Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

ஊடக கண்காணிப்பு அமைப்பின் தலைவர்: 
 பத்திரிகைத்துறை ,அரச தலையீடின்றி இருத்தல் வேண்டும்.

அரசியலமைப்பு நிர்ணய சபை உறுபிப்பினர்கள் ஏழு பேர் தங்கள் தங்கள் கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்தும் அரசியல்வாதிகளாய் உள்ளனர்.  இவ்வாறான ஒரு சபை எங்ஙனம் சுயாதீனமாய் இருக்கும் என்பதே எங்கள் கேள்வி

27.10.2017  |  
கொழும்பு மாவட்டம்
Head of Ethics Eye, Deepanjalie Abeywardena.

உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள் விதிமுறைகளுக்கு அமைவாகச் செயற்படுகிறார்களா எனக் கண்காணிப் பதில் அரசாங்கம் தன்னை ஈடுபடுத்துமானால் அது அரசாங்கத்திற்குப் ஏன் பாதகமானதாக இருக்கும்? என்பதுபற்றி ‘எத்திக் ஐ’ (Ethics Eye) எனும் ஊடகங்களைக் கண்காணிக்கும் அமைப்பின் தலைவர் விளக்கமளிக்கிறார்.

த கட்டமரன்: எத்திக் ஐ போன்ற ஓரு செயல்முறை இலங்கைக்கு ஏன் தேவைப்படுகிறது?

டீபாஞ்ஜலி அபேவர்த்தன: உள்நாட்டு ஊடகத்துறையை நாங்கள் நாளுக்கு நாள் மற்றும் வாரா வாரம் என்ற ரீதியில் பகுப்பாய்வு செய்கிறோம். ஊடகங்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக நாங்கள் கவனம் செலுத்து கிறோம்.  அவ்வாறு செய்ததினால் இந் நாட்டிலே செய்தி அறிக்கையிடல் தரம் குறைந்து இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

த கட்டமரன்: உள்நாட்டு ஊடகத் துறையை நீங்கள் எவ்வாறு அளவீடு செய்கிறீர்கள்?  அது சிரமமான ஒன்றாக இருக்கும் போலத் தெரிகிறதே?

அபேவர்த்தன: ஆம்  அது சிரமமானதுதான். இருந்தாலும் நாங்கள் த ஐலன்ட், மவ்பிம, லங்காதீப, தினமின மற்றும் சிலுமின போன்ற புதினத் தாள்களின் மாதிரி ஒவ்வென்றை நாளாந்த மற்றும் வாராந்த ரீதியில் எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அதில் தெளிவின்மை இருந்தது. ஆனால் இப்பொழுது நெறிமுறை மீறல்கள் வழக்கமாக எங்கே நடைபெறுகின்;றன என்பது எங்களுக்குத் தெரியும்.  எங்கள் நோக்கம் ஊடகத் துறையிலுள்ள உயர் குழாத்தினருக்கு அறிவூட்டுவதாகும்.

த கட்டமரன்: ஏனைய நாடுகளில் உள்ளவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஊடகத்துறை எவ்வாறு உள்ளது?

அபேவர்த்தன: நெறிமுறை மீறல்களில் இலங்கையின் ஊடகத் துறை ஏனைய நாடுகளிலும் பார்க்க அதிக அளவிலா அல்லது குறைந்த அளவிலா உள்ளது எனக் கூறுவது கடினம்.  அது தனித் தனியான விடயங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.  உதாரணத்திற்கு பாகிஸ்தானில் அவர்களுக்கு நிறையப் பிரச்சனைகள் இருப்பதுடன் அவர்கள் வன்முறை மற்றும் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு நாடக வடிவில் உருவங்கொடுக்கும் விடயங்களைச் செய்கின்றனர்.  இலங்கையில் நாங்கள் இந்த விடயங்களில் ஓரளவிற்கு சிறப்பாக இயங்குகிறோம்.  இருந்தாலும் அத்துடன் நாங்கள் திருப்தியடைய முடியாது.
த கட்டமரன்: உள்நாட்டுத் தொலைக்காட்சிகளை விட்டுவிட்டு இந்நாட்டின் அச்சு வெளியீடுகள் பற்றி அதிக கவனஞ் செலுத்தப்படுவது ஏன்?

