Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

22 வயதுப் பெண்!
மனித முகங்களைப் புத்தெழிலாக்குகிறர்….

பால்நிலை ரீதியான எல்லைகளை உடைத்தெறிவதற்குப் குமாரி ஒரு போதும் பின் நின்றதில்லை. அவளுடைய குடும்பம் றுவான்வெலையைச் சேர்ந்தது என்பதுடன் தனது தகப்பனாரின் இயந்திரங்கள் பழுதுபார்க்கும் வேலையில் உதவிபுரியத் தொடங்கியது அல்லாமல் பார ஊர்தி செலுத்தக் கற்றுக் கொள்ளத் தொடங்கியதன் மூலம் குமாரி உள்ளூர் வாசிகளைத் திகைப்படைய வைத்தாள்.

08.03.2017  |  
களுத்துறை மாவட்டம்
මල් ශාලාවකට අයත් සියලූ කුදු-මහත් කටයුතුවලට අමතරව අවමංගල රථයේ රියැදුරුවරිය ලෙස කටයුතු කරන්නීද ඇයයි.

தென் இலங்கையிலுள்ள அவள் மனப்பூர்வமான விருப்புடையதும், சம்பாதிக்க கூடியதும், வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடியதுமான ஒரு தொழிலைச் செய்வதற்காக சமூகத்தில் காணப்படும் சம்பிரதாய வழக்கங்களை எதிர்க்கிறார் , றுவான்வெலையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்.

மனித முகங்களை புத்தெழிலுடனும் அமைதியக இருப்பதுபோன்றும் காட்சியளிக்கச் செய்வதற் காக அவள் ஒப்பனைச் சாதனங்களையும் ஏனைய பொருட்களையும் கொண்டு திறமையும் கவனமும் மிக்க அறுவைச் சிகிச்சையை மனித முகங்களுக்குச் செய்கிறாள். ஆனால் என்.ஏ.கே. டினுஷா குமாரி ஒரு அழகுக் கலைஞரோ அல்லது ஒப்பனை வைத்தியரோ அல்ல. அவள் ஒரு ஈமச்சடங்கு ஏற்பாட்டாளர். இவள் ஒரு பெண் என்பதனால் மட்டுமல்ல அவளுடைய வயது காரணமாகவும் இலங்கையில் இது வழமைக்கு மாறானது. அவளுக்கு வயது 22.
பால்நிலை ரீதியான எல்லைகளை உடைத்தெறிவதற்குப் குமாரி ஒரு போதும் பின் நின்றதில்லை. அவளுடைய குடும்பம் றுவான்வெலையைச் சேர்ந்தது என்பதுடன் தனது தகப்பனாரின் இயந்திரங்கள் பழுதுபார்க்கும் வேலையில் உதவிபுரியத் தொடங்கியது அல்லாமல் பார ஊர்தி செலுத்தக் கற்றுக் கொள்ளத் தொடங்கியதன் மூலம் குமாரி உள்ளூர் வாசிகளைத் திகைப்படைய வைத்தாள். குமாரியின் தகப்பனார் கூட்டுறவு அந்திமகால சேவை நிலையம் ஒன்றிலும் பணியாற்றியுள்ளார். அங்கேதான் குமாரியும் இறந்தவர்களின் சடலங்கள் கெடாது தைலமூட்டவும் அவைகளை அடக்கஞ் செய்வதற்குத் தயார் செய்யவும் கற்றுக்கொண்டாள்.
பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டு குமாரி தனக்குச் சொந்தமாக அந்திமகால சேவை நிலையத்தை ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்தாள். “குமாரி அந்திமகால சேவை” நிலையத்தில் மரண ஊர்தியைச் செலுத்துவதிலிருந்து சடலங்களுக்குத் தைலமூட்டுவது வரை எல்லா வேலைகளையும் அவளே செய்கிறாள்.
“எனது தகப்பனார் இவ்வகையான வேலை வெய்வதை எனது மிகச் சிறு வயதிலிருந்தே பார்த்து வந்தமையால் பிணங்கள் பற்றிய பயம் எனக்கில்லை” என விளங்க வைக்கும் குமாரி, “பாடசாலையை விட்டு விலகிய காலத்திலேயே சடலங்களுக்குத் தைலமூட்டுவது எவ்வாறெனத் தெரிந்திருந்தேன். எனக்கு 22 வயதான போது நான் 65 சடலங்களுக்குத் தைலமூட்டியிருந்தேன். அத்துடன் இந்த வேலையை நன்றாகச் செய்கிறேன். மக்கள் மரணத்தின் பின்னரும் தங்கள் உறவினர்கள் அழகாக இருப்பதை விரும்புகின்றனர். ஆதலால் யாராவது இறந்தால் அவர்கள் என்னிடம் வருகிறார்கள்.” எனக் கூறினாள்

