Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

குடியுரிமையயை அடகு வைத்து மது அருந்தும் மனிதர்கள் !

/ மது அருந்துவது அல்லது அருந்தாமல் இருப்பது மனிதருக்கு இருக்கின்ற ஒரு உரிமையாகும். ஆனால் அந்த மதுவால் ஒரு நாகரீகமே அழிவுறும் நிலை ஏற்படுமானால் அது தீர்வு காணப்பட வேண்டிய துக்கரமான செயலாகும். கதிரவன் மெதுவாக மலை முகட்டுக்குள் மறையும் நேரம் அது. அந்த மாலை நேரத்தில் சில்லென்று வீசும் குளிர் காற்று காரணமாக படிப்படியாக ஊர் எங்கும் குளிர் பற்றிக் கொள்வதோடு வழக்கம் போல அவசர அவசரமாக இயங்கும் எறும்புக் கூட்டத்தைப் போல் மதுவுக்கு அடிமையான […]

07.10.2016  |  
நுவரேலியா மாவட்டம்

/bar
மது அருந்துவது அல்லது அருந்தாமல் இருப்பது மனிதருக்கு இருக்கின்ற ஒரு உரிமையாகும். ஆனால் அந்த மதுவால் ஒரு நாகரீகமே அழிவுறும் நிலை ஏற்படுமானால் அது தீர்வு காணப்பட வேண்டிய துக்கரமான செயலாகும்.
கதிரவன் மெதுவாக மலை முகட்டுக்குள் மறையும் நேரம் அது. அந்த மாலை நேரத்தில் சில்லென்று வீசும் குளிர் காற்று காரணமாக படிப்படியாக ஊர் எங்கும் குளிர் பற்றிக் கொள்வதோடு வழக்கம் போல அவசர அவசரமாக இயங்கும் எறும்புக் கூட்டத்தைப் போல் மதுவுக்கு அடிமையான மா மன்னர்கள் மதுக் கொட்டகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். தினசரி உழைப்பால் ஏற்படும் களைப்பை போக்கவும் குளிரால் நடுங்கும் உடலுக்கு புதுத் தெம்பை வரவழைக்கவும் என்று அன்றாடம் உழைக்கும் சிறிய தொகையையும் அல்லது தனது மனைவியின், குழைந்தையின் சங்கிலி, தோடு என்பவற்றை கள்ளுத் தவறணை முதலாளிக்கு அடகு வைத்தாவது அன்றைய மதுவைக்கொண்டு வயிற்றை நிரப்ப தவறாத மனிதர்கள் அவர்கள்.
அவர்கள் அத்துடன் முடித்துக்கொள்வார்கள் என்று நினைத்தால் அது வெறும் மாயை மாத்திரமே. மதுவுக்காக அடகு வைக்க வேறு எதுவும் இல்லாவிட்டால் வெளிநாட்டில் உள்ள மனைவியின் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் அடகு வைத்து குடிப்பவர்கள். முடியாதவிடத்து அடகு வைப்பதற்காக அவர்களிடம் இன்னுமொரு மேலன பொருள் இருக்கின்றது. அதுதான் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் குடியுரிமையாகும். அதிகமான மதுக்கடைகளில் காசாளரின் பெட்கத்தினுள் காணப்படுகின்ற தேசிய அடையாள அட்டை கட்டு இதற்கு சிறந்த ஆதாரமாகும்.
அவர்கள் மதுசாரத்தால் ஓடும் ஒருவகையான இயந்திரங்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் மலையகத்தில் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களாவர். அவர்கள் உதிரம் சிந்துவது உலகம் முழவதும் வாழுகின்ற அறிமுகமில்லாத மனிதர்களுக்கு களைப்பை போக்குவதற்காக மிகவும் சிறந்த தரத்தில் ஒரு கோப்பை தேநீரை வழங்குவதற்காகும்.
ஒரு நாளைக்கு 4 பவுசர்கள் மலையகத்தில் மதுபானம் மிகவும் மோசமான பிரச்சினையாக மாறியிருப்பதோடு மலையகத்தை அண்டிய பிரதேசங்களில் மது வியாபாரமும் ஒரு மாபியாவாக வளர்ச்சிய டைந்துகொண் டிருக்கின்றது.


