரசியலமைப்பில் ‘சிங்களம் இலங்கையின் அரச கரும மொழியாக இருக்க வேண்டும். தமிழும் ஒரு அரச கரும மொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.’ எனத் தெரிவிக்கும் அத்தியாயம் IV ன் 18 வது சரத்தும் மற்றும் ஒரு பிரச்சனையாகும். இதனை ‘சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும்’ எனத் திருத்தம் செய்தல் வேண்டும்.

28.11.2019  |  
கொழும்பு மாவட்டம்

விமுக்தி துஸாந்தா ராவணசிங்க இலங்கையின் மீள்நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைக் கும் செயலகத்தின் (Secretariat for Coordinating Reconciliation Mechanisms) ஒருங்கிணைப்பாளரும் வளவாளருமாகும். ‘அஹண்ண’ (Listen/கவனிக்கவும்) என்னும் சமாதானத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்த ஒருவர். நிலைபேறுடைய சமாதானத்தையும் மீள்நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் இளம் செயற்பாட்டாளர்களின் வகிபாகம் பற்றி அவரிடம் ‘த கட்டுமரன்’ நடத்திய நேர்காணல்.

த கட்டுமரன்: அஹண்ண நிகழ்ச்சித் திட்டம் பற்றிக் கூறுங்கள்.

இந் நிகழ்ச்சித் திட்டம் பிரதமமந்திரியின் காரியாலயத்திற்கும் நிதி மற்றும் ஊடக அமைச்சிற்கும் கீழ் வரும் மீள்நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது மீள் நல்லிணக்கத்திற்கான ஒரு நடமாடும் நிகழ்ச்சித் திட்டம். இதன் பிரதான இலக்காக ஊர் காவல் படைகள் இருந்தன. பின்னர் நாங்கள் இந்தத் திட்டத்தை மாணவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் சென்றடையக்கூடியதாக விரிவாக்கினோம்.

த கட்டுமரன்: இந்த நிகழ்ச்சித் திட்டத்தினூடாக நீங்கள் எவ்வாறான அனுபவங்களைப் பெற்றீர்கள்?

மீள் நல்லிணக்கத்திற்கு இருக்கும் சவால்களின் தீவிரத்தை நீங்களும் அதில் ஈடுபட்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மக்கள் இயற்கையிலே குழப்பமான மன நிலையுடையவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தேசம், இனத்துவம் மற்றும் மதம் சம்பந்தமாக அவர்களின் ஆழமான உணர்ச்சிகள் மற்றும் அறிவார்ந்த உணர்திறன்களுடன் ஈடுபட வேண்டியுள்ளது. மீள் நல்லிணக்கம் பற்றி அவர்களுடன் வாதிடுவது சவால் நிறைந்த விடயமாகவுள்ளது.

த கட்டுமரன்: நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தையும் மீள் நல்லிணக்கத்தையும் இனத்துவ சமூகங்களிடையில் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் தாக்கம் என்ன?

இப்பொழுதிருக்கும் அரசாங்கம் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானம் மற்றும் மீள்நல்லிணக்கத்திற்காகப் பெருமளவிற் பங்களிப்பு வழங்கியுள்ளது. இவை சம்பந்தமான கொள்கைகளும் பொறிமுறைகளும் உருவாக்கப் பட்டிருப்பினும் மக்கள் மத்தியில் இதுபற்றிய உரையாடல் எதுவும் நடைபெறவில்லை. அதன் காரணமாகவே உரையாடல்களை மேற்கொள்வதற்கும் விரிவு படுத்துவதற்கும் அஹண்ண நிகழ்ச்சித் திட்டம் எங்களுக்குத் தேவையாயிருந்தது. கொள்கைத் தீர்மானம் பற்றியோ அல்லது பொறிமுறைபற்றியோ மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலன்றி அவை வெற்றிபெற மாட்டாது. அஹண்ண நிகழ்ச்சித் திட்டத்தினூடாக நாங்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்தோம். ஆனால் எனது அபிப்பிராயப்படி எதிர்பார்த்த பலன்களை அடைவதற்கு நாம் தவறிவிட்டோம்.