/Ruwanwella's unusual undertaker at work.
மாதம் ஒன்றிற்கு பத்திற்கும் பதினைந்திற்கும் இடையிலான சடலங்களுக்குத் தைலமூட்டு வதன் மூலம் குமாரி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை (250,000ஃ-) (€1,550) சம்பாதிக்கிறாள். மரணச் சடங்கு செய்யும் செலவிற்குச் சிரமப்படும் குடும்பங்களுக்குச் சில சமயங்களில் குமாரி தனது கட்டணங்களைக் குறைப்பாள் அல்லது இலவசமாகச் செய்வாள். சொந்தமாக தனக்கு ஒரு மோட்டார் வாகனத்தை வாங்குவேன் என அவள் நம்பிக்கையுடன் பணியாற்றுகிறார். ஆதே நநேரம், தனக்கெனச் சொந்தமான அந்திமகால சேவை நிலையத்தை அமைக்கக்கூடியதாக ஒரு காணியை வாங்குவதற்கும் யோசிக்கிறாள்.
தற்பொழுது அவள் தனது வீட்டிலிருந்தே வேலை செய்கிறாள். மிக அண்மைக் காலத்தில் அவள் பயன்படுத்திய இடத்தின் வாடகை அதிகரிக்கப்பட்டபின் தனது வியாபாரத்தை வீட்டிற்கே மாற்றிக்கொண்டாள். இப்பெழுது அவளுடைய அந்திம கால சேவை நிலையம் அவளுடைய தகப்பனாரின் யந்திரங்கள் பழுதுபார்க்கும் இடத்திற்கு அருகாகவே உள்ளது.
“தங்களுடைய மோட்டார் வாகனங்களைச் சரிபார்க்க மக்கள் வரும்பொழுது அவர்கள் அந்திமகால நிலையத்தின் கருவிகளைக் கண்டவுடன் பீதியடைவர்கள்” எனக் கூறும் குமாரி சிரித்துக் கொண்டே “சிலர் சவப்பெட்டியைக் கண்டு மிகவும் பயமடைகின்றனர்” என்றாள்.;
இப்பொழுது குமாரியின் தாயார் வினிதா சில்வாவும் கூட தனது மகளின் வேலையில் உதவிசெய்கிறார். வழமையாக ஆண்கள் செய்யும் தொழிலைத் தனது மகள் செய்வதையிட்டு அவளுக்குக் கவலையேதும் கிடையாது.


22 வயதான போது நான் 65 சடலங்ளுக்கு தைலமூட்டி ஒப்பனை செய்தேன்.

