Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

உமா ஓயா அபிவிருத்தி திட்டம்.
‘ஒருவகையான நாசகார செயலாகவே இதைக் கருத வேண்டும்.’– சமந்த வித்தியாரத்ன

அழிவுக்கான திட்டம் உமா ஓயா அபிவிருத்தி தித்தால் பாதிக்கப்பட்ட மக்களது குரல் ‘கட்டுமரம்’ ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன ஆரம்பம் முதலே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒருவராவர். கேள்வி : உமா ஒயா பல நோக்கு அபிவிருத்தி திட்டத்தை பலவிதமான அழிவுக்கான திட்டம் என்று அழைக்கும் உங்களினதும்  அதற்கு எதிரானவர்களினதும்  எதிர்ப்புக்குக் காரணம் என்ன? எமது மக்கள் மத்தியில் ‘அரிவாளை விழுங்கியது’ போன்று மௌனம் சாதிப்பதாக ஒரு […]

15.11.2016  |  
பதுளை மாவட்டம்
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன
அழிவுக்கான திட்டம்

உமா ஓயா அபிவிருத்தி தித்தால் பாதிக்கப்பட்ட மக்களது குரல் ‘கட்டுமரம்’ ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன ஆரம்பம் முதலே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒருவராவர்.
கேள்வி : உமா ஒயா பல நோக்கு அபிவிருத்தி திட்டத்தை பலவிதமான அழிவுக்கான திட்டம் என்று அழைக்கும் உங்களினதும்  அதற்கு எதிரானவர்களினதும்  எதிர்ப்புக்குக் காரணம் என்ன?
எமது மக்கள் மத்தியில் ‘அரிவாளை விழுங்கியது’ போன்று மௌனம் சாதிப்பதாக ஒரு கதை நிலவி வருகின்றது. அரிவாள் என்பது (கத்தி – நெல் அறுவடை செய்ய பயன்படுத்தும் பிடி உள்ள வளைந்த கத்தி) வெட்டும் பற்கள் உள்ள ஒருபக்கம் வளைவான பிடி உள்ள ஒரு உபகரணமாகும். அதனை விழுங்கினால் மீண்டும் இழுத்து வெளியெ எடுக்க முடியாதபடி தொண்டையில் இறுகி விடும். வெளியே இழுத்து எடுக்க முற்பட்டால் தொண்டையை அறுத்துவிடும். இறுதியில் இந்த கத்தியை விழுங்கிய நபர் இறந்து விடுவார். இப்போது இந்த கத்தியை விழுங்குவது ஒரு மனிதன் அல்ல. மத்திய மலைநாட்டு பிரதேசமாகும். இதனால் மனிதர்கள், அறுகள், நீரூற்றுக்கள், உயிரினங்கள், மரம், செடி கொடிகள் உட்பட அனைத்தும் சேர்ந்தே அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் ஆரம்பத்திலே இந்த கத்தியை விழுங்க வேண்டாம் என்று நாம் கூறி வந்தோம். ஆனால் அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை.
கேள்வி: அண்மையில், சுரங்க வழியின் ஆரரம்ப கட்ட நிர்மாணத்தின்போது ஏற்பட் நீர் ஒழுக்கு காரணமாக வடிந்தோடிய நீரின் பெறுமதி முழுமையான அபிவிருத்தி திட்டத்திற்கு செலவிடும் மதிப்பை விட உயர்வானதாகும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த விவாதம் சரியானதா?
இப்போதும் நீர் ஒழுக்கு இருந்துகொண்டுதானிருக்கிறது. ஆனால் இந்த திட்டத்துடன் தொடர்புபட்ட அதிகாரிகள் அவ்வாறு நடப்பதில்லை என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த திட்டத்தின் ஊடாக அன்பளிப்புக்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் மக்களுக்கு கிடைத்திருப்பது நன்மையல்ல. இழப்பும் நஷ்டமும்தான். மகுல் எல்ல உட்பரப்பின் ஊடாக நீர் வெளியேறும் ஒழுக்கு நிலையை முதலில் 2014 டிசம்பர் 26 ஆம் திகதி அவதானிக்கப்பட்டது. அப்போது 07 அல்லது 08 மாதங்களாக அதுபற்றி நாம் கவனம் செலுத்தி இழக்கப்பட்ட நீரின் லீட்டர்களின் மொத்த தொகைக்கான அளவின் சந்தைப் பெறுமதியை கணிப்பிட்டு இந்த திட்டத்திற்கு செலவாகும் மதிப்பீட்டை விட அதிகமான தொகை இவ்வாறு நீர் வெளியேறுவதால் இழக்கப்படுகின்றது என்பதை சுட்டிக் காட்டினோம். யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. வீண் விரயமாக வெளியேறிய நீரின் அளவை கணிப்பிட்டு அதற்கு பணத்திலான மதிப்பில் பார்த்தால் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட நீரின் மூலம் ஏற்படும் இழப்பு முப்பது அல்லது நாப்பது மடங்கு அதிகம் என்பது புலனாகின்றது. இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு போதுமானதாக அமைவதில்லை. இந்த நிலத்தில்; வெடிப்பு ஏற்பட்டு, துண்டு துண்டாக வேறாகிய நிலை காணப்படுகின்றது. அதனை மீண்டும் யாரால் ஒன்று சேர்க்க முடியும். நிகழ்ந்துள்ளவைகளை சரிப்படுத்த நஷ்டஈடு கொடுத்தால் மட்டும் போதுமானதல்ல. எதிர்காலத்தில் மழை வந்தால் என்ன நடக்குமோ தெரியாது. தேசிய கட்டிட ஆராய்சி நிலையைத்தின் ஆறிவிப்பின்படி பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 66.9 வீதமான நிலப்பரப்பு மண்சரிவுக்குட்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டிருக்கின்றது. இதுதான் அந்த நிலப்பரப்பு. இப்போது நிகழ்ந்திருப்பது அழைப்பிதழ் அனுப்பி ஆபத்தை விலைக்கு வாங்கிய நிலையாகும்.

