Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நாட்டின் சுவரோவியங்கள்!
நாட்டை ஒன்றிணைக்கும் ஆழகிய சிந்தனைகள்!

துட்டகைமுனுவுக்கும் எல்லாலனுக்கும் இடையிலான யுத்தத்தை பற்றி நாம் ஏன் வரைய வேண்டும். பதிலாக கண்ணொறுவைப் போரை வரை ந்திருக்கலாம். எல்லாளன் , துட்டகைமுனு போரை சித்திரங்கள் மூலம் வரைந்து தமிழ் எதிர்ப்பு உணர்வலையை வெளிப்படுத்துவதாக இருந்தால் அதனை எம்மால் அனுமதிக்க முடியாது. பொது இடங்களில் வரையும் சித்திரங்களும் ஓவியங்களும் எல்லா இனங்களாலும் அங்கீகரிக்கத் தக்கதாக அமைய வேண்டும்.

06.01.2020  |  
கண்டி மாவட்டம்
இன மத பேதம் கடந்து தம் கைவண்ணத்தைக் காட்டுகின்றனர்...

கண்டி நகரை சூழ உள்ள வெற்று சுவர்களை கூட்டாக வரையப்பட்ட அழகான சித்திரங்கள் மெருகூட்டுகின்றன. இன அல்லது மத அடிப்படையிலான வேறுபாடுகள் இல்லாமல் பேஸ் புக் தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர்கள் ஒன்றாக இணைந்தனர். கண்டி நகரை அழகு படுத்துவதற்காக அவர்கள் ஒன்றுபட்டனர்.

உதார சதுரங்க என்ற கண்டி டி.எஸ். சேனாநாயக்கா கல்லூரி மாணவன் கண்டி நகரில் வெற்று சுவர்களில் சித்திரம் வரைய வேண்டும் என்ற சிந்தனையை வெளிப்படுத்தினார். அதற்காக கண்டி நகரை சூழ உள்ள சித்திரம் வரையக்கூடிய கலைஞர்களை ஒன்றுபட்டு முன்வருமாறு அவரின் முகப்பு புத்தகம் (பேஸ் புக்) வாயிலாக தகவலை பரிமாறினார். அவரின் பதிவுக்கு பலர் பதிலளித்தனர். பின்னர் அந்த பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத் தியவர்களுக்கு கண்டி வித்யார்த்த கல்லூரிக்கு அருகில் ஒன்று சேருமாறு தகவலை பரிமாறினார்.

/

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யுவதிகளிடம் இருந்து சித்திரம் வரைவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் பதில்கள் அவருக்கு கிடைத்தமை அவரது ஆர்வத்தை மேலும் தூண்டின. சித்திரக் கலைஞர்கள் இலவசமாகவே மதில்களில் சித்திரங்களை வரைய முன்வந்தனர். அதற்கு தேவையான வண்ணப்பூச்சுகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் கண்டி நகரத்தைச் சேர்ந்த வியாபாரிகள் இலவசமாகவே வழங்க முன்வந்தனர். சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்ததால் சுவர்களில் சித்திரம் வரைவதை மழையில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டி ஏற்பட்டது.

“ இளைம் சந்ததியினர் பேஸ்புக் மூலமாக தொடர்பை ஏற்படுத்தி பொது இடங்களை சித்திரங்களால் அழகுபடுத்தி வருகின்றனர். கண்டியில் பொது இடங்களில் சித்திரம் வரைவது தொடர்பாக பலரும் எனக்கு கருத்து தொவித்திருந்தனர். 700 பேருக்கு மேற்பட்டவர்கள் இணைந்திருந்தனர். வித்தியார்த்த, தர்மராஜ, சென்ட் அந்தனீஸ் பெண்கள் கல்லூரி, நித்தவெல மற்றும் கண்டி கடிகார கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள சுரங்க வழிப்பாதை ஆகிய இடங்களை நாம் சித்திரம் வரைவதற்காக தெரிவு செய்த இடங்களாகும். கண்டிய காலத்து மரபு ரீதியான பாரம்பரியங்களை உணர்த்தும் சித்திரங்களை வரைவதை நாம் கருப் பொருளாக கொண்டிருந்தோம்” என்று உதார கூறினார்.

“நாம் அனைவரும் இலங்கையர். இது எங்கள் நாடு. இந்த நாட்டை அழகாக மாற்றியமைக்க தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும். பாதைகளையும் மதில்களையும் அழகாக மாற்றியமைப்பதால் மாத்திரம் எமக்கு அதனை செய்ய முடியாது. எங்களது சிந்தனைகளும் அழகானதாக மாற வேண்டும். அவ்வாறான அழகான சிந்தனை உடைய மக்கள் குழுவொன்று இங்கே ஒன்றிணைந்தனர்” என்று கலேவலை தர்மதூத மத்திய நிலையத்தின் தேரரான பங்கொல்லாகொல்ல பேமானந்த தேரர் தெரிவிக்கின்றார்.

