Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

அரசியல் நேர்காணல்
கிழக்கின் எழுச்சிக்குக் காரணம் என்ன?

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் வெறுப்பூட்டும் செயல்களால் கொந்தளித்தே முஸ்லிம் காங்கிரஸை மீட்டெக்கும் நோக்கத்துடன் கிழக்கின் எழுச்சி இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம் என்று கூறுகிறார் வபாபாறூக். “கட்டுமரம்’ இணையத் தளத்திற்காக அவரை அவரது சாய்தமருது வீட்டில் சந்தித்துப் பேசினோம். கிழக்கின் எழுச்சியின் தலைவராக (அமீர்) இருக்கும் வபாபாறூக் முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொருளாளர் ஆவார். கட்சியின் செயலாளர் ஹசன் அலி உட்பட மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதும் கிழக்கின் அபிவிருத்தி புறந்தள்ளப்பட்டதும்தான் கிழக்கி எழுச்சியை கிளறிவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கேள்வி: […]

05.08.2016  |  
அம்பாறை மாவட்டம்

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் வெறுப்பூட்டும் செயல்களால் கொந்தளித்தே முஸ்லிம் காங்கிரஸை மீட்டெக்கும் நோக்கத்துடன் கிழக்கின் எழுச்சி இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம் என்று கூறுகிறார் வபாபாறூக். “கட்டுமரம்’ இணையத் தளத்திற்காக அவரை அவரது சாய்தமருது வீட்டில் சந்தித்துப் பேசினோம்.
கிழக்கின் எழுச்சியின் தலைவராக (அமீர்) இருக்கும் வபாபாறூக் முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொருளாளர் ஆவார். கட்சியின் செயலாளர் ஹசன் அலி உட்பட மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதும் கிழக்கின் அபிவிருத்தி புறந்தள்ளப்பட்டதும்தான் கிழக்கி எழுச்சியை கிளறிவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

கேள்வி: கிழக்கின் எழுச்சி அமைப்பைத் தாங்கள் இப்போது உருவாக்குவதற்குக் காரணம் என?
பதில் : இலக்கிய விடயங்களில் ஈடுபாடு கொண்ட நான் கடந்த ஆறுமாத காலமாகச் சமூகத்தேடல் ஒன்றைச் செய்தேன்.
எமது முஸ்லிம் மக்கள் ஒரு கட்சியை நம்பி அதாவது முஸ்லிம் காங்கிரஸை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் அவல நிலைமையை இதன்போது கண்டேன்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம்களுக்காகச் செய்திருக்க வேண்டிய பல வேலைகள் – கிழக்கின் அபிவிருத்தி கிழக்கு முஸ்லிம்களுக்கான நலவுகள் போன்றவை – பல மழுங்கடிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. கட்சியூடாகக் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கிழக்கிற்கு வேண்டாத விடயங்களையே ஹக்கீமின் தலைமை முன்னெடுக்கின்றது. கிடைத்த இரு தேசியப் பட்டியல் நியமனங்களை சமூக நலன்களைக் கருத்திற்கொள்ளாது வழங்கினார். உறுதியளித்த இடங்களுக்கு வழங்காது தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டார். கட்சிச் செயலாளர் நாயகம் ஹஸனலியின் அதிகாரங்களை சூழ்ச்சிகரமாகப் பறித்தார். இப்படி இந்தத் தலைமையின் வெறுப்பூட்டும் செயல்கள் நீண்ட பட்டியலாகவுள்ளன. எனவே முஸ்லிம் காங்கிரஸை மீட்டெடுக்கவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையைக் கிழக்கிற்குப் பெறும் போராட்டத்தை முன்னெடுக்கவுமே இந்த அமைப்பை உருவாக்கினோம்.