 


நாட்டினதும் ஊடகங்களதும் கவனம், கிணறுகள் வற்றிப் போய் இருப்பதிலும் வீடுகளில் வெடிப்பு விழுந்து இருப்பதிலும் இப்போது திசை திரும்பியுள்ளது.. இது அதற்கு அப்பால் செல்லும் பிரச்சினையாகும்.

கேள்வி : சுரங்கம் அமைக்கப்படுகின்ற வேகத்தைப் பார்த்தால் மிகவும் விரையில் பண்டாரவளை நகர எல்லைப் பிரதேசத்திற்குள் அந்த சுரங்கம் அகழப்பட்டுவிடும் என்று அறிய முடிகின்றது. அப்போது நிலைமை எந்தப் பக்கத்திற்கு திரும்பும்?

நீர்த்தேக்கத்திலும் துளை ஏற்பட்டு ஒழுக்கு எற்படலாம்

பதில் : இந்த சுரங்கம் 15.2 கிலோ மிட்டர் நீளாமானதாகும். இப்போது பண்டாரவளைக்கு அண்மித்ததாக கொழும்பு பண்டாரவளை பிரதான பாதையை ஊடறுக்காதவிதமாக நிறுத்தப் பட்டிருக்கின்றது. ஏனென்றால் இப்போது கடும் வரட்சி நிலவுவதால் இந்த காலப்பிரிவில் தோண்டும் போது மீதம் இருக்கின்ற கிணறுகளும் வற்றிப்போய்விட்டால் மக்கள் மீண்டும் ஆத்திரமடைவார்கள் என்பதால் மழை காலம் வரும்வரையில் சுரங்கப்பாதையை அகழ்வதற்காக காத்திருக்கின்றனர். அந்த நிலையில் சுரங்கப்பாதை மக்கள் நடமாட்டம் உள்ள பண்டாரவளை நகரை அண்மிக்கின்றது. பிதுனு வௌ, கிரி ஒருவ, கொந்த ஹெல மக்களது வாழ்க்கையும் சேர்த்தே இந்த சுரங்கத்தோடு தோண்டப்படுகிறது. இந்த சுரங்கம் தோண்டப்படும் போது உள்ளுர் நீர்த்தேக்கத்திலும் துளை ஏற்பட்டு ஒழுக்கு எற்படலாம் என்று அறிய முடிகின்றது. முன்னால் செல்லும் போது மேலும் இரண்டு தடாகங்களை ஊடறுக்க வேண்டியிருக்கின்றது. அப்போது மத்திய மலைநாட்டின் கிழக்கு கூம்பும் அழிந்துவிடும். அப்போது மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியாயின் இது அபிவிருத்தி திட்டமா?
கேள்வி :உமா ஓயாவில் இருந்து மஹாவலிக்கு பாய்ந்தோடிய கிளை ஆறு ஒன்றை தெற்கிற்கு திசை திருப்ப முயற்சி எடுக்கப்படுகின்றது. அப்போது அந்த கரைக்கும் மஹாவலி அணைக்கும் ஏற்படப்போகின்ற பாதிப்பு தொடர்பாக யாரும் குரல் எழுப்பாதது ஏன்?
பதில்: ஆரம்பத்திலேயே நாம் கூறினோம் அல்லவா. நாட்டினதும் ஊடகங்களதும் கவனம், கிணறுகள் வற்றிப் போய் இருப்பதிலும் வீடுகளில் வெடிப்பு விழுந்து இருப்பதிலும் இப்போது திசை திரும்பியுள்ளது.. இது அதற்கு அப்பால் செல்லும் பிரச்சினையாகும். இலங்கை திட்டமிடப்பட்ட நீர்ப்பாசன கலாச்சாரத்துடன் இணைந்த நாடாகும். அக்காலத்தில் இருந்து அடிப்படையான கோட்பாடு ‘அணையின் நீர் அணைக்கு அண்மித்த பகுதிக்கு மட்டும’; என்பதாகும். ஆற்றுக்கு குறுக்காக அணை கட்டி குளம் உருவாக்கப்படுகின்றது. அந்த நீர் அதன் கரையில் உள்ள பிரதேசத்திற்கு பாய்ச்சப்படுகின்றது. ஆனால் இப்போது நடப்பது ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு நீரை திசை திருப்புவதாகும். இந்த செயற்பாடு காரணமாக 720 கி. மீ. சதுர பரப்பளவைக் கொண்ட பிரதேசங்களுக்கு உமா ஒயாவில் இருந்து நீர் பாய்ச்சி செழுமையை ஏற்படுத்தக்கூடிய நிலைமைக்கு பாதிப்பு ஏற்படலாம். இது மகாவலி கங்கையை கிழக்கு பிரதேசத்தில் இருந்து போசனைப்படுத்தும் கிளை ஆறுகளை உள்ளடக்கிய மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டதாகும். இப்போது மகாவலி சீ பிரிவான கிராந்துரு கோட்டை, தெஹிஅத்த கண்டிய, திம்புலாகலை, பிம்புரத்தெவ ஆகிய பகுதிகளில் கடுமையான வரட்சி நிலைக்கு