Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சர்வதேச முதலீடுகளால் பயனடைய முடியாமைக்கு இதுவும் காரணம்.
“யுத்தம் முடிந்தபோதும் நாட்டில் இனப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை.”

குடிப்பதற்கு நீரும் வைத்தியசாலைக்குச் செல்ல வீதிகளும் இல்லாதிருக்கையில் அல்லது காட்டு யாகைள் அழிவுகளைச் செய்கையில் பாரிய நகர அபிவிருத்தி ஒன்றைச் செய்வதானால் பயன் எதுவுமில்லை.

24.11.2016  |  
கொழும்பு மாவட்டம்
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்நாள் தலைவர் சந்திர ஜயரத்ன

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி முன்னேறிச் செல்லாதது ஏனென்றும் அது எவ்வாறு மாற்றமடைய வேண்டுமென்றும் ‘த கட்டமரனுடன்’ இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்நாள் தலைவர் சந்திர ஜயரத்ன உரையாடுகிறார்.

த கட்டமரன்: நாட்டில் வறுமையை இல்லாதொழிப்பது பற்றி இலங்கை அரசாங்கம் அடிக்கடி பேசுகிறது. அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்.

சந்திர ஜயரத்ன: அரசாங்கம் இதனை இருவகையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அபிவிருத்தியில் முதலீடுகள் செய்ய வேண்டும். அதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு ஈற்றில் வாழ்கைத் தரமும் மேம்பாட்டையும். மறுபுறத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும். குடிப்பதற்கு நீரும் வைத்தியசாலைக்குச் செல்ல வீதிகளும் இல்லாதிருக்கையில் அல்லது காட்டு யாகைள் அழிவுகளைச் செய்கையில் பாரிய நகர அபிவிருத்தி ஒன்றைச் செய்வதானால் பயன் எதுவுமில்லை.

த கட்டமரன்: உங்கள் அபிப்பிராயப்படி அரசாங்கம் தவறாக செயற்படும் சில விடங்கள் எவை எனக் கருதுகிறீர்கள்?

சந்திர ஜயரத்ன: உதாரணமாக ஒரு கம்பனி தனது அமைவிடத்தைப் பிறிதொரு இடத்திற்கு மாற்றஞ் செய்கையில் அதன் பொருட்டு அரசாங்கம் அந்தக் கம்பனிக்கு வழங்கும் வரிச் சலுகை. இச் சலுகை உற்பத்தித் திறனை மேம்படுத்தவோ வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவோ அல்லது ஏற்றுமதிகளுக்குப் பெறுமதி சேர்க்கப் போவதோ இல்லை. அரசாங்கம் வரியை இழப்பதுடன் இந்த வரியை அபிவிருத்தியில் முதலீடு செய்யவும் முடியும். அத்துடன் வசதி வாய்ப்பில்லாத மக்களுக்கு எதனையுஞ் செய்யாது அதிக செலவில் மந்திரிமார்களுக்காக மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது தவறானது. மீண்டும் ‘மிக்’ விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டங்களும் உள்ளன. இந்த விமானங்களைப் பாவிக்க வேண்டிய எதிரிகள் யாரும் எமக்கு இல்லாதவிடத்து நாங்கள் இந்த விமானங்களை வாங்குவதா அல்லது அந்தப் பணத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் முதலீடு செய்வதா என் பரிசீலனை செய்தல் வேண்டும்.

த கட்டமரன்: இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக அதுவும் இநத் நாட்டிற்கெனக் குறிப்பிடக்கூடியதாக என்ன செய்தல் வேண்டும்?

