Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நித்திரா தேவி கோபங்கொண்ட ஒரு கிராமத்தின் கதை.

  தூங்காத கிராமமொன்று உண்டு….. என்னும் பாடல் ஒரு காலத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இதுவும் தூங்காத ஒரு கிராமம் பற்றிய ஒரு கதைதான். வடமத்திய மாகாணத்தின் கல்பிட்டிக் குடாக்கடல் மற்றும் சமுத்திரக் கரையோரத்திலிருக்கும் வியப்பு மிக்க கிராமம் கற்பிட்டி. அங்கு வாழும் முன்னூறு வரையான குடும்பங்கள் தொழில் ரீதியாக விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் மலைநாட்டு மற்றும் தாழ் பிரதேச மரக்கறி வகைகளைப் பயிர்செய்து உள்ளூர் உணவுகளுக்குச் சுவை சேர்க்கின்றனர். மீன்பிடி மூலம் நாட்;டிற்குத் தேவையான போஷாக்குக் […]

15.10.2016  |  
புத்தளம் மாவட்டம்
மின்வலுவைக் காற்றில் இருந்து உருவாக்கும் பாரிய காற்றாடி

 

தூங்காத கிராமமொன்று உண்டு….. என்னும் பாடல் ஒரு காலத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இதுவும் தூங்காத ஒரு கிராமம் பற்றிய ஒரு கதைதான்.
வடமத்திய மாகாணத்தின் கல்பிட்டிக் குடாக்கடல் மற்றும் சமுத்திரக் கரையோரத்திலிருக்கும் வியப்பு மிக்க கிராமம் கற்பிட்டி. அங்கு வாழும் முன்னூறு வரையான குடும்பங்கள் தொழில் ரீதியாக விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் மலைநாட்டு மற்றும் தாழ் பிரதேச மரக்கறி வகைகளைப் பயிர்செய்து உள்ளூர் உணவுகளுக்குச் சுவை சேர்க்கின்றனர். மீன்பிடி மூலம் நாட்;டிற்குத் தேவையான போஷாக்குக் குறைதீர்க்கும் உணவுகளை வழங்குகின்றனர்.
காலையிற் சூரியோதயந் தொட்டு தோட்டக்காணிகளிலும் சமுத்திரத்திலும் தங்கள் உடல் வலிமையைத் தியாகஞ் செய்யும் இந்தக் கிராம மக்களுக்கு நித்திரை அவர்கள் உடலும் மனமும் ஆறுதலடையக் கடவுள் தந்த அருமருந்து. ஆனால் கோபங்கொண்டுள்ள நித்திரா தேவி இந்த மக்களைத் தேடி வருவதில்லை. ஆகையால் அவர்கள் மன அழுத்தத்துடனும் அச்சத்துடனும் இரவிற் தூக்கமின்றி கண் விழித்திருக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் படிக்க முடியாதுள்ளது. தொலைக் காட்சி பார்ப்பதற்கோ வானொலி கேட்பதற்கோ அல்லது தொலைபேசி அழைப்பிற்கோ இடமில்லை. இவ்வியத்தகு கிராமத்திலுள்ள விருந்தினர் விடுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் விடுதி முகாமையாளர்களைத் திட்டிக் கொண்டு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு வெளியேறுகின்றனர்.
இரவில் மட்டுமல்லாது பகல்வேளகளிலும் நிகழும் ஒரு மர்மம் போன்ற இக்கதையின் விபரங்களை அறிவதற்கு முயன்றோம். ஏனைய மர்மக் கதைகளைப்போல் அல்லாது இக் கதையில் வரும் பிசாசை இரவில் மட்டுமன்றி பகலிலும் காணக்கூடியதாயுள்ளது.
நாங்கள் பார்த்த இடமெங்கும் மலைநாட்டு மற்றும் தாழ்பிரதேச மாக்கறித் தோட்டங்கள் தெரிந்தன. அவைகளில் வெண்காயம் மிளகாய் மற்றும் புகையிலை பயிர்செய்யப்பட்டிருந்தன. அவைகளுடன் கருவாட்டிற்காக மீன்கள் உலரச் செய்யும் காட்சிகளும் தெரிந்தன. இலங்கையின் மீன் மற்றும்; மரக்கறிச் சன்தைகளுக்கு இந்த மக்கள்; ஆரவாரமின்றிச் செய்யும் பங்களிப்பைக் கண்டுகொண்டு நாங்கள் மேலே சென்றோம்.
பிசாசு இங்கே உள்ளது
அந்தக் கிராமத்திற்குள் நாங்கள் பிரவேசித்ததும் புயற் காற்றைப்போன்ற பெரிய சத்தத்தைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சிக்குள்ளானோம். அதே நேரம் எங்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்த நெல்லி திசேராவையும் கண்டோம். நாற்பத்தைந்து வயதுடைய அவர் மூன்று பிள்ளைகளின் தாய். அவருடைய கணவன் இல்லாதபடியால் தோட்டக் காணிகளில் வேலை செய்து தனது பிள்ளைகளைப் பராமரித்தது வருகிறார்.
“இதுதான் அந்தப் பிசாசு”.என்று அவர் எங்களுக்கு காட்டிய போது, பலமான சப்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமாண்டமான காற்றாடிகளை நோக்கி அவரது கைநீண்டது. ஒரு கணம் நாங்கள் குழப்பமடைந்தோம். அங்கே நிறுவப்பட்டிருந்த பெருங் காற்றாலை அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது.

