Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

-ஐ. நா சிறு­பான்மை விவ­கா­ரங்கள் தொடர்பான விசேட அறிக்­கை­­யாளர் -
“மொழி ரீதி­யான இடைவெளி பாரிய பிரச்­சி­னை­யாகவுள்ளது.”

வடக்கு, கிழக்கில் நான் சந்தித்த தமிழ் பேசும் மக்கள் தாம் அரச நிறுவனங்களில் விசேடமாக பொலிஸ், மற்றும் வைத்தியசாலைகளில் தமிழ் மொழி பயன்பாடு இன்மை காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னிடம் விளக்கிக் கூறினர்.

31.10.2016  |  
கொழும்பு மாவட்டம்
In Sri Lanka: Rita Izsák-Ndiaye’s, the Special Rapporteur on minority issues at the office of the United Nations Human Rights Commissioner.

ரீட்டா ஐசாக் நதேயா ஐக்­கிய நாடுகள் சபையின் சிறு­பான்மை விவ­கா­ரங்கள் தொடர்பான விசேட அறிக்­கை­­யாளர் ஆவார். இவர் கடந்த 10.10.2016 முதல் 20.10.20116 வரை இலங்­கையில் தங்­கி­யி­ருந்து  பல்­வேறு தரப்­பு­க­ளையும் சந்தித்து பேச்­சு­வார்­த்தை நடத்­தி­னார்.

குறிப்­பா­க 30 அரச  நிறுவனங்களின் பிரதிநிதிகள், 9 அமைச்சர்கள்   ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் சிவில் சமூக பிரதிநிதிகள் , சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிறுபான்மை  மக்களின் உரிமைகள் தொடர்பாக செயற்படும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டடோரையும் சந்­தித்­தார்.

இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள்,  முஸ்லிம்கள்,  இந்துக்கள்,  கிறிஸ்தவர்கள், தெலுங்கர்கள், வேடுவர்கள்,  பறங்கியர்கள், மலே இனத்தவர் மற்றும் இலங்கை ஆபிரிக்கர்கள்,  ஆகியோர்களின்  பிரதிநிதிகளும்  சிங்கள  பௌத்த தலைவர்களும் இவ­ரைச் சந்­தித்­தோரில் அடங்­­கு­வர்.

அவர் தனது விஜ­யத்தின் இறு­தியில்  கடந்த  மாதம் (ஒக்டோபர்) 20 ஆம்  திகதி அன்று  கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு ஒன்றை நடாத்­தினார். இதன்­போது  நாம் எழுப்பிய  கேள்­வி­களுக்கு அவர் அளித்த பதில்கள்

 

கேள்வி  இலங்கையில் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பிற்­பாடு நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் முன்­னேற்­றங்கள் ஏற்பட்­டுள்­ள­தாக கரு­து­கி­றீர்­க­ளாை?

பதில்  பாரிய அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய நீண்ட கால சிவில் யுத்­தத்தின் பின்னர் சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான முழு­மை­யான நன்கு திட்­ட­மி­டப்­பட்ட பொறுப்புக் கூறும் முறைமை ஒன்று தாபிக்­கப்­பட வேண்டும். ஆனால் இது ஒரே இரவில் சாத்­தி­ய­மாகக் கூடி­ய­தல்ல என்­பதே எனது அவ­தா­ன­மா­கும்.

