Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நல்லூர் நாடகத் திருவிழா
ஓர் சமூக வெளிப் போராட்டம்

/ஈழத்தில் நாடகப் பண்பாட்டில் யாராலும் தவிர்த்துவிடமுடியாத எல்லையை தொட்டிருக்கும் செயல் திறன் அரங்க இயக்கம் யாழ்ப்பாணத்தின் கலை அடையாளங்களில் மிக முக்கியமான ஓர் நிறுவனம். கலைசார் நிறுவனமாக ஒருபுறம் தன்னை உருவகித்துக்கொண்டாலும் இந்துமத கலை அடையாளமாக, சமூகவியல் கலை அடையாளமாக தன்னுடைய தனித்தன்மைகளாலும் தனித்தியங்குதலாலும் நிரூபித்திருக்கிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்திருக்கின்ற இன்றைய சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மனங்களை சீர்செய்வதற்கு பல சமூக ஆற்றுப்படுத்தல்(ஊழஅஅரnவைல ஊழரளெநடடiபெ) நிகழ்வுகள் அவசியமாகின்றன.இந்தப்பணியை அரங்கு செவ்வனே செய்ய முடியும். அதனை […]

30.09.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

/ஈழத்தில் நாடகப் பண்பாட்டில் யாராலும் தவிர்த்துவிடமுடியாத எல்லையை தொட்டிருக்கும் செயல் திறன் அரங்க இயக்கம் யாழ்ப்பாணத்தின் கலை அடையாளங்களில் மிக முக்கியமான ஓர் நிறுவனம். கலைசார் நிறுவனமாக ஒருபுறம் தன்னை உருவகித்துக்கொண்டாலும் இந்துமத கலை அடையாளமாக, சமூகவியல் கலை அடையாளமாக தன்னுடைய தனித்தன்மைகளாலும் தனித்தியங்குதலாலும் நிரூபித்திருக்கிறது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்திருக்கின்ற இன்றைய சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மனங்களை சீர்செய்வதற்கு பல சமூக ஆற்றுப்படுத்தல்(ஊழஅஅரnவைல ஊழரளெநடடiபெ) நிகழ்வுகள் அவசியமாகின்றன.இந்தப்பணியை அரங்கு செவ்வனே செய்ய முடியும். அதனை சமூக ஆற்றுப்படுத்தலுக்கான கருவியாக ஒரு சிலரே பயன்படுத்துகின்றார்கள். அதில் ஈழத்து நாடக செல்நெறியில் தன்கெனவொரு தனியான முத்திரையைப் பதித்திருக்கின்ற செயல் திறன் அரங்க இயக்கம் தொடர்ச்சியாக முழு ஈடுபாட்டுடன் செயற்படுத்துகின்றது. இதனால் இந்த நிறுவனத்தை; தவிர்த்து ஈழத்து நாடக வரலாற்றைப் பார்க்க முடியாது எனலாம்.

2003 காலப்பகுதிகளில் சத்தங்களை நிறுத்தி ஆயுதங்கள் மௌனித்திருந்த நிலைமையில் அதாவது விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சமாதான காலத்தில் செயல் திறன் அரங்க இயக்கம் ஓர் சமூகவெளி போராட்ட அமைப்பாக உதயமானது.


ஆயுதப் போராட்ட சுழலுக்குள் இருபக்க தவிலாக நொந்துகொண்டிருந்த மக்களின் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை உருவாக்குவதில் அரங்கு பயன்படுத்தப்பட்டது.

இந்நிறுவனத்தின் மிக முக்கிய செயற்திட்டமாக மிதிவெடி விளிப்புணர்வுச் செயற்பாடு அமைந்தது. இடம்பெயரந்து வாழ்ந்த மக்கள் மீளத் தமது சொந்த இடங்களில் குடியேறியபோது வெடிபொருட்களின் அபாயத்தை எதிர் நோக்கினார்கள். இதற்காக கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வெற்றியடைந்ததை இதன் முக்கியமான பணி எனலாம்.இதே போன்று பல்வேறு சமூக அரசியல் விடயங்கள் தொடர்பான மக்களுக்கான விழிப்புணர்வையும் அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளைப் புரிதல்ப்படுத்தி அவர்களுடைய குரலாக ஒலிப்பதற்கு அரங்கு ஒரு கருவியாகப் செயல்பட்டது.

செயல் திறன் அரங்க இயக்கத்தின் உணர்திறன்மிக்க சமூக சேவையின் அதிகூடிய செயற்பாடாக 2006ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப்பேரலையின் போதான சேவையினை கோடி காட்டலாம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கான சமூக ஆற்றுப்படுத்தல் பணியை அரங்கினூடாக மேற்கொண்டிருந்தார்கள்.

/இதே போன்று மிக நெருக்கடியான காலகட்டத்தில் பேசாப்பொருளை பேசும் பணியையும் மேற்கொண்டிருந்தனர். அதனடிப்படையில் மக்களின் குரலாக அவர்கள் சார்பில் ஒலித்திருக்கிறது. குறிப்பாக தமிழ்மக்கள் மத்தியில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சனையான காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்னையை போன்ற மிக நெருக்கடியான காலகட்டத்தில் பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நேரடி அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் “அக்கினிப் பெருமூச்சு” எனும் நாடகத்தினூடாக பேசியிருந்தது.

