Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தண்ணீர்..... எல்லா இடத்திலும் தண்ணீர்...
குடிப்பதற்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லை!

வட-இலங்கையிலிருக்கும் மன்னார் நகரிலிருந்து புத்ளத்திற்கும் அதற்கும் தெற்காகவும் நீண்டு செல்லும் கடற்கரையோரம், அங்கே காணக்கூடிய டொல்பின் மீன்கள், காடுகள் மற்றும் இயற்கை வனப்பு ஆகியவற்றின் காரணமாகப் பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகளை அது கவர்கின்றது.

01.03.2017  |  
மன்னார் மாவட்டம்
Hot work: Families in Silawathura repair their nets.

வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லக்கூகூடிய அழகிய கடலோரம் அவர்களைச் சூழ இருந்தபோதிலும் சிலாவத்துறை பகுதியில் வாழும் பலருக்குக் குடிநீர் கிடைப்பது அரிதாகவேயுள்ளது.

வட-இலங்கையிலிருக்கும் மன்னார் நகரிலிருந்து  புத்தளத்திற்கும் அதற்கும் தெற்காகவும் நீண்டு செல்லும் கடற்கரையோரம், அங்கே காணக்கூடிய டொல்பின் மீன்கள், காடுகள் மற்றும் இயற்கை வனப்பு ஆகியவற்றின் காரணமாகப் பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகளை அது கவர்கின்றது.
ஆனால் சுற்றுச் சூழலின் அழகு ஒரு ஆரோக்கியமற்ற உண்மையை மறைக்கிறது. சிலாவத்துறையில் வசிக்கும் இலங்கையின் கிராமப்புற சாதாரண மக்களுக்குப் போதிய குடிநீர் இல்லாதுள்ளமையே அது.
“இப்பகுதி அழகுள்ளதாக இருந்தாலும் நாங்கள் குடிப்பதற்குப் போதுமான தண்ணீர் இல்லாமலுள்ளது” என இப்பகுதியில் வசிக்கும் 34 வயது ஜூலியற் விளக்குகிறார்.
அரிப்பு என்னும் மீனவக் கிராமத்திலும் அதனைச் சூழவும் வசிக்கும் 1000 ற்கு அதிகனான குடும்பங்கள் இதனால் பாதிப்புப்குள்ளாகி இருக்கின்றன என அவர் கூறுகிறார்.
இங்கு வாழும் அநேகமான மக்கள் மீன் பிடிப்பதையே வாழ்வாதாரமகக் கொண்டுள்ளதுடன் வெய்யில் சுட்டெரிக்கும் பெரும்பாலான நண்பகல் வேளைகளில் கடற்கரையோரத்தில் கிடுகினால் வேயப்பட்ட ஓலைக் குடிசைகளினுள் டசின் கணக்கான குடும்பங்கள் இருப்பதையும் மீன் பிடிக்கும் வலைகளைச் சுத்தஞ் செய்வதையும் காணக்கூடியதாயிருக்கும். தங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காக தாங்கள் பெரிய தகரக் குவளைகளில் சேகரித்துவைத்த நீரைக் குடிப்பார்கள் அதுவும் அநேகமாகச் சூரிய வெப்பத்தினால் சூடேறியிருக்கும். அத்துடன் இங்கேயுள்ள தண்ணீர் பெரும்பாலும் உவர்த்தன்மை உடையதாயிருக்கும். – அது அநேகமாக நன்னீர் மற்றும் உவர் நீரின் கலவையாயிருக்கும்.
“இங்குள்ள தண்ணீர் நல்லதில்லை” என முறையிடும் ஜூலியற் “ நாங்கள் ஒவ்வொரு மாதமும் தண்ணீர் வாங்குவதற்காக அதிக பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. ஆனால் அதுவும் அவ்வளவு நல்லா இல்லை ஏனெனில் இது கிணறுகளிலிருந்து அல்லாமல் குழாய்களிலிருந்தே கிடைக்கிறது.” என்கிறார்