2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம்  அனைத்து சமூக மக்களின் ஆதரவைப் பெற்றதுடன் நல்லிணக்கம் தொடர்பான   எதிர்பார்ப்பையும்  கொண்டுவந்தது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்   ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட  இலங்கை தொடர்பான பிரேரணைக்கு  இலங்கையும்  இணை அனுசரணை வழங்கியது.  இதன்போது  மீள் நிகழாமையை உறுதிப்படுத்த   உண்மையைக் கண்டறியும் உரிமை,    நீதி வழங்குதல், மற்றும் நட்டஈடு ஆகிய அம்சங்களைக் கொண்ட திட்டத்திற்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. அதன்படி நல்லிணக்கத்திற்கான அலுவலகம்   உருவாக்கப்பட்டது.   அந்த அலுவலகமானது  நல்­லி­ணக்க பொறிமுறை தொடர்பில் சமூகங்களின் கருத்துக்களை   ஆராய்ந்து வந்துள்ளது.   எனினும்  அரசாங்கமானது தற்போதைய மறுசீரமைப்பு  செயற்பாட்டில் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினதும்    குரல்களை   உள்­ளீர்­க்க வேண்டும்.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான மக்கள் கருத்தறியம் குழு மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் குழு என்பன ஆயிரக்கணக்கான மக்களின் யோசனைகளை  பெற்றுக்கொண்டுள்ளன.  இது மக்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்­கப்­பால், மனித உரி­மைகள் மற்றும் சிறுபான்­மை­யி­ன­ரின் உரி­மை­களை பாது­காப்­பதற்கான விசே­ட­மா­ன சட்­டங்­க­ளையும் கொள்­கை­க­ளையும் இயற்­றி­ய­மைக்­காக அர­சாங்கத்­திற்கு எனது பாராட்­டுக்­களை தெரி­விக்­கி­றேன்.

கேள்வி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் இலங்கை எதிர்­நோக்கும் பிரதான சவால்­க­ளாக எவற்றை அடை­யா­ளப்­ப­டுத்­­து­வீர்­கள்?

பதில் அரச நிறு­வ­ன­ங்­­க­ளிலும் பல்­வே­று­பட்ட இனப் பிரி­வு­க­ளி­டை­யேயும் மேலும் நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும்.  அது­மாத்­திரமன்றி அர­சாங்­கத்தின் சகல முன்­னெ­டுப்­பு­க­ளிலும் தீர்­மா­ன­­மெ­டுக்கும் செயற்­பாட்­டிலும் சிறு­பான்­மை­யி­ன­ரு­க்கு போதிய இட­ம­ளிக்கப்­பட வேண்டும்.  அரச மற்றும் மாகாண நிர்­வா­கத்­திலும் அவர்­க­ளுக்கு பங்­க­ளிக்­கப்­பட வேண்­டும்.

என்னைச் சந்­தித்த சிறு­பான்­மை­யின குழுக்­களின் பிர­தி­நி­திகள் பலரும் மேற்­சொன்ன விட­யங்­க­ளையே வலி­யு­றுத்­தி­னார்கள். மேலும் மொழி ரீதி­யான இடைவெளி பாரிய பிரச்­சி­னை­யாக நோக்கப்­ப­டு­கி­ற­து. பெரும்­பா­லான அரச நிறு­வ­னங்­களில் சிங்­கள மொழியே ஆதிக்கம் செலுத்­து­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இந் நிலை மாற்­றப்­பட வேண்­டும்.

கேள்வி  சிறு­பான்­மை­யின பெண்­கள் அமைப்­புகள் உங்­களைச் சந்­தித்­த­தாக குறிப்­பிட்­­டீர்கள். இலங்­கையில் பெண்­களின் சுதந்திரம் மற்றும் உரி­மைகள் சர்­வ­தேச நிய­தி­க­ளுக்­­கேற்ப உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா?

பதில் சிறுபான்மையினங்களைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு சவால்களை  எதிர்கொண்டு வருகின்றனர்.  தீர்மானம் எடுக்கும்  செயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்றது. பாலின வன்முறைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

வடக்கு, மற்றும் கிழக்கில் தமிழ் பெண்கள், யுத்தம்  மற்றும் மோதல்களின் வடுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். விதவைகள்,  காணாமல்போனோரின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் என பலர் கஷ்டப்படுகின்றனர்.  பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட  குடும்பங்கள் அதிகமாக உள்ளன.

