Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

‘ஜாடி மீன்’
ருசிக்கவும் !சிந்திக்கவும்!

இந்த மீனை டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேராவிடம் இருந்து புதிதாக வாங்கிச் செல்பவர்களுக்கு அதை எப்படி சமைக்க வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார். சதாரண மீன்கறி சமைப்பதுபோல் இதைச் சமைக்க முடியாது.

16.01.2017  |  
கொழும்பு மாவட்டம்
கொறுக்காய் புளி கறுப்பாக தெரிய உப்பில் ஊறிய ‘ஜாடி மீன்’.

R.SURENDRAN

“இது 6மாதம் பழைமையானது. இது 1வருசம் பழைமையானது.”
“ஒரு வருடம் பழைமையான மீனா?”
“ம், மீன் பழசாக பழசாக ரேஸ்ற்அதிகம்! இத ‘ஜாடி மீன்’ என்று சொல்லுறது.” ஏன்றார் டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேரா. காலி வீதியில் மொறட்டுவபகுதியில் இவரைக் கடந்துதான் செல்கிறோம். ஆம் வீதி ஓரத்தில் ‘ஜாடி மீன்’ கடையை விரித்துவைத்துள்ளார்.ஆனால் எப்போதாவது இந்நதக்கடை அகற்றப்பட்டுவிடும் என்ற பயம் அவருக்குள் இருக்கின்றது.

டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேரா.

அப்பப்ப வயதானவர்களும், இதென்ன?வாங்கிப்பாப்பம் என வாங்குபவர்களும் அவரது வாடிக்கையாளராக உள்ளனர்.

“மீனைக் கருவாடு ஆக்கி சாப்பிடுவது ஒரு ருசி, அதவிட இது இது ஒரு தனி ருசி…”என்கிறார் இது பற்றி முன்னர் அறிந்திருந்த ஆர்.ஜீவரத்தினம்.(70) மருதானையில் வசிப்பவர்.

இந்த மீனை டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேராவிடம் இருந்து புதிதாக வாங்கிச் செல்பவர்களுக்கு அதை எப்படி சமைக்க வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார். சதாரண மீன்கறி சமைப்பதுபோல் இதைச் சமைக்க முடியாது. இந்த மீனை யாரும் கிலோவில் வாங்குவதில்லை. கிறாமில் தான் வாங்கிச் செல்கின்றனர். அதை உணவில் சுவைக்காக சிறிதளவே பயன்படுகின்றனர். ஏறத்தாழ ஒரு ஊறுகாய் போன்றதே இது. ‘மீன் உறுகாய்’. இதை எப்படி பக்குவமாக சமைக்கவேண்டும் என்பதை பேப்பரில் அச்சடித்தும் வைத்துள்ளார். புதியவர்களுக்கு அதையும் வழங்குகிறார்.
சரி டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேரா இவர் யார்?இவர் ஏன் வழக்கொழிந்து போன ஒரு விடயத்தை செய்துவருகிறார்?

டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேரா மொரட்டுவ பிரதேசத்தில் வசித்துவரும் 36வயதுடைய மீனவர். இளவயதில் தந்தையுடன் மீன்பிடிப்பதும் அதை கருவாடு ஆக்குவதும் விற்பதிலும் இருநத்தவர் தொடர்ந்துஇதைச் செய்யுவந்ததில் சலிப்படைந்த இவர் புதிதாக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தன் தமையனின் வழிகாட்டலில் இந்த ‘ஜாடி மீன்’ வியாபாரத்தில் இறங்கியுள்ளார். இதற்காக பாரை,அறக்குளா, விளைமீன், வெளவால் போன்ன சற்று விலையுயந்த மீன்னகளை இதற்குப் பயன்படுத்தியுள்ளார். துற்போது மீன்பிடிக்க செல்லாத இவர், மீன்களை சந்ததையில் இருந்து கொள்வனவு செய்து அதை வெட்டி குடலை நீங்கிவிட்டு உப்பும், கொறுக்காவும் போட்டு சாக்கில் இட்டு இறுகக்கட்டி கடற்கரை மணலில் குழி ஒன்று தோண்டி போட்டு மூடிவிடுகிறார். இரண்டு கிழமைக்கு அந்த மீன் அவ்வாறு வைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் கடல் மண் மீனை சற்று பதப்படுத்துகிறது.மீனிலுள்ள வெடுக்கு நாற்றம், ஊன் எல்லாவற்றையும் கடல் மண் உறிஞ்சி; இழுக்கிறது. பின்னர் அது வெளியில் எடுக்கப்பட்டு பெரிய பிளாஸ்ரிக் வாளியுள் போடப்படுகிறது. இன்னும் மேலதிக உப்பை அதனுடன் சேர்த்து, ,கொறுக்காய் புளியையும் இட்டு (இதனுடன் இடப்படும் மேலும் சில பொருட்களை வெளிப்படுத் அவர் விரும்பவில்லை) நீர்த்தன்மையுடன் காணப்பட்ட அந்ந திரவத்தில் மீன்கள் நன்கு மூழ்கும் வகையில் மூடிவைக்கப்படுகிறது. இவ்வாறு வருடக்கணக்கில் வைக்கப்படுகிறது. நாளாக நாளாக அதன் சுவை அதிகரிப்பதாக கூறுகிறார். இரண்டு மூன்று வருடங்கள் வரை இப்படி வைக்கமுடியும் என்கிறார் அவர்.

டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேரா தனது பாதையோரக் கடையில் நிற்கிறார்.
டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேரா தனது பாதையோரக் கடையில் நிற்கிறார்.

