Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இலங்கையில் முதல் முறையாக...
 துறைமுகத்தில்பாரந்தூக்கும் இயந்திர இயக்குனர்களாக பெண்கள்!

மரபுரீதியற்ற தொழிகளுக்கு பெண்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறான பயிற்சியளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

31.03.2017  |  
கொழும்பு மாவட்டம்
පුහුණු වන කණ්ඩායම

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை துறைமுகத்தில் முதல் முறையாக 2017 மார்ச் 08 ஆம் திகதி 12 பெண்களுக்கு கொள்கலன் உள்ளிட்ட பாரந்தூக்கும் இயந்திர இயக்குனர்களாக (Gantry Crane Operators) நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த தொழில் ஏற்கனவே ஆண்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த தொழிலாகும்.

உலகம் முழுவதிலும் உள்ள துறைமுகங்களில் கொள்களன்களை கப்பல்களில் இருந்து கரைக்கும் கரையில் இருந்து கப்பல்களுக்கும் ஏற்றி இறக்குவதற்காக பாரிய பாரந்தூக்கும் இயந்திரங்கள் (கிரேன்கள்) பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரத்தை இயக்கும் சாரதிகளாக (பொறி இயக்க தொழில்நுட்பவியலாளர்களாக) வேலை பார்ப்பதென்பது மிகவும் ஆபத்தானதும் எச்சரிக்கை மிக்கதுமான தொழிலாகும். இலங்கையில் துறைமுகத்தில் அன்று முதல் இன்று வரையில் இந்த பாரந்தூக்கும் இயந்திரத்தை இயக்கும் தொழிலை செய்து வந்தவர்கள் ஆண்களாவர்.
அண்மையில் இலங்கை துறைமுகத்தில் இந்த பாரந்தூக்கும் இயந்திர இயக்குனர்களாக துறைமுக அதிகார சபை நாடளாவிய ரீதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 12 பெண்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவர்களுக்கான பயிற்சிகள் துறைமுக அதிகார சபையின் கீழ் இயங்கும் மஹாபொல தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டன. இவர்களுக்கான பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மரபுரீதியற்ற தொழிகளுக்கு பெண்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறான பயிற்சியளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஏற்கனவே இலங்கையில் முதல் பெண் விமான ஓட்டியாக ஹிருணி குணசேகர பயிற்சி பெற்றுள்ளார். ஆடம்பர பஸ் வண்டி செலுத்தும் முதல் பெண் சாரதியாக தக்ஷி சசிந்தா பயிற்சி பெற்றுள்ளார். இலங்கையின் முதல் பெண் தகைமை பெற்ற கப்பல் (மாலுமி தரத்திலான) அதிகாரியாக பானுக லசந்தி பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மஹாபொல பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி அதிகாரி ரஞ்சித் சேபால தெரிவிக்கையில் கூறியதாவது : இலங்கையில் ஏற்கனவே மூன்று பெண்கள் ஆகாயத்தையும் கடலையுயும் தரை மார்க்கத்திலும் வெற்றிவாகை சூடிவிட்டனர்”. இவர்களுக்கான பயிற்சி வழங்கும் நிகழ்வின் முடிவில் நடைபெற்ற வைபவத்தில் நான் கேட்டேன் பெண்களில் யாராவது துறைமுகத்தில் பாரந்தூக்கும் கனரக இயந்திரத்தை இயக்கும் பயிற்சியை பெற விரும்புகின்றீர்களா, விரும்புபவர்கள் இருந்தால் கையை தூக்குங்கள் என்றேன்”
அதன் பிறகு 12 பெண்கள் பயிற்சி பெறுவதற்காக முன்வந்தனர். அவர்களுக்கு பயற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் ரஞ்சித் சேபால.

Three of the gantry crane trainees get to grips with the job.
Three of the gantry crane trainees get to grips with the job.

