Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மீள் குடியேற்றம் வேண்டாம்.
முன்னைய எதிரிகளையே நண்பர்களாகக் கருதும் இவர்கள்!

பூந்தோட்டம் முகாமில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதியான மயிலங்குளம் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

17.02.2017  |  
வவுனியா மாவட்டம்
Conditions in Poonthottam camp are hellish, residents say.

வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட நிலையில் முகாமில் தற்போது அனுபவிக்கின்ற கஷ்டங்களை விட முன்னர் சிங்களவர்களளோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக உள்நாட்டில் இடம் பெயர்ந்த தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

இடம்பெயர்நத நிலையில் தனது வாழ்க்கையில் அரைவாசிப் பகுதியை தற்காலிக் அகதி முகாமில் கழித்துவிட்டதாக எம். மகேந்திரன் கூறுகின்றார். “எனக்கு வயது 17 ஆகும்போது நான் இங்கு வந்தேன். இப்போது எனக்கு வயது 38 ஆகின்றது. நான் திருமணம் முடித்ததும் இங்குதான். யுத்தம் முடிந்துவிட்டது”. என்று இலங்கையின் வடபகுதியான வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் வாழும் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேந்திரன் தனது கவலையை வெளிப்படுத்துகின்றார். “ஆனாலும் எங்களது துன்பத்திற்கு முடிவு இல்லை.”

இந்த முகாமில் மேலும் 93 குடும்பங்கள் வாழ்ந்து வருவதோடு அதிகமானவர்கள் இலங்கையில் சிவில் யுத்தம் ஆரம்பமான காலம் முதல் இந்த முகாமுக்கு வந்தவர்களாவர். இந்த குடும்பங்களில் அதிகமான ஆண்கள் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்பவர்கள். அனைவருமே நீண்ட காலமாக மீள் குடியேற்றத்தை எதிர்;பார்த்தவர்களாக இருந்துவருகின்றனர்.

“பூந்தோட்டம் அகதி முகாமின் நிலையோ மிகவும் கவலைக்கிடமானதாகும்” என்று மகேந்திரன் மேலும் தெரிவிக்கின்றார். மலசல கூடங்கள் தடைப்பட்ட நிலையில். ஒழுங்கான மலசலகூட வசதிகள் இல்லை. நல்ல ஆரேக்கியமான குடிநீர் வசதியும் இல்லை. வீடுகளோ உடைந்துவிழும் நிலையில் இருப்பதோடு மழை காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் ஒழுக்கு ஏற்படுகின்றது. நுளம்புத் தொல்லையால் ஒருபுறம் நோய்கள் பரவுகின்றன. பருவப்பெயர்ச்சி மழை காலங்களில் வீட்டுக்குள் பாம்புகள் வருகின்றன. இத்தகைய கஷ்டங்களை அனுபவித்தவர்களாகவே இந்த முகாம் வாழ்க்கையை நாம் நடத்துகின்றோம்.” என்கிறார்

மகேந்திரன் போன்ற பலரதும் எதிர்பார்ப்பாக இருந்து வருவது அவர்கள் இந்த முகாமில் இருந்து வேறு எங்காவது மீள் குடியேற்றப்பட வேண்டும் என்பதாகும். ஆனாலும் இங்கு கூலி வேலை மட்டும் பெற்றுக்கொள்ள முடியும் . நாம் மீண்டும் அரசாங்கத்திடம் வேலை கேட்டுப்போனால் தொந்தரவுக்குள்ளாவோம். இங்கு ஆச்சரியமான விடயம் அவர்கள் சிங்களவர்களைப் பற்றி முறைப்பாடு செய்வதில்லை. குறிப்பாக அவர்களை ஏனைய தமிழர்கள் தடுப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர். பூந்தோட்டம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்வர்கள் முன்னர் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்தவர்களாகையால் அவர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்படுவதாக கருதுகின்ற மன நிலையும் அங்கு காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த வாழ்க்கைக்கு முடிவு கிடைத்து வேறு வசதியான இடத்தில் மீள் குடியமர்த்தப்பட்டால் ஒருவகையில் நிம்மதியாக இருக்கும். அத்தோடு சாரதி தொழில் போன்ற அரசாங்கத் தொழிலாவது கிடைத்தால் அதுவும் நல்லது. என எதிர்பார்க்கின்றனர்.