த கட்டுமரன்:  கடந்தகாலத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் பெயரில் ஒரு புதிய அரசியலமைப்பு பற்றிக் கலந்துரையாடப்பட்டது. அதன் உள்ளடக்கம் என்னவாயிருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

சமாதானம், மீள் நல்லிணக்கம் மற்றும் இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஆகியவற்றில் மட்டும் கவனஞ் செலுத்தக் கூடாதென நான் நினைக்கிறேன். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்தக் கூடிய ஜனநாயக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களையே இலங்கை தனது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். சிறுபான்மையினர் தாங்கள் இனிமேலும் சிறுபான்மையினரல்ல என்று நினைக்கக்கூடிய வழிகளை ஏற்படுத்தக்கூடியதாக அரசியலமைப்பில் சீர்திருத்தம் இருத்தல் வேண்டுமென்பதே எனது அடிப்படைச் சிந்தனை. இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாயிருக்க வேண்டுமென்பதே எனது முன்மொழிவு.
இலங்கை அரசியலமைப்பில் பௌத்தமதம் பற்றிய அத்தியாயம்  சரத்து 9ல் ‘இலங்கை பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்குவதுடன் பௌத்த சாசனத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமையெனவும் சரத்து 10 மற்றும் 14(1) (ஈ) மூலம் வழங்கப்பட்ட சகல மதங்களுக்குரிய உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்’ எனக் கூறுகிறது’.
இந்த சரத்து அகற்றப்படுதல் வேண்டும்.
புத்த மதத்தவர் அல்லாத ஒருவர் இந்தச் சரத்தைப் பாரபட்சமானது என நினைக்கக் கூடும். ஓர் அரசியமைப்பு ஒரு சமூகத்திற்கோ அல்லது ஒரு தனி மனிதனுக்கோ எதிரான பாரபட்சம் இல்லததாக இருத்தல் வேண்டும்.
அரசியலமைப்பில் ‘சிங்களம் இலங்கையின் அரச கரும மொழியாக இருக்க வேண்டும். தமிழும் ஒரு அரச கரும மொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.’ எனத் தெரிவிக்கும் அத்தியாயம் ஐஏ ன் 18 வது சரத்தும் மற்றும் ஒரு பிரச்சனையாகும். இதனை ‘சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும்’ எனத் திருத்தம் செய்தல் வேண்டும்.

த கட்டுமரன்:  ஒரு இளம் பத்திரிகையாளராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கும் நீங்கள் தற்பொழுது இருக்கும் கல்வி முறைமையை எவ்வாறு வரைவிலக்கணம் செய்கிறீர்கள்?

கல்வியின் அடிப்படை நோக்கம் தரமான பிரஜைகளை உருவாக்குவதாகும். இலங்கையின் கல்வி முறைமை அதனை வழங்குவதாக எனக்குத் தெரியவில்லை. மாணவர்களின் மனங்களில் தீய சிந்தனைகளைப் பதிய வைக்கும் சொர்க்கபுரியாகவே பாடசாலைகள் தோன்றுகின்றன. பாலினம் மதம் மற்றும் இன ரீதியாகப் வேறுபடுத்திப் பிரிப்பதாகப் பாடசாலை முறைமை உள்ளது.

த கட்டுமரன்: இந்த நாட்டிலுள்ள பாடசாலைகள் பாலினம் இனம் மற்றும் மத ரீதியாக வேறுபடுத்திப் பிரிக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் எதிர்காலத்தில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இப்பொழுது உள்ள பாடசாலை முறைமை பாலினம், இனம் மற்றும் மத ரீதியாக வேறுபடுத்திப் பிரிக்கப்படுவதிலும் பார்க்க அதிகமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இளம் தலைமுறையினர் மத்தியில் இனம் மற்றும் மத ரீதியான தீவிரவாதப் போக்கினை அவதானிக்க முடிகிறது. சில வன்முறைச் சம்பவங்களின்போது பாடசாலை செல்லும் வயதுப் பிள்ளைகளும் கைது செய்யப்பட்டனர்.  நாங்கள் இந்த மாதிரியான சூழ்நிலையை எதிர் காலத்தில் மாற்ற வேண்டும். எங்கள் கல்வித் துறையில் வெவ்வேறாகப் பிரிக்கும் முறைமையை மாற்ற வேண்டும். இதற்காக நாங்கள் விரைவில் செயற்படாது விட்டால் அதன் பலன் மிக மோசமானதாக இருப்பதுடன் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கின்ற அல்லது கொலை செய்கின்ற ஒரு நாட்டில் வாழவேண்டியதாக இருக்கும்.