සිලාවතුර
சிலாவத்துறை கடற் கரை

நன்னீர் கிணறுகள் இங்கு இருந்தன. ஆனால் கடல் நீர் உள்ளே தள்ளப்பட்டதனால் அவையும் உவர்த் தன்மை அடைந்துள்ளன என்று பிறிதொரு கிராமம் நினைவுகூர்ந்தது. இதற்கான சில நீர்ப்பாசனத் திட்டங்கள் வேறு இடங்களில் ஆரம்பிப்பட்டுள்ளன என்றாலும் இங்கு அது இல்லை..
“நீர் சுத்திகரிக்கும் திட்டங்களை அரசியல்வாதிகள் தாங்கள் விரும்பும் கிராமங்களுக்குக் கொடுத்ததாகச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இத் திட்டங்களுக்காக நாங்கள் பரிசீலிக்கப் படவில்லை.” என 55 வயது உள்ளூர் வாசியான மு.ஆரோகணம் கூறுகிறார்.


“நாங்கள் இப்பொழுது பகலில் சுடு நீரைக் குடிக்க வேண்டியுள்ளது. அத்துடன் உவர் நீரைக் குடித்து நோயாளிகளாகிறோம்”.

“நாங்கள் உள் நாட்டு யுத்தம் முடிவடைந்து இங்கு திரும்பிவர 30 வருடங்கள் காத்திருந்த துடன் தினமும் பெருங் கஷ்டத்தை அனுபவித்தோம்” எனக் கூறும் வேறொரு கிராமத்தவரான ஏ.சீதாஇ “ஆனாலும் நாங்கள் இப்பொழுது பகலில் சுடு நீரைக் குடிக்க வேண்டியுள்ளது. அத்துடன் உவர் நீரைக் குடித்து நோயாளிகளாகிறோம்”.
அந்தப் பகுதியின் நகர சபைச் செயலாளர் எஸ்.சுதாகன். அவருடைய கணிப்பீட்டின்படி அரிப்பிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் இருக்கும் ஏறத்தாழ 1500 குடும்பங்களுக்குக் குடிநீர் வழங்கப்பட வேண்டுமென்று முழுமையாக உடன்படுகிறார். இது விடயமாக அவர் அரசுக்கு ஒரு திட்டத்தை முன்மொழிந்து அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறார். அப் பகுதியிலுள்ள சில கிராமங்களில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களினால் சிறிய அளவிலான நீர் வழங்கும் திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டு குழாய்கள் செப்பனிடப் பட்டன என்பதுடன் வைத்தியசாலைகள் போன்ற அத்தியவசிய சேவைகளுக்கென வாகனங்களில் ‘பௌசர்’ மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

අත්හැර දැමූ කිවුල් වතුර සහිත ළිං
கைவிடப்பட்ட கிணறுகள்

இராஜரட்டை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளராக இருக்கும் சண்ணா ஜயசுமண அவர்கள் சிலாவத்துறை பகுதியில் சிறுநீரக நோய் பெரிய அளவில் உள்ளதாக அறிக்கையிட்டுள்ளார். இப்பகுதியிலுள்ள நீர் உவர்த்தன்மை அடைந்தமையாலோ அல்லது அங்கு கிடைக்கும் நீருடன் வௌ;வேறு வகையான இரசாயனப் பதார்த்தங்கள் ஒட்டிக் கொண்டிருப்பதனாலோ நிலத்தடி நீர் தரக் குறைவானதாய் உள்ளது. கடந்த காலங்களில் வேறுசில இடங்கள் பற்றிய அறிக்கையின் பிரகாரம் அநேகமான இலங்கையர்கள் மர்மமான ஒரு வகை சிறுநீரக நோயினால் துன்பப்படுகின்றனர்.

Reported http://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-ravaged-by-mystery-kidney-disease-that-has-killed-20000-in-20-years-9985965.html Channa

“நான் எனது பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளேன். அத்துடன் நான் மீன் பிடிக்கப் போவத னால் உயிர் வாழ்வதற்கு நன்றாகச் சம்பாதிக்க முடியும்” என ஜூலியற் வாதிடுகிறார். “இந்தக் கிராமத்தில்இருக்கும் ஏனைய இளைஞர்களும் நானும் நன்றாகக் கல்வி கற்றுள்ளோம். நாங்கள் அரசாங்கத்தில் தங்கியிருக்கவில்லை. நாங்கள் கேட்பதெல்லாம் சிறிதளவு தண்ணீரே –அதனை ஏன் அவர்களாற் தரமுடியாது”.