Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்.
மூழ்கடிக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை நஷ்டஈடு இல்லை.

  இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேறும் தறுவாயை நெருங்கும் பொழுது நீரில் மூழ்கடிக்கப்பட்ட தங்கள் காணிகளுக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லையென அவ்விடத்து மக்கள் கூறுகின்றனர். அவர்கள் இழப்பீடாகப் பெறக்கூடியதிலும் பார்க்க வாழைத்தோட்டம் பயிரிடும் நிறுவனம் ஒன்று கூடுதலான அனுகூலத்தைப் பெறவுள்ளது என தெரியவருகிறது. ஒரு நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து அதன்மூலம் அண்மையிலுள்ள பகுதிகளில் நிலவும் நீர்ப்பாசனப் பிரச்சனையைத் தீர்ப்பது சம்பந்தமாக ‘யான் ஓயா’ திட்டம் பல காரணங்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டது. இலங்கையின் மிகப் பெரியது என  […]

05.11.2016  |  
திருகோணமலை மாவட்டம்
யான் ஓயா நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கிய பம்புரகஸ்வேவா விற்கு மகா சொறோவா குளத்திலிருந்து தண்ணீர் வழங்கப்படும் வழி

 

இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேறும் தறுவாயை நெருங்கும் பொழுது நீரில் மூழ்கடிக்கப்பட்ட தங்கள் காணிகளுக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லையென அவ்விடத்து மக்கள் கூறுகின்றனர். அவர்கள் இழப்பீடாகப் பெறக்கூடியதிலும் பார்க்க வாழைத்தோட்டம் பயிரிடும் நிறுவனம் ஒன்று கூடுதலான அனுகூலத்தைப் பெறவுள்ளது என தெரியவருகிறது.

ஒரு நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து அதன்மூலம் அண்மையிலுள்ள பகுதிகளில் நிலவும் நீர்ப்பாசனப் பிரச்சனையைத் தீர்ப்பது சம்பந்தமாக ‘யான் ஓயா’ திட்டம் பல காரணங்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டது. இலங்கையின் மிகப் பெரியது என  2012ல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் பயனுள்ள தன்மை தொடர்பில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் உள்ளதென அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

2012

யான் ஓயா திட்டம் அவசியமற்றது எனவும் சூழலுக்குக் கேடானது எனவும் சூழல் பாதுகாப்புச் செயற்பாட்டாளர்கள் குறை கூறியுள்ளனர்.  ஒரு அணை கட்டவதற்காக நிலங்களை வெள்ளக் காடாக்க வேண்டியுள்ளது. அத்துடன்  650 ஹெக்டேயர் நெல் வயல்களை விருத்தி செய்வதற்கான மொத்த இழப்பு 1727.16 ஹெக்டேயர் வயல் நிலங்கள் வரை இருக்குமென சன்டே லீடர் பத்திரிகை இதற்கு முன்னர் 2013அளவிற் குறிப்பிட்டுள்ளது. அந்தப் பத்திரிகை சுட்டிக் காட்டியவாறு இது அர்த்தமற்ற ஓன்று. http:/www.the sunday leader/2013/06/30/yan-oya-reservoir-another-waste-of-public-funds/.

இத்திட்டத்திற்காக திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து கிராமங்களிலுள்ள 300 இற்குச் சற்றுக் குறைவான குடும்பங்களை வேறிடத்திற்கு நகர்த்த வேண்டியதுடன் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களையயும்  நிலங்களையும் இழக்கவும் வேண்டியுள்ளது. இதே அளவானோர் அனுராதபுர மாவட்டத்திலிருந்தும் வேறிடம் நகர வேண்டியிருக்கும்.

