Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

- திருமதி சதீஸ் கொளசல்யா
எமது போராட்டம் வெற்றிபெற்றதற்குக் காரணம் மீடியாக்கள் தான்!!!

/ இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் கடலும் வயலும் காடும் சார்ந்த பிரதேசமாக கேப்பாப்புலவு கிராமம் காணப்படுகின்றது. இந்த இடம் இறுதிப் போர் காலத்தில் நந்திக்கடலுக்கு அருகில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் காணப்பட்டது.விடுதலைப்புலிகள் யுத்ததத்தில் தோற்க்கடிக்கப்பட்டதன் பின்னர் இந்த இடம் 2009ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போர் முடிந்ததும் கேப்பாபுலவு கிராமம் மற்றும் அயல் பிரதேசங்கள் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை முகாங்கள் அமைக்கப்பட்டன. கேப்பாப்புலவு எனும் கிராமத்துக்குள் அடங்கிய சிறு கிராமங்களான பிலக்குடியிருப்பு, […]

22.06.2017  |  
முல்லைத்தீவு மாவட்டம்
Mother of three and former teacher, Satish Kausalya, who led the successful protests.

/

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் கடலும் வயலும் காடும் சார்ந்த பிரதேசமாக கேப்பாப்புலவு கிராமம் காணப்படுகின்றது. இந்த இடம் இறுதிப் போர் காலத்தில் நந்திக்கடலுக்கு அருகில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் காணப்பட்டது.விடுதலைப்புலிகள் யுத்ததத்தில் தோற்க்கடிக்கப்பட்டதன் பின்னர் இந்த இடம் 2009ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
போர் முடிந்ததும் கேப்பாபுலவு கிராமம் மற்றும் அயல் பிரதேசங்கள் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை முகாங்கள் அமைக்கப்பட்டன. கேப்பாப்புலவு எனும் கிராமத்துக்குள் அடங்கிய சிறு கிராமங்களான பிலக்குடியிருப்பு, சூரியபுரம் ஆகியவற்றை ஆக்கிரமித்து முப்படை முகாங்கள் அமைக்கப்பட்டன.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு கேப்பாபுலவுக்கு மக்கள் கட்டம்கட்டமாக மீளக்குடியமர்த்தப்பட்டனர். முதற்கட்டமாக சூரிபுரத்தை சேர்ந்த 50 குடும்பங்கள் மீளக்குடியேற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்படாமல். தமது சொந்த இடங்களுக்கு அருகில் இராணுவத்தால் கேப்பாபுலவு கிராமத்திற்கு அருகில் உருவாக்கப்ட்டிருந்த மாதிரி கிராமத்தில் ( ஆழனநட ஏடைடயபந) குடியேற்றப்பட்டனர். இதற்கு அடுத்த கட்டமாக கேப்பாபுலவு மக்கள் மீள தமது சொந்த இடத்தற்கு மீளக்குடியேற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களையும் அவர்களது சொந்தக் காணிகளுக்குள் இராணுவம செல்ல அனுமதிக்கவில்லை. மாதிரி கிராமத்தில் குடியேறுமாறு மக்களைக் கோரினர். அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாது
மறுத்து போராட்டம் நடத்தினர்.

நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் சீராகியதும் அவர்களது காணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் அது வரைக்கும் அவர்கள் தற்காலிகமாக இராணுவத்தினரால் அமைத்துத் தரப்படும் வீடுகளில் குடியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சத்து 75 ஆயிரம்ருபா பெறுமதியான ( 375000 வீட்டுச் செலவு, 2 லட்சம் ரூபா இராணுவ ஆளணி செலவு) வீடுகளை இராணுவம் அமைத்து கொடுத்தது. இதில் இரண்டு இலட்சம் வீடமைக்கும் கூலியாக இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. முக்களை சொந்தக் காணிகளில் குடியேற்றும் போது அவர்கள் தற்காலிகமாக குடியிருப்பதற்காக வழங்கப்பட்ட அரை ஏக்கர் மாதிரி கிராம காணிகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்ற உறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்டு கேப்பாபுலவு மாதிரி கிராமத்தில் மக்கள் குடியேறினர்.
ஆனால் பல வருடங்கள் ஆகியும் சொந்தக் காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்கள் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தினர். அதன் பயனாக 2014 ஆம் ஆண்டில் கேப்பாபுலவின் இராணுவம் ஆக்கிரித்திருந்த மொத்த காணிப் பரப்பான 1500 ஏக்கர்களில் 1000 ஏக்கர் வயல்நிலங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.ஆனால் கேப்பாபுலவு எனும் கிராமம் தொடர்ந்தும் இராணுத்தினர் வசமே இருந்தது. அதற்குள் பாடசாலை, இரண்டு இந்துக் கோவில்கள்;, மருத்துவமனை, பொதுக்கிணறுகள், பொதுநோக்கு மண்டபம் மற்றும் மக்களின் வீடுகள், பயன்தரு மரங்கள் காணப்பட்டன.
இந்தப் பகுதிகள் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லை. இதனால் 2016ம் ஆண்டு கேப்பாபுலவை சேர்ந்த ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சர் மூன்று மாத காலத்திற்க்குள் தீர்வை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி இளித்தார்.இதனால் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேப்பாபுலவுக்கு சென்று 235 ஏக்கர் காணிகளை இராணுவத்திடமிருந்து பொதுமக்களுக்கு வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 146 ஏக்கர் காணிகள் விடப்பட்டன. ஆனால் ஊடகச் செய்திகளில் 235 ஏக்கர் கேப்பாபுலவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்போது நாவலடி, பனைக்காடுகளே விடுவிக்கப்பட்டன.கேப்பாப்புலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதே நேரம்; பிலக்குடியிருப்பு மக்களின் மொத்தம் 84 குடும்பங்களில்; 55குடும்பங்களுக்குரிய் காணிகளை விடுக்கப் போவதாகவும் தங்கள் காணிகளை வந்து பார்வையிடுமாறும் விமானப்படை ஜனவரி மாதத்தில் அறிவித்தது. குறித்த நாளில் மக்கள் தம் காணிகளை பார்வையிடச் சென்றவேளை, வனவள அதிகாரிகளையும் பிரதேச செயலாளரையும் அழைத்துக்கொண்டு பெ;ரவரி 5 ஆம் திகதி வரும்படி அறிவித்து விமானப்படை திருப்பி அனுப்பியது. மறுநாள் வனவள அதிகாரிகளுக்கு நீதிமன்ற வழக்கு இருந்தமையால் அவர்களால் சமூகமளிக்க முடியாதென்றுவிட்டனர். அதற்கு அடுத்து வந்த நாட்களில் மக்களும் அதிகாரிகளும் செல்ல, இராணுவம் இன்னும் சரியாக காணிகளை சுத்தப்படுத்தவில்லை. இரண்டு கிழமை கழித்து வருமாறு கூறினர். பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தமது அதிர்ப்தியைத் தெரிவித்தனர். ஆனால் விமானப்படை அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அங்கு கூடியிருந்த பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்டை முகாம் முன்பாக தமது காணிகளை விடுவிக்குமாறு அறவழிப்போராட்டத்தை 07.02.2017 அன்று ஆரம்பித்தனர்.
இது இரவுபகலாக முப்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சிறுவர்கள் பெண்கள் ஆண்கள் என்று பலரும் சிறிய கொட்டகை அமைத்து தொடர்ந்து போராடினார்கள்.65 பாடசாலை செல்லும் சிறுவர்களும் தொடர்ந்து போராடினார்கள். அதனால் முல்லைத்தீவு ஆசிரியர்கள் சிலரால் மாலைநேரக் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தோடர்ச்சியாக முப்பது நாட்கள் நடைபெற்ற இந்தப் போராட்டம் இறுதியில் அரச தலைவர் கௌரவ மேதகு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடனான சந்திப்பின் பின் மக்கள் தமது சொந்தக்காணிகளில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு விமானப்படைக்கும் அரச அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இதன்பயனாக லேக்குடியிருப்பு மக்களின் காணிகள் மட்டும் விடுவிக்கப்பட்டன. எஞ்சிய கேப்பாப்புலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன. ஆவர்களும் தற்போது தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று போராடுகிறார்கள். இவர்களின் போராட்டம் இன்று 100 நாட்களைத் தாண்டி நடைபெறுகின்றது. இருப்பினும் இன்று வரை கப்பாப்புலவு மக்களின்காணிகள் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் போராட்டம் தொடர்கிறது. இந்தச் சூழ்நிலையில் லேக்குடியியருப்பு போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தி வெற்றி பெற்ற திருமதி சதீஸ் கொளசல்யாவை கட்டுமரம் இணையத்தளத்திற்காககச் சந்தித்தோம்.

