Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

திரைப்பட இயக்குநர் கேசவராஜன்.
முன்னர் விடுதலைப் புலிகளுக்காக! இப்போது இலங்கைத் தேசியத்திற்காக!

தமிழ் மக்கள் அனுபவிதத்த துயரங்களை நான் இன்னும் உணர்கின்றேன். அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே தொடர்கின்றன. இப்போது நான் இந்நாட்டிற்கான திரைப்படத்தை தயாரிக்கிறேன். எல்லா மக்களும் அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

04.06.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
திரைப்படஇயக்குனர் கேசவராஜன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரச்சாரத்திற்காக படம்தயாரித்த இயக்குநர்தான் கேசவராஜன் நவரத்னம் என்பவர். இவர் இப்போது தேசிய இலங்கையை பிரதிபலிக்கும் வகையிலான திரைப்படத்தை தயாரிக்கின்றார்.

அவர் அது தொடர்பாக த கட்டுமரானுக்கு வழங்கிய செவ்வி வருமாறு :-

த கட்டுமரன் :- ‘பனை மரக்காடு’ என்ற பெயரில் புதிதாக தயாராகும் உங்களது புதிய திரைப்படம் தொடர்பாக சுருக்கமாக விளக்க முடியுமா?

கேசவராஜன் :- சிவில் யுத்தத்தின் பின்னர் யுத்தம் காரணமாக விதவைகளாகியுள்ள பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விளக்குவதே இந்த திரைப்படத்தின் கருப் பொருளாகும். இந்திய திரைப்படக் கம்பனியொன்று இதற்காக சில உதவிகளை வழங்கியிருக்கின்றது. ஆனாலும் சில பிரச்சினைகளும் உள்ளன. அதனாலே இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக இரண்டு வருட காலப்பகுதியை செலவிட வேண்டியேற்பட்டது.

த கட்டுமரன்: – நீங்கள் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக திரைப்படத்தைத் தயாரித்திருக்கின்றீர்கள்? தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நீங்கள் கையாண்ட ஒரே வழிமுறை அதுமட்டுமா?

கேசவராஜன் :- அப்போதைய சந்தர்ப்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராடுவதை நான் ஏற்க மறுத்தேன். ஆனாலும் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டேன். அவர்களுக்காக நான் முதலாவது திரைப்படத்தை 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தயாரித்தேன். அதன் பின்னரே புலிகள் எனக்கு உதவி செய்தனர்.
தமிழ் மக்கள் அனுபவிதத்த துயரங்களை நான் இன்னும் உணர்கின்றேன். அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே தொடர்கின்றன. இப்போது நான் இந்நாட்டிற்கான திரைப்படத்தை தயாரிக்கிறேன். எல்லா மக்களும் அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். நான் புலிகளோடு இணைவதற்கு முன்னரும் திரைப்படம் தயாரித்தது போன்று அதன் பின்னரும் தயாரித்திருக்கின்றேன்.

த கட்டுமரன்: – யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருந்து வெளிவரும் திரைப்படங்கள் தொடர்பாக உங்களது உணர்வு எவ்வாறிருக்கின்றது?

கேசவராஜன் :-  பலவீனமானதாக இருக்கின்றது. இந்திய திரைப்படங்களை மிஞ்சும் வகையில் வடக்கின் திரைப்படத் தொழில்துறையை வளர்த்து பாதுகாக்க வேண்டும்.

த கட்டுமரன்: – எட்டு வருடங்களுக்கு முன்னர் சிவில் யுத்தம் முடிவடைந்துவிட்டது. இன்னும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவது ஏன்?

கேசவராஜன் :- யுத்தம் காரணமாக மக்கள் இன்னும் ஏரளமான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் அவர்களது குழந்தைகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரையில் யாருக்கும் தெரியாது. இராணுவம் அவர்களது நிலங்களை கைப்பற்றியிருக்கின்றது. இந்த பிரச்சினைகளுக்கு மக்களுக்கு தீர்வுகள் தேவைப்படுகின்றன. அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக எம்மால் கூற முடியாது.

த கட்டுமரன்; : – சிவில் யுயுத்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் தொடர்பாக உங்களது கருத்து என்ன?

கேசவராஜன் :- அத்தகைய சில திரைப்படங்களில் தமிழ் மக்கள் தொடர்பாக ஏராளமான பொய்கள் அல்லது உண்மைக்கு புறம்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நான் நினைக்கவில்லை திரைப்படம் தயாரித்த எவரும் யாழ்ப்பாண நிலமையை சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று. அவ்வாறான நிலையில் இருந்துகொண்டு யாழ்ப்பாணம் தொடர்பாக திரைப்படம் தயாரிக்க முடியுமா? யாழ்ப்பாணத்தின் உண்மையான நிலைமைகளை நேரில் சென்று பார்த்து அறியாமல் எவருக்காவது அந்த இடம் பற்றிய திரைப்படத்தை தயாரிக்க முடியுமா?

த கட்டுமரன்: – தமிழ் மக்களது இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஏதாவது கருத்துக்கள் கூற உங்களால் முடியுமா?

கேசவராஜன் :- தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சிங்களம் மற்றும் தமிழர் தரப்புக்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் அவர்கள் அதனை மறந்துவிடுகின்றனர். இப்போது பேசுவதை விட மேலும் அதிகமாக செயலாற்ற வேண்டும் என்பது எமது தேவையாகும். நாம் அடிக்கடி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கின்றோம். ஏனெனில் அவர்கள் தமிழர் பிரச்சினைக்காக ஏதையாவது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில். ஆனாலும் இதுவரையில் நடந்தது எதுவும் இல்லை.
அவர்கள் பதவிக்கு வந்தவுடன் மொத்தமாக வாக்காளர்களை மறந்துவிடுகின்றனர். அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள் என்றால் அவர்கள் வாழ்வதற்காக உழைக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மையாகும்.

த கட்டுமரன்: – இலங்கையைசை; சேர்ந்த அதிகமான திரைப்பட இயக்குனர்கள் பெரிய பெரிய தயாரிப்புக்களில் ஈடுபடுவதற்காக இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு போயுள்ளனர். ஆனால் நீங்கள் அந்த முடிவை எடுக்கவில்லையல்லவா?

கேசவராஜன் :- ஆம். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான சிலவகையான உணர்வுகள் என் உள்ளத்தில் இருப்பது போன்று அவர்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புணர்வும் எனக்கு இருக்கின்றது. தெற்கில் வாழும் தாய்மார்கள் அவர்களது குழந்தைகளை இழந்திருப்பது போன்றே அதே வழியில்தான் வடக்கில் வாழும் தாய்மார்களும் அவர்களது குழந்தைகளை இழந்து தவிப்பது. அதனால் நான் நினைக்கின்றேன் நான் இந்நாட்டில் இருந்துகொண்டு அவர்களுக்காக உதவி செய்ய வேண்டும் என்று.