Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தகவல் அறியும் சட்டம்.
தகவல்கள் கோரி , முதல் மாதத்தில் மட்டும்3000 விண்ணப்பங்கள்!

பொது மக்கள் எங்களுடன் சுதந்திரமாக உரையாட இதுவரையில் இடமில்லை. ஊடகவியலாளர்கள் எமது அலுவலகத்தை நாடி வந்தால் அவர்களது வாகனங்களை நிறுத்தவதற்கும் இடமில்லை.

30.07.2017  |  
கொழும்பு மாவட்டம்
නීතිඥ එස්.ජී.පුංචිහේවා

இலங்கையில் தகவல் அறிவதற்கான சட்டம் ஒரு வருடத்திற்கு முன்னர் அதாவது 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டதாகும். மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் தகவல் அறிவதற்கான சட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினருமான புஞ்சி ஹேவா தகட்டமரனுக்கு வழங்கிய நேர்காணல் .

த கட்டமரன் : இந்த சட்டத்தை உருவாக்குவதற்கான குழுவின் அங்கத்தவர் 
என்ற அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக தகவல் அறிவதற்கான
சட்டம் அமுல்படுத்தப்படும் முறை தொடர்பாக நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?

எஸ்.ஜி. புஞ்சி ஹேவா : பொதுமக்கள் எவ்வாறு இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றார்கள் என்பதிலே இதன் வெற்றி காணப்படுகின்றது. அரசாங்கம் நீண்ட காலமாக எங்களுக்கு கூறிவருகின்ற விடயம்தான் எந்த விடயம் சரியானது. எந்த விடயம் பொருத்தமற்றது என்பது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு தவிர ஏனைய எல்லா விடயங்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்த சட்டம் அமுலுக்கு வந்த முதல் மாதமான மார்ச் மாதத்தில் 3000 விண்ணப்பப் படிவங்கள் அளவில் எங்களுக்கு கிடைத்தன. இது மிகவும் முக்கியமான விடயமாகும். ஆனாலும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள இதே சட்டம் எதிர்பார்த்த அளவில் வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இலங்கையில் அதற்கு மாற்றமான நிலை காணப்படுவதற்கு காரணம் இங்கு அறிவு மட்டம் உயர்வாக இருப்பதாகும். அத்துடன் பொது மகக்கள் வேறும் அலுவல்களில் இருக்கின்றனர். அவர்கள் கலாச்சார ரீதியாக மிகவும் ஈடுபாடு உடையவர்களாவர். இங்கு நிலைமை மாற்றமடைய சிறிது காலம் செல்லலாம் என்று நான் நினைக்கின்றேன்.
பொதுமக்கள் இவ்வாறே தொடர்ந்தும் செயற்படுபவர்களாக இருந்தால் அரசாங்கத்திற்கு எதையும் மறைக்க முடியாது.

த கட்டமரன்; : ஆணைக்குழுவுக்கு எவ்வாறான பிரச்சினைகள் தொடர்பான
 அனுபவம் கிடைத்திருக்கின்றது என்று கூற முடியுமா?

புஞ்சி ஹேவா : நல்லது. எங்களுக்கு இன்னும் சொந்தமான ஒரு அலுவலகம் இல்லை. பொது மக்கள் எங்களுடன் சுதந்திரமாக உரையாட இதுவரையில் இடமில்லை. ஊடகவியலாளர்கள் எமது அலுவலகத்தை நாடி வந்தால் அவர்களது வாகனங்களை நிறுத்தவதற்கும் இடமில்லை.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான நிதி உலக வங்கியிடம் இருந்தே கிடைக்க வேண்டியிருக்கின்றது. அந்த நிதி வருவதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. உதாரணமாக ஆணைக்குழுவுக்கு 19 ஊழியர்கள் தேவைப்பட்டபோதும் இதுவரையில் நியமிக்கப்பட்டிருப்பது 06 பேர் மட்டுமே.