யார் இந்த சதீஸ் கௌசல்யா ?

லேக்குடியிரப்புப் போராட்டத்தை முன்னின்று தலைமை தாங்கி நடத்திய சதீஸ் கௌசல்லா திருமணமானவர் மூன்று பிள்ளைகளின் தாய்.இவரது சொந்த இடம் திருகோணமலையிலுள்ள மூதூர் கட்டைவிரிச்சான். யுத்தம் காரணமாக கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பிற்கு 2002ம் ஆண்டு குடியேறியிருந்தார். க.பொ.த. சாதாரண தரம் வரைக்கும் படிச்சிருக்கிறார். முன்பள்ளி ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில்; திட்ட இணைப்பாளரா இருந்துள்ளார். அதுக்குப் பிறகு இடப்பெயர்வின்போது மாத்தளன் பொக்கணை எல்லா இடமும் இருந்து பிறகு இடத்தங்கல் முகாம்கள் பலவற்றில் இருந்து திருகோணமலை சாம்பல் தீவு பிரதேசத்தில் போய் இருந்தவர். அதுக்குப்பிறகு கேப்பாப்பிலவு மாதிரிக்குடியிருப்பில் மீள் குடியேற்றம் என்றதும் சாம்பல் தீவிலிருந்து இங்க வந்து மாதிரிக்கிராமத்தில இருந்தவர்.

சொந்தக் காணிகளை கடற்படையிடமிருந்து விடுவிப்பதற்காக ஒரு மாதகாலமாக நீடிச்ச போராட்டத்தை ஒரு பெண்ணாக தலைமை தாங்கி வெற்றி பெற்றிருக்கிறீங்கள் அது எப்பிடி சாத்தியமாகியது? உங்களுக்கு பக்கபலமா இருந்த விடயங்கள் என்ன?


இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்கூட்டியே திட்டமிடவில்லை இது எம்மீது திணிக்கப்பட்ட ஒரு போராட்டம்.

இராணும் எங்களை எங்கட சொந்தக் காணிகளுக்குள்ள விடுறம் என்று சொல்லுறதும் பிறகு இப்ப விடமுடியாது போங்கோ என்று சொல்லுறதும் திருப்பி காணி இண்டைக்கு விடுறம் வாங்கோ என்று சொல்லுறதும். இப்படி கனதரம் நாங்கள் ஏமாத்தப்பட்டிருக்கிறம். அந்த ஏமாற்றத்தின் மத்தியிலதான் எனக்கொரு குறிக்கோள் வந்தது இந்தப் போராட்டத்தில எப்பிடியும் நான் வெற்றி காணவேணும் நாங்கள் தமிழ் மக்கள் இப்பிடியே தோல்வியுற்ற நிலையில இருக்கக்கூடாது. எதையும் நாங்கள் மக்களாக சேர்ந்து சாதிக்கலாம் என்ற ஒரு சிந்தனையில் இந்தப் போராட்டத்தை ஆரம்பிச்சனான் அதேபோல இந்தப் போராட்டத்தின் வெற்றியில எனக்கு பக்கபலமாக இருந்ததென்று சொல்லப்போனால் அரசியல்வாதிகளாலோ அல்லது வேறு நபர்களாலோ எங்களுக்கு பக்கபலம் இல்லை அவைளின் துணை இருந்தது சாப்பாடு இதர உதவிகள் என்று செய்திருந்தவை.


