Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வரண்ட நிலம்.
கடின உழைப்பு செழிப்பைத்தருகிறது!

“ஒவ்வொரு நாளும் இரவில் யானைகள் கிராமத்திற்குள் புகுந்துவிடுகின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் இரவில் எங்களது பயிர்களை யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக போராட வேண்டி இருக்கின்றது. நாங்கள் ஒரு நிமிடம் நித்திரை செய்தாலும் அதற்குள் யானைகள் வந்து பயிர்களை அழித்து நாசம் செய்து விடுகின்றன…

13.02.2020  |  
பொலநறுவை மாவட்டம்

சமந்தவின் பண்ணை நிலத்தை பார்த்தால் இயற்கையாக காணப்படுகின்ற வளங்களை எவ்வாறு பயன்படுத்தி உச்ச பலனை அடையலாம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றது. சமந்தவும் அவரது மனைவியும் இணைந்து வரண்ட நிலத்தை நல்ல முறையில் பண்படுத்தி அதற்கு தேவையான நீர்வசதியையும் கண்டறிந்து நிலத்தில் செழிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
எலஹரவில் அமைந்துள்ள அத்தனகடவர என்ற இடத்தில் அமைந்துள்ள சிறிய விவசாய பண்ணையில் சமந்தவையும் அவரது மனைவி பிரியங்கனியையும் நாங்கள் சந்தித்தோம். சுற்றாடலில் இருந்து ஏற்படும் சவால்களை தேற்கடித்து மிகவும் வெற்றிகரமாக விவசாய பண்ணை ஒன்றை நடத்தும் குடும்பமாக அவர்கள் உள்ளனர்.
அரை ஏக்கர் நிலத்தில் சோளம், மரக்கறி வகைகள், பழ வகைகள், கடலை மற்றும் மரவள்ளி போன்ற உணவுப் பயிர்களை பயிரிட்டுள்ளனர். அவர்களின் விவசாய செயற்பாட்டில் குறிப்பாக பருவ காலத்திற்கான பயிர்களை பயிரிட்டு பூர்த்தியடைந்த பின்னர் மீதமுள்ள நிலத்தில் வேறு பொருத்தமான பயிர்களையும் நடுகின்றனர். அவர்களது அறுவடைகளை இடைத் தரகர்களின் தலையீடுகள் இல்லாத வகையில் நேரடியாகவே சந்தைக்கு அனுப்புகின்றனர். வியாபாரிகள் பண்ணைக்கு நேரடியாக விஜயம் செய்து பழவகைகள், மரக்கறி வகைகள் உட்பட அப்போதைக்கு கிடைக்கின்ற அறுவடைகளை கௌ;வனவு செய்கின்றனர். அதனால் சந்தைப்படுத்தும் பிரச்சினை இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