முகம் கொடுக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. உமா ஒயாவை திசை திருப்புவதற்கு முன்னரே நிலைமை இவ்வாறாகிவிட்டது. பயிரிடுவதற்கு, குடிப்பதற்கு நீரில்லை. கடந்த காலங்களில் எத்தனையோ போகங்களில் பயிரிடல் நடைபெறவுமில்லை. அடுத்ததாக உமா ஒயாவை தெற்கிற்கு திசை திருப்பினால் என்ன நடக்கும்? மாவில் ஆறு, திருகோணமலை வரையும் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட அனைவரும் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. இதை ஒருவகையான நாசகார செயலாகவே கருத வேண்டும். துர்ப்பாக்கியமான நிலை என்னவென்றால் அப்பகுதி மக்கள் தெரிந்து வைத்திருப்பது மகாவலியை மட்டுமாகும். அவர்களுக்கு உமா ஒயா பற்றி எதுவும் தெரியாது. எதிர்காலத்தில் நிறைய ஆபத்துக்கள் உள்ளன.
கேள்வி :அதிகாரிகள் ஏன் நன்மைகளைப்பற்றி மதிப்பிடாமல் இந்த திட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்?
எமது நாட்டில் சட்டங்கள் இல்லாமலில்லை. 1987 ஆம் ஆண்டின் சட்டத்திற்கமைய சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையை பெற்றே இத்தகைய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஏப்ரில் 29 ஆம் திகதி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நடும் போது அத்தகைய அறிக்கைகள் எதையும் பெற்றிருக்கவில்லை. நாம் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத் தினோம். ஏன் அவ்வாறு செய்யப்பட்டது என்று கௌ;வி எழுப்பினோம். சர்வதேச உடன்படிக்கை ஏன் கைச்சாத்திடப்பட்டது என்று வினவினோம். நாங்கள் இதனை எதிர்த்து சட்டநடவடிக்கை எடுப்பதற்காக தயாராகியபோது அவசர அவசரமாக சுற்றாடல் அறிக்கையொன்றை தயார்படுத் தினார்கள். ஆனால் பாதிப்பு எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படவில்லை. அடிக்கல் நடப்பட்டதால் அதற்கு ஏற்ப முன்னெடுக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதாக இருந்தாலும் அவர்களுக்கு தேவைப்பட்டது அவர்களின் பிரதிபலன்களாகும். அவர்களுக்கு கமிசன் கிடைத்திருக்கலாம். முன்னெடுக்கப்படுகின்ற வேலைகளை பார்க்கும் போது தற்போதைக்கே கமிசன் பரிமாறப்படுவது எங்களுக்கு வெளிப்படையாக தெரிகின்றது. மக்கள் கோசம் எழுப்பினால் மட்டும் ஏதாவது எதிரொலிக்கின்றது. மற்ற நேரங்களில் எட்டிப் பார்ப்பதற்கும் யாரும் இல்லை.
கேள்வி : அப்படியாயின் அரசாங்கம் மாற்றமடைந்திருந்தும் இன்னும் காயம் ஆறவில்லையா?
அரசாங்கம் மாறவில்லை. கடந்த காலத்தில் போன்றே ஆட்கள்தான் மாறியுள்ளனர். கொள்கைகளும் வேலைகளும் இருந்தவைகள்தான். மைத்திரிபால சிரிசேனா ஜனாதிபதியானவுடன் நாம் இது தொடர்பான நிபுணத்துவம் பெற்றவர்கள், பரிச்சயம் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு போய் ஜனாதிபதியைச் சந்தித்து நிலைமைகளை விளக்கினோம். இந்த வேலை தவறானது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் காயம் குணமடையவில்லை. இருந்ததைவிட நிலைமை மோசமடைந்திருக்கின்றது. வேதனையை மக்களால் தாங்க முடியவில்லை. மகுல் எல்ல பாடசாலை அழிவுறும் நிலையில். ஜூம் ஆ பள்ளிவாயலிலும் வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றது. திக்அராவே பிக்குனிமாரின் தங்குமிடமும்; வெடித்துவிட்டது. இன்னும் என்ன மீதம் இருக்கின்றது.