எங்கட போராட்டத்தை வெளிக்கொண்டு வந்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்தது அனைத்து மீடியாக்களும்தான் என்று உறுதியாகக் கூறலாம் இந்த மீடியாக்கள் இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தை உலக நாடுகளுக்கோ உறவுகளுக்கோ தெரியப்படுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்காது. இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்தது மீடியா என்று தான் சொல்லுவன்.

இந்தப் போராட்டத்தை ஒரு பெண்ணாக தலைமை தாங்கி நடத்திய போது உங்களுக்கிருந்த சவால்கள் , பிரச்னைகள் என்ன?

ஓம் ஆணும் பெண்ணும் சமம் என்பதைத்தான் எங்கட இனத்தில சொல்லியிருக்கிறாங்க. அதே போல ஆண்கள்தான் தனிச்சு நின்று போராட வேணுமென்று அவசியமில்லை. அதே போராட்டத்தை பெண்களும் செய்யலாம். இந்த நிலையில இப்ப ஆண்களுக்கு இருக்கிற சூழல் பிழை. ஏனென்றால் ஆண்கள் சாதாரணமா நடந்துபோகேக்க ஒரு பிரச்சனை என்றால ;கூட இராணுவத்தாலயோ சி.ஐ.டியாலயோ அல்லது ஆராலயோ ஒரு அச்சுறுத்தல் தன்மை இருக்குது. அதே நேரத்தில பெண்கள் எதையும் சாதிக்கலாம் பெண்களால சாதிக் ஏலாதென்று எதுவும் இல்லையென்று இதில நான் கூற விரும்புறன். மற்றது இதில எனக்கு நிறையச் சவால்கள் வந்தது ‘உன்னால ஏலுமோ நீ இதை நடத்தி முடிப்பியோ உன்னால முடிஞ்சால் காணியை இவ்வளவு நாளைக்குள்ள எடுத்துக்காட்டு’ என்றெல்லாம் நிறையப்பேர் சவால் விட்டிருந்தவையள் அந்த சவால்கள் இன்னும் எங்கட போராட்டத்துக்கு வலுச்சேர்த்ததேயொழிய எங்கட போராட்டத்தை கைவிடதூண்டவில்லை இவையள் விட்ட சவால்கள் ஒவ்வொன்றும் எங்களுக்கு இன்னும் வெற்றியைதான் அளிக்குதேயொழிய தோல்வியடைய விடவில்லை.

கடந்த கால அனுபவங்களோடு பார்க்கின்ற போது அரசுக்கெதிராகப் போராடுவதென்பது சாத்தியமற்றதாகவே இருந்திருக்கிறது. இப்போது நீங்கள் தொடர்ச்சியாக முப்பது நாட்கள் அதுவும் விமானப்படை முகாமுக்கு எதிரில் போராடியிருக்கிறீர்கள் அந்தத் துணிவு எப்படி கிடைத்தது?/

