Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பெண்ணியவாதி கிரான்னி
கடின உழைப்பு! மன உறுதி!

கேரளா பகுதியை விட்டு எங்குமே சென்று பழக்கம் இல்லாத அவர் கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு மிகவும் பயங்கரம் மிக்க கடற் பயணம் செய்து மிக மோசமான அனுபவத்தை பெற வேண்டி ஏற்பட்டது. இந்த கதையை அவரது பேரப்பிள்ளைகளுள் ஒருவரான மகளின் மகள் 100 வருடங்களின் பின்னர் அவரது வாழ்கை வரலாறாக எழுதும் போது தெரிவிக்கின்றார்…

14.05.2020  |  
கண்டி மாவட்டம்
Winifred Selvaranee Sinniah & Family

1800 ஆம் ஆண்டு எங்கோ ஓரிடத்தில் ஒரு காலப்பகுதியில் இந்தியாவின் கேரளாவில் கணவனை இழந்தவுடன் எனது பாட்டியான வினிபிரட் ஜகொப் அக்கா கிரான்னியும் (படத்தில் முன் வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக குழந்தையை மடியில் வைத்ததிருப்பவர்) அவரது எட்டு குழந்தைகளும் ஒரு கபப்லில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பப்பட்டதோடு இலங்கையின் தங்கக் கடற்கரையை வந்தடைந்தார்.
அவரது 14 வயதில் திருமணம் முடித்து 23 வயதாகும் போது எட்டு குழந்தைகளுக்கு தாயாகி 30 வயதிற்கு முன்னர் கடல் கடந்து இன்னுமொரு தேசத்தை வந்தடைந்தார். அவர்தான் கிரன்னி என்ற வீரப் பெண். கேரளா பகுதியை விட்டு எங்குமே சென்று பழக்கம் இல்லாத அவர் கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு மிகவும் பயங்கரம் மிக்க கடற் பயணம் செய்து மிக மோசமான அனுபவத்தை பெற வேண்டி ஏற்பட்டது. இந்த கதையை அவரது பேரப்பிள்ளைகளுள் ஒருவரான மகளின் மகள் 100 வருடங்களின் பின்னர் அவரது வாழ்கை வரலாறாக எழுதும் போது தெரிவிக்கின்றார். நான் மீண்டும் திரும்பிப் பார்க்கும் போது எனது நிகழ் காலம் எவ்வாறு அழகாக இருக்கின்றது என்பதை பார்க்கின்றேன்.
இலங்கையின் கடந்த கால வரலாற்றை எடுத்து நோக்கினால் தென் இந்தியர்கள், கிழக்கு ஆபிரிக்கர்கள், ஜாவாக்கள், பர்மியர்கள் மற்றும் ஆப்கானியர்கள் அடங்களாக வெளிநாட்டவர்கள் இங்கு எவ்வாறு வந்தார்கள் என்பது புலனாகின்றது. இவ்வாறு வந்தவர்களே இலங்கையில் பல்வேறு பிரதேசங்களிலும் வெவ்வேறுவிதமான கைத்தொழில் துறைகளின் வளர்ச்சிக்கும் உதவிகளை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இலங்கையின் தேயிலை, தென்னை, இறப்பர், உல்லாசப் பிரயாணத்துறை, வீதி நிர்மாணம், புகையிரதம் உட்பட பலவிதமான துறைகள் சார்ந்த அபிவிருத்தி மற்றும் சர்வதேச புகழுக்கும் கீர்த்திக்கும் காரணமாக இருந்தவர்களும் இந்த பெண்ணைப் போன்று இங்கு பிற நாடுகளில் இருந்து வந்தவர்களாவர்.


வெளிநாட்டவர்கள் இங்கு எவ்வாறு வந்தார்கள் என்பது புலனாகின்றது.

