Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வீணாகிய உதவி
500 வீடுகளுள் காட்டு மிருகங்கள் !

வீடுகளைப் பகிர்ந்தளிப்பது சம்பந்மாகத் தெளிவுறுத்தும்டி நீதிமன்றத்ததைக் கேட்டுள்ளேன். ஏதேனும் ஒரு அடிப்படையில் வீடுகளைப் பகிர்ந்தளிக்கும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டால் அதனை நாளைக்கே நான் செய்து முடிப்பேன்.

07.01.2017  |  
அம்பாறை மாவட்டம்
Houses in the wild in Norochcholai village in Akkaraipattu.

அக்கரைப்பற்று நுரைச்சோலை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகள் ஒரு நேரத்தில் உள்ளூரில் வசிக்கும் பெண்ணான எஸ். றினோசா போன்ற ஒரு சிலருக்கு ஒரு கனவாக இருந்தது.
சுனாமிப் பேரலை அவளுடைய வீட்டிற்கு அருகாமையில் இருந்த கடற்கரையைத் தாக்கிய பொழுது அவளுடைய மகன் பிறந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன.
“சுனாமி வந்தபொழுது எனது மூத்த மகன் ஒரு கைக்குழந்தையாகவே இருந்தான்” என நினைவு கூறும் றினோசா, “அவனைத் தூங்கவைத்துப் படுக்கையிற் கிடத்தியபின் கடற்கரைப் பக்கமாகப் பார்த்த பொழுது கடல் கரையிலிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் சென்று கொண்டிருப்பதையும் அது மிகவும் இருளடைந்து இருப்பதைப் போலவும் கண்டேன். நான் பீதியடைந்தமையினால் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு அக்கரைப்பற்று நோக்கி வீதியில் ஓடினேன். எங்கள் உயிர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டன.” எனச் சொல்கிறார்.


இதுவரை நாங்கள் பத்து  வெவ்வேறு வீடுகளில் வசித்துள்ளோம்.

අපිත් බලාගෙන හිටියා ගෙවල්වල පදිංචියට යන්න. ඒත් ඒක සිහිනයක් විතරයි.
றினோசா

ஆனால் அவர்கள் தங்கள் வீட்டையும் உடமைகளையும் இழந்துவிட்டனர். அந்தக் குடும்பம் நான்கு மாதங்களாக ஒரு முகாமில் வாழ்ந்ததுடன் அப்போதிலிருந்து வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
றினோசா இதுபற்றி விளக்கமாகக் கூறுகையில் “ எனக்கு இப்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகனுக்கு இப்பொழுது 12 வயது. எனது கணவர் ஒரு புடவைக்கடையில் வேலை பார்க்கிறார். ஆயினும் எங்களுக்கு நிறையப் பணப் பிரச்சனைகள் உண்டு. வாடகைப் பணம் செலுத்திய பின்னர் எங்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவது மிகவுஞ் சிரமமாகவுள்ளது. அத்துடன் நாங்கள் இடம் விட்டு இடம் நகர்ந்துகொண்டே இருக்கிறாம். இதுவரை நாங்கள் பத்து  வெவ்வேறு வீடுகளில் வசித்துள்ளோம். பெரும்பாலும் ஒரு வீட்டை நாங்கள் சுத்தஞ் செய்து குடியிருக்கக்கூடியதாகச் செய்ததும் வீட்டுரிமையாளர் அதனைத் திருப்பித் தரும்படி கேட்பார்.” என முறையிடுவதுடன் “சுனாமி காரணமாக எங்களுக்கு இப்ப ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனைகளை நான் முன்னரே அறிந்திருந்தால் அன்றைய தினம் நான் கடலை நோக்கி ஓடியிருப்பேன்.” எனக் கூறினார்.
அக்கரைரப்பற்று கடலோரத்தில் அழிவடைந்த வீடுகளின் உரிமையாளர்களான றினோசாவிற்கும் அவர்போன்ற 308 வரையிலான குடும்பங்களுக்கும் சவுதி அரேபியாவின் நிதியுதவியுடன் அந்த அனர்த்தத்தில் உடமைகள் அழிவடைந்தவர்களுக்குக் கொடுப்பதற்கென நிர்மாணிக்கப்பட்ட அந்தக் கிராமம் மிகவும் கவர்ச்சியானதாக உள்ளது.
நுரைச்சோலையில் உள்ள இக் கிராமம் 500 புதிய வீடுகளைக் கொண்டுள்ளதுடன் அவைகளுக்கான நிதியுதவி சவுதி அரேபியாவின் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதி யாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளுர் அதிகார சபைகளிடம் 2011ம் ஆண்டு கையளிக்கப்பட்ட இந்த வீடுகள் வருடக்கணக்கில் யாரும் குடியிருக்காது வெறுமையாக இருக்கிறது. இப்பொழுது காட்டு மிருகங்கள் அவற்றினுள் வசிக்கின்றன – யானைகள் இக் கிராமத்தினுள் நடமாடுவதுடன் பாம்புகளும் ஏனைய மிருகங்களும் உட்புறத்தினுள் வசிக்கின்றன. பராமரிப்பு இல்லாமையினால் மிகக் கவனமாக நிர்மாணிக்கப்பட்ட இக் கிராமம் சிதைவடைந்து வருகிறது.
“இந்தக் கிராமம், வீடுகள், பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள் ,கடைகள் ,பேரூந்து நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.” என றினோசா கூறுகிறார். “அங்கே வசிப்பது ஒரு கனவு போலவேயிருக்கும். ஆனால் குடியிருப்பவர்கள் யாரும் இல்லாதபடியால் இப்பொழுது அந்த வீடுகள் அழிவடைகின்றன.இது நீதிமன்றின் கட்டளை.”