முஸ்லிம்  பெண்களும்   சமூக ரீதி­யா­க  சவால்களை எதிர்கொள்கின்றனர்.   குறிப்பாக  திருமணம், மற்றும் விவாகரத்தின் போது 1951 ஆம் ஆண்டு முஸ்லிம்  திருமண, மற்றும் விவாகரத்தின் சட்டமூலமே பிரயோ­கிக்­கப்­ப­டு­கி­ற­து.   இந்த சட்டமூலமானது  16வயதுக்குக் குறைந்த  குழந்தைகள்  திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கிறது.  இது தொடர்பில்  ஆராய்வதற்கு  ஏழு வருடங்களுக்கு  முன்னர் அமைக்கப்பட்ட குழு  இன்னும்  தனது அறிக்கையை கொடுக்கவில்லை எனச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. ”


 1951 ஆம் ஆண்டு  முஸ்லிம்   திருமணம் மற்றும் விகாரத்து சட்டமூலம்  சர்வதேச மனித உரிமை தரங்களுக்கமைய  முஸ்லிம்  சமூகத்தி­ன­தும்  முஸ்லிம் பெண்களின்  ஆலோசனையுடனும் மீளாய்வு செய்யப்படவேண்டும்.

கேள்வி  நாட்­டில் நீடிக்கும் மொழிப் பிரச்­சினை தொடர்­பான உங்கள் அவ­தா­னங்கள் எவை

பதில் அரசியலமைப்பின் பிரகாரம்  இலங்கையின் தேசிய மொழிகளாக  சிங்களம், மற்றும் தமிழ் மொழி காணப்படுவதுடன் ஆங்கிலமானது   இணைப்பு மொழியாக காணப்படுகின்றது.   கடந்த மற்றும்  தற்போதைய அரசாங்கம் என்­ப­ன பல்மொழி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருந்தன.

தேசிய மொழி சட்டம் மற்றும் தேசிய  மும்மொழிக் கொள்கை என்பன   சிங்களம், மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளுக்கு சம  ஊக்குவிப்பை  வழங்குகின்றன.  இரண்டாவது மொழியாக சிங்களம், அல்லது  தமிழ் மொழியை கற்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதாவது பாடசாலையில் ஒன்பதாவது ஆண்டு வரை இவ்வாறு கற்கவேண்டுமென வலி­­யு­றுத்­தப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி அரச ஊழியர்களும் இரண்டாம் மொழியைக் கற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் யதார்த்தத்தில் மொழிக்கு வழங்கப்படும்  மதிப்பில் பாரிய  சவால்கள் காணப்படுகின்றன.

வடக்கு, கிழக்கில்  நான் சந்தித்த  தமிழ் பேசும்  மக்கள் தாம்  அரச நிறுவனங்களில் விசேடமாக பொலிஸ், மற்றும் வைத்தியசாலைகளில் தமிழ் மொழி பயன்பாடு இன்மை காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை  என்னிடம்  விளக்கிக் கூறினர்.

நாட்டில் செயற்படும்   அதிகளவான அரச நிறுவனங்கள்,  சிங்கள மொழியையே  எழுத்து மற்றும்  வாய்மூல மொழியாக  பயன்படுத்துவதாக   எனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ர­ப்­பட்­ட­து.

இந்த மொழி விடயத்தில் காணப்படும்  இடைவெளியானது தமிழ் பேசும் மக்களை பாரிய அதிருப்திக்கு கொண்டு செல்கிறது.  தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில்   செயற்படும்  சட்டத்தை  அமுல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள்   தமிழ் மொழி தெரியாதவர்களாக இருக்கின்றனர்.   இது அன்றாட  பிரச்சினைகளை உருவாக்குவது மட்டுமன்றி   பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை  சமூகங்களுக்கிடையிலான இடைவெளியை   மேலும்  ஏற்படுத்துகிறது.