மீண்டும் இன்று தேயிலை கைத்தொழில், ஆடைத் தொழில் துறை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு என்ற அடிப்படையில் பலவேறு துறைகளிலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களாலே பொருளாதாரம் செழிப்படைந்து கொண்டிருக்கின்றது. 1970 ஆம் ஆண்டு தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர் சமமான சம்பளம் மற்றும் குடியுரிமைக்கான போராட்டம் ஆரம்பமானது. எனது மூதாதையர் பரந்தளவில் இந்நாட்டிற்காக பாடுபட்டுள்ள அதே நேரம் எனது தாயின் அடையாள அட்டையில் இன்றும் இருப்பது x என்ற வாக்குரிமை இல்லாதவர் என்பதை காட்டும் அடையாளமாகும்.
சம்பளம் ரூபா 50 ஆக இருந்த காலகட்டத்தில் கிரன்னி தனித்து போரடியவராக குழந்தைகளை கண்டி மவ்பெரி கல்லூரி மற்றும் திரித்துவ கல்லூரி ஆகியவற்றில் சேர்த்து படிப்பித்துள்ளார். அவரது இறுதியான தொழிலாக அமைந்தது மவ்பெரி கல்லூhயில் உதவியாளராக (மேட்டரன்) பணியாற்றியதாகும். அவர் உயர்தர பாடசாலை கல்வி, டிப்ளோமா பட்டம் அல்லது வேறும் பட்டம் பெற்றவராக இருக்கவில்லை. ஆனாலும் அவர் ஒரு நிமிடத்தையாவது வீணாக செலவு செய்பவராக இல்லாமல் கடின உழைப்பு, மன உறுதி என்பன போன்ற பண்புகைளை உடையவராக இருந்தார். அவர் ஒரே நேரத்தில் சுவையாக உணவு சமைப்பவராகவும் பகுதி நேர வேலையாக கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்தார். அவர் (எனது பேரக் குழந்தை) அவரது மகளின் பேரக் குழந்தைகளை வளர்த்து பராமரித்ததால் அவரது மகள் தவமணி சிறப்பாக கல்வியால் உயர்வடைந்து பின்னர் ஆசிரியராக வரக்கூடிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியரான அவரது மகள் மவ்பெரி கல்லூரியிலும் பின்னர் மைலப்பிட்டி லக் பஹண கல்லூரியிலும் பணியாற்றினார். மற்றுமொரு மகளான எமிலி தாதியாக பயிற்சி பெற்று தோட்டப்புற ஆஸ்பத்திரிகளில் தோட்ட மக்களுக்காக சேவையாற்றியுள்ளார். இன்று இலங்கையானது சிறந்ததும் தரமானதுமான சுகாதார சேவையை வழங்கும் ஒரு நாடாக ஐ.நா. வின் தரப்படுத்தலில் இடம் பெற்றிருக்கின்றது. இலங்கையின் இருதய அறுவை சத்திர சிகிச்சை செய்யக்கூடிய முதலாவது வைத்திய நிபுணராக இவரின் மருமகனான ஜிம் பீட்டரே திகழ்கின்றார்.

ஒரு மகன் இராணுவத்தில் இணைந்து நீண்ட காலமாக எகிப்தில் சேவை புரிந்துள்ளார். அது அவரது மருமகளின் முதலாவது பேரக் குழந்தையாகும். பெண்கள் திறமைசாலிகள் என்பதோடு அந்த திறமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உறுதியாக நம்புகின்றார். வீட்டில் (ஒருவர் இருந்தாலும்) தொலைக்காட்சி பார்ப்பதற்காக யாரும் சுற்றி அமர்வதில்லை. அப்போது கிரான்னி அவரது மகளின் குழந்தைக்கு ஏற்பட்ட வலி ஒன்றிற்காக எண்ணெய் தேய்த்து விட்டார். ஆனாலும் அவரால் தேய்த்து விடப்பட்ட எண்ணெய் தவறான ஒன்று என்பதை பின்னர் உணர்ந்து கொண்டார். அப்போது குழந்தையை தூக்கி தோளில் போட்டவராக புகையிரத தண்டவாளம் வழியாக ஆஸ்பத்திரிக்கு ஓடியுள்ளார்.  ஆனாலும் குழந்தை ஆபத்தில் இருந்து மீளவில்லை. அந்த புகையிரத தண்டவாளத்தில் குழந்தையில் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுந்து விழுந்து இருந்ததை ஒருவர் கண்டெடுத்து கிரான்னியிடம் ஒப்படைத்துள்ளார்.பின்னர் அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. அதன் பின்னர் குழந்தை வளர்ப்பு தொடர்பாக கிரன்னி அவதானமாக நடந்துகொண்டார்.