அபேவர்த்தன:இலங்கையர்கள் அச்சு ஊடகங்களையே அதிகம் பார்க்கிறார்கள். செய்திகளுக்காகத் தொலைக்காட்சி  பார்க்கிறார்கள்.  ஆனால் நாள் முடிவில் புதினத்தாள்களைப் பார்க்கிறார்கள்.  மக்களின் மனங்கள் இன்னமும் அச்சு ஊடகத்தினாலேயே வடிவமைக்கப்படுகின்றன.

த கட்டமரன்: உள்நாட்டு ஊடகத்துறையைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டரீதியான பொறிமுறைகள்  யாதுள்ளன?

அபேவர்த்தன: இது ஒரு பிரச்சனையான விடயம். சுய ஒழுங்குமுறைப்படுத்தல் மூலம் ஊடக ஒழுக்கநியமங்கள் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.  இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு இந்தத் தேவைக்காவே உள்ளது.  இது போதிய வலிமையுடையதாய் இல்லை.  அதனை வலிமைப்படுத்துதல் வேண்டும்.  அவ்வாறன்றிப் புதிய சட்டங்களை அங்கீகரித்தல் ஆகாது. உள்நாட்டு ஊடகத்துறை முற்று முழுதாக அரச தலையீடின்றி இருத்தல் வேண்டும்.  சட்டவாக்கத்தின் மூலம் அரசாங்கம் ஊடகத்துறைமீது பிடியொன்றைக் கொண்டிருக்குமாயின் ஊடகத்துறை தனது சுதந்திரத்தை இழந்துவிடும்.
த கட்டமரன்: ஒரு வலிமையுடைய சுய ஒழுங்குபடுத்தல் முறைமை எவ்வாறு இருக்கும்?
அபேவர்த்தன: இந்த நாட்டின் ஊடகத்துறை முழுவதையும் சேர்ந்தவர்களுடன் பற்றுறுதியான கலந்துரை யாடல் ஒன்றை நடத்துதல் வேண்டும்.  இது கற்பித்தல் மூலமே நடைபெறுமென நான் நம்புகிறேன். உதாரணத்திற்கு மத மற்றும் இனரீதியான மோதல்கள்பற்றி அண்மையில் வந்த செய்தி அறிக்கைகளை எடுத்துக்கொள்வோம். எங்கள் சமூகம் அதுபற்றிப் பேசியிருக்கிறது.  ஆனால் அது போதுமானதாக இருக்க வில்லை. எனவே பல்வேறு தரப்பினர் அதுபற்றித் தங்கள் குரல்களை எழுப்பினர்.  அதனால் இப் பிரச்சனையைப் பெரிதுபடுத்திச் செய்திகளை வெளியிடுதல் தெளிவான வகையிற் குறைவடைந்துள்ளது.  நாங்கள் எப்பொழுதும் மிகப் பெரியவர்களாக இல்லாவிடினும் சிறந்தவர்களாயுள்ளோம். பொதுவாகச் சொல்லப்போனால் ஊடகத்துறை முன்னேறிக்கொண்டிருக்கிறது.

த கட்டமரன்: நாங்கள் அரசாங்க ஒழுங்குவிதிகளுக்கு வருவோம். அதனை நடைபெறாமல் நாங்கள் தடைசெய்வது எப்படி?

