Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தூசுப்படையால் மூடப்பட்டுள்ள போகஸ்வெவ வாழ்க்கை

வவுனியாவில் இருந்து 40 கி.மீற்றர் தூரம் தூசுமண்டலத்திற்குள் பிரயாணம் செய்தால் யுத்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட போகஸ்வெவ குடியேற்ற மக்கள் அனுபவிக்கும் தயரங்களைக் கண்டுளொள்ளலாம். எமது தலைவர்களால் இந்தத் துயரங்களை அறிய முடியாதிருப்பது கலை தருகின்றது. “போகஸ்வெவ பஸ் நிறுத்தப்படுவது எந்த இடத்தில்?” நன்பகல் உச்சி சூரியனின் சுட்டெரிக்கும் கடும் உஷ்ணத்தின் கொடூரத்தால் வடிந்Nதூடும் வியர்வையை என் ஒரு கையில் இருந்த கைக்குட்டையால் துடைத்தவாறு கேட்டேன். “ஆ ..ஆ அதோ இருக்கிறது என்று ஏனோ தானோ என்ற நிலையில் […]

26.07.2016  |  
அனுராதபுரம் மாவட்டம்

வவுனியாவில் இருந்து 40 கி.மீற்றர் தூரம் தூசுமண்டலத்திற்குள் பிரயாணம் செய்தால் யுத்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட போகஸ்வெவ குடியேற்ற மக்கள் அனுபவிக்கும் தயரங்களைக் கண்டுளொள்ளலாம். எமது தலைவர்களால் இந்தத் துயரங்களை அறிய முடியாதிருப்பது கலை தருகின்றது.
“போகஸ்வெவ பஸ் நிறுத்தப்படுவது எந்த இடத்தில்?”
நன்பகல் உச்சி சூரியனின் சுட்டெரிக்கும் கடும் உஷ்ணத்தின் கொடூரத்தால் வடிந்Nதூடும் வியர்வையை என் ஒரு கையில் இருந்த கைக்குட்டையால் துடைத்தவாறு கேட்டேன்.
“ஆ ..ஆ அதோ இருக்கிறது என்று ஏனோ தானோ என்ற நிலையில் விரல்களைச் சுருட்டியவாறு வவுனியா பஸ் நிலைய டைம்கீபர் என்னிடம் கூறினார். அவருடைய நடுவிரல் காட்டிய திசையை என் கண்கள் உற்று நோக்கியபோது அங்கே தூசுப்படலத்தால் மூடப்பட்டதாக போகஸ்வெவ பஸ் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தேன்./1_1
தூசுபடிந்து நிறமே மாறியிருந்த பஸ்ஸிற்குள் ஒருவாறு சிரமப்பட்டு நானும் ஒருவனாக ஏறிக்கொண்டேன். பஸ்ஸிற்குள் அமர்ந்திருந்தவர்களை மெதுவாக உற்று நோக்கினேன். வாடி வதங்கிப்போன முகங்கள். எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் சுக்குநூறாகிய சோகத்தில் தொங்கும் முகங்கள்.
உயிர்பெற்ற பஸ் வண்டி திருகோணமலை வீதி ஊடாகச் சிறிது தூரம் போய் மாமடுவ சந்தி வழியாக இடதுபக்கமாக பெரிய தூசுமண்டலத்தைக் கிளப்பிவாறு தூசுப்படைக்குள்ளால் பயணத்தைத் தொடர்ந்தது.
பாதையின் இருபுறமும் பெரும் தூசுப்படை. இறங்கவேண்டிய பயணிக்கு எதுவும் கண்களுக்கு தென்படாத அளவிற்கு பாதை மேலெழும் தூசால் நிரம்பி வழிந்தது.