2004ம் ஆண்டு பிரமாண்டமானளவில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடைபெற்ற கலை இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் நிகழ்வான ‘மானுடத்தின் ஒன்றுகூடல’; நிகழ்வில் இந்நாடகம் பற்றி பரவலாகப் ஆய்வுக்குட்படுத்தி பேசப்பட்டமை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.

நவீன காலஓட்டத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறிவரும், இல்லாமலும் ஆக்கப்படும் இன்றைய சூழலில் செயல் திறன் அரங்க இயக்கம் தொன்றுதொட்டு வழக்கில் இருந்துவரும் தமிழர் தம் நாடகப்பண்பாட்டை அழிவுற விடாது அதற்கென நல்லூரில் பிரத்தியேக அரங்கை அமைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லூர கோவில் திருவிழாவோடு நாடகத்திருவிழாவையும் நடத்தி வருகிறது.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மகிழ்ந்திருப்பதற்கான வாய்பபுக்கள் கிடைப்பதில்லை இந்தச் சூழலில் செயல் திறன் அரங்க இயக்கம் கூடுதலாக சிறுவர் அரங்கைப்பிரதானப்படுத்தி சிறுவர் நாடகங்களை மேடையேற்றிவருகிறது. இங்கு சிறுவர்கள் நாடகங்களில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் ஆடுவதற்கும்; விளையாடுவதற்குமான வெளி கிடைக்கிறது. இதனால் சிறுவர்கள் நல்லூர் நாடகத் திருவிழாவில் அதிகளவு ஒன்று கூடுகிறார்கள்.

இந்த ஆண்டு கடந்த 09.08.2017 தொடக்கம் 18.08.2017 வரையான பத்து நாட்களும் நல்லூரில் நாடகத்திருவிழா கோலாகலமாக அரங்கேறியிருந்தது.
மாலை 06.45 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு நள்ளிரவுவரையிலும் தொடர்ந்து இருந்தமை இதன் சிறப்பு. ஒவ்வொரு வருடமும் தனியே ஒரே பாணியிலான நாடகங்களை மேடையேற்றாது நவீன நாடகங்கள், பாரம்பரிய நாடகங்கள், சிறுவர் நாடகங்கள்;, இசை நாடகங்கள் என்று பல வகையான நாடகங்களை மேடையேற்றி வருகின்றார்கள். அந்த வகையில் இம்முறையும் புதிய அரங்குகள் அறிமுகமாகியிருந்தன. அறிமுக அரங்காக பொம்மலாட்ட நாடகமும், நகைச்சுவை நாடகமும் அரங்கேறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

/இந்தாண்டு மேடையேறிய நாடகங்களாக முறையே தே.தேவானந்தின் பாட்டி(பொம்மலாட்ட நாடகம்), ஏகாந்தம்(வேடமுக நாடகம்), இது கூத்தல்ல நிஜம்(விழிப்புணர்வு நாடகம்), பசுவும் புலியும்(சிறுவர் நாடகம்), ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்பது பேரும்(சிறுவர் நாடகம்), மாயச் சங்கு(சிறுவர் நாடகம்) மற்றும் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் பஞ்சவர்ண நரியார்(சிறுவர் நாடகம்), கூடிவிளையாடு பாப்பா(சிறுவர் நாடகம்) நாடகங்களும் இவற்றோடு பேராசிரியர் நந்தியின் சிங்கப்பூர் டொக்டர்(நகைச்சுவை நாடகம்), நாட்டார் வழக்கியற் கழகத்தின் ‘அரிச்சந்திர மயான காண்டம்(இசை நாடகம்) என்பனவும் மேடையேறியிருந்தன.

திறந்தவெளி அரங்கில் மழைத்தூறல் இரவுக்கூதல் காற்று என இயற்கையோடு கலந்து சிறுவர்,குழந்தைகள் பெரியவர் என அனைவரையும் நான்கு மணிநேரங்களுக்கும் மேலாக கட்டிப்போட்டு ஒரு அரங்கப்பண்பாட்டை இந்த நிகழ்வு உருவாக்கியிருக்கின்றது.

இந்தாண்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராசிரியர் சி. மௌனகுரு
“ பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, குழந்தை ம. சண்முகலிங்கம், நான் என பலரும் பெரும் பிரயத்தனங்களோடு அரங்கியலில் மாற்றங்களை கொண்டுவர பாடுபட்டோம். அவை இப்போது ஆறுதளிக்கக்கூடிய ஓர் நிலைக்கு வந்துவிட்டதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. இதனைக் காண்கையில் பேரானந்தம் கொள்கிறேன். உண்மையில் அரங்கின் மூலம் பல வியத்தகு மாற்றங்களை நிகழ்த்தலாம் ஆனால் நாம் யாரும் முயல்வதில்லை. குழந்தைகளை மகிழ்வித்தல் என்பது ஒரு கடினமான கலை அதனை மிக எளிதாhக செய்கின்றது இந்த செயல்திறன் அரங்க இயக்கம்.” ஏனக்கூறியிருந்தமை நிகழ்வின் சிறப்புக்கான எடுத்துக்காட்டாகும்.

‘நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையடையோம்’ எனும்; வாசகத்திற்கேற்ப நாடகக் கலையை நலியாது பாதுகாக்கின்ற நல்லூர் நாடகத் திருவிழா ஈழத்தின் நாடகக்கலையில் ஓர் வரலாற்றுப் பயணம் எனலாம்.