அதுமாத்­தி­ரமன்றி சிறுபான்மை மக்கள் தமது மொழி  அழிந்து விடுமோ  என்ற அச்சத்தையும் கொண்டுள்ளனர். குறிப்பாக  மலே, வேடுவர், தெலுங்கு, மற்றும்   இலங்கை  ஆபிரிக்கர்கள் தமது  தாய்மொழி   பாட­சா­லை­களில் கற்பிக்கப்படவேண்டுமென  தெரிவிக்கின்றனர்.  தமது மொழி முழுமையாக அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள்   இருக்கின்றனர்.

கேள்வி    அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதத்துக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வது ஏனைய சிறு­பான்மை மதங்­களை கவ­லைக்­குள்­ளாக்­கி­யுள்­ள­தே.

பதில்  அரசியலமைப்பில் பௌத்தத்திற்கான  முதன்மை இடத்தை தொடர்ந்து பேணுவதானது   மேலும்  சிறுபான்மை  மக்களுக்கு எதிரான  அநீதிகளுக்கும்,  அடக்கு முறைமைகளுக்கும் வழிவகுக்கும் என  மக்கள்  அச்சமடைகின்றனர்.

இலங்கையில் 70.1 வீதமானவர்கள் பௌத்தர்கள்,  அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தின்படி  இலங்கை  குடியரசானது   பௌத்தத்திற்கு  முன்னுரிமை  வழங்குகிறது.  அரசாங்கம்  பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கவேண்டும். அதேநேரம் ஏனைய மதங்களின் உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

பல பிரதேசங்களில்   மதங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வு  காணப்படுகிறது.  எந்தப் பிரச்சினையுமின்றி  கோவில்கள்,  விகாரைகள்,  பள்ளிவாசல்கள் அமைக்கப்படுகின்றன.  ஜனாதிபதியின் கீழ்  சர்வ மதப் பேரவை அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன்.

எனினும்  பெரும்பான்மை மத  குழுக்களினால்  சவால்கள்  இன்னும்  காணப்படுகின்றன.  கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் புதிய மதஸ்தலங்களை கட்டியெழுப்புவதும் மயானங்களைப் பெறுவதிலும்   கஷ்டங்கள் இருப்பதாக எனக்குக் கூறப்பட்டது.

சில நேரங்களில் அரசியலமைப்பில்  9 ஆவது சரத்தானது  இவ்வாறான செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதாக தெரிகிறது.


பாரம்பரிய ரீதியில்   பௌத்தர்கள்  வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது   பகைமைக்கு   வித்திடுகிறது.  பல வருடங்களாக   பொதுபல சேனா போன்ற பௌத்த  கடும்போக்குவாத அமைப்புக்கள்   நடத்தும் தாக்குதல் தொடர்பில் எனது அவ­தா­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டது.

விசேடமாக  2011 ஆம் ஆண்டிலிருந்து 2014  ஆம் ஆண்டு வரை வன்முறைகள், மற்றும்   வெறுப்பு உரைகள்,  சிறுபான்மையினரை நோக்கி, இடம்பெறுவதை   காணமுடிகிறது.  குறிப்பாக    சிறுபான்மை மதஸ்தலங்கள்  வர்த்தக நிலையங்கள்,  மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.   அமைதியையும் சமாதானத்தையும்,  கட்டியெழுப்ப முயற்சிக்கப்படும் ஒரு நாட்டில்   இவ்வாறான செயற்பாடுகளுக்கு   அனுமதி இருக்கக்கூடாது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில்   ஒன்பதாவது சரத்தில்  மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராயப்படவேண்டியது அவசியமாகும்.   எது நடந்தாலும் சிறுபான்மை   மதங்களின்  பாதுகாப்பும் ஊக்குவிப்பும்,  உறுதிப்படுத்தப்பட வேண்டியது   அவசியமாகும்.

கேள்வி முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் பற்றி பல அமைப்­புகள் உங்­க­ளைச் சந்­தித்து முறை­யிட்­டன. இவற்றில் பிர­தான பிரச்­சி­னை­க­ளா­க எவற்றை அடை­யாளம் கண்­டீர்­கள்?