சிலர் காலை 6.00 மணிக்கே சாரயக் கடையின் கதவைத் தட்டுகின்றனர். சாதாரணமாக ஒரு சாராயக் கடையில் ஒரு நாளைக்கு 400 போத்தல்கள் அளவில் விற்பனையாகின்றன.

அரசாங்க மதுசாலைக் கூட்டுத்தாபனத்தில் புள்ளிவிபரங்களுக்கமைய கடந்த வருடம் முழுவதும் மலையகத்தில் 1 கோடி 50 இலட்சம் லீட்டர்கள் மதுபானம் (சாராயம், பியர், கல்லு) விற்பனையாகியிருக்கின்றது. பொதுவாக நாம் காணும் எரிபொருள் பவுசர் ஒன்றின் கொள்ளளவு 10.000 லீட்டர்கள் ஆகும். அவ்வாறாயின் இந்த புள்ளிவிபரங்களின்படி மலையகம் முழுவதிலும் வருடத்திற்கு 1500 பவுசர்கள் அளவில (ஒரு நாளைக்கு 4 பவுசர்கள்) மதுபானம் இவர்களது கல்லீரலுக்குள் நுழைகின்றது என்பதாகும்.

நுவரெலிய, மஸ்கெலிய, கினிகத் ஹேன, கொத்மலே, உலபனை, நவதிப்பனே, கொடகல, அக்கரபத்தனை, மதுரட்ட, ராகல, பகவன்தலாவ, ஹங்குரன்கெத, போன்ற பிரதேசங்களில் சுமார் 56 வீதமானவர்கள் தோட்டத் தொழிலாளர்களாவர். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 60மூ – 70வீதமானவர்கள் வரை   மதுவுக்கு அடிமையானவர்கள் என்பது மதுபானம் மற்றும் போதைப் பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் அறிக்கைகள் கூறுகின்றன. தேசிய அடிப்படையில் சராசரியாக இந்த தொகை 37வீதம் குடிப்பதற்கா குளிப்பதற்கா?
அண்மைக்காலமாக மலையகத்தில் மதுப் பாவனை உயர்வுக்கு காரணம் கள்ளு (தென்னங்கள்ளு) க்கு அடிமையாகும் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளமையாகும். கடந்த வருடம் மாத்திரம் நுவரெலியாவில் மட்டும் 38 இலட்சம் லீற்றர்கள் (380 பவுசர்கள்) கள்ளு விற்பனையாகியிருக்கின்றது. வடிசாலைக் கூட்டுத்தாபனத்தின் கடந்த வருடத்திற்கான அறிக்கை களின்படி தேயிலைத் தோட்டங்கள் அதிகமாக உள்ள ஹட்டன் பிரதேசத்தில் மாத்திரம் கடந்த வருடம் 25 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர்கள் கள்ளு விற்பனையாகியிருக்கின்றது. பியர் மற்றும் மதுபானம் 62 இலட்சம் லீற்றர்கள் (620 பவுசர்கள்) விற்பனையாகியிருக்கின்றன. அதன்படி தனி நபருக்குரிய நுகர்வு 30 போத்தல்களாகும். நுவரெலியா மாவட்டத்தில் அந்த விகிதம் 21 போத்தல்களாக அமைவதோடு நுவரெலியாவில் வசந்த காலங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்குபற்ற வரும் மக்களது நுகர்வும் இதில் அடங்குகின்றது. ஆனாலும் மத்திய மலைநாட்டின் ஏனைய பிரதேசங்களான கண்டி மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இந்த தொகை வருடத்திற்கு 12 அல்லது 13 போத்தல்களாக கணிப்பிடப்பட்டுள்ளன.
நுவரெலியாவில் சட்டரீதியான மதுபானச் சாலைகள் 202, கண்டியில் 214, மாத்தளையில் 87, என்ற அடிப்படையில் உள்ளன. அதன்படி பார்க்கையில் கண்டியில் 7.000 பேருக்கு ஒரு மதுபானச் சாலை என்ற அடிப்படையிலும் மாத்தளையில் 6.000 பேருக்கு ஒரு மதுபானச்சாலை என்ற அடிப்படையிலும் உள்ளன. நுவரெலியாவில் 4.000 பேருக்கு ஒரு மதுக்கடை என்ற அடிப்படையிலும் ஹட்டனில் அமைந்துள்ள சட்ட ரீதியான 108 மதுக்கடைகளின்படி 2900 பேருக்கு ஒரு மதுக்கடை என்ற அடிப்படையிலும் உள்ளன.