யான் ஓயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு வேலைகளை படத்தில் காணலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் 15 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள கஜுவத்தைப் பகுதிக்கு அவர்கள் இடம் மாற வேண்டுமெனவும் அதிகாரிகள் அவ்விடத்து மக்களுக்குக் கூறியுள்ளனர். புதிய இடத்திற்கு நகருவது தொடர்பில் உண்மையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதற்கு அப்பால் இக் கிராமவாசிகளிடம் பிறிதொரு கேள்வியுமுள்ளது.


நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் காணியிருக்கும் பொழுது , வெகு தூரத்திலிருக்கும் ஒர் இடத்திற்குத் தாங்கள் ஏன் நகர்த்தப்பட வேண்டும்? மக்கள் குரல் எழுப்புகின்றனர்.

இதற்குப் பதிலாக நீர்த்தேக்கத்திற்கு அருகாமையிலிருக்கும் இடத்திற்குத்  தங்களை மாற்றுமாறு கிராம மக்கள் கோரியுள்ளனர். ஆனால் அவர்களை அங்கே நகர்த்துவதனால் காடுகள் அழிவடையும் என்று அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பம்புரகஸ்வேவா பகுதியில் வசிக்கும் யான் ஓயா திட்ட கையகப்படுத்தலில் தனது வீட்டையும் நெல் வயலையும் இழந்த லால் குணத்திலக.

“எங்களுக்குத் தெரிந்த    வரையில் நீர்த்தேக்க கரையில் நாங்கள் கேட்கும் காணியிலும் பார்க்க கஜூவத்தை யில் அடர்ந்த காடு உள்ளது. எங்களை இவ்வாறு காட்டிற்குள் தள்ளி விடும் முயற்சியை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். இந்த நீர்த்தேக்க கரையிலிருக்கும்  நிலத்தில் வாழைகைள் பயிரிட விரும்பும் ஒரு இந்திய கம்பனிக்குக் கொடுக்கப்பட உள்ளதாக ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டோம். அவ்வாறு நடைபெறுமாயின் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவோம்.”என லால் உறுதிபட கூறுகிறார்.

வேறிடம் செல்ல வேண்டியவை எனச் சொல்லப்படும் குடும்பங்களுக்கு அரசாங்க உதவியும் அவர்களின் இழப்புகளுக்கு நஷ்டஈடும்  வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் பலருக்கு இது இன்னமும்  கைகூடவில்லை.http://www.news.lk/news/business/item/9996-yan-oya-reservoir-construction-compensation-for-land-owners-soon.

“பம்புரகஸ்வேவா பகுதியில் 189 குடும்பங்கள் தங்கள் காணிகளை இழக்க நேரிடும்”  என்று கோமாரங்கடவெல நகரசபை முன்னாள் உறுப்பினர் சரத்லால் வித்தான கூறியதுடன் “2017 இன் நடுப்பகுதியில் இத்திட்டம் பூர்த்தியடைய வேண்டுமென அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் இவை எமது பாட்டன்கள் குடியேறிய பரம்பரையான நிலங்கள். எங்களுக்கு என்ன நடக்கப்போகிறதென்பது இதுவரையில் எங்களுக்குப் புரியாதுள்ளது.”

சில குடும்பங்களின் காணிகள் ஏற்கெனவே நீரில் மூழ்கிவிட்டன. அவர்கள் தற்காலிக வதிவிடங்களைத் தேடிக்கொண்டனர்.

“ இதனால் நாங்கள் உட்பட ஒன்பது குடும்பங்கள் நிலங்களை இழந்தன.  இப்பொழுது நாங்கள் மற்றவர்களின் வீடுகளில் வசிக்க வேண்டியுள்ளது.


ஒவ்வொரு மாதமும் 15000 ரூபா தரப்படும் என யான் ஓயா திட்டம் உறுதியளித்தது. ஆனால் இதுவரை ஒரு சதத்தைக்கூடக் காணவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.”

என்கிறார் மகாசொரோவா கிராமத்து சுஜாதா அரன்பொல.