“எனக்கு ஒரு மகன் இருப்பானாயின் அவனும் இதைச் செய்வான்.” என்று அவள் கட்டமரனுக்கு சொல்லுகிறாள். அவள் தொடர்ந்தும் “ஆனால் எங்களுக்கு ஒரு மகள்தான் இருக்கிறாள். அவள் இதனைச் செய்வதற்குத் தீர்மானித்து விட்டாள். இப்பொழுது அவளுடைய தகப்பனார் இயந்திரம் பழதுபார்க்கும் வேலை செய்யும் பொழுது அவள் அந்திம கால சேவை நிலையத்தை நடத்துகிறாள். நாங்கள் வாழ்க்கையை ஓட்டக்கூடிய வருமானத்தைச் சம்பாதிப்பதுடன் எங்களுக்குக் கடன் எதுவுமில்லை. இருப்பினும் இது ஒரு தொழில் என்பதைக் காட்டிலும் ஒரு சேவையாகும். இதற்கு அர்ப்பணிக்கும் குணம் இருத்தல் வேண்டும். அது எனது மகளிடம் உண்டு” எனக் கூறினாள்.
குமாரியின் தந்தை மஞ்சுள சில்வாவும் இதே கருத்தையே கொண்டுள்ளார். நான் பிரேதங்களுக்குத் தைலம் இடும் பொழுது அவளையும் பயமில்லாவிட்டால் பார்க்கும்படி கூறினேன். அவள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டாள். அவள் மரணத்தையும் பிசாசுகளையும் பற்றிய புராணக் கதைகளையும் புனை கதைகளையும் பற்றி அறிந்திருக்கிறாள். ஆனால் இறுதியில் நாமெல்லோருமே இறக்கத்தான்போகிNறூம் என்றால், எதற்காக நாங்கள் பயமடைய வேண்டும்.”
குமாரி துயருருபவர்களுக்கு உவுகிறாள், என ஜயஷாந்தா கூறுகிறார். “தங்கள் அன்பானவர்களின் உடலை இவ்வளவு இளம் வயதுப் பெண் கையளிக்கும் பெழுது அவர்கள் ஆச்சரியம் அடைவதுடன் அழுவதையும் நிறுத்திக் கொள்கின்றனர். அவளையிட்டு நான் மிகவும் பெருமை அடைகிறேன்” எனக் கூறினார்.
குமாரி மேலும் தெரிவிக்கையில் “ எனது சிநேகிதர்கள் நான் பீதியடைவதுண்டா என்று அடிக்கடி கேட்பார்கள். நான் தைலம் ஊட்டிய மக்களில் யாரேனும் ஒருவரைப் பற்றிக் கனவுகூடக் கண்டதில்லை. இறந்த மனிதர்கள் இடையுறு செய்வதில்லை. ஆனால், உயிர் வாழும் மக்களால் மட்டும் இடையூறு செய்யாமல் இருக்க முடிவதில்லை. அத்துடன் எல்லோரும் மதிக்கப்பட வேண்டும். எப்பொழுதும் நான் வேலை செய்யும் பொழுது அதை ஞாபகத்தில் வைத்திருப்பேன்.”
குமாரி செய்வதற்கு விரும்பாத ஒரேயொரு வேலையும் உண்டு. அதாவது ஒரு சிறு பிள்ளையின் உடலைத் தயாh செய்தலாகும். “ஒரு சமயம் எனது நண்பர் ஒருவர் கேட்டதற்கிணங்க ஒரு 15 வயது சிறுமியின் உடலைத் தயார் செய்தேன். அதன் பின் அன்றிலிருந்து சிறு பிள்ளைகளின் உடல்களில் வேலை செய்வதில்லையெனத் தீர்மானித்தேன். அதன்போது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். எனக்கு ஏற்பட்ட உணர்வு பற்றி விளக்க முடியாதுள்ளேன்.” என்று குமாரி குறிப்பி;ட்டாள்.
இறந்தவர்களுடன் வேலை செய்தமையால் குமாரியின் வாழ்க்கை எதிர்பாராத வகையில் வழமூட்டப்பட்டுள்ளது. இவ்வளவு இளமையான வயதில் அதிகம் கற்றுக்கொண்டுள்ளதாக அவள் உணர்கிறாள். “இறுதியில் நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தரானாலும் பரவாயில்லை. நீங்கள் இவ்வுலகை விட்டுப் போகும் போது பழைய உடுப்புடன் அல்லது பட்டுடனும் வாடிப்போன சில பூக்களுடனும் உங்களைச் சுற்றி வர்ணந்தீட்டப்பட்ட சில பலகைத் துண்டுகளுடனும் தான் போவீர்கள். போதிய பணத்தைச் சம்பாதிப்பதற்கு இதுவே போதும். தங்கள் இறுதி நேரம் வரையும் ஒவ்வொருவரும் சிறப்பாகவும் மசிழ்ச்சியுடனும் வாழவேண்டும்.” என்கிறாள்.