temporary-houses
தற்காலிக வீடு.

வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் நியாயமான முறை கடைப்பிடிக்கப்படவில்லையென்றும் பிற மதத்தவர்களைத் தவிர்த்து முஸ்லிம் குடும்பங்களுக்கே பெரும்பான்மையான வீடுகளை வழங்கி அதன் மூலம் இந்த மாவட்டத்திற்குள் அதிக முஸ்லிம்களைக் கொண்டு வருவதற் காக மறைமுகமான ஒரு சூழ்ச்சி இதுவென ஏனைய உள்ளுர் வாசிகள் வழக்குப் பதிவு செய்தமையினால், நீதிமன்றால் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. thttp//www.thesundayleader.lk/2016/10/10/ampara-tsunami-houses:uninhabited/
றினோசா போன்றவர்களின் குடும்பங்கள் இதைப்பற்றிக் கரிசனை கொள்வதாக இல்லை. அவர்கள் எங்கேயாவது குடியேற விரும்புகின்றனர். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பலதரப்புக் குடும்பங்களுக்கு இந்த வீடுகள் கொடுக்கப்படுமாயின் இந்த கடல் சூழ்ந்த தேசத்தில் ‘இடைக்கால நீதிக்கு’ நுரைச்சோலைக் கிராமம் ஒர் எடுத்துக் காட்டாக இருக்குமென அவர்கள் நம்புகின்றனர்.
பல எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வீடு வாய்ப்புகள் வழங்கப்படுமென உள்ளுர் காவல் துறை சிரேஷ்ட உறுப்பினர் அஜித் றோஹன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு உறுதி மொழி வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியவர்களில் தானும் ஒருத்தியென றினோசா குறிப்பிடுகிறார்.
ஆகவே எதிர்ப்பு கைவிடப்பட்டது. ஆனால் தற்போது, காவல் துறை சிரேஷ்ட உறுப்பினர் அஜித் றோஹன இம் மாவட்டத்தை விட்டு சென்றுவிட்டார் என்பதற்கு மேல் எதுவும் நடைபெறவில்லை. இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் பல்வேறு அரசியல் வாதிகளும் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதாக வாக்களித்துள்ளனர் என றினோசா தெரிவிக்கிறார். ஆனால் இந்த உறுதி மொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. Lefthttp//www.dailymirror.lk/66201/ssp.ajith-rohana-transferred
இந்த வீடுகள் ஏன் இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லையென ‘த கட்டமரன்’, அம்பாறை மாவட்ட செயலர் துசித்தா வணிகசிங்கவிடம் வினவியது.
“இது ஒரு சிக்கலான பிரச்சனை. வீடுகளைப் பகிர்ந்தளிப்பதற்காக எடுக்கப்பட்ட பிரயத்தனம் ஒவ்வொன்றும் ஒன்றில்லாவிடில் பிறிதொரு காரணத்தினால் தோல்வி கண்டுள்ளது. வீடுகளைப் பகிர்ந்தளிப்பது சம்பந்மாகத் தெளிவுறுத்தும்டி நீதிமன்றத்ததைக் கேட்டுள்ளேன். ஏதேனும் ஒரு அடிப்படையில் வீடுகளைப் பகிர்ந்தளிக்கும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டால் அதனை நாளைக்கே நான் செய்து முடிப்பேன். என்றர்.