அவர்களது குழந்தைகளும் அப்பகுதியில் உள்ள பாடசாலைக்கு செல்கின்ற நிலையில் அந்த பாடசாலைககளும் மிகவும் பின்தங்கியதாகவே உள்ளன.


அரசாங்கத்திற்கு எங்களது பொறுப்புக்களை ஏற்பதற்கான தேவையில்லை. அதனால்த்தான் எங்களது பிரச்சனைகளை ஞானம் நலன்புரி அமைப்பிடம் கையளித்திருக்கின்றது

மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவிக்கையில் “இந்த முகாமில் இருப்பவர்களை நெடுங்கேணிக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. அங்கு ஞானம் நலன்புரி அமைப்பு வீடுகளை நிர்மாணித்து வருவதோடு அந்த வீடுகளுடன் ஓரளவு தோட்டமும் சேர்த்து வழங்கப்படவிருக்கின்றது“ என்று விளக்கமளித்தார்.

பூந்தோட்டம் முகாமின் சமூகத்தலைவர் யு. வேலாயுதம் குறிப்பிடுகையில் : “விவசாயம் செய்வதற்காக காணி வழங்கப்படுவதானது பயனற்றதாகும். அரசாங்கத்திற்கு எங்களது பொறுப்புக்களை ஏற்பதற்கான தேவையில்லை. அதனால்த்தான் எங்களது பிரச்சனைகளை ஞானம் நலன்புரி அமைப்பிடம் கையளித்திருக்கின்றது என்று கவலை தெரிவிக்கின்றார். உதாரணமாக அங்கு ஓடும் நீர் வசதி இல்லை. ஆனாலும் குடிப்பதற்கு குளாய் நீர் வசதி செய்து தருவதாக அவர்கள் கூறுகின்றார்கள். அது போதுமானதாக இல்லை. அரசாங்கம் எங்களுக்கு தனித்தனியாக விவசாயம் செய்வதற்கு காணி வழங்க வேண்டும்”என்று வேலாயுதம் வேண்டுகோள் விடுக்கின்றார்.

/in-the-camp2

பூந்தோட்டம் முகாமில் வாழும் மக்கள் தற்போதைக்கு வேறு இடத்திற்கு செல்வதை விரும்பவில்லை. “நாங்கள் வேறு இடத்திற்கு போனால் அரசாங்கம் எங்களது பிரச்சினை தொடர்பாகவோ அல்லது நீர் மற்றும் சிறந்த வாழ்க்கை வசதிகள் தொடர்பாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை” என்று வேலாயுதம் மேலும் தெரிவிக்கின்றார். “நாங்கள் இங்கிருந்து போனல் எங்களுக்கு தொழிலும் இல்லை. எங்களது குழந்தைகளுக்கு உரிய முறையில் கல்வி வசதிகளும் கிடைக்காது என்பது அவரது கவலையாகும்.

பதிலாக வேலாயுதம் மாற்று திட்டம் ஒன்றை முன்வைக்கின்றார். பூந்தோட்டம் முகாமில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதியான மயிலங்குளம் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அங்கு வாழ்வது மிகவும் இலகுவாக அமைவதோடு நாங்களும் மீண்டும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று வேலாயுதம் கூறுகின்றார்.

இந்த முகாமில் வாழும் மற்றுமொருவரான திருமதி ஜே. சசிகலா கூறுகையில்” வேறு எங்காவது எங்களை மீள்குடியேற்றுவார்களானால் அது இங்கேயே தங்க வேண்டும் என்று எம்மை நிர்ப்பந்திப்பதை விட நல்லஇடமாக இருக்கவேண்டும். ஏனெனில் நாம் இங்கு தொடர்ந்து பின்னடைந்த நிலையில் வாழ்வதை விட எமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட அந்த மீள்குடியேற்றம் உதவவேண்டும். ஆனால் மீள் குடியேற்றம் நமது வாழ்வை இன்னும் மேசமாக்கி விடக்கூடாது.” என்கிறார்.

“எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் வவுனியாவுக்குத்தான் பாடசாலைக்கு போகின்றார்கள். நாங்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்தால் எங்களது குழந்தைகளுக்கு புதிய பாடசாலை வேண்டும். அத்துடன் எனது கணவன் தச்சு வேலை செய்தவர். அவர் அவரது பழக்கப்பட்ட தொழிலை இழக்க நேரிட்டால் எங்களது குடும்பம் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்று அவர் மேலும் தெரிவிக்கின்றார்.