இப்பள்ளிவாயலுக்கு ஒரு அழிவு எற்பட்டால் அதற்கு யார் பொறுப்புக் கூறுவது?

கேள்வி : இந்தளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட இடமிருப்பதாயின் இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றதா?
பதில் :நாம் அரசியல்வாhதிகள் போலல்லாது நீரியல் வல்லுனர்கள், பூகோள கற்பவியலாளர்கள், இத்தகைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அரம்பத்தில் வேண்டுகோள் விடுத்தோம். முதலாவது நீர் ஒழுக்கு ஏற்படும்போது 16 வீதமான நிர்மாண வேலைகளே நடைபெற்றிருந்தன. அப்போதும் திட்டத்தை நிறுத்தும்படி கேட்டோம். ஆனால் அதற்கு செவிமடுக்கவில்லை. இப்போதும் நாம் கேட்பது இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தும்படியாகும். அதன் பின்னர் முறையாக பாதிப்பை மதிப்பீடு செய்ய வேண்டும். இதை முன்னெடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். பாதிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். ஹீல் ஒயா ஜூம் ஆ பள்ளிவாயல் மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும். அதன் நிலம் பிளக்கும் அளவிற்கு வெடிப்பு எற்பட்டிருக்கின்றது. தூண்கள் அதிர்வடைந்திருக்கின்றன. எதிர்காலத்தில் மழை விழ்ச்சிக் கால நிலை ஏற்படுகின்றபோது 400 அல்லது 500 பேர்கள் ஒன்றாக இருந்து தொழுகையில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் இப்பள்ளிவாயலுக்கு ஒரு அழிவு எற்பட்டால் அதற்கு யார் பொறுப்புக் கூறுவது? இப்போதைய நிலையில் பொருத்தமான நிபுணர்களைக் கொண்டு மதிப்பீடொன்றைச் செய்து அறிக்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும். அதன் பின்னர்தான் முன்னேக்கி செல்ல வேண்டும். ஆட்சியாளர்கள், நிபுணர்களின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்க வேண்டும்.