Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

ஒலுவில் துறைமுகம்
படகுகளை நிறுத்த முடியாத துறைமுகம்!

ஒலுவில் துறைமுகம் சுமார் 400 மில்லியன் யூரோ பெறுமதியில் டென்மார்க்கினால் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .

23.04.2017  |  
அம்பாறை மாவட்டம்

ஏ.முஹம்மத் பாயிஸ்

“இங்கிருந்து மீன்பிடித் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்லவும் மீண்டும் இங்கு கொண்டுவரவும் பணம்கொடுக்கவேண்டியுள்ளது. துறைமுகமென்றால் படகுககளை இலகுவாக கடகுக்கு கொண்டுசெல்லவும் கொண்டுவரவும் கரை வசதியாக இருக்க வேணும். இங்க அப்பிடி ஒண்டும் இல்ல….” என்று ஆதங்கப்படுகிறார் மீனவர் அப்துல் ஹமீத்(56).
அம்பாறை மாவட்டம், ஒலுவில் துறைமுகத்தில்பொத்துவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற கரையோரப் பிரதேசங்களைச் சேரந்த மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் தரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆவர்கள் அனைவரினதும் குரல் இதுவாகத்தான் உள்ளது.
ஒலுவில் துறைமுகம் சுமார் 400 மில்லியன் யூரோ  பெறுமதியில் டென்மார்க்கினால் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது . கடந்த 2016 நவம்பர் மாதம் முதல் மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயிலில் மண்நிரம்பி மீனவர்களுக்கு பிரச்சினையைக் கொடுக்கிறது.
“இந்த ஒலுவில் துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டு நல்லமுறையில்தான் மீன்பிடித் தொழிலை செய்து வந்தோம். ஆனால் அண்மைக் காலமாக கடலரிப்பும்; துறைமுக நுழைவாயிலில் மண் நிறைதலும் பெரும் பிரச்சினையாகியுள்ளது. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது எமது படகுகளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கப்பல் துறைமுகத்துக்குள் தரித்து வைத்திருப்பதால் எமது படகுகளுக்கும் சேதம் ஏற்படுகின்றது. டென்மார்க்; அரசாங்கம் கட்டித்தந்த இந்த துறைமுகத்தில் நிரம்பியிருக்கும் மண்ணை அள்ளி எமது தொழிலைச் செய்ய வசதி ஏற்படுத்துவதற்குக் கூட இந்த அரசாங்கம் துரித நட்வடிக்கை எடுக்காமலுள்ளது.” என்று இன்னொரு மீனவரான எஸ், எல். ஆதலெப்பை(52) கூறுகிறார்.

அப்துல் ஹமீத்(56).

முன்னர் இங்கு எந்தவொரு மீன்பிடித் துறைமுகமும் இருக்கவில்லை. இதனால் மீன்பிடிப்படகுகளை கரையிலும் மற்றும் கடலிலும் நங்கூரமிட்டும் வைத்திருந்தோம். ஆனால் கடற்கொந்தளிப்புக் காலங்களில் படகுகளை அப்படி வைக்கமுடியாது. மீன்பிடித் தொழில் நடவடிக்கையிலும் ஈடுபடமுடியாது. இதன்போது உயிரிழப்புக்களும், மீன்பிடிப்படகுகள் சேதமடைவதும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அக்கால கட்டங்களில் நாம்; தொழில் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம். சிலநேரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்று மீன்பிடிப்போம். இந்தக்கஷ்டங்களைக் களைய வந்தது ஒலுவில் துறைமுகம் என நாம் நிம்மதியாக இருந்தோம். மிகுந்த எதர்பார்ப்புடனும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மீன்பிடிப்படகுகளை இங்கு கொண்டு வந்தோம். ஆனால் நிலைமை இருந்ததைவிட மோசமாகிவிட்டது.” என மேலும் விளக்கினார் அப்துல் ஹமீத்(56).
இந்த ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடித் தொழில் முலமான வருமானத்தை நம்பியுள்ளன. மேலும் இதில் நான்கு வகையான மீன்பிடிப் படகுகள் காணப்படுகின்றன. IDAY வகையான 70 படகுகளும் OFRT வகையான 112 உம் MTRB வகை 08 உம் காணப்படுகின்றன. இவற்றை இந்த மண் நிரம்பியிருக்கும் பகுதியால் இழுத்துவருவதும் மீண்டும் கொண்டு செல்வதும் பெரும் பாடாக உள்ளது.
‘மீன்பிடித் துறைமுகம் இன்னும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்துக்கு கையளிக்கப்படவில்லை. அது துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் எமது திணைக்களத்தால் மீனவர்களின் இப்பிரச்சினைக்கு நேரடியாக எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாதுள்ளதாக’ ஒலுவில் துறைமுக வளாகத்திலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் கிளையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.பதுர்சமான் தெரிவிக்கிறார். இந்த இழுபறியில் பாதிக்கப்படுவது மக்கள்தான