பொதுவாக ‘ஜாடி மீன்’ என்றால் அதில் புழு இருக்கும் என்பது பலரதும் மனப்பதிவு. ஆனால் பழுதடையாத நல்ல மீன்களை தேர்வுசெய்து பதனிடும் போது புழு வராது என்கிறார் இவர்.

தற்போது திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுக்கு (07),(03) தந்தையான டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேரா தன் மனைவியுடன் இணைந்து இதை தற்போது செய்துவருகிறார்.

‘இதே உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் ! வாய்க்கு ருசியாக ஜாடி சாப்பிட…….
குசினியில் ஒரு ஜாடி முட்டி இருந்தால் உங்கள் வீட்டுக்கு சௌபாக்கியம்!’

இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ள அவரது குட்டிக் கடையில், சைவமதத்தைக்குறிக்கும் சின்னத்துடன் அதற்கான தகடும் ஒட்டப்பட்டிருந்தது. அருகில் சைவமதக் கடவுடளான லட்சுமி(செல்வம் கொழிபதற்கு வணங் கப்படும் கடவுள்) வைக்கப்பட்டு இருந்தது.அருகில் பௌத்த மதக்கடவுளான புத்தர் படமும் ஒட்டப்பட்டுள்ளது.


“நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்?”
“நான் பௌத்தம்.”
“உங்கள் மனைவி?”
“பௌத்தம்”
“சைவக்கடவுளரை வைத்திருப்பதற்கு ஏதும் சிறப்புக் காரணங்கள் உண்டா? “

வழமையாகவே தாம் சார்ந்த மதத்தை விட பிறமதங்களுக்கு ஒருவர் முன்னுரிமை கொடுத்திருந்தால் அது ஏன் என அறிய ஆவாலாய் இருப்பது இயல்பு. அதையே நாமும் ஆவலாய்க் கேட்டோம்.
“ மீன்பிடிக்க போகமுடியாமல், வேலையில்,லாமல் இருந்தபோது, கதிர்காமத்தில் (இலங்கையில் தென் பகுதியில் இருக்கும் ஒரு இடம்) இருந்த நண்பன் ஒருவனிடம் சென்றேன். சிறிதுநாள் அங்கிருந்து வேலை செய்ய முயற்சித்தும் பலன் இல்லை. கையில் காசில்லாமல் வீட்டுக்கு திரும்பி போகும் வழியில் வேறு ஒரு நண்பன் சந்தித்தான்.என்னுடன் வா, கதிர்காமத்தில் முருகன் கோயிலில் (சைவமதக் கோயில்)ஒரு வேலை இருக்கு செய் என்றான். அவனே எனக்கு வேட்டி வாங்கி தந்து, கோயிலிலேயே வேலைக்கு ஒழுங்கு செய்திருந்தான். அங்கு நடக்கும் கடவுள் வழிபாட்டுக்கு பழங்களைக் கழுவி வெட்டிக் கொடுப்பதுதான் எனது வேலை. சம்பளம் இல்லை. இருக்க இடமும் சாப்பாடும் கிடைத்தது. இப்படி மூன்றுமாதம் வேலை செய்யும்போது சைவமதம் பற்றி அறிந்துகொண்டேன்.எனக்கு அதன்மீனதான நம்பிக்கையும் வந்தது. பின்னர் கொழும்பில் இருந்து மரத்தளபாடங்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று விற்கும் ஒரு வேலையில் இணைந்து யாழ்பாணம் போனேன். இப்படி வேலை பார்த்த சந்தப்பத்தில் சைவக்கடவுள் மீனதான நம்பிக்கையும் என்னுள் நிலைத்துபோனது. நான் பௌத்த கோவில்களுக்கும் செல்கிறேன். நான் ஒரு பௌத்தன்தான். ஆனால் சைவமதத்திதன் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு.” என எங்கள் கேள்விக்கு பதிலளித்தார். வீதிக்கு மறுபக்கத்தில் இருக்கும் அவரது சின்ன வீட்டிலும் சைவ,பௌத்த கடவுளர் ஒன்றாகவே உள்ளனர்.

வீதிக்கு மறுபக்கத்தில் இருக்கும் அவரது சின்ன வீட்டிலும் சைவ,பௌத்த கடவுளர் ஒன்றாகவே உள்ளனர்.
வீதிக்கு மறுபக்கத்தில் இருக்கும் அவரது சின்ன வீட்டிலும் சைவ,பௌத்த கடவுளர் ஒன்றாகவே உள்ளனர்.

இந்த கட்டுரை எடுக்கப்படும் போது பாதையோரக் கடை வைத்திருந்த டபிள்யு.டபிள்யு.டி. அஜந்த பெரேரா, இது பிரசுரிக்கப்படும் இந்த நேரத்தில் சட்டத்திற்குப் புறம்பானது என அவரின் பாதையோரக் கடை அகற்றப்பட்டுவிட்டது. அவர் தற்போது தன் வீட்டுக்கு முன்னால் அந்தக் கடையை வைத்துள்ளார்.(பிரதான பாதையில் இருந்து எதிர்ப்பக்கமாக சிறிது உள்பகுதியில்)
கைவிட்டுப்போன இந்த ‘ஜாடிமீன்’ விற்பனையில் தன்னை ஈடுபடுத்தியிருக்கும் டபிள்யு.டபிள்யு. டி. அஜந்த பெரேரா இதை தரமான வியாபாரமாக ஆக்கிக் கொள்ளவேணடும் என விரும்புகிறார்.அதற்கான ஏற்பாடுகளை செய்ய போதிய பணம் இல்லாத நிலையில் தற்போது சிறு முயற்சியாக போத்தலில் அடைத்து விற்பதற்கு முயன்றிருப்பதாக கூறுகிறார். ‘ஜாடி மீன்’ பிரியர்களுக்கு இது நல்ல செய்தி.