மலையகத்தில் பாய்ந்தோடும்; மது அருவிகள்
நுவரெலியா நகரில் நாம் நடந்து சென்றால் கன்னத்தில் கைகளை வைத்தவாறு குந்திய நிலையில் இறந்த பிணமாக வாழும் தோட்டத் தொழிலாளர்கள் பலரைக் காணலாம். “இந்த குளிரில் இந்த இடத்தில் என்ன செய்கிறீர்கள்” என்று ஒருவரை நெருங்கி மெதுவாகக் கேட்டேன். வெட்கத்தால் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்ட அவருக்காக அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த வேரொருவர் பதில் தந்தார்.
“ கள்ளு லொரி வரும் வரையிலும் காத்திருக்கின்றோம்”
தோட்டத் தொழிலாளர்கள் கள்ளு குடிப்பதற்கு அடிமையாக மாறுவதற்கு பிரதான காரணம் கள்ளு ஏனைய மதுபானத்தை விட விலை குறைவாக இருப்பதனால் ஆகும். சீல் வைத்து வரும் ஒரு போத்தல் கள்ளின் விலை ரூபா 100 ஆகும். ஆனால் வேறு மதுபான வகைகளில் ஏதாவதொன்றின் ¼ போத்தலுக்கு ரூபா 250 – 350 வரையில் செலவு செய்ய வேண்டும். அதனால் கள்ளு அவர்களுக்கு மிகவும் விலை குறைந்த பானமாகும்.
ஓவ்வொரு பகுதிக்கும் கள்ளுத் தவறணை
அம்பகமுவ பிரதேச செயலக பிரிவில் 67 கிராம சேவகர் பிரிவகள் இருப்பதோடு அவற்றுள் 68 மதுபானச் சாலைகள் உள்ளன. மஸ்கெலிய நகரத்தினுள் 08 மதுக்கடைகள் உள்ளன. அந்த சாராயக் கடை ஒன்றில் லொரி சாரதியாக கடந்த இரண்டு வருடங்களாக தொழில் புரியும் ஜீ சுரே~;குமார் என்பவர் மலையகத்தவர்களது மதுப்பாவனை தொடர்பாக பின்வருமாறு கூறுகின்றார்.
“ சாராயக் கடை காலை 9.00 மணிக்குத்தான் திறக்க வேண்டும் என்று இருந்தாலும் மலையகத்தில் சாராயக் கடைகள் அதிகாலையிலே திறக்கப்படுகின்றன. சிலர் காலை 6.00 மணிக்கே சாரயக் கடையின் கதவைத் தட்டுகின்றனர். சாதாரணமாக ஒரு சாராயக் கடையில் ஒரு நாளைக்கு 400 போத்தல்கள் அளவில் விற்பனையாகின்றன. ஒரு வாரத்திற்கு இரண்டு லொரிகளாவது இறக்கப்படுகின்றன. ஒரு லொரியில் 1500 போத்தல்கள் கொண்டுவர ப்படுகின்றன.”
“மூன்று நேரம் சாப்பிடுவது போன்று குடிப்பவர்களும் உள்ளனர். தங்க ஆபரணங்கள், அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் கைத் தொலைபேசிகள் என்பவற்றையும் அடகு வைத்து குடிப்பவர்களும் உள்ளனர். நான் வேலை செய்த சாராயக் கடையில் இருந்து விலகும் போதும் அந்த கடையில் 15 அடையாள அட்டைகள் அளவில் இருந்தன. சிறுவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை. அதனால் சிறியவர்கள் நகரத்தில் உள்ள நாட்டாமைமாருக்கு எவ்ளவாவது கையில் வைத்து சாராயம், கள்ளு என்பவற்றை வாங்குகின்றனர். இந்த தொற்று நோய் எமது மலையக சமூகத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு அழித்து விட்டது. சாராயக் கடைகளில் போத்தல் உடைத்து சில்லரையாக விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தோட்டப்பகுதி பார்களில் அந்த சட்டம் செல்லுபடி யாவதில்லை. தோட்டங்களுக்குள்ளும் சாராய விற்பனை மிகவும் சுறு சுறப்பாக நடைபெ றுகின்றது.