கேள்வி: முஸ்லிம்கள் மத்தியில் மற்றொரு கட்சியை உருவாக்கும்வதற்கான ஆரம்ப முயற்சியா இது?
பதில்: இப்போதைக்கு அப்படியான நோக்கம் எதுவுமில்லை. ஆனாலும் மாற்று வழிகளைத் தேடுவோம்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் நிறுவகத் தலைவர் அஷ்ரபுக்கும் இன்றைய தலைமை ரவூப் ஹக்கீமுக்குமிடையில் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?
பதில்: மர்ஹூம் அஷ்ரப் எல்லா நேரங்களிலும் எல்லா முடிவுகளிலும் சமூகத்திற்கு நன்மை போய்ச் சேரவேண்டும் என்பதில் கவனமாகச் செயற்பட்டார். ஆனால் ரவூப் ஹக்கீமின் தலைமை சொந்த இலாபங்களையே நோக்காகக் கொண்டது.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸூடன் முரண்பட்டிருப்பவர்கள்தான் உங்களை இதற்கு தூண்டியுள்ளனர் என்ற அபிப்பிராயம் உலாவுகின்றதே?
பதில்: நிச்சயமாக இல்லை. பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற நிலையிருந்தது. கட்டியுள்ளோம்.

கேள்வி: கிழக்கின் எழுச்சி முழக்கம் பிரதேசவாதம் என சிலர் வாதிடுகிறார்களே…
பதில்: இது புவியியல் யதார்த்தவாதமேயன்றி பிரதேசவாதமல்ல. வரலாற்றை நோக்கினால் எந்தப் போராட்டத் தலைமைத்துவமும் அந்த மண் சார்ந்ததாகவே இருந்துள்ளது. இது சமகால ஆதாரமும்கூட. எனவேதான் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கிழக்கிற்கு வேண்டும்.

கேள்வி: கிழக்கிற்கு அஷ்ரப் – ஹக்கீம் செய்துள்ள சேவைகள் பற்றி கூறுங்கள்?
பதில்: தலைவர் அஷ்ரப் தொடர்ச்சியாக அமைச்சர் கதிரையில் இருக்கவில்லை. ஆனால் கிழக்கிற்கு அஷ்ரப் செய்த சேவைகளில் கால்வாசியைக்கூட தொடர்ச்சியாக அமைச்சராக இருந்து வரும் ரவூப்ஹக்கீம் செய்யவில்லையயன்பதுதான் உண்மை.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸைப் பிளவுபடுத்த வேண்டுமென முனையும் சக்திகள் உங்களைப் பயன்படுத்துகின்றனரா?
பதில்: கட்சியை பிளவுபடுத்தவெளிச் சக்திகள் தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸின் சிதைவுக்கும், பிளவுக்கும் ரவூப் ஹக்கீமே காரணம். அவர் ஒருவரே போதும்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் உட்கட்சிப் பூசல்கள்பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ரவூப் ஹக்கீம் தலைவராக இருக்கும் வரை பூசல்கள் இன்னும் கூடுமே தவிர குறையாது.

கேள்வி: கிழக்கின் எழுச்சி அமைப்பு முஸ்லிம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதா?
பதில்: நாம் எதிர் பார்த்ததை விடவும் வேகமான வரவேற்புக் கிடைத்துள்ளது. எனவே எமது கிழக்கின் எழுச்சி முழக்கம் வெற்றி முழக்கமே என முழுமையாக நம்புகின்றோம். இந்த முழக்கம் ஏதோ ஒரு கட்டத்திற்குக் கிழக்கு முஸ்லிம் சமூகத்தைக் கொண்டு செல்லும்.

கேள்வி: கிழக்கின் எழுச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
பதில்: குறைந்தபட்சம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கிழக்குக்கான வருகையை அதிகரித்துள்ளது. தமக்கு எதிராக எழுதுபவர்கள் துரோகிகள் என ஹக்கீம் போட்டிருந்த திரையைக் கிழித்துள்ளோம். பத்தி எழுத்தாளர்கள் விமர்சனங்களை இப்போது பக்கம் பக்கமாக எழுதுகிறார்களே?