/

“முதலாவதாக நாங்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை சந்தித்த போது வேலைகளை ஆரம்பித்தோம். இந்த வேலையை செய்ய நாங்கள் அனைவரும் மதம் அல்லது இனம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இருந்து ஒற்றுமையாக வேண்டும். நான் பௌத்த தேவாலயங்கள் மற்றும் இடங்களில் சித்திரம் ஓவிய வேலைப்பாடுகளை செய்யும் ஒரு தொழில் ரீதியான தகைமை பெற்றவராவேன். நாம் மகிழ்ச்சியோடு சுயமான அடிப்படையிலே சமூகத்திற்கு இந்த சேவையை வழங்குகின்றோம். இந்த பங்களிப்பு உதாரவினால் செய்யப்படுவதாகும். அவரே வேலைப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப வேலைகளை மேற்கொண்டார். இப்போது நாங்கள் எங்களது இன, மத, சாதி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுள்ளோம். ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி இன்று எங்களுக்கு தேநீர் வழங்கினார். தமிழ் பிள்ளைகள் பலரும் இங்கு இருக்கின்றனர். பௌத்த பிக்குவிற்கு அடுத்ததாக ஒரு முஸ்லிம் பெண்மணியும் ஓவியம் வரைகின்றார். வேறுபாடுகள் ஒழிந்து நாங்கள் ஒற்றுமையாக இயங்குகின்றோம்” என்று தொண்டராக ஓவியம் வரையும் ஒரு ஓவியர் தெரிவிக்கின்றார்.


ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி இன்று எங்களுக்கு தேநீர் வழங்கினார்.

புகழ் பெற்ற ஓவியரான சார்ல்ஸ் தயானந்த தொவிக்கையில் கூறியதாவது “எங்களோடு விவேகமும் ஆக்க திறனும் கொண்ட இளைஞர்கள் உள்ளனர். அவர்களது படைப்புக்கள் மிகவும் அபூர்வமானவை. நான் காணும் குறைபாடு சில இடங்களில் வரையப்பட்டுள்ள சித்திரம், ஓவியங்களில் மதமும் இனமும் என்ற கருப்பொருளை மாத்திரம் வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டிருப்பதாகும். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையிலான யுத்தத்தை பற்றி நாம் ஏன் வரைய வேண்டும். பதிலாக கண்ணொறுவைப் போரை வரை ந்திருக்கலாம். எல்லாளன் துட்டகைமுனு போரை இந்த சித்திரங்கள் மூலம் வரைந்து தமிழ் எதிர்ப்பு உணர்வலையை வெளிப்படுத்துவதாக இருந்தால் அதனை எம்மால் அனுமதிக்க முடியாது. பொது இடங்களில் வரையும் சித்திரங்களும் ஓவியங்களும் எல்லா இனங்களாலும் அங்கீகரிக்கத் தக்கதாக அமைய வேண்டும். சித்திரம் வரைவதில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை நாம் சரியான முறையில் வழி நடத்த வேண்டும். ஓவியம் மற்றும் சித்திரம் என்பது சர்வதேச மொழியாகும். ஓவியமானது ஒரு தனியான மொழிக்கு அல்லது இனத்திற்காக மாத்திரம் சொந்தமானதாக வரையறுக்கப்பட்டது அல்ல. நாம் இதனை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்”.

இளைஞர்கள் நாட்டை சிறந்த முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதற்காக ஒன்றுபட வேண்டும். கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், இன, மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் பற்றிய செயலாமர்வுகள் என்று பல மில்லியன் கண்ககிலான ரூபாய்கள் செலவு செய்தாலும் அதனால் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. ஆனால் இளைஞர்கள் சுயமாகவே உள்ளத்தால் ஒன்றுபடுவது போன்ற பலம் வேறு எதிலும் இல்லை. பங்கொலகொல்ல பேமானந்த தேரர் மற்றும் அஸ்மா மரியம் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாகவே இந்த கருத்துக்களை தெரிவித்தனர். தானாக வரைவதைவிட இந்த ஒற்றுமையானது மிகவும் அழகானதாகும். எதிர்காலத்திலும் இந்த செயற்பாட்டை எம்மால் பலமான முறையில் முன்னெடுக்க முடியுமாக இருந்தால் இந்த சித்திரம் வரைதலை மேலும் நிரந்தரமானதாக முன்னெடுக்க முடியும்.