Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

“எங்களுக்கு எங்கட காணிவேணும்.”
‘சொந்த காணியில பயிர்செய்தனாங்கள் இப்ப  கூலிக்கு போறம்’

    எங்­கட காணிய  எங்களிட்ட தந்தா போதும். நாங்க அத வைச்சு வாழ்ந்து பிழைச்­சிக்­குவம். இதைப் போல 69 குடும்­பங்­­க­ளுக்­கும் நியாயம் கிடைக்­கனும்.   அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுவில்  அஷ்ரப் நகர் கிராமத்தில் இன்னும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பது  ஏன் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இக்கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பிலோ அல்லது அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றுக்காணிகளை வழங்குவது  தொடர்பிலோ ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் […]

30.09.2016  |  
அம்பாறை மாவட்டம்

 

 


எங்­கட காணிய  எங்களிட்ட தந்தா போதும்.

நாங்க அத வைச்சு வாழ்ந்து பிழைச்­சிக்­குவம்.

இதைப் போல 69 குடும்­பங்­­க­ளுக்­கும் நியாயம் கிடைக்­கனும்.

 

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுவில்  அஷ்ரப் நகர் கிராமத்தில் இன்னும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பது  ஏன் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இக்கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பிலோ அல்லது அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றுக்காணிகளை வழங்குவது  தொடர்பிலோ ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது. கடந்த  (செப்ரெம்பர் 2016) 27ஆம் திகதி உயர்நீதிமன்றில் எடுக்கப்பட்ட இவ்வழக்கு ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கை தாக்கல் செய்தது அஷ்ரப் நகர் கிரா­மத்­தைச் சேர்ந்த கதீஜா உம்­மா என்ற 50 வயதுப்பெண். உள்நாட்டு மோதல்  காலப் பகுதியில் பல்வேறு காலகட்டங்களிலும் இடம்பெயர்ந்த இந்த கிராம மக்கள், இருப்பதற்கு  வந்தபோது   யானைகளாலும் தாக்கப்பட்டனர். மேலும், போரின் பின்னர் இராணுவத்தின் பிரசன்னத்தால் காணிகளை விட்டு  வெளியேறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். இந்த மக்களுக்காக கதீஜா உம்மா என்ற இந்தப்பெண்தனது காணி தனக்கு தரப்படவேண்டும் என வழக்கு தாக்கல்செய்தார். இதுபற்றிய விபரத்தை அவரிடமே கேட்போம்.

கேள்வி   எவ்­வ­ளவு காலமாக அஷ்ரப் நகரில் நீங்க வாழ்­ந்தீங்கள்?

பதில்  எனக்குப் புத்தி தெரிஞ்ச நாள் முதலா அங்கதான் இருக்கோம். எங்க வாப்பாவுக்கு 6 பொம்புளைப் புள்ளையும் 5 ஆம்புளையும். 2 ஏக்கர் காணி சீதனம் தந்திருந்தார். இந்தக் காணி என்ட வாப்­பாட வாப்பா வாழ்ந்த காணி.1952 இல வந்ததாக சொல்லிறாங்க. நாங்க சின்ன வய­சுல இருந்தே அந்தக் காணி­யி­லதான் வாழ்ந்த. என்ட கலி­யாணம் 81 ஆம் ஆண்டு இதே இடத்­தி­லதான் நட­ந்த. எங்­க­ளுக்கு பிள்­ளயும் புறந்து இப்ப மூத்த மக­னுக்கு 33 வய­சா­கு­து.

அஷ்ரப் நகர்
அஷ்ரப் நகர்

நானும் என்ட சகோ­த­ரங்கள் எல்­லாம் மொத்தம் 9 பேரு. எங்க எல்­லா­ருக்கும் எங்­கட உம்மா வாப்பா இதே இடத்­­து­லதான் காணி தந்த. எங்­கட குடும்பம் சொந்தக் காரங்க எல்­லாரும் இந்தக் காணி­யி­லதான் வாழ்ந்­த.

1983 காலப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாங்க அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் இருந்தம். மீதமாக இருந்தோர் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.

1990களில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் 16 பேர்  இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து மீதமிருந்த மக்களும் அச்சம் காரணமாக வெளியேறினம்.

1996ஆம் ஆண்டுகளில் மீண்டும் மீள் குடியேறத் தொடங்கினோம்.  எனினும் அரச வன இலாகா திணைக்களத்தினர் மற்றும் காட்டு யானைகளின் தொந்தரவுகள் இருந்துது.   பெரும் இன்னல்களுக்கு மத்தியிலேயே புனரமைப்பு வேலைகளை செய்தம்.