Woman with saree and flowers in the hair : Writer’s mother and Granny’s namesake grand-daughter Winifred Selvaranee Sinniah on her engagement day at 21 years old. The only grand-daughter still alive.

1977 இல் ஏற்பட்ட மிக மோசமான இன வன்முறையால் அவர்களது வீடுகள் நாசமாகின. அப்போது கிரான்னிக்கு 23 பேரக் குழந்தைகளும் வீட்டில் செலலப் பிராணிகளாக கிளி, பூனை, நாய், பசு மாடு, ஆடு, கோழி உட்பட பல வகையான பிராணிகளும் இருந்தன. 1977 ஆம் ஆண்டு எனது சகோதரியான 24 ஆவது பேரக் குழந்தை பிறந்தது. ஆபரணங்களை அணிந்தவாறு வீட்டின் வராந்தாவில் பச்சை பிரம்பால் பின்னப்பட்ட நாகாலியில் பச்சை நிற காஞ்சிபுர சாரி அணிந்து கருப்பு நிற வலையல்கள் போட்டு புதிதாக பிறந்த குழந்தையையும் மடியில் வைத்தவாறு அமர்ந்திருந்ததை நான் பொறாமையுடன் பார்த்தவாறு குழந்தையை முத்தமிட்டு வாழ்த்தினேன். அவளது வாழ்க்கையில் சந்திக்காத அனுபவிக்காத துன்பங்கள் துயரங்கள் இல்லை.
இந்த நிகழ்வின் ஒரு மாதத்தின் பின்னர் குடும்பத்தார் அனைவரையும் ஒன்றாக அழைத்து அவர் எதிர்பார்க்கின்ற மரணத்தை பற்றியும் அந்த மரணம் நிகழ்ந்த பின்னர் மரணச் சடங்கிற்காக செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும் அறிவுரை வழங்கினார். இறுதிக் கிரியைகள் எவ்வாறு நடத்த வேண்டும் அதற்கான ஆடைகள், அந்த நேரத்தில் இசைக்கும் இசை எதுவாக இருக்க வேண்டும், வருபவர்களுக்கான உணவு வகைகள் பற்றியும் முன் கூட்டியே கூறியிருந்தார். 94 வயதாக இருந்த அவருக்கு இரத்த அழுத்தம், சக்கரை வியாதி அல்லது மாரடைப்பு என்று எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் இந்த அறிவுரைகளை வழங்கிய அன்றைய தினமே அவர் அமைதியாக மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து போனார். அவர் மூச்சையாகி விட்டார். அன்றைய தினம் நானே அவருடன் அறைக்குள் ஒன்றாக இருந்ததோடு இவ்வளவு சீக்கிரமாக அவர் எம்மை விட்டு பிரிந்து விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. எனது சிந்தனையில் அவர் இறக்கவில்லை.
எனது குடும்பத்தின் ஒரு பெண்ணாகவே நான் அவரை இன்னும் பார்க்கின்றேன். எனது தாய், சகோதரிகள், மைத்துனி, மைத்துனர், எனது மாமி ஆகியோரும் அவரை என்றென்றும் நினைவு படுத்துகின்றனர். அவர் ஒருபோதும் மரணிக்கவில்லை. அவரது ஆச்சரியமான செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் இன்னும் எமது இதயங்களில் குடிகொண்டுள்ளன. புதிய உலகையும் புதிய பூமிகளையும் கண்டுபிடிப்பதற்காக என்னை ஏற்றிச் செல்வதற்கான கப்பல் நங்கூரமிட்டிருப்பதாக நான் என்நேரமும் உணர்கின்றேன். எனது எதிர்பார்ப்பு அல்லது இலட்சியத்தை சிதைக்காமல் அந்த பயணம் நடபெறும் என்பது என் ஆசை.