பதில் முஸ்லிம் சிறு­பான்மை சமூகம் எதிர்­நோக்­­கு­கின்ற பல்­வேறு பிரச்­சி­­னைகள் தொடர்பில் எமது சந்­திப்­பு­களில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. இவற்­றில் காணிப் பிரச்­சி­னை­கள், இடப்­பெ­யர்­வு மற்றும் மீள்­கு­டி­யேற்­றம் என்­பன பிர­தா­னமான­வை­யா­கும்.

அத்­துடன் வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­­யர்ந்த முஸ்­லிம்கள் மற்றும் அவர்­க­ளுக்கு புக­லிடம் அளித்த மக்­களின் பிரச்­சினைகள் குறித்­தும் எனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

எனினும் அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான முன்­னெ­டுப்­பு­களில் முஸ்­லிம்­களின் விவ­காரம் உள்­ள­டங்­கப்ப­ட­வில்லை எனும் கவ­லையை பலரும் என்­னிடம் வெளிப்­ப­டுத்­தி­னார்கள்.  குறிப்­பாக போரினால் தமது சமூ­க­மும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளதாக முஸ்­லிம்கள் கவ­லைப்­ப­டு­கின்­ற­னர்.

1990 இல் சுமார் 30000 இற்கும் மேற்­­பட்ட குடும்­பங்கள் வடக்­கு கிழக்­கி­லி­ருந்து வெளியே­­றி­ய­தா­கவும் அவர்­களில் 20 வீத­மானோர் மாத்­தி­ரமே இது­வரை தமது சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ள­தாகவும் எனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது மிகப் பெரிய எண்ணிக்­கை­யாகும்.

முக்­கி­ய­மான பல்­வேறு விட­யங்­களில் முஸ்­லிம்­களின் நலன்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்­லை என்­பதை இது எடு­த்துக் காட்­டு­கி­றது.  எனவே  முஸ்­லிம்கள் தனித்­து­வம்­வாய்ந்­த­வர்­க­ளாக கரு­தப்­பட்டு  அரசாங்­­கத்தின் சகல முன்­னெ­டுப்­பு­க­ளிலும்  கண்­டிப்­பாக உள்­வாங்­கப்­பட வேண்­டியது அவ­சி­ய­மா­கும். முஸ்­லிம்களின் பிரச்­சி­னைகள் தனித்­து­வ­மான கவ­னத்தை வேண்டி நிற்­கின்­ற­ன.

முஸ்­லிம்­க­ளுக்கும் தமிழ் மற்­றும் சிங்க­ள­வர்­க­ளு­க்கு­மி­டை­யி­லா­ன உறவு தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ள­து. அத்­துடன் மத சுதந்­திரமும் மிக முக்­கி­ய­மான விட­யமாகும். பள்­ளி­­வா­சல்கள் மீதான பல தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன.

மேலும் இஸ்லாம் பற்­றி பிற மதத்­த­வரின் புரி­தல்க­ளில்  குறை­பா­டு­க­ள் உள்­ள­தாக முஸ்­லிம்கள் கவ­லைப்­ப­டு­கின்­றனர்.  ஏனெனில் பாட­சா­லைக் கல்­வியில் இஸ்லாம் தொடர்பில் பிற மதத்­த­வர்­க­ளுக்­குப் போது­மா­ன­ளவு போதிக்­கப்­ப­டு­வ­தில்லை.  இஸ்லாம் என்ற பதம் தவ­றாக விளங்­கப்­பட்­டுள்­ளது. இது ஏதோ ஒரு புள்­ளியில் தமக்கு பாத­­க­மாக அமை­ய­லாம் என முஸ்­லிம்கள் கவ­லைப்­­ப­டு­கின்­றனர்.

எனவே இலங்­கை அர­சாங்கம் முஸ்­லிம்­ சமூகத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்­ப­துடன் அதற்­கான பொருத்­த­மா­னதும் விசே­ட­மா­ன­து­மான பொறி­முறை ஒன்றை உரு­வாக்க முன்­வர வேண்டும்.