நாங்க சோளம், பயிற்றை, கச்சான், நெல்லு விதைப்போம். பெண்கள் கைத்தொழில் செய்வம். பாய், பெட்டி இழைக்கிறது. தட்டு செய்வது, தறி, பன்பாய் இழைக்கிறது. அதோடை கோழி, ஆடு, மாடு வளர்க்கிறது என தொழில் நிறைய இருந்திச்சு. இப்ப ஒண்டும் இல்லை. ஆம்பிளைகள் கூலித் தொழில் செய்யறது.

கேள்வி உங்­கட கிரா­மத்தில இருந்து  நீங்கள்  வெளியேற்றப்பட்டீர்களா?

பதில்  ஓம். 2011.11.05 இல இராணுவமும், வனவிலங்குப் பாதுகாப்புப் பிரிவினரும் வந்தாங்க. முதலில தற்காலிகமாக எண்டு வந்தார்கள். எங்களை எழும்பச் சொல்லலை. பிறகு கொஞ்ச நாளைல ஒரு வீட்டுக்கு 2 பேர் வீதம் சோதனைச் சாவடி போட்டார்கள். ஆமிப் பயத்தால் குமர் பிள்ளைகளை வச்சிருக்க ஏலாமல் வெளியாலை தங்க வச்சிட்டு வயசான நாங்கள் மட்டும் வீட்டில இருந்தம்.

சொந்தக்காரர்கள் உள்ள வர ஏலாது. வெளி ஊருக்குப் போய் வாறவங்க ஆமி வச்சிருக்கிற பெயர் விபரத்தில் பெயர் இருந்தால் மட்டுமே உள்ள வரலாம். கையெழுத்து வாங்குவார்கள்.

வெளியில இருந்து உள்ள நெல் கொண்டு வர முடியாது.  தோட்டம் செய்ய முடியாது விவசாயத்தை அழித்­தார்கள். பசளை போட முடியாது. சைக்கிள் மோட்டார் சைக்கிள் உள்ள கொண்டு வர முடியாது.

ஆமி எங்கட ஏரி­யா­க்குள வந்­த­தில இருந்து எங்­க­ளுக்கு கஷ்டம்தான்… இருக்க இட­மில்­லா­ம அங்­கயும் இங்­க­யுமா அலைஞ்சு திரி­யு­றம்…

யானை தாக்கிய போது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கதீஜா
யானை தாக்கிய போது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கதீஜா

ஆமி வந்து இன்­டைக்கு 5 வரு­ச­மா­­குது. ஆமி எங்­கட வள­வுக்­குள்ள பயிர் செய்து யாவாரம் பண்ணி அதால வார வரு­மா­னத்­துல சாப்­பிட்­டுட்டு இருக்­காங்க… வாழை..ம­ர­வள்­ளி­, வெண்­டி என்டு பயிர் செய்து விக்­கி­றாங்­க… அது மட்­டு­மில்­லாம இப்ப அந்த பூமி­யில கிறவல் மண் தோண்டி அதையும் வித்து காசாக்­கு­றாங்­க.. எங்கட நிலத்துல வந்து லொறி லொறியா கிறவல் ஏற்றி வித்­துக்­கிட்­டி­ருக்­காங்­க…

2011இல கிரீஸ் பூதம் பிரச்­சினை வந்த நேரத்­து­லயும் அவங்­க­ளால பெரிய கஷ்­டங்­கள நாங்க சந்­திச்சம். குமருப் புள்­­ளை­கள வேற இடத்­துல கொண்டு போய் பாது­காக்க வேண்டி வந்­துச்­சு. அத­னா­லதான் ஆமி கேம்­புக்கு வெளியால ஒரு இடத்­துல சுனாமி வீட்டுத் திட்­டத்­துல இருக்­குற வீடு ஒன்­றுல இருக்­கம்.

நாங்க வன்­­செயல் காலத்­துல கடும் பிரச்­சி­னை­களை சந்­திச்சு கஷ்­டங்­க­ளுக்கு மத்­தி­யி­லதான் வாழ்­ந்த. அப்­ப­யெல்லாம் வந்து எங்­க­ளுக்கு பாதுகாப்பு தராத ஆமி யுத்தம் முடிஞ்சு எத்­த­னை­யோவருசத்­துக்குப் புறகு அங்க வந்­தது எதற்­காக?

 

கேள்வி  இப்ப எங்க நீங்கள் இருக்கிறீங்கள்?