சந்திர ஜயரத்ன: எங்கள் நாடு பெரும் வளங்களை உடையதொன்றல்ல. நாங்கள் பயன்படுத்தக்கூடிய வளங்கள் ஒரு சிலவே உண்டு. மனிதவளம் காலநிலை மற்றும் கேந்திர ஸ்தானத்தில் நாங்கள் அமைந்துள்ளமை அவ்வளங்கள். எமது நிலம் ஒரு சில இடங்களில் வளமுள்ளதாயிருந்தாலும் எல்லாவற்றிலும் பயிரிடமுடியாது.
எங்கள் வளங்களை நாங்கள் இன்னும் பல வழிகளில் எங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும். எங்களுக்கு மனித வளங்களும் மேலதிக தொழில்நுட்ப அறிவும் தேவை. ஆனால் எமது கல்வி முறைமையானது சிறந்த தொழில் நுட்பத்தையும் ஆக்கத்திறனையும் நோக்காகக் கொண்டதல்ல. அது கோட்பாடு பற்றிய கல்வி மட்டுமேயன்றி கற்பதற்கானதன்று
தொழிற் தேர்ச்சிகள் அறிவு மனப்பாங்கு மற்றும் பெறுமானம் ஆகியவற்றை நாங்கள் அபிவிருத்தி செய்தல் வேண்டும். தலைமத்துவத்தையும் ஆக்கத்திறனையும் நாங்கள் அதிகரிக்க வேண்டும். எமது மக்களில் ஐந்து இலட்சமானவர்கள்    ஏனைய நாடுகளுக்குப் பெறுமதி சேர்ப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர்.

த கட்டமரன்: இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பிரதான தடையாக உள்ளது எதுவென நீங்கள் நினைக்கிறீர்கள்?

சந்திர ஜயரத்ன: புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு சிறிது காலம் கடந்து விட்டபோதிலும் இந்த நாடு மேலதிக சர்வதேச முதலீட்டின் மூலம் பயனடையாது இருப்பது ஏனெனில் அரசியல் ஸ்திரமின்மையும் நடைமுறையிலிருக்கும் உறுதியற்ற பொருளாதாரக் கொள்கையாலுமேயாகும். அவ்வாறான தன்மைகள் இல்லாதவிடத்து முதலீடுகளைக் கவர்வதற்கு எங்களால் முடியாது. யுத்தம் முடிவடைந்த போதிலும் நாட்டிலிருக்கும் இனப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

த கட்டமரன்: மகிந்த ராஜபக்ஷவினால் வழிநடத்தப்பட்ட முன்னைய அரசாங்கம் இலங்கையின் நடுத்தர வர்க்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பியது என்கிறார்கள். அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதில் அவர்கள் வெற்றி அடைந்திருப்பார்களென நீங்கள் நம்புகிறீர்களா?

சந்திர ஜயரத்ன: அப்படி மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருந்தாலும் அவர்கள் நடுத்தர வர்க்கத்திற்காச் செயற்பட்டார்கள் என்று தனிப்பட்ட ரீதியில் நான் நம்பவில்லை. உண்மையில் அவர்கள் நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றினார்கள். தங்கள் சுய தேவைகளுக்காக அவர்கள் தரகுப் பணங்களைப் பெற்றதுடன் நாட்டின் வளங்களையும் சுரண்டினார்கள். அவர்கள் ஒரு மாயையை உருவாக்கினார்கள். அத்துடன் அதே விடயம்தான் இப்பொழுதும் நடைபெறுகிறது.

த கட்டமரன்: இதனால் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

சந்திர ஜயரத்ன: இந்தக் கணத்தில் நாங்கள் தொலைந்துவிட்டோமென நினைக்கிறேன். பிறிதொரு பாதையைத் தெரிவதற்கான சந்தர்ப்பங்கள் முறையாக ஆராயப்படவில்லை. இப்பொழுது புதிய முகவரமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் தற்போது நடைமுறையிலிருக்கும் நிறுவனங்களில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யாவிடின் அவர்களின் இடங்களிற்கு வேறுநபர்களை அமர்த்தவேண்டும். இவர்கள் புதிய அபிவிருத்தி முகவர்களை வெறுமனே உருவாக்கிப் பணத்தைத் தங்கள் பைகளில் நிரப்புகின்றனர். இவர்களினால் எதுவித ஆதாயங்களும் இல்லை. தவறான ஆட்சி ஏற்படுகின்றதா என்பதை நாங்கள்அ வதானிக்கவேண்டும்.