த கட்டமரன்: அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 
இந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டு இப்போது அதன் பலனை மக்கள் 
அனுபவிப்பதை முடக்குவதற்காக அரசாங்கம் வேண்டுமென்றே இவ்வாறு 
செயற்படுகின்றது என்று கூற முடியுமா? 

නීතිඥ එස්.ජී.පුංචිහේවා

புஞ்சி ஹேவா : அரசாங்கத்திற்கு தகவலை மறைக்க வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் பொதுமக்கள் எல்லா விடயங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பவில்லை. இருந்தாலும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும். அரசாங்கத்திடம் வழங்க நிதி இல்லை. அதனால் தேவையான வசதிகளை வழங்க வில்லை. ஆனாலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது சட்டம் தான். இனி இந்த சட்டத்தை இல்லாமல் செய்ய முடியாது. மொத்தத்தில் இவ்வாறு சொல்வதற்கான காலம் முதிர்ச்சியடையவில்லை. அரசாங்க நிறுவனங்களின் கலாச்சாரத்தை மாற்றியமைப்பதானது இலகுவான காரியமாக இல்லை.

த கட்டமரன்; : அரசாங்கம், சட்டத்திற்கும் ஆணைக்குழுவுக்கும் உதவி செய்யும் என்று

நீங்கள் கருதுகின்றீர்களா?

புஞ்சி ஹேவா : அரசாங்கம் எதையும் செய்யலாம். ஏனெனில் இந்த சட்டத்தை பொதுமக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதற்கு கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் நிறைய ஆதாரங்களைக் காணலாம். அரச நிறுவனங்களில் இருந்து தகவல்களைக் கோரி பாhரிய அளவிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
உதாரணமாக : களுத்துறையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டம்பற்றிய தகவல்களைக் கோரி அங்கு மாநகர சபைக்கு பெருமளவில் கோரிக்கைகள் விடுக்கப் பட்டுள்ளன. அதிகாரிகள் தகவல்களை வழங்க மறுப்பு தெரிவித்தபோது மக்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாம் இரண்டு தரப்பாரையும் சந்திக்கச் செய்து நிலைமைகளை விளக்கிய போது அவர்களால் கோரப்பட்ட தகவல்களை அதிகாரிகள் வழங்கக்கூடியதாக இருந்தது. அப்போதுதான் அதிகாரிகள் அவர்களால் தகவல்களை வழங்க மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்ற விடயத்தை புரிந்து கொண்டனர். இந்த சட்டத்தை பாதுகாப்பதற்காக மக்கள் பங்காற்றுகின்றனர் என்பது இதில் இருந்து தெளிவாகின்றது. இந்நிலைமை தொடருமாயின் அரசாங்கம் எதையும் மூடி மறைக்க முடியாது. பொதுச் சேவை அதிகாரிகள் இந்த புதிய கலாச்சாரத்திற்குள் வந்தே ஆக வேண்டும்.

த கட்டமரன்; : புதிய சட்டம் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாக 
சில அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர் என்று நீங்கள் கருதவில்லையா?

புஞ்சி ஹேவா : ஆம். அதிகமான தெளிவுபடுத்தல்கள் அல்லது அறிவூட்டல்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. துரதிஷ்டவசமாக அரசாங்கத்திடம் இந்தப் பணியை முன்னெடுப்பதற்கு போதுமான வசதிகள் இதுவரையில் இல்லாத நிலை இருந்து வருகின்றது. அத்துடன் அரசாங்க நிறுவனங்கள் இந்த சட்டத்திற்கு போதுமான வசதிகள் வழங்க முன்வருவதுமில்லை. அதனாலத்தான் சிவில் சமூக அமைப்புக்கள் இந்த சட்டம் பற்றிய விடயத்தில் பொதுமக்களை அறிவூட்டல் செய்வதற்கு மேலும் பங்காற்ற வேண்டிய தேவை இருந்து வருகின்றது.