வெள்ளக் காடாக்கப்பட்ட தங்கள் சொத்துகளுக்கு நஷ்டஈடாக வழங்கப்படவுள்ள நிலத்தின் அளவைப்பற்றியும் காணியிழந்த குடும்பங்கள் குறை கூறுகின்றன.

தங்கள் காணிகளை இழந்தவர்களுக்கு ஒரு ஹெக்டேயர் காணித் துண்டொன்றைக் கையளிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. இருப்பினும் இக் கிராமவாசிகள் உண்மையில் இரண்டு தொடக்கம் நான்கு ஹெக்டேயர் வரையான நிலத்தில தாம்பயிர் செய்துவந்ததாகக் கூறுகின்றனர்.

“எங்கள் கிராமத்தில் அநேகமானோரிடம் இரண்டு ஹெக்டேயருக்குக் கூடுதலாக நிலம் இருந்தது. அத்துடன் அக்காணிகளுக்கு உரிய உறுதிகளும் இருந்தன.” என்று இந்த அணைக்கட்டிற்குள் தனது காணியை இழந்த சம்பத் குமாரசிங்க குறிப்பிடுகிறார். ஆனால் அரசாங்கத்தின் திட்டப்படி நஷ்டஈடாக எல்லோருக்கும் ஒரே அளவான காணியே வழங்கப்படவுள்ளதாக  உள்ஊராட்சி அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

“யான் ஓயா திட்டத்தில் 140 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழக்க நேரிடும் எனக் காணக்கிடப்பட்டுள்ளது. நாங்கள் கூட்டுக் குடும்பங்களையும் சேர்த்துக் கொண்டால் இது 275 குடும்பங்களாகிவிடும். ஆனால் உத்தியோகபூர்வமாக கொள்வனவு செய்யப்படும் அவர்களின் காணியின் அளவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இது நடைபெற்றவுடன் இந்தச் சொத்துகளின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு அந்தக் குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும். இப்போதைய நிலையில் ஒன்பது குடும்பங்கள் மட்டும் அணைக்கட்டினால் தங்கள் நிலங்களை இழந்துள்ளன. அதற்காக எவ்வளவு நஷ்டஈடு பெறுவார்களென அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இன்னமும் அவர்களுக்குப் புதிய காணிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பிரதானமாக கஜுவத்தையில் அவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட காணியைப் பெரும்பாலானோர் விரும்பாததினாலேயே இந்நிலை ஏற்பட்டது. இதற்கு மேல் இந்த விடயம் தொடர்பில் எதையும் தெரிவிப்பதற்கு என்னால் முடியாது.” என கோமாரங்கடவல பிரதேச அதிகாரி எஸ்.எம்.சி. சமரக்கோன் கூறுகிறார்.

யான் ஓயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டும் கையகப்பத்திய பரந்த நிலப்பரப்பையும் படத்தில் காணலாம்.

உள்ஊராட்சி அதிகாரிகளின் பேச்சு அமைதிப்படுத்துவதாக இருந்தபோதிலும் பாதிப்படைந்தவர்கள் திருப்திப்படுவதாக இல்லை.

“வயல்களில் நெல் பயிரிடுவதற்கு எங்களுக்கு தண்ணீர் இல்லை.  நாங்கள் மண்ணைத்தான் உண்ண வேண்டியிருக்கும்.” எனப் பம்புரகஸ்வேவா மல்வாகே நாமவதி வாதிடுகிறார்.  “நாங்கள்  ஏதிலிகளாகிவிட்டோம். இக் கொடிய அநீதிக்கு எதிராக எங்களுக்கு உதவ யாருமில்லை.” என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

அபிவிருத்தியானது சாதாரண இலங்கையரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கானது எனக் கருதப்படும் நிலையில் அதற்குப் பதிலாக மீண்டும் ஒரு சிலரின் வாழ்வில் எல்லாவற்றையும் மோசமாக்குவதில் இந்தத்திட்டம் முடிந்துள்ளது எனக் கிராம மக்கள் விசனம்  தெரிவிக்கின்றனர்.