Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மீள் குடியேற்றம்.
வறண்ட பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் பரிதாப நிலை…!

மீள்குடியமர்த்தப்பட்ட, இடம்பெயர்ந்த இலங்கையர்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களால் காய்கறிகளை வளர்க்க முடியாதுள்ளது. போக்குவரத்து வசதிகள் கூட அங்கில்லை.

08.10.2017  |  
அனுராதபுரம் மாவட்டம்
The resettled Sri Lankans are struggling in a dead zone.

உள்நாட்டுப் போருக்குப் பிறகு மீள்குடியமர்த்தப்பட்ட, இடம்பெயர்ந்த இலங்கையர்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களால் காய்கறிகளை வளர்க்க முடியாதுள்ளது. போக்குவரத்து வசதிகள் கூட அங்கில்லை.
இளம் தாயான டபிள்யூ. ஜி. பேமாவதி, நான்கு வருடங்களுக்கு முன்னர், சம்பத் நுவர என்ற இந்த கிராமத்திற்கு இடம்பெயர்ந்தார்.
உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இடம்பெயர்ந்த மக்களை இலங்கை அரசு மீள் குடியமர்த்தியுள்ள கிராமங்களில் நாமல்லபுரவும் ஒன்றாகும். இங்கு எந்த வசதிகளும் கிடையாது. எந்த உள்கட்டமைப்பும் இல்லை, வேலைவாய்ப்புகள் இல்லை, நீர் பஞ்சம் காணமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க கடினமாக உள்ளது, பாடசாலை மற்றும் மருத்துவம் போன்ற வசதிகள் மிகத் தொலைவிலேயே உள்ளன. பொது போக்குவரத்து இல்லையென்றே சொல்லவேண்டும், எப்போதாவது ஒரு பஸ் வரும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது கணவனை இழந்த பேமாவதி, தற்போது, தனது இரண்டு பிள்ளைகளை தனியாக பராமரிக்கவேண்டிய நிலையில் உள்ளார். கணவன் இருந்தபோது கூலிவேலை செய்து பிழைத்தவந்தனர். ஆனால் இப்போது அவளுக்கு, தனது பிள்ளைகளை பராமரிக்க, பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
“ஒருமுறை, உணவு அனைத்தும் தீர்ந்துவிட்டது பிள்ளைகளைத் தனியாக விட்டு, என்னால் வீட்டைவிட்டு வெளியேறவும் முடியவில்லை. மூன்று நாட்கள் பட்டினியில் கிடந்தேன். அதிர்ஷ்டவசமாக, சில வழிப்போக்கர்கள் எமக்கு உணவு வழங்கினார். இப்போது நாம் மத நிறுவங்களினால் வழங்கப்படும் தர்மத்திலேயே தங்கியுள்ளோம்” என்று பேமாவதி கூறுகின்றார்.


“நாம் இந்த கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களாக வசித்து வருகிறோம். எமக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் ஒன்றுக்கும் உதவாத, சேறும் சகதியுமாக உள்ள, சதுப்பு நிலமாகும்.

“என் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேறு வழி ஏதும் இருந்தால், நான் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை” என்றும் பேமாவதி கூறுகிறார்.
மகாவலி ‘எல்’ பிரிவில் உள்ள ஏனைய கிராமங்களின் நிலையும் இதுவேயாகும். சுமார் 4,000 இடம்பெயர்ந்த குடும்பங்கள் இங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ளன.
இங்கு அன்றாடம் செய்யப்படும் தொழிலுக்கு கொடுக்கப்படும் கூலி, மிகவும் குறைவானதாகும். இங்கு ஆயிரம் ரூபா  கூலியாக பெறுதல் என்பது மிகவு கஷ்டமான விடயம், உணவோ, தேநீரோ வழங்குவதில்லை. தண்ணீர்கூட தர மாட்டார்கள்; வருமானத்துக்கு வழியில்லை ஆனால் செலவுகளுக்கு குறைவில்லை” என்று இதே இடத்தைச் சேர்ந்த சமில குமாரி நிலந்தி என்ற பெண் கூறுகின்றார்.
இங்கு கஜபாபுர என்ற மற்றுமொரு கிராமத்தில் வசிக்கும் ஐ.ஜீ. சுரேஷ் என்பவர் “நாம் இந்த கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களாக வசித்து வருகிறோம். எமக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் ஒன்றுக்கும் உதவாத,  சேறும்சகதியுமாக உள்ள, சதுப்பு நிலமாகும். இங்கு எதனையும் வளர்க்க முடியாதுள்ளது. மீறி, கொஞ்சம் மேட்டு நிலத்தில் பயிரிட்டால், அதுவும் பயனளிப்பதில்லை. வேறு தொழில் செய்யும் வாய்ப்புகளும் இங்கு கிடையாது” என்று கூறுகின்றார்.
இதன் காரணமாக, சுரேஷ் கட்டுமான தளத்தில் வேலை செய்வதற்கு கொழும்பு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்.
இதே கஜபாபுரவில் வசிக்கும் மற்றொரு பெண்ணான சந்துணி தில்ஹானி என்பவர் “இங்கு உழைப்பதற்கு வேறு வழியில்லை என்பதால், மத்தியகிழக்கு செல்வதற்கு உத்தேசித்துள்ளேன். மாவட்டத்தில் ஒரு ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்படலாம் என்று ஒரு செய்தியுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் தாம் திரும்பிவந்து அதில் இணைந்த்துக் கொள்ளலாம்” என்று சொல்கின்றார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக வெலிஓயா பிரதேச செயலாளர் கே.ஜீ. தர்மத்திலக்கவை தொடர்புகொண்டு விசாரித்தோம். அதற்கு அவர் “மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம், என்றாலும், எமக்கு உத்தியோகத்தர் பற்றாக்குறை உள்ளது. அதனால் உரிய சேவையினை வழங்குவதற்கு கடினமாக உள்ளது” என்கிறார்.
வேலையில்லா பிரச்சினைக்குத் தீர்வாக ஆடை தொழிற்சாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆயினும், இங்கு வாழ முடியாத சூழ்நிலை காரணத்தினால் பல குடும்பங்கள் ஏற்கனவே இங்கிருந்து வெளியேறிவிட்டன அவ்வாறு வெளியேறியோர் எத்தனைபேர் என்பதற்கு அவரால் உத்தியோகப் பூர்வமாக பதிலளிக்க முடியவில்லை.