நாங்கள் யுத்தத்தில எங்க தமிழ்பேசும் உறவுகளின்ர நிறைய இழப்புக்களைச் சந்திச்சனாங்கள் லட்டச்கணக்கில எங்கட மக்களை இழந்திருக்கிறம். இந்த இழப்புத்தான் எங்களுக்கு பெரிய இழப்பை உண்டு பண்ணியது அந்த நேரத்திலகூட அரசாங்கமோ யாரோ எங்களுக்காக குரல்குடுக்கக்கூடியதாக இருக்கேல்ல. அதேநேரத்தில நாங்கள் இங்க வந்த நேரத்தில இவ்வளவையும் இழந்தனாங்கள் எங்கட காணிகளையும் இழந்த நிலையில இருக்கேக்க எங்கட மனம் விரக்தி அடைஞ்சது. காரணம் அந்த விரக்தியின் நிமித்தம்தான் நாங்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை இத்தனை லட்சக்கணக்கான மக்கள் செத்தது. அந்தளவு மக்களும் செத்தும் எங்களுக்கு ஒரு முடிவும் வரவில்லை அதே நேரத்தில நாங்கள் ஒராள் செத்தால் கூட எங்கட காணிகளைப் பெறலாம் என்ற ஒரு துணிச்சல் எங்களுக்கு வந்தது. அதுக்காக நாங்கள் விடுதலை இயக்கம் சார்பாகவோ இராணுவம் சார்பாகவோ இந்தப் போராட்டத்தை தொடங்கேல்ல மக்கள் சார்பாக தொடங்கினது. முழுக்க முழுக்க என்ர மக்கள் தான் இதுக்கு ஆதரவு அந்த மக்களின்ர பலம்தான் நான் போராட்டத்தை தொடங்கியதுக்கும் காரணம். ஆனால் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் போது இதெல்லாம் எனக்கு பின்னுக்கு விளைவு வரும் என்று சொல்லி நான் யோசிக்கேல்ல நான் எப்பவும் சொல்லுறனான் இந்தப் போராட்டதுக்குப் பிறகு நாள் செல்லவிட்டு என்ர குடும்பத்தில ஒராளையோ அல்லது என்னையோ கடத்தியோ அல்லது என்ர குடும்பத்தில ஒராள அழிக்கவேணும் என்று சொல்லியோ எவர் நினைச்சாலும் அதுக்கும் அடிபணியப்போறதில்லை என்பதையும் இதில சொல்ல விரும்புறன்.

உங்கள் போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு பற்றி குறிப்பிடுங்கள்.

எங்கட போராட்டத்துக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்பேசும் நெஞ்சங்கள் அனைவராலும் சகல வழிகளிலும் எங்களுக்கு உதவிகள் கிடைச்சிருக்கு அதேபோன்று சிங்கள மக்களாலும் எங்களுக்கு உதவிகள் கிடைச்சிருக்கு முஸ்லிம் மக்களாலும் உதவிகள் கிடைச்சிருக்கு அதே போன்று இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களாலும் எல்லாவிதத்திலும் எங்களுக்குரிய ஆதரவு கிடைச்சிருக்கு நான் பிரிச்சுக் கூற விரும்பேல்ல நிறைய ஆதரவு கிடைச்சிருக்கு அந்த ஆதரவுதான் வெற்றியடைய கொண்டுவந்து விட்டிருக்கு.

என்னென்ன ஆதரவு என்று சொல்லுங்க?

நிதியாகவும் கிடைச்சிருக்கு. உலர் உணவுகளாயும் கிடைச்சிருக்கு எங்களுக்கு போராட்டத்துக்கு உந்துசக்தியா இருந்திருக்கினம். சிங்கள ,தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று எல்லாரும் எங்களோட தோளோடு தோள் நின்றிருக்கினம். அவர்கள் முன்னெடுத்துச் செய்யேல்ல இந்தப் போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அவர்கள் முன்னுக்கு வந்து நின்று எதுவும் செய்யேல்ல மக்கள் செய்த போராட்டம் என்றபடியால் எங்கெங்க கதைக்கேலுமோ அந்தந்த இடங்களில கதைச்சு பணமாகவோ பொருளாகவோ கொண்டுவந்து தந்து எங்களுக்கு உதவிகள் செய்திருக்கினம்.