காற்றாலை அமைந்திருக்கும் இடம்.
காற்றாலை அமைந்திருக்கும் இடம்.

“இப்பொழுது கடலலைகள் ஏறி இறங்கிக் காணப்படும் காலம் ஆதலால் பெரிய சத்தம் ஏற்படுகிறது. இக் கிராமத்தின் மத்தியில் பன்னிரெண்டு காற்றாடிக் கம்பங்கள் உள்ளன. இக் கிராமத்தில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆறு வருடங்களாக நாம் இந்தச் சத்தத்துடன்தான் வாழ்கிறோம். எவ்வாறு சகித்துக்கொள்ள முடியும்.?”
இது சுழல ஆரம்பிக்கும் வரை இதைப் பற்றித் அவர்களுக்குத் தெரியவில்லை.
இலங்கை மின்சார சபையின் இல: DGM(EPT)/WPP/2430 கோப்புகளின்படி இது கல்பிட்டி காற்று மின்சார உற்பத்தித் திட்டம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டம் 9.8 மெகா வாற் மின்சாரம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையான மின் உற்பத்தித் திட்டங்களுக்கு இலங்கை நிலைபெறுதகு மின்வலு அதிகார சபை அங்கீகாரம் வழங்குகிறது. இந்த அதிகாரசபையின் இணையத் தளத்தின்படி மின்சாரம் உற்பத்திசெய்யும் காற்றாலை யந்திரங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடமெனக் கல்பிட்டி குடாப்பகுதி இனங் காணப்பட்டுள்ளது.
இக் கம்பங்களை நிறுவும்போது கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லையா? என அவர்களிடம் கேள்வியெழுப்பியபோது,
“இந்த மாதிரியான கம்பங்களை எனது வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. விசிறிகள் சுழலத் தொடங்கும் வரையில் இக்கிராமத்திலிருக்கும் எவருக்கும் இவ்வளவு பெரிய சப்தம் ஏற்படுமென்று தெரியவில்லை. நாங்கள் இதனை அறிந்திருந்தால் இப்படியான ஒன்றை நாட்டுவதற்கு அனுமதித்திருப்போமா?” என்று நெல்லி திசேரா எம்மிடமே கேட்டார்.
பகல் பொழுதில் கடுமையாகப் பாடுபட்டதன் பின்னர் வனவிலங்குகள்கூட இரவில் அமைதி யாகத் தூங்கவேண்டும். இந்தச் சத்தம் காரணமாக எங்களால் தூங்க முடியாதுள்ளது. இருந்தாற்போல குண்டுகள் வீசப்பட்டதுபோன்ற பெரும் ஓசை கேட்கிறது. ஒரு கொஞ்ச நேரம் நாங்கள் கண் அயர்ந்தாலும் திடுக்கிட்டு விழிப்படைகிறேம். எங்கள் வீட்டுக் கூரைமேல் இந்த விசிறி விழுந்துவிடுமோ என்ற பீதியில் இருக்கிறோம். இறைவனை மன்றாடிப் பிரார்த்தனை செய்த பின்னும் எங்களாள் தூங்க முடியவில்லை. மறு நாள் நாங்கள் வேலைக்குச் செல்லும் பொழுது தூங்கி விடுகிறோம்” என்று தமது பிரச்சினையை முன் வைத்தார் திசேரா.
று.நிலாந்தி தனது மகள் உயர் தரம் சோதனைக்குப் படிக்க முடியாது கடும் மனஅழுத்திற்கு ஆளானாள் எனச் சொன்னார். “அவளை உயர் தரம் மட்டும் கொண்டுவருவதற்காக நாங்கள் மிகவும் பாடுபட்டோம். இறுதியில் அநியாயம்பிடிச்ச இந்த மின்சாரக் கம்பங்களினால் அவளால் முறையாகப் படிக்கமுடியவில்லை.
வு.சுபத்ரா பிரியதர்சினி பேர்னான்டோ (33 வயது) “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தச் சப்தம் குழந்தைமீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைத்தியர் சொன்னார்.” ஏன வேதனைப்பட்டார். அத்துடன் அவரின் மகள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை க்கு தோற்றியதாகவும், இந்தச் சத்தம் அவளுடைய கல்விக்கு பெரும் இடைஞ்சலாக இருப்பதாகவும் அவள் சொன்னாள்.
சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை.
காற்றாலைகளால் உண்டாகும் பெரிய சப்தம் சுற்றுலாத் துறை மீது மரண அடியொன்றைக் கொடுத்து விட்டதென்று கற்பிட்டி சுற்றுலா விடுதி உரிமையாளர் சங்கத் தலைவர் று.கீர்த்தி சம்பத் பீரிஸ் கூறுகிறார்.
“இந்த சத்தத்தினால் இலந்தான்டியா கிராமத்திலுள்ள சுற்றுலா விடுதிகள் பல மிகக் கடுமை யாகப் பாதிக்கப் பட்டுள்ளன. பல விடுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. அப்படி வந்தாலும் அவர்கள் ஒரு நாளையிலே திரும்பிச் சென்றுவிடுகிறாhகள்.” என்கிறார் கீர்த்தி.
இந்தக் கட்டுமான வேலைகள் செய்யபப்ட்ட பொழுது கிராமத்தவர்களுக்கோ அல்லது பொது மக்கள் பிரதிநிதிகளுக்குகோ தெரி;விக்கப்பட வில்லை. இப்படியான ஒரு திட்டத்தைக் கட்டி முடித்த பின்னர் ஏற்படக்கூய சூழல் அல்லது சமூகப் பிரச்சனைகள் பற்றிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்i. பின் விளைவுகளுக்கு மக்கள் தான் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. கல்பிட்டி பிரதேச சபை செயலரிலிருந்து பிரதம மந்திரி வரை எல்லோருக்கும் இது பற்றி முறைப்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக இந்தக் கம்பங்ளை இந்த இடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்ற ணே;டுமென்ற கோரிக்கையை அந்த முறைப்பாட்டில் முன்வைத்தாக அவர்கள் கூறினர்.
அதிகாரிகளின்  வௌிப்பாடு.
இது பற்றி அதிகாரிகளிடம் வினாவியபோது, இந்தப் பிரச்சனைபற்றி சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தனக்குத் தெரிவித்ததாகவும் தாங்கள் இப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்;பதற்கு முயற்சிப்பதாகவும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் ரு.ரத்நாயக்கா கூறினார்.
கல்பிட்டி பிரதேச செயலாளர் .ஆ.சுனந்த பிரசன்னா ஹெரத்திடம் இது பற்றிக் கேட்டபோது நிலையான மின்வலு அதிகார சபைக்கு இதை அறிவித்ததாகவும் இந்;த விடயம் பற்றி அவர்கள் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இலங்கை நிலைபெறுதகு மின்வலு அதிகார சபை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விமல் நதேராவிடம் கேட்டோம். தனது நிறுவனம் தொடக்க இடத்தை இனங்கண்டு பூர்வாங்க அங்கீகாரம் வழங்குவதற்காக சிக்கல் நிறைந்த செயல்முறைகளை நடாத்துகிறது. இந்தத் திட்டத்திற்கு £ழல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்தாகவும் சொன்னார்.
அதிகாரிகள் சொல்வது போல எல்லா விடயங்களும் செவ்வனே செய்யப்பட்டிருந்தால் இலந்தான்டிய மக்கள் நித்திரையில்லாது இருப்பதற்கான காரணம் வேறொன்று இருக்கமாட்டாதே. இதிற் கசப்பான உண்மையாதெனில் இலந்தாண்டிய கிராமமக்கள் தூக்கமின்றிப் பல வருடங்களாக க~;டப்படும் பொழுது இந்தக் காற்றாலைகளைத் திட்டமிட்டு அங்கீகாரம் வழங்கிய அதிகாரிகள் இடையூறு எதுவுமின்றி நிம்மதியாகத் தூங்குகின்றனர்.
அங்கே எந்தவிதமான பிரச்சனையும்; இல்லையென்று சொல்லும் அதிகாரிகளுக்கு இலந்தான்டிய கிராம மக்கள் ஒரு சவாலாக மட்டுமே உள்ளனர்.
“கனவான்களே முடியுமானால் ஒரு இரவு இலன்தான்டியவில் தங்கிப்பாருங்கள்.”