 

වතුකරයේ ජනතාවගේ මත්පැන් ලෝලය, මේ වන විට බරපතළ ඛේදවාචකයක් වී ඇති අතර, වතුකරය ආශ‍්‍රිත මත්පැන් වෙළෙඳාම මාෆියාවක තත්ත්වයට වර්ධනය වී තිබේ.
மதுவிற்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்.

தினமும் மது அருந்தும் ஒரு தொழிலாளியை நான் சந்தித்தேன். அவரின் பெயர் எஸ். சிவா ஆகும்.
“நாங்கள் தோட்டத்தில் வேலை செய்தால் மிகவும் சிறயதொரு தொகையே கிடைக்கின்றது. காலையில் இருந்து மாலை வரையில் கஷ்டப்பட்டு வேலை செய்தால் உடம்புக்கு மிகவும் களைப்பாக இருக்கின்றது. சாராயம் வாங்க பணம் என்று இல்லை. அதனால் கள்ளுத்தான் குடிக்கின்றோம். அதன் மூலம் உடம்புக்கு தெம்பு வருகின்றது”.
கணிதமும் சுகாதாரமும்
2002 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களுக்கமைய இலங்கையில் தென்னங்கள்ளுக்காக பயன்படுத்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கை 84,291 ஆகும். இன்றுவரையில் பார்த்தால் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கலாம் என்று கருத முடிகின்றது. ஆனாலும் இந்தளவு மரங்களிலும் இருந்து கிடைக்கும் தென்னங் கள்ளு சாதாரணமாக பார்த்தால் நுவரெலியாவில் அருந்தும் கள்ளின் அளவை ஈடு செய்யவும் போதுமானதாக இல்லை. உண்மையான நிலை பல்வேறு காரணங்களால் கள்ளு வடிக்கும் எண்ணிக்கை வீழ்ச்சியடைந் திருப்பதாகும். அதன்படி பார்த்தால் இன்று சந்தையில் விற்பனையாகும் கள்ளு உரிய தராதரத்தில் இல்லை என்றே கூற வேண்டும்.
சட்டத்தரணி ஹிலரி பிரசன்ன இது பற்றி கூறியதாவது : –
“ நாம் மிகவும் நல்ல முறையில் அறிந்த விடயம் தான் எந்தவொரு பொருளாயினும் அப்பொருள் உற்பத்தி செய்த திகதி, காலாவதியாகும் திகதி, அதனுள் அடங்கும் சேர்வைகள் இரசாயனப் பதார்த்தங்களின் உள்ளடக்கம் என்பவற்றை அந்த உற்பத்திப் பொருளில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற விடயம். ஆனால் இந்த கள்ளுப் போத்தல்களில் அத்தகைய எந்தவிதமான தகவலும் இல்லாத சட்டவிரோதமான உற்பத்தியாகவே இருந்து வருகின்றது. இத்தகைய உற்பத்தியை பகிரங்கமாக விற்பனை செய்வது எவ்வாறு என்பது முக்கியமான கேள்வியாகும்”
நுவரெலியாவுக்கு வரும் கள்ளு லொரிகளில் அதிகமானவை சிலாபம் மற்றும் நாத்தாண்டிய பகுதிகளில் இருந்தாகும். கள்ளு வடிக்கும் பிரபலமான உற்பத்தியாளர்கள் பலர் இப்பிரதேசங்களில் உள்ளனர். அவர்களுக்கு இயற்கையான கள்ளு வடிப்பதற்கு மட்டுமே அனுமதிப்பத்திரம் வழங்கப் பட்டிருக்கின்றது. இருந்தாலும் அவர்கள் தினசரி உற்பத்தி செய்யும் அளவைப் பார்த்தால் இயற்கையான