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கிழக்கிற்கு வேண்டுவு என்பதில் வெற்றி காண்பீர்களா?
பதில்: நூறுவீதம் நம்பிக்கையுண்டு. அதேவேளை மக்களின் உணர்வு ரீதியான தேவைப்பாடும் இதுவாகும். இதற்கான மக்கள் எழுச்சியையும் உருவாக்கிவிட்டோம்.

கேள்வி: அரசியல் தீர்வில், முஸ்லிம்களுக்கான தீர்வை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பெற்றுத்தருமென நம்பலாமா?
பதில்: இந்த விடயத்தில் ஹக்கீமின் வேகம் விவேகம் மந்தகதியிலேயே செல்கின்றது. இந்தத் தலைமை செய்யுமா என்பதில் நிறைய சந்தேகங்களுண்டு.

கேள்வி: வடகிழக்கு இணைந்தால், முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வருவதைக்கூட நாம் ஏற்போமென கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கூறியுள்ளாரே?
பதில்: முஸ்லிம் முதலமைச்சர் என்பது நியாயத்துக்குப் புறம்பானது. சட்டவாக்கலில் உள்வாங்க வாய்ப்புக்கள் குறைவு. முஸ்லிம்களை வடகிழக்கு இணைப்பிற்கு ஆதரவளிக்கச் செய்யும் தற்காலிக வாக்குறுதிதான் இந்தக் கூற்றாகும். பாகிஸ்தான் கோரிக்கையை வைத்து ஜின்னா முழக்கமிட்டபோது, பிரிவினையை விடு, இந்தியாவின் பிரதமராகு எனக் காந்தி கூறியதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது. முஸ்லிம் முதலமைச்சர் விடயம் தனி மனிதனுடைய வாக்குறுதியே!

இலங்கை முஸ்லிம்களுக்கு முகவரியைப் பெற்றுத் தந்த பெருமகன் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஏச்.எம்.அஷ்ரபினால் கிழக்கில் உருவாக்கப்பட்ட தனிப் பெரும் கட்சிதான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். 1980களில் இக்கட்சியை ஆரம்பித்த மர்ஹூம் அஷ்ரப் கிழக்கு முஸ்லிம்களின் பலம்தான் கிழக்குக்கு வெளியேறியுள்ள முஸ்லிம்களுக்குப் பலமும் பாதுகாப்பு மென்பதைப் பறைசாற்றினார். சுமார் 14 வருடங்கள் முஸ்லிம்காங்கிரஸின் தலைமையைச்சுமந்து சுயநல நோக்கின்றி இலங்கை முஸ்லிம் சமூகத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கட்சியை வழிநடத்தி உச்ச நிலைக்குக் கொண்டு சென்றார். இதன்போது அரசியல் பலமிக்க பேரம் பேசும் சக்தி மிக்க சமூகமாக முஸ்லிம் சமூகம் நாட்டில் மறுமலர்ச்சி கண்டது.

அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் 16 வருடங்களாக இத்தலைமைத்துவப் பேறை தனதாக்கிக் கொண்டுள்ளார். ரவூப் ஹக்கீமின் தலைமை இன்று பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வருவதுடன் முஸ்லிம்காங்கிரஸ் உட்கட்சிப்பூசல்களாலும் முரண்பாடுகளாலும் நாற்ற மடிக்கும் ஒருகட்சியாகவும் மாறியுள்ளது.
பத்திரிகைகளை எப்போது புரட்டினாலும் இத்தலைமைக்கு எதிரான விமர்சனக்கட்டுரைகளும் கட்சி முரண்பாடுகள் குட்டுகளை வெளிப்படுத்தும் விவரணங்களும் வெளிவந்த வண்ணமேயுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் தான் கிழக்கு மாகாணத்தில் கிழக்கின் எழுச்சி எனும் அமைப்பொன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தோன்றியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கிழக்குக்கு வேண்டும் எனும் கோ­த்துடன் புறப்பட்டுள்ள இந்த அமைப்பின் வருகை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தாமலில்லை.