Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வாழ்வாதார நேர்காணல்
என் குடும்பத்துக்கு ஒரு வீடு வேண்டும்

யாழ்பாணம் கச்சேரிப் பகுதியில் மிருதங்கம் தபேலா போன்ற இசைக்கருவிகளை 21 வருடங்களாக தயாரித்து வருகிறார் சதாசிவம்  தெய்வேந்திரம். 21 வருட காலமாக சளைக்காது இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வசிக்கிறார். 5 பிள்ளைகள். அனைவரும் பாடசாலைகளில் படிக்கிறார்கள். “நாளாந்தம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?” “300 ரூபா தொடக்கம் 500ரூபா வரை வரும்.” “பிள்ளைகளின் கல்விச் செலவை எவ்வாறு ஈடுசெய்கிறீர்கள்” “எனது உழைப்பு மட்டும்தான் குடும்ப வருமானம். அதில்தான் கல்விக்கும் கொடுக்கவேண்டும். மிகச் சொற்ப வருமானத்தை […]

26.07.2016  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்பாணம் கச்சேரிப் பகுதியில் மிருதங்கம் தபேலா போன்ற இசைக்கருவிகளை 21 வருடங்களாக தயாரித்து வருகிறார் சதாசிவம்  தெய்வேந்திரம். 21 வருட காலமாக சளைக்காது இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வசிக்கிறார். 5 பிள்ளைகள். அனைவரும் பாடசாலைகளில் படிக்கிறார்கள்.
“நாளாந்தம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?”
“300 ரூபா தொடக்கம் 500ரூபா வரை வரும்.”
“பிள்ளைகளின் கல்விச் செலவை எவ்வாறு ஈடுசெய்கிறீர்கள்”
“எனது உழைப்பு மட்டும்தான் குடும்ப வருமானம். அதில்தான் கல்விக்கும் கொடுக்கவேண்டும். மிகச் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு 5 பேரினதும் கல்வி செலவை ஈடுசெய்வது பெரும் சவால்.”
“உங்களுக்கு இந்த தொழிலைச் செய்வதில் திருப்தி உள்ளதா?”
“எனக்கு இந்த தொழிலை தவிர வேறு தொழில் செய்வதற்கு விருப்பம் இல்லை. சின்ன வயதில் இருந்தே இந்தத் தொழிலைச் செய்ய ஆர்வப்பட்டு வந்தவன். என்னிடம் பல வாடிக்கையாளர்கள் வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் மிருதங்கத்தினை திருத்துவதற்காகவும் செய்தவதற்காகவும் பலர் வருகின்றனர். மிருதங்கக் கலையினை நாட்டில் ஊக்கிவிப்பதும்  விருப்பமாகவுள்ளது.
இந்த தொழிலை செய்வதில் ஏதேனும் பிரச்சினையுள்ளதா மிருதங்கம் செய்வதற்குத் தேவையான எருமைத்தோலை பெற்றுக் கொள்வதில் ஈடர்பாடுள்ளது. அரசாங்கம் எருமைத் தோல் எடுப்பது சட்டவிரோதம் என்றதால் ஆடு, மாட்டின் தோலைப் பயன்படுத்தி மிருதங்கம் தபேலா செய்து வருகின்றேன். “
“உங்கள் வருமானம் உங்களுக்குப் போதுமானதா?”
“இல்லை. இப்ப எல்லாப் பொருள்களும் விலையாகவுள்ளன. அதற்கு ஏற்ற வருமானம் போதாது.”
“உங்கள் அடுத்த இலக்கு என்ன?”
“இயந்திரப்பொறிமுறையைப் பயன்படுத்தி மிருதங்கம் ஒன்றை கண்டு பிடித்துள்ளேன். அதனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி அதன் மூலம் அதிக இலாபம் சம்பாதிக்க வேண்டும். அருகி வரும் இந்தக் கலையை உலகறியச் செய்யவேண்டும். எனது குடும்பத்தை மேம்படுத்த அதிக வருமானம் ஈட்டவேண்டும் எங்கள் குடும்பத்திற்கு ஒரு வீடு கட்டவேண்டும்.”