அபேவர்த்தன: பல காரணங்களுக்காக  நாங்கள் உடன்பட முடியாத சில வி;டயங்கள் உள்ளன.  முதலாவதாக தேசிய பாதுகாப்புகாக எனக்;கூறி ஊடகவியலாளர்களுக்குத் தகவல் கிடைத்த மூலங்கள் பற்றி நீதிமன்றங்களில் வெளி;ப்படுத்த வேண்டுமென அவர்களைக் கட்;டாயப்படுத்துதல் கூடாது.  தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் ஊடகவியலாளர்களைத் தண்டிப்பது தவறானது. ஏனெனில் அரசாங்கமும் தானுமொரு குற்றமற்ற தரப்பாக இல்லையென்பதினால். அது எந்நேரத்திலும் ஒரு ஒடுக்குமுறையாளனாக மாறக்கூடும். அத்துடன் அதுபற்றி எங்களிடம் வரலாற்று ரீதியான உதாரணங்கள் நிறையவுண்டு. அரசாங்கம் சட்டத்தை; துஸ்பிரயோகஞ் செய்மாட்டாதென யாராலும் உத்தரவாதம் அளிக்கமுடியுமா?இரண்டாவதாக ஊடக சுதந்திரம் தொடர்பான கவலைகளும் உண்டு.  சுயாதீன சபையொன்றை நியமிப்பதற்கு விரும்பும் ஜனாதிபதி அதன் உறுப்பினர்களின் பெயர்கள் அரசியலமைப்பு நிர்ணய சபையினால் பிரேரிக்கப்படுமெனத் தெரிவித்தார்.  ஆனால் அரசியலமைப்பு நிர்ணய சபை உறுபிப்பினர்கள் ஏழு பேர் தங்கள் தங்கள் கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்;தும் அரசியல்வாதிகளாய் உள்ளனர்.  இவ்வாறான ஒரு சபை எங்ஙனம் சுயாதீனமாய் இருக்கும் என்பதே எங்கள் கேள்வி.பரந்த ஒரு கண்ணோட்டத்தில் நோக்கும்போது ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் பணி அரசாங்கத்தி னுடையதாக இருத்தல் கூடாது. அது அத்தொழிலில் ஈடுபடுபவர்களின் மத்தியிலிருந்தே உருவாகி வருதல் வேண்டும்.  ஐக்கிய இராச்சியத்தில் இது நடந்தபோது (பிரிட்டிஷ் பிரதம மந்திரி) டேவிட் கமறோன் ஒரு அடி பின்நோக்கி நகர வேண்டி ஏற்பட்டது.  அந்த நாட்டு ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடித்  தங்களுக்கே உரியதான சுய ஒழுங்குபடுத்தல் பொறிமுறை ஒன்றை உருவாக்கினார்கள்.

த கட்டமரன்: இவ்வகையான ஒன்றிற்காக ஊடக உரிமையாளர்கள் எந்த அளவு பங்களிப்பு, உதாரணமாக பணரீதியான ஆதரவு வழங்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

அபேவர்த்தன: ஏனைய நாடுகளில் இது இரண்டு வகையாக நடைபெறுகிறது. இப்படியான ஒரு ஸ்தாபனத் திற்கு வேண்டிய நிதிகளுக்காக ஒரு இடத்தில், ஊடகத் தொழிலில் உள்ளவர்களின் பங்களிப்பையும் பிறிதொரு இடத்தில் அரச நிதிவழங்கலையும் காணக்கூடியதாகவுள்ளது. பிந்திய முறையில் நடைபெறுவதாயின் அது தலையீடுகளும் நிபந்தனைகளும் அற்றதாக இருத்தல் வேண்டும்.  ஏனெனில் இங்கு தரப்படும் பணம் பொது மக்களினுடையது ஆதலினால்.  ஜேர்மனியிலும் பின்லாந்திலும் இதுவே நடைபெறுகிறது. ஆனால் இலங்கையின் அரசியல் கலாசாரம் வேறு விதமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த நாடுகளைப்போன்ற முன்னேற்றங்கள் இங்கு ஏற்படவில்லை.  அதே விதிகளை நாங்கள் பிரயோகிக்க முடியாது.  எங்களுக்கென ஒரு முறைமையை நாங்கள் விருத்தி செய்தல் வேண்டும்.