கி.மீற்றர் 40இற்கு தூசு மண்டலம்
பாதை திருத்தம் செய்வதாக ஆயிரக்கணக்கான ரூபா செலவில் பொருத்தப்பட்ட பெயர்ப் பலகையை மட்டும் காண முடிந்தது. 40 கி.மீற்றர் தூரத்தைக் கொண்ட பாதையின் ஒவ்வொரு அடிக்கும் பெரிய குழிகள். கடும் வரட்சிக் காலத்தில் போகஸ்வெவக்கு போகும் பஸ் வண்டி முழுமையாக அந்தப் பகுதியில் உள்ள தூசு படிந்த நிலையில் தோற்றம் தருவது போல் அந்தப் பிரதேச மக்களது உடைகளும் இயல்பாகவே தூசு நிறமாக மாறியிருக்கின்றது. வவுனியா பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் பஸ் வண்டிகளில் போகஸ்வெவ பஸ் எது என்பதை பெயர்ப் பலகையைப் பார்க்காமலே அவர்களால் அடையாளம் காணமுடியும். அந்தளவிற்குத் தூசு.
வவுனியா நகரில் இருந்து திருகோணமலை வீதி ஊடாக இரண்டரை கி.மீற்றர் தூரம் வரை சென்றால் வருவது மாமடுவ சந்தி. அந்தச் சந்தி வழியாக இடதுக்கு (பஸ் வழி இலக்கம் 903ஃ1) 40 கி.மீ. தூரம் வரை போனால் போகஸ்வெவ வரும். முறையே நந்திமித்திரகம, சலலிஹினிகம, நாமல் கம ஆகிய குடியேற்றங்களை போகஸ்வெவக்கு செல்லும்போது காணலாம். போகஸ்வெ முதலாவது குடியேற்றம், போகஸ்வெவ இரண்டாவது குடியேற்றம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன./1-3
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2011ஆம் ஆண்டின் பின்னர் வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதே போகஸ்வெவ குடியேற்றமாகும். 1930ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசேட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டே இந்தக் கிராமத்தின் பெருமளவு நிலப்பிரதேசம் அமைக்கப்பட்டிருக்கின்றது. நந்தமித்திர யோதயாவால் நிர்மாணிக்கப்பட்டது என்ற அந்த காவியத்திற்கும் இன்றைய போகஸ்வெவவிற்கும் இடையில் தொடர்பு இல்லை.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
இங்கு மக்களை குடியேற்றும்போது மக்களுக்கு 1 ஏக்கர் பயிர்ச் செய்கைக்கான நிலமும், குடியிருக்க வீடும் விவசாயம் செய்வதற்கு இரண்டு ஏக்கர் வயல் காணியும் தருவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. போகஸ்வெவ முதல் குடியேற்றத்தில் ஒரு சிலருக்கு மட்டும் வயல் காணி வழங்கப்பட்டிருந்தது. இன்னும் சிலருக்கு போகஸ்வெவ முதல் கிரமத்திலும் நந்தமித்திரகமவிலும் வீடு கிடைத்திருந்தது. பெருமளவானவர்களுக்கு மலசலகூடம் ஒன்றைக் கட்டிக் கொள்வதற்காகவாவது பணம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
போகஸ்வெவ விவசாய மன்றத்தின் செயலாளர் ஆர்.பி.அய்ராங்கனீ இது பற்றி தெரிவிக்கையில், தான் உட்பட இங்கு குடியிருக்க வந்தவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியில் எதையும் அரசு நிறைவேற்றவில்லை என்று கூறுகின்றார்.
“இங்கு எங்களில் 2,600 பேருக்கு அளவில் காணி வழங்கப்பட்டது. 12 கூரைத் தகடுகள் கிடைத்தன. நாங்கள் மண்ணால் வீடு கட்டிக்கொண்டோம். 06 மாதங்கள் வரை உலர் உணவு கிடைத்தது. பிறகு அதுவும் கிடைக்கவில்லை. கல், சீமெந்து கொண்டு வீடு கட்டித்தருவதாக வாக்குறுதி வழங்கினாலும் இன்னும் வீடு தரவில்லை.