பதில் ரா­ணுவ கெடு­பி­டிக்­குள்­ள­யும் கொஞ்ச நாளா பல்லக் கடிச்­சிக்­கிட்டு அதி­லேயே வாழ்ந்தம். பிறகு எங்­கட வீட்ட அவங்க இடிச்சிப் போட்­டாங்க. அதால எங்­கட காணிக்கு கொஞ்சம் தள்ளி ஒரு இடத்­து­ல குடி­யி­ருந்­தம். இப்­படி இருக்கும் போது போன வரு­சம் ஒக்­டோபர் மாசம் ஒரு இர­வுல 7 மணி­யி­ருக்கும். நான் கிணத்­த­டி­யில குளிச்­சிட்டு வரும் போது அங்க நிண்ட ஒரு யானை என்ன அடி­ச்சி தலையில 32 தையல் போடுற அள­வுக்கு காயம். என்ட உசுரு போயிட்டு என்­டுதான் நினைச்சன்… ஏதோ அல்லாஹ் காப்­பாத்­திட்­டான்.

யானை அடிச்­சத்­துக்குப் புறகு பள்ளி­வாசல் நிர்­வா­­கிகள் எல்லாம் சேர்ந்து எங்­க­ளுக்கு தற்­கா­லி­கமா ஒரு வீட்ட ஏற்­பாடு செய்­து தந்­தாங்க. அதி­லதான் நாங்க இப்ப இருக்கம்.

கேள்வி     இந்தப் பிரச்­சி­னை­ய எதிர்த்து நீங்க மட்­டும்தான் வழக்கு தொடர்ந்­தீங்­க­ளா? இந்த வழக்கின் மூலம் என்ன எதிர்பாக்கிறீங்க?

பதில்    மொத்தம் நாங்க 69 குடும்பம். நானும் இன்­­னொருவரும் சேர்ந்­துதான் வழக்குப் போட்டம்.. அக்­க­ரைப்­பற்று கோர்ட்­லயும் ஒரு வழக்கு இருக்கு…பிற­கு பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்­புட உத­வி­ ஒத்­தா­­சைல கொழும்­புக்கு வந்து உயர்­ நீதி­மன்­றத்­துல வழக்குப் போட்டாம்…  இதன் மூலம்தான் எங்­க­ளுக்கு ஒரு நீதி கிடைக்கும் என்டு நம்­பு­றம்.

இப்ப இருக்­குற தற்­காலிக வீட்ட சொந்­தமா தாரம்…அந்த வீட்ட பாரம் எடுக்­கி­றீங்­களா என்டு அர­சாங்க சட்­டத்­த­ரணி கேட்­டா­ரு. நாங்க அதுக்­கு ஏலாது என்டு சொல்­லிட்டம்.  எங்­கட பூர்­வீக காணி மொத்தம் 2.25 ரூட் அளவு கொண்­டது.

அத­ எங்­க­ளுக்கு தராம கரண்டும் இல்லாத தண்­ணியும் இல்லாத ஒரு வீட்ட மட்டும் தாரது நியாயமில்ல.வாழ்வாதாரத்துக்கு பயிர்செய்யிறது எப்புடி?

எங்­கட காணிய  எங்களிட்ட தந்தா போதும். நாங்க அத வைச்சு வாழ்ந்து பிழைச்­சிக்­குவம். இதைப் போல 69 குடும்­பங்­­க­ளுக்­கும் நியாயம் கிடைக்­கனும்.

கேள்வி     இப்ப உங்கட காணி­யில யார் இருக்கிறது?

பதில்   ஆமி , முதல் நிறையப் பேரு இருந்த. இப்ப 9,10 பேர்தான்…கொஞ்சப் பேருதான் இருக்­காங்க. அவங்க பயிர் செஞ்­சிக்­கிட்டு கிற­வல் மணல அள்ளி வித்­திக்­கிட்டுத்தான் அதுக்­குள்ள இருக்­கா­க..

இப்ப கொஞ்ச நாளா வன இலாகா திணைக்­கத்­தால காணி­யெல்லாம் அளக்­காங்க..   அதில தேக்க மரம் மா மரம் உண்­­டாக்கப் போறாங்­க எண்டு சொல்­றாங்க… காணிய பிரிச்சு சிங்கள மக்களுக்கு குடுக்கப்போறாக எண்டும் சொல்லுறாக.. இதுக்கு நாங்க அனு­ம­திக்க ஏலாது. அது எங்கட காணி. பூர்வீக காணி.