சமந்தவும் அவரது மனைவி பிரியங்கனியும்

“வருடத்தில் அதிகமான மாதங்களில் வரட்சி நிலவுகின்றது. தொடர்ச்சியாக 09 மாதங்களுக்கு மழை மிகவும் குறைவாகவே இருக்கின்றது. மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பயிர்களை பாதுகாப்பதற்கு நாங்கள் போராட வேண்டி இருக்கின்றது. ஆனாலும் அந்த மாதங்களிலும் நான் பயிரிடலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றேன். இக்காலப்பகுதியில் நான் எனது பயிர்ச் செய்கை மூலம் அறுவடை செய்கின்ற அதே நேரம் ஏனைய விவசாய பண்ணைகள் எதுவும் இல்லாமல் வெற்று நிலமாக உள்ளன.” என்று சமந்த கூறுகின்றார்.
“நெற்செய்கைக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் நீர் வசதியை வழங்குகின்றது. அந்த காலத்தில் நானும் எனது வயல் நிலத்திற்கு போதுமான நீரை சேமித்துக் கொள்கின்றேன். அண்மையில் கடுமையான வரட்சி நிலவிய போதும் எனது காணியில் நான் பயிரிடலை மேற்கொண்டிருந்தேன். கடுமையான வரட்சி காலத்தில் நான் எனது தோட்டத்தில் வெட்டி இருக்கின்ற கிணறு மூலம் நீரை இறைத்து பயிர்களை பாதுகாத்துக்கொள்வேண். எந்தவிதமான வரட்சி காணப்பட்டாலும் எல்லா வகையான பயிர்களையும் நான் பயிரிடுகின்றேன். இப்போது அறுவடை செய்வதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வரட்சி காலத்தில் நான் சரியான முறையில் இந்த விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எனது பொருளாதாரத்திற்கு இழப்பு ஏற்படுகின்றது”.
அத்துடன் நீர் பற்றாக் குறையானது அவரை பாதிக்கவில்லை. ஆனாலும் இரவில் வருகின்ற யானைகளின் நடமாட்டமும் அட்டகாசமும் விவசாய நடவடிக்கைகளுக்கு பாரிய அச்சுறுத்தலும் சவாலுமாக இருந்து வருகின்றது. காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடு நிலவி வருகின்ற பிரதேசங்களில் எலஹர பிரதான இடத்தை வகிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
“ஒவ்வொரு நாளும் இரவில் யானைகள் கிராமத்திற்குள் புகுந்துவிடுகின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் இரவில் எங்களது பயிர்களை யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக போராட வேண்டி இருக்கின்றது. நாங்கள் ஒரு நிமிடம் நித்திரை செய்தாலும் அதற்குள் யானைகள் வந்து பயிர்களை அழித்து நாசம் செய்து விடுகின்றன. விவசாய நிலத்திற்குள் புகும் யானைகளை விரட்டுவது மிகவும் கஷ்டமான காரியமாகும். அங்கே சில விவசாயப் பண்ணை நிலங்களே இருந்து வருவதால் எங்களது பண்ணை அடிக்கடி யாணைகளின் தாக்குதலுக்கு இலக்காகின்றது”.


கடும் வரட்சி பயிர்களை பாதுகாப்பதற்கு போராட வேண்டி இருக்கின்றது.

நாங்கள் இந்தப் பண்ணைகளில் சில மணித்தியாலங்களை செலவிட்ட போது அங்கே விவசாய இரசாயண பதாhர்த்தங்களை பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிந்தது. ஆனாலும் அவர்கள் அதனை விளைந்த பயிருக்கு பயன்படுத்தவில்லை. பயிர் விளைச்சல் கொடுக்கும் பருவம் வர முன்னரே இரசாயண பதார்த்தங்களை பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த விவசாய நிலங்களில் செய்யப்படும் பயிரிடலின் முக்கியமான ஒரு இரகசியமாக இருப்பது அதிகமான இரசாயண அல்லது கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதேயாகும்.
சமந்தாவுக்கும் பிரியங்கனிக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் பாடசாலைக்கு செல்லும் பருவத்தினர். இவர்களது பிரதான வருமானம் இந்தப் பண்ணை விவசாயமாகும். பிரியங்கனி தெரிவிக்கையில் அவர்களது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் அவளும் அவளது கணவருடன் இணைந்து பண்ணையில் வேலை செய்வதாக கூறுகின்றாள். இருவரும் இணைந்து பருவ காலத்தில் அதிகமான வருமானத்தை இந்த விவசாய பண்ணை மூலம் உழைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாக இருந்தாலும் அவர்களது வாழ்க்கையானது மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தொடரும் கதையாகவுள்ளது. சூழல் தாக்கம் மற்றும் சவால்களை சமாளித்து வெற்றி கொண்டு வாழ்க்கையை வெற்றி பெறுவதென்பது நினைக்கின்ற அளவிற்கு இலகுவானதாக இல்லை. வறுமையில் வாடும் அல்லது குறைந்த வருமானம் பெறும் நாட்டில் பல இடங்களில் வாழும் குடும்பங்களுக்கு இந்த குடும்பம் ஒரு சிறந்த உதாரணமாக அமைகின்றது. அவர்கள் முகம் கொடுக்கின்ற கஷ்டமான நிலையை எப்படியாவது திறமையாக முகம் கொடுத்து எதிர் கொண்டால் அவர்களே வெற்றியாளர்களாக மாறுகின்றனர்.