ஊரில் உள்ள பிரதான பிரச்சினையாக இருந்து வருவது மக்களுக்கு நிரந்தரவ hழ்வாதார வழிகள் இல்லை என்பதுதான் எனக் கூறும் அய்ராங்கனீ, வயல் நிலம் கொடுக்காததால் பிரச்சினை இன்னும் உக்கிரமடைந்துள்ளது என்றும் தெரிவிக்கின்றார்.
“சில சந்தாப்பங்களில் மழையால் அல்லது கடும் வரட்சியால் மேட்டு நில பயிர்ச்செய்கை பாழடைந்து விடுகின்றது. ஆரம்பத்தில் பயிர்ச்செய்கை நாசமடைந்தால் அதற்காக இர்ப்பீடு வழங்கப்பட்டாலும் பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது. சமுர்த்தி நிவாரணமும் இல்லை. குடிநீரும் இல்லை. 26 வீடுகளுக்கு ஒரு கிணறே உள்ளது. அந்த நீரைக் குடிக்கவும் முடியாது” என்று அவர் சொல்கின்றார். ஆம்பிலிபிட்டிய, நுவரெலிய, பொலன்னறுவை, கொத்மலை, அவிசாவலை, கடவத்தை, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் இங்கு குடியேறியிருக்கின்றனர். இன்று வரையில் இவர்களுக்கு காணி உறுதிகளும் வழங்கப்படவில்லை. அதனால் இந்தக் காணியும் எந்த நேரத்திலும் இல்லாமல் போய்விடு;மோ என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கின்றனர்.
இந்தக் கிரமம் நெடுங்கேணி, வவுனியா, மதவாச்சி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குரிய பகுதியாகும். தமது அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ளத் தாம் எந்தப் பகுதி அரச அலுவலகத்திற்குப் போகவேண்டும் என்பது அவர்களுக்கிருக்கும் முக்கிய பிரச்சினையாகும்.
போகஸ்வெவ கிரமத்தில் தற்போது 2,771 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவதற்காக பிரதான நகரம் ஒன்றை அமைப்பைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையே காணப்படுகின்றது.
2006ஆம் ஆண்டு டி.ஆர்.விஜேவர்தன விருது விழாவில் சிறந்த விருதை வென்ற “இந்திர சாபா” என்ற சிறுகதையை எழுதிய அருண சஞ்சீவவும் இந்தக் கிரமத்தைச் சேர்ந்தவர். போகஸ்வெவவில் வாழும் மக்கள் அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக வாழ்க்கைப் போராட்டம் நடத்த வேண்டியேற்பட்டிருக்கின்றது என்று அவர் தெரிவிக்கின்றார்.
எதிர்கால சந்ததியினரின் தலைவிதி
கல்வி நடவடிக்கை முதல் போகஸ்வெவ மக்களது வாழ்க்கையில் ஏராளம் பிரச்சினைகள் உள்ளன. எஸ்.டீ.திலன்சன் சதுன் திலகரத்ன மாணவர் பருவத்தினர்எ திர்நோக்கும் பிரச்சினைகளைத் தனது அனுபவம் ஊடாக இவ்வாறு கூறுகின்றார்:
போகஸ்வெவில் க.கொ.த. (உ.தர) கற்கும் வசதி கொண்ட பாடசாலை இல்லை. வவுனியா நகரில் உயர்தரத்திற்கு இரண்டு சிங்கள மொழி மூல பாடசாலைகள் இருக்கின்றன. மடுகந்த பிரிவெள மற்றும் டமுகந்த தேசிய பாடசாலைகள் அவை. நான் கல்வி கற்பது மடுகந்த தேசிய பாடசாலையில். போகஸ்வெவில் இருந்து வவுனியாவுக்கான பஸ் காலையில் 6.30 மணிக்கே வருகின்றது. பாடசாலை போகும்போது 8.00 மணியாகின்றது. அப்போது முதலாவது பாடத்தின் அரைவாசி முடிந்து இருக்கும். வாரத்தில் ஒருநாள், இரண்டு நாளைக்கு பஸ் வருவதும் இல்லை. அன்றைக்குப் பாடசாலைக்குப் போகமுடியாது. காலையில் நேர்த்தியாக வெள்ளை உடையுடன் பாடசாலைக்குப் போகத் தயாரானால் வவுனியாவுக்குப் போகும்போது உடைகள் தூசு படிந்து மஞ்சள் நிறமாக மாறியிருக்கும். தலைமயிரும் செம்பு நிறமாகியிருக்கும். தூசு படிந்த பாதையாகையால் கண்களில் எரிச்சல் உண்டாகின்றது./1-2
ஆர்.சாந்திகுமாரிக்கு தனது வாழ்க்கையின் பெறுமதியான பகுதியை இழக்க நேரிட்டது இந்தப் பகுதிச் சுகாதார, மருத்துவ சேவையில் நிலவும் குறைபாட்டினால்தான்.