ஆனாலும் சமூகத்தில் இத்தகைய தொழில்கள் பலசாலிகளான ஆண்களால் மட்டும் செய்யப்பட வேண்டிய தொழில்கள் என்ற கருத்து நிலவி வருகின்றது என்று அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது : ஆனால் நாம் இவ்வாறான சிந்தனைப் போக்கை மாற்றியமைக்க வேண்டும். இத்தகைய கனரக பளுதூக்கும் இயந்திரங்களை இயக்குவதற்கு திடமான மன உறுதி, பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் இயலுமையுடன் கூடிய ஆற்றல் என்பன மேலதிக தகைமைகளாகும். அதேவேளை பெண்கள் எந்தவொரு தொழிலுக்கும் தகைமை உடையவர்கள் என்ற விடயம உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைதான்;. அத்துடன் எமது பயிற்சி நடவடிக்கைகளில் முறையாகவும் நேர்த்தியாகவும் செய்யும் சில செயற்பாடுகளில் ஆண்களை விட பெண்களே முன்னிலையில் உள்ளனர் என்றார்;.
தொழிலானது தொலைவில் இருந்து பார்க்கும் போது எச்சரிக்கை மிகுந்ததாக தெரியலாம். துறைமுகங்களில் கொள்கலன் ஏற்றி இறக்கும் கனரக பாரந்தூக்கிகள்இயந்திரசாதன வரிசையில் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. இந்த இயந்திரங்கள் நிலத்தில் இருந்து 100 அடிக்கு மேல் உயரமானவையாகும். இது மிகவும் பாரதூரமான தொழிலாகும். பல கோணங்களில் இருந்து பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு தொழிலுமாகும். குறிப்பாக எச்சரிக்கையுடன் இயந்திரத்தை இயக்குவது, கொள்கலனில் உள்ளடங்கும் பாரம் மற்றும் கப்பலில் இருந்து ஏற்றி இறக்குவது தொடர்பாக கப்பலுக்கும் தரைக்கும் இடையிலான சரியான தொடர்பாடல் உட்பட பல விடயங்களில் பாரிய பொறுப்புடன் கருமமாற்ற வேண்டிய தொழிலாகும்.
பயற்சிபெற்ற பெண்களுக்கான ஆரம்ப கட்ட பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் கணினியை மையப்படுத்தியதாகவும் பின்னர் பயிற்சி கப்பலிலும் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பெண்களில் ஒருவரும் இத்தகைய தொழில்கள் தொடர்பாக முன்கூட்டி எந்த அனுபவத்தையும் பெற்றிருக்கவில்லை. அது தொடர்பாக ஒருவர் தெரிவிக்கையில் “நான் ஒருபோதும் இத்தகைய கிரேனில் ஏறிப்பார்த்தது கூட இல்லை. முதன் முதலில் உயரத்தில் ஏறும் போது எனது கால்;கள் நடுங்கின” என்றார்.

පුහුණුකරු සමඟ
පුහුණුකරු සමඟ

இந்தப் பெண்கள் பயிற்சி பெற்ற பின்னர் உலகில் எந்தவொரு நாட்டிலும் இயங்கும் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஏற்றி இறக்கும் பாரந்தூக்கும் கனரக இயந்திரங்களில் வேலை செய்யக்கூடிய தகைமையைப் பெற்றுள்ளனர். ஆனாலும் அதிகமான பெண்கள் தெரிவிக்கையில் அவர்கள் இலங்கை துறைமுகத்தில் பணியாற்றுவதையே விரும்புவதாக கூறுகின்றனர்.
நுகேகொடையைச் சேர்ந்த எரந்தி தெரிவிக்கையில் “இந்தப் பயற்சியின் பின்னர் கப்பலில் பணியாற்றுவது தொடர்பாக மேலதி பயிற்சியை பெற ஆர்வத்துடன் இருப்பதாக கூறுகின்றார். தில்கி நதீசா கொழும்பை அண்மித்த அதுகிரியவைச் சேர்நதவராவார். பேருவளையைச் சேர்ந்த பூஜானி தில்கி கூறுகையில் “நான் துறைமுகத்திற்கு சாதாரண வேலைக்கு பயிற்சி பெறுவதற்காக சேன்றேன். ஆனால் எனக்கு நம்ப முடியாத அளவில் இந்த துறையில் பயற்சி கிடைத்தது” என்றாள். குழியாப்பிட்டியைச் சேர்ந்த நெலும் சொய்சா மற்றும் பியகமவைச் சேர்ந்த சதுரங்கி பெரேரா ஆகியோர் கூறுகையில் “ நாங்கள் பிரமிக்கத்தக்கவகையில் எங்களுக்குப் பயிற்சி கிடைத்தது. இலங்கையின் எற்றுமதி இறக்குமதி சார்ந்த கடல் கடந்த வர்த்தகத்திற்கு உதவி செய்வதன் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு உதவி செய்ய முடியும்” என்று கருதுகின்றோம் என்றனர்;.
படங்கள் : அஜித் செனவிரத்ன