எஸ்இ எல். ஆதலெப்பை(52)

“ஆனாலும் பிரதேச அரசியல் வாதிகளின் முயற்சியால் மணலை அகற்றுவதற்கு துறைமுகத்துக்கு தூர்வாரிக் கப்பல்கொண்டுவரப்பட்டு மணல் அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர் போதிய நிதிவசதியளிக்கப்படாமை உட்பட சில காரணங்களால் இம் மணல் அகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு கப்பலை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆனாலும் ஒவ்வொரு முறையம் இவ்வாறு மண்ணை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது.அதற்கு பெரும் செலவு. ஆனாலும் ஏனைய துறைமுகங்களுக்கு வழங்கப்படும் வசதிகள் ஒலுவில் துறைமுகத்துக்கு வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்படுகிறது.” என ஆதங்கப்படுகிறார் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் எம்.பி.நளீம்.
இதன் காரணமாக இம் மீனவர்கள் கடந்த 2017.03.14 ஆம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்மொன்றை முன்னனெடுத்தனர். இதன்போது ஒலுவில் துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் சென்றுவரும் நுழைவாயிலில் நிரம்பிக் கிடக்கும் மண்ணால்; படகுகள் போக்குவரத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை அரசாங்கம் உடன் நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஊர்வலமாகச் சென்று மகஜர் ஒன்றையும் அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜிடம் கையளித்தனர்.

“உண்மையில் ஒலுவில் துறைமுகம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினை நுழைவாயிலில் மண்நிறைவதாகும். அதாவது எமது புவியியலினதும் கடல்நீரோட்டத்தினதும் அடிப்படையில் மண்நிறையும் என்பது சகஜமானதாகும். இந்த துறைமுகத்தின் வடக்குப் பக்கத்தில் மண் அரிப்பு ஏற்படுகிறது, தெற்குப்பக்கத்தில் மண்ணை சேகரிக்கின்றது. இதனால்தான் மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயில் மூடப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார் கடல்சார் பொறியியலாளரும் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எஸ்.ஐ.மன்சூர்.

எஸ்.ஐ.மன்சூர்.

“இதற்கு ஆரம்பத்திலே அரிப்பைத் தடுப்பதற்கு தடுப்புச் சுவரை நிர்மாணித்திருக்க வேண்டும். அது ஏற்படுத்தப்படாததால் இந்நிலைமை தோன்றியுள்ளது. தற்பொழுது நிரம்பியிருக்கும் மண்ணை அகற்றி மீனவர்களுக்கு வசதியேற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு தடவையில் 300 கியூபக் மீட்டர் மண்ணை அகழக்கூடிய கொள்ளளவுடைய தூர்வாரிக் கப்பல்கள்தான் உள்ளன. அதற்கு ஒரு தடவைக்கு 4 இலட்சம் ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது. இந்த திட்டத்திற்கு பெரியதொரு நிதி தேவைப்படுகின்றது. இதனை அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். பெரும்பாலும் ஒவ்வொரு துறைமுகத்திலும் இந்த தூர்வாரிக் கப்பல் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த துறைமுகத்தில் அந்த வசதி இல்லலை. அதை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.” என்று கடல்சார் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் மேலும் தெரிவித்தார்.
இவ்hவறு திட்டமிடலில் உள்ள குறைபாடுகளுகம் நிர்வாகத்தில் உள்ள அசமந்த போக்குகளும் எப்போதும் சாதாரண மக்களை பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே சிதைக்கும் இந்த குறைபாடுகள் உடனடியாகத்தீர்க்கப்படவேண்டியவையே.