த கட்டுமரன்: பார்தாவிற்குத் தடை, முஸ்லிம் கடைப் பகிஸ்கரிப்பு, உணவில் கருத்தடை மாத்திரைகள் மற்றும் முஸ்லிம் விவாகச் சட்டம் முதலியவற்றை நீங்கள் எவ்வாறு பகுப்பாய்வு செய்கிறீர்கள்?

இதில் ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை. இவை யாவும் அரசியற் பிரசாரங்களே. சந்தேகம் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் இவ்வாறான செய்திகளை பரவவிட்டால் அது அழிவிற்கே இலகுவாக வழி சமைக்கும். இது போன்ற விசித்திர வழிகளை அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத் திற்காக இயக்குகின்றனர். மக்களுக்கு உள்ள நம்பிக்கைளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றித் தீர்ப்புச் சொல்வதற்கான உரிமை எனக்குக் கிடையாதென நான் நினைக்கிறேன். குட்டைப் பாவாடை அல்லது பர்தாவில் ஒரு பெண் வருவதைக் கண்டதும் ஒருவருக்கு அதனால் பிரச்சனை ஏற்படுமாயின் அதுபற்றி என்னால் செய்வதற்கு எதுவுமில்லை.

த கட்டுமரன்: இன நல்லிணக்கத்தி;ற்கு மதம் ஒரு தடையாக உள்ளதா?

நிச்சயமாக இல்லை. ஒரு மதத்தைப் பின்பற்றுவது தனிப்பட்ட விடயம். ஒரு நாடு மத சார்பானதாக இருப்பின் அதன் பக்க விளைவாகவே இதை நான் பார்க்கிறேன்.

த கட்டுமரன்:  வெறுப்பேற்றும் பேச்சும் போலியான செய்தியும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி நீங்கள் ஒரு ஊடக செயற்பாட்டாளர் என்ற வகையில் அவதானம் செலுத்தியுள்ளீர்கள். இவைகளைத் தடுப்பதற்காகச் சமுதாயக் கட்டமைப்பில் எவ்வாறான மாற்றங்கள் தேவைப்படுகின்றன?

இதற்கான உதாரணங்கள் என்னிடம் எண்ணுக்கணக்காக உள்ளன. அண்மையில் தேசிய செய்தித்தாள் ஒன்றில் முகப்புச் செய்தியாக சஹரான் குழுவைச் சேர்ந்த ஐந்து நபர்கள் தங்கள் கணக்குகளில் ஒரு மில்லியன் ரூபாய்களை வைத்திருந்தனர் என வெளிவந்தது. கைது செய்பபட்ட நபர்களின் குடும்பத்தவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அந்;த நபர்களுக்கு எதிராக சட்ட அதிகாரிகள் இவ்விதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்று கூறினர். இந்தப் போலியான செய்தி காரணமாக அவர்கள் எண்ணிலடங்கா பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். இதில் மிகவும் பரிதாபமான விடயம் என்னவெனில் மொழித் தேர்ச்சியில்லாமை இதற்குத் தடையாயிருந்த காரணத்தால் உண்மையான விடயத்தை அவர்கள் ஊடகங்களுக்கு விளங்க வைக்க முடியாமல் போனமையாகும். மற்றொரு சம்பவம் டாக்டர் ஸாபியின் விடயமாகும். மக்கள் பலர் வெறுப்பூட்டும் பேச்சுகள் போலியான செய்திகள் சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனத் தெரிவித்;து வருகின்றனர். இது விடயமாக அரசாங்கம் சிறப்பாகப் பதிலளித்துள்ளது.