“இந்த ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் இல்லை. ஒரே ஒரு மருத்துவர் மட்டும்தான் இருக்கின்றார். சுகவீனமுற்ற 4 வயது மகனுக்கு மருந்து எடுத்து கொடுத்தேன். அன்றே இரவில் திடீரென்று சுகவீனம் உரத்தது. மருத்துவமனைக்குப் போனபோது அங்கே மருத்துவர் இல்லை. அதனால் வேறு வைத்தியசாலைக்கு அனுப்பினர். அங்கும் சரியாகக் கவனிக்கவில்லை. இவனுக்கு பேய் பிடித்ததா என்று கேட்டனர். சிறது நேரத்தில் எனது மகன் உயிர் பிரிந்துவிட்டது” என்று உணர்ச்சி ததும்ப அவர் கூறினார்.
பாடசாலையிலும் தரமான ஆசிரியர்கள் இல்லை என்பதோடு அதிகமாகக் கடமையாற்றுவது தொண்டர் ஆசிரியர்களே என்று கூறும் அவர் சில, பாடங்களை கற்பிக்க ஒரு தொண்டர் ஆசிரியர்கூட இல்லாத நிலை இருப்பதாகவும் குறைப்படுகின்றார்.
“தகரக் கூரை வீடுகளில் இருந்து மழை நாள்களில் குழந்தைகளால் படிக்க முடியவில்லை. பாடசாலை சீருடைக்குப் பதிலாக வவுச்சர் தந்தார்கள். வவுச்சருக்கு சீருடை வாங்க இன்னும் ரூபா 200 செலவழித்துக் கொண்டு வவுனியாவுக்குப் போகவேண்டும். அதுவும் அந்த வவுச்சருக்கு சில்க் மெட்டீரியல்தான் வாங்க முடியும். நல்ல புடவை வாங்க இன்னும் கையால் காசு கொடுக்க வேண்டும். ஆதற்கு எங்களிடம் எங்க காசு மிச்சம் இருக்கு,”
சுற்றும் மற்றும் பார்த்தால் இன்னும் இருக்கும் மக்களது முகங்களில் இருந்தும் எத்தனையோ எத்தனையோ குறைபாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகக்கூடிய அறிகுறி தெரிகின்றது. அந்த அனைத்துக் குரல்களையும் அடிப்படுத்தியதாக போகஸ்வெவவுக்கு போன பஸ் மீண்டும் அன்றைய கடைசிப் பயணமாக கிரவல் பாதையில் அமைதிப்பட்டிருந்த தூசுப்படலத்தை மலைபோல் மேல் எழுப்பியவாறு பலத்த சப்தத்துடன் வவுனியா நோக்கி நகரத் தொடங்கியது.
என்னை அறியாமலே அந்த பஸ்சிற்கு கையை நீட்டினேன்.

/1-3