உற்பத்தி கொண்டு அந்த தொகையை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. கடந்த காலங்களில் பொலீசார் இப்பிரதேசங்களில் அடிக்கடி செய்த சுற்றி வளைப்பு தேடுதல்கள் மூலம் தெரிய வரும் விடயம் இந்த கள்ளு வடிப்பதற்காக அமோனியா, யூரியா, ஈஸ்ட் மன்றும் உடல் நலத்திற்கு கேடு தரும் அல்லது வலிக் குறைப்பு வில்லைகள் என்பவற்றைக் கொண்டே இந்த கள்ளு உற்பத்தி செய்யப்படுகின்றது என்ற தகவலாகும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒருவகையான மருந்து வில்லைகள் இந்த கள்ளு உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்றது என்ற உண்மையும் புதிய தகவலாகும்.
இருந்தபோதும் இந்த பாரியளவிலான உற்பத்தியை தடை செய்ய முடியாதிருப்பதற்கு காரணம் இவர்களுக்கு இருந்து வரும் பெரியளவிலான பண பலமும் அரசியல் செல்வாக்குமாகும். சுற்றிவளைத்து தேடுதல்களின்போது வெளியிடப்பட்டுள்ள கள்ளு ஆய்வு கூட பரிசோதனை களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக பாரியளவில் சந்தேகம் எழுகின்றது. கள்ளு உற்பத்தியில் ஈடபட்டுள்ள ஒரு கோடீஸ்வரர் கதிர்காம பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றை நடத்திச் செல்வதாகவும் இந்தியாவில் இருந்து பூசகர் ஒருவரை வரவழைத்து பூசைகள் நடத்துவதும் கண்டறியப்பட்டிருக்கின்றது.

எவ்வாறாயினும் இந்த மதுப்பாவனைக்கு அடிமையாகி நோய்களால் பாதிப்புக்குள்ளாகும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு கடவுளாலும் நிவாரணம் கிடைப்பதாக இல்லை. நோய் மிகவும் உக்கிரமடைந்து உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறப் போகின்ற போது எல்லாம் முடிந்த கதைதான். மதுப்பாவனை காரணமாக தம்மைத் தாமே கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் உயர்வடைந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக இதுவரையில் முறையான விசாரணைகள் அல்லது ஆய்வொன்று நடத்தப்பட்டில்லை.
தோட்டத் தொழிலாளர்களது மது அருந்தும் நிலை தொடர்பாக நன்கு அறிந்த ஹட்டன் பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவல் குறித்து நான் கதிகலங்கிப் போனேன். “ ஆம். குடிப்பவர்கள் இறந்தால் எம்பாம் பண்ண வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. உயிரோடு இருக்கும் போதே எம்பாம் பண்ணிய நிலைதான்”.
மனிதாபிமானத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் இந்த நிலையை மாற்றியமைக்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்.