நல்லாட்சி அரசாங்கள் என்று குறிப்பிடப்படுகின்ற இந்த அரசாங்கத்தை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 நாள் வேலைத்திட்டடம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார. நூங்கள் தொடர்ச்சியாக முப்பது நாட்கள் போராடினம். எங்கட 30 நாள் இன்னல்களுக்கு மத்தியிலயும் அவர் எந்த உதவிகளயும் செய்யேல்ல நாங்கள் றோட்டில பிள்ளைகளோட குளிப்பில்ல முழுக்கில்ல வெய்யில்லயும் மழையிலயும் இருந்த நிலையில நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்த்துத்தான் நின்றம். ஆனால் எங்களுக்கு எங்கட காணி விட்டதற்குப் பிறகுதான் தெரியுது உரிய பிரச்சனைகள் ஜனாதிபதி மட்டத்திற்கு தெரியப்படுத்தாதது தான் நல்லாட்சி அரசாங்கம் பின்தங்கி போகுதென்று நினைச்சுப் பார்த்தம் ஆனா உரிய பிரச்சனைகள் எல்லாம் அந்தந்த இடத்துக்குப் போய் சேருகிற நிலையில பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியால தீர்வு கிடைக்கும். ஏனென்றால் எங்களுக்கு கிடைச்ச தீர்வு மாதிரி நிறைய இடங்களில போராட்டங்கள் நடக்குது அதே போன்று நிறைய இடங்களில காணிகள் விடுபட்டும் இருக்குது இந்த நல்லாட்சி அரசாங்கம்தான் இந்தக் காணிகளை விடுவிச்சுக்கொண்டிருக்குது. அதே மாதிரி நிறையபிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரவேணும் இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று நான் கூற விரும்புகிறேன்.

நீங்கள் முப்பது நாட்கள தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினீங்கள் உங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த விடங்கள் என்ன?

அச்சுறுத்தல் என்று சொன்னால் எங்கட கிராமத்தைச் சேர்ந்த சில நபர்கள் மூலமாக சி.ஐ.டி மூலமாக சில அச்சுறுத்தல் நடந்தது. போதைப்பொருள் வழங்கப்பட்டு அவர்கள் மது அருந்திக்கொண்டு வந்து சண்டை பிடிச்சு அப்பிடியெல்லாம் செய்திருக்கினம். சில என்ர கிராமத்து மக்களாலயும் எனக்கு மிரட்டப்பட்டது. நீ போராட்டம் செய்தியென்டால் முகாமுக்குள்ள வந்தவுடன உன்னைக்கொல்லுற முதலாவது ஆள் நானாத்தான் இருப்பன் என்று சொல்லி அச்சுறுத்தினவை. எதுக்குமே நான் பயப்பிடேல்ல அதுகளில நான் சவாலா ஏற்றுக்கொண்டன்.; எந்த நேரத்திலயும் என்ர உயிர் போகலாம் எந்தச் சாவுக்கும் அஞ்சமாட்டேன் என்று கூறியிருந்தேன். அதுக்காக இவர்களின் சவால்களை ஏற்று போராட்டத்தை நான் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளேன். சி.ஐ.டி யின் தூண்டுதலால தான் மக்கள் வந்து அச்சுருத்திவன ஆரம்பத்திலயே லைற்றை நிப்பாட்டியிருக்கிறாங்க வாகனத்தை மோதி அடிக்கிற மாதிரி கொண்டு வந்து வெருட்டியிருக்கிறாங்க தண்ணிய நிப்பாட்டி இருக்கிறாங்க இப்பிடி பலதரப்பட்ட அச்சுறுத்தல் நடந்திருக்கு. அதைவிட பெண்கள் தலைமை தாங்கித்தான் இந்தப் போராட்டம் நடந்திருக்கு. எங்கள நிறைய கமராக்களால மறைமுகமா நின்று வீடியோ புகைப்படம் எடுத்திருக்கினம் எந்தமாதிரியான கோணத்திலயெல்லாம் புகைப்படங்களை எடுத்திருக்கினம் என்று மக்கள் பயந்தவை. சரி நாங்கள் சாகத்துணிஞ்சிட்டம் இதுக்கெல்லாம் பயப்பிடக் கூடாது என்று சொல்லி நான் மக்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறன்.

இந்தப் போராட்டத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெண்ணாக பெண்களுக்கு என்ன சொல்லுவீர்கள்?

எந்தவொரு பெண்ணும் எந்தவொரு விசயத்திலயும் அடிபணியக்கூடாது என்பதையும் அது கிராமத்தில இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி ஒதுக்கப்பட்ட பெண்ணாக இருக்கக்கூடாது என்பதையும் ‘எதையும் நான் முன்னின்று செய்வேன் என்ற துணிச்சலும் பெண்களுக்கு இருக்கவேணும்.’ துணிச்சல் உள்ள பெண்ணாய் எழவேணும்.

அரசியல்வாதிகளால் முடியாததை மக்கள் போராட்டம் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறீர்கள். இப்போது அரசியல்வாதிகளுக்கு என்ன கூறுவீர்கள்.

நான் அரசியல்வாதிகளுக்கு கூறுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால் அவர்கள் போராட்டத்துக்கு பக்கபலமாக நின்று எங்கெங்குபோய் கதைக்கவேணுமோ அங்கெல்லாம் போய் கதைத்தார்கள். ஆனால் போராட்டத்துக்கு உரியவர்கள் தாங்களல்ல நாங்கள் இந்த இடத்தில கதைச்சால் முடிவுகள் எடுக்கலாம் என்ற ரீதியிலதான் போய் கதைச்சவர்கள் அரசில்வாதிகள் வேறு மக்கள் வேறு என்று நாங்கள் இந்தப் போராட்டத்தில பார்க்கேல்ல அதால அரசியல்வாதிகளைத் தள்ளிவைக்க விரும்பேல்ல.

உங்களது போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் ஆதரவு தந்தார்கள். அவர்களது ஆதரவு எந்த அடிப்படையில் உங்களுக்கு கிடைத்தது. அந்த ஆதரவை எப்படிப் பார்க்கிறீர்கள்.

சிங்கள முஸ்லிம் மக்கள் எங்களுக்கு இந்தப் போராட்டத்துக்கு சாப்பாடுகள் கொண்டு வந்து தந்திருக்கினம.; அதைவிட நாங்கள் கேட்டிருந்தம் “இனமத வேறுபாடின்றி சிங்களம் முஸ்லிம் தமிழ் என்று வேறுபாடு இல்லாம அனைவரும் வந்து எங்கட பிரச்சனையை பார்த்து எங்களுக்குரிய தீர்வைப்பெற்றுத்தாருங்கள்” என்று மீடியாக்கள் மூலம் கேட்டிருந்தனாங்கள் அந்த செய்திகளைப் பார்த்து எங்களோட வந்து நிறைப் பேர் போராட்டம் செய்தார்கள் இராணுவமுகாமுக்கு முன்னால தலைமை தாங்கி நின்ற என்னைக்கூட்டிக்கொண்டுபோய் வைச்சுக்கொண்டு அவையள் இராணுவத்துக்கு விளங்கக்கூடிய பாஷைகளில் கத்தி பெரிய கோசம் போட்டு தமிழ் மக்கள் போராடியதைவிட இதற்கு மேலாக போராடி எங்களுக்கு இனமத வேறுபாடு இல்லாம ஒரு போராட்டத்தை மூவின

/

மக்களும் சேர்ந்து போராட்டம் நடத்தினவ. ந்த விதத்திலதான் இந்தப் போராட்டத்தை நடத்தித் தந்தவை. அந்தப் பங்கபளிப்பை நாங்கள் வெறுமனே பார்வைக்காக செய்திற்றுப் போன போராட்டமாக நாங்கள் எண்ணவில்லை எங்களுடைய உணர்வை புரிஞ்சுகொண்டு வந்து செய்த போரட்டமாகத்தான் இதை நாங